Advertisement

900 ஆண்டு வறட்சியால் அழிந்த சிந்துசமவெளி நாகரிகம்

புதுடில்லி : சிந்து சமவெளி நாகரிகம் 900 ஆண்டு கால வறட்சியாலேயே அழிந்ததாக கோரக்பூர் ஐஐடி மாணவர்களின் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5000 ஆண்டுகள் மழைப் பொழிவு நிலவரம் குறித்து நிலவியல் மற்றும் புவி இயற்பியல் மாணவர்கள் ஆய்வுமேற்கொண்டனர்.

4,350 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் 900 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வறட்சி நிலவியதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் மழைப்பொழிவு சிறப்பாக இருந்த இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயரத் தொடங்கியதாகவும், கங்கை மற்றும் யமுனை பள்ளத் தாக்குகள், கிழக்கு மற்றும் மத்திய உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், தெற்கு குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மிக பெரிய மன்னார் புயல் அடித்து நகரம் புதையுண்டது என்றும் அதன்பிறகு மழை பொழிந்து அப்படியே மணல் திட்டாகி போனதாக அல்லவா ஆராய்ச்சிகள் சொல்லின. அதை முன்கூட்டியே அறிந்ததால் அவர்கள் என்றோ அண்டைய தொலைவு பகுதிக்கு புலம் பெயர்ந்ததாகவும் சொல்லினார்களே. இதில் ஐராவதம் மகாதேவனின் கருத்துக்கள் மற்ற ஆராய்ச்சி்யாளர்களின் கருத்துக்களை விட மாறாக இருந்தாலும் அதை அப்படியே ஒதுக்கத்தக்கதல்ல என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவார்கள். ஒருமுறை ராஜஸ்தான் சென்றபோதும் சரஸ்வதி நதியை பற்றிய பேச்சு வந்த போதும் வரலாற்றை பற்றி அவர்கள் கூறியது ஞாபகம்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  வறட்சியால் அழிந்தது அந்தக்காலம்....."தண்ணி"யால் அழிந்து கொண்டிருப்பது இந்தக்காலம்.....

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  பாதிரிகள் வந்துதான் இந்தியா கலாச்சாரம் கற்றது என்பது டூபாக்கூர்த்தானே

 • Barakathulla - Singapore,சிங்கப்பூர்

  அந்த காலத்தில் ஒருவர் இருந்து எல்லா நீர் வளங்களையும் யாருக்கோ தாரை வார்த்து இருப்பார்கள்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஐயா, அந்த சிந்து நதியின் கரையோரங்கள், அன்றைக்கு, இந்தியவுக்குக்கான நுழை வாயில்கள் போல இருந்ததால், அந்த நகரம் ஓரளவு செல்வ செழிப்பாக இருந்ததால், அந்த நகரின், வடக்கு, வட கிழக்கு மற்றும் வட மேற்கு நாடுகளில் வாழ்ந்தவர்கள், அங்கு அடிக்கடி படையெடுப்புக்கள் நடத்தி, சொல்லொண்ணா துயரங்களுக்கு, அந்த மக்களை உட்படுத்தியதால்தான், அம்மக்கள், நிம்மதியாக வாழவும், தங்கள் வாரிசுகளை காப்பாற்றிடவும், செல்வங்கள் மற்றும் கால்நடைகளை(ஆடுகள், மாடுகள்) காப்பாற்றிடவும், இப்படி ஓர் அழகிய நகரை விட்டு இடம் பெயர்ந்திருப்பார்கள் எனலாம், அடிக்கடி ஆற்று வெள்ள பெருக்கும் மற்றும் கடும் வறட்சியும் ஏற்ப்பட்டதனால், அவைகளை சமாளிக்க முடியாமல், வெளியேறினார்கள் என்பது, யூகத்தின் அடிப்படையிலானது எனலாம். அந்த காலங்களில், மலேரியா காய்ச்சல், அம்மை நோய்கள், காலரா நோய்கள் மற்றும் எலிகளால் உண்டாகும் கொல்லை நோயினாலும் கூட, அந்த மக்கள் இடம் பெயர்ந்து இருப்பார்கள் எனலாம். எந்த சமூகமும், தன் சமூகத்திற்கு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிகளுக்கு, அடிக்கடி தடைகள் வரும் போது, அதற்கு பதில், ஓர் மாற்று வழிகளை தேடுதல் என்பது இயற்க்கையாக எங்கும் நடப்பதுதானே?. இன்றைக்கு கூட, ஈழ தமிழர்கள் பல ஆயிரம் பேர்கள், பற்பல நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருகிறார்கள் அல்லவா?. இதையே, ஒரு உதாரணமாக, சிந்து சமவெளி நகருக்கும் எடுத்துக்கலாமே?.

Advertisement