Advertisement

ஓபி அடிக்கும் அதிகாரிகள்; தலைமை செயலர் கோபம்

'தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் சரியாக பணிக்கு வருவதில்லை; பணி நேரத்தில், அலுவலகத்தில் இருப்பதில்லை' என, பரவலாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தலைமை செயலகத்திலும், இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது, நிர்வாகத்தை பெரிதும் பாதிக்கும் அளவுக்கு அதிகரித்து உள்ளது, உயர் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமீபத்தில், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடந்த, துறை செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இது குறித்து, விவாதிக்கப்பட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து, தலைமை செயலர், துறை செயலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், 'அலுவலகங்களுக்கு, அதிகாரிகளும், பணியாளர்களும், உரிய நேரத்துக்குள் வருவதையும், அலுவலக நேரத்தில், அவர்கள் பணியில் இருப்பதையும், உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (52)

 • Chandrasekaran Narayanan - Hosur,இந்தியா

  எல்லா இடங்களிலும் ஆன் லைன் என்று சொல்கிறார்களே தவிர முதலில் இருந்த வேகம் இப்போது இல்லை என்பதே உண்மை. உதாரணமாக ரேஷன் கார்டு மாற்றம்ஆன்லைனுக்கு முன்னாள் ஒரே வாரத்தில் முடிந்தது. இப்போது 5 மாத மாகியும் முடியவில்லை .இதை யார் கண்காணிக்கிறர்ர்கள்.?

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  எண்டே அம்மே ஒரு ஆறு வருஷம் கோட்டையிலே வேலை பார்த்தது. அப்போ ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் மட்டும்தான் இருந்துச்சி... அதுலயும் வருஷத்திலே பாதிநாள் கொடநாட்டுக்கும், சிறுதாவூர், பையனூரனுர் பங்களாவில் ஓய்வெடுத்துச்சி... அட கட்சி வேலை இருந்துச்சின்னு சொல்லலாம்ன்னு பார்த்தா ... கட்சி ஆபீசுக்கு வர்றதையே விழாவா கொண்டாட வேண்டிய நெலமை... இதையெல்லாம் கண்டுக்கிடாம இருந்துபுட்டு இப்போ பொங்குனா???

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  இது வரைக்கு எந்த தலைமை செயலராவது இப்படி ஒரு அறிக்கையை விட்டு இருப்பார்களா?.அரசியல்வாதிகளுக்கு பயந்தே தலைமை செயலர்கள் வாயை மூடி கொண்டிருந்திருப்பார்கள். அந்த வகையில் கிரிஜா வைத்தியநாதன் அவர்களை பாராட்டலாம்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அரசு வேலை என்றாலே எப்பொவேண்டுமானாலும்வரலாம் போகலாம் லஞ்சம் valanguvatharku வேலை சேவூம் கேட்டால் எங்களுக்கு சப்போர்ட் செய்யும் வீரமணி திருமா முத்தரசன் கூட்டம் இருக்கு

 • Narayanan Sklaxmi - chennai,இந்தியா

  எல்லாம் ஆன்லைன் செய்தபிறகு இன்னும் ஏன் மானிட்டர் செய்ய முடியவில்லை? சிஸ்டம் log என்று ஒன்று உள்ளது அதன்முலம் 5 நிமிடங்களுக்கு மேல் idele தடவை ஆனால் அவர் மறுபடியும் லாகின்செய்ய வேண்டிவரும் அந்த ரிப்போர்ட்டை வைத்து ஒவ்வொரு நபரையும் விளக்கம் கேட்கலாம், சரியாக / நியாமானபதில் இல்லை என்றால் மேல் நடவடிக்கை எடுக்கலாம். டெய்லி எத்தனை முடிவுகள் அவரால் எடுக்கப்பட்டது (closeout ரிப்போர்ட் ) / பெண்டிங் மற்றும் மேல் நடவடிக்கை பரிந்துரைப்பு முதலிய டாட்டா அனாலிஸி செய்தால் போதும், அவருடைய நிர்வாக திறன் அடிப்படையில் ஊதிய உய்ர்வு முதலிய வற்றை பரிந்துரைக்கலாம். இதுமாதிரி செய்தால் ஓரளவுக்கு பலன் தரும்?

Advertisement