Advertisement

காவிரி விவகாரத்தில் அடுத்தது என்ன? தி.மு.க., கூட்டணி இன்று ஆலோசனை

காவிரி விவகாரத்தில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள், சென்னையில், இன்று ஆலோசனை நடத்துகின்றன.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்காததை கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ராணுவ கண்காட்சியை துவக்கிவைக்க, ஏப்., 12ல், சென்னை வந்த, பிரதமர் மோடிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கறுப்பு கொடி போராட்டம் நடத்தின.

டெல்டா மாவட்டங்களில், காவிரி மீட்பு பயணத்தை முடித்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன், ஏப்., 13ல், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, அனைத்து கட்சி தலைவர்கள், பிரதமர் மோடியை சந்தித்து பேச, ஏற்பாடு செய்கிறேன்' என, ஸ்டாலினிடம், கவர்னர் உறுதி அளித்தார்.

இந்நிலையில், இன்று காலை, தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடக்கிறது.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும், மாலை, 5:00 மணிக்கு, சென்னை அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும், ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர், ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர், காதர்மொய்தீன் மற்றும் கம்யூ., மாநில செயலர்கள் உட்பட, ஒன்பது கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அப்போது, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில், பிரதமரை சந்தித்து பேச, கவர்னர் அனுமதி பெற்றுத்தராவிட்டால், அடுத்த கட்டமாக, எந்த மாதிரியான போராட்டம் நடத்துவது என, முடிவு எடுக்கப்பட உள்ளது. டில்லியில் மனித சங்கிலி அல்லது பார்லிமென்டை முற்றுகை போராட்டம் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (37)

 • Samaniyan - Chennai ,இந்தியா

  March to Bangalore and demand suspension of IPL there

 • Thiyagarajan - Bangalore,இந்தியா

  கூட்டணி கட்சியின் தலைவர் ஒருவரை தீக்குளிக்க வைக்கலாம். தொண்டர்கள் எவ்வளவுகாலம் தான் தீக்குளிப்பார்கள்....

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அடுத்த ஆபரேஷன் என்ன தலைவரே? அடுத்த ஆபரேஷன் எனக்குத்தான்....... நடிகர் வடிவேலுவை மிஞ்சிவிடுவார்போல.

 • rajaram padmanabhan - Chennai,இந்தியா

  காவேரி மீட்பு என்பது ஒரு கனவுதான். நேற்று மயிலாடுதுறையில் இருந்து திரும்பி கொண்டு இருந்தேன். சீர்காழியில் இருந்து சிதம்பரம் வரை கிட்டத்தட்ட ஆயிரம் ட்ராக்டர்கள் கொள்ளிடம் ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டு சென்று கொண்டு இருந்தன. கொள்ளிடம் பாலத்தில் இதை போலீஸ் ஒவ்வொரு ட்ராக்டரிடமிருந்தும் பணம் வாங்கிக்கொண்டு இருந்தார். அவர் கையில் ஸ்டாலின் படம் போட்ட ஒரு கட்சி புத்தகமும் இருந்தது. நாமெல்லாம் காவேரியை காப்பற்ற போகிறமாக்கும். எதற்காக இந்த ஏமாற்றும் வேலை. எல்லா ஆற்றையும் சுரண்டி தின்றுவிட்டு வருங்கால சந்ததிக்கு எதை வைக்க போகிறோம். இப்படி சம்பாதிப்பதற்கு வேறு ஏதாவது தொழில் செய்யலாம்.

 • குண்டலகேசி - chennai,இந்தியா

  ஆக...கருப்பு கொடி போராட்டம் வெற்றி பெற்றதால், வாரியம் அமைக்கும் வரை சன் மற்றும் கலைஞர் குழும ஒளிபரப்புகள் நிறுத்தப்படும்...ஆக....சும்மா கிடந்த ஆண்டியை ஊதி கெடுத்தானாம் சங்கு என்ற பழமொழிக்கேற்ப தமிழகம் வந்து எங்களை வெறி ஏற்றி சென்ற மோடிக்கு பதிலடி குடுக்க...ஆக...தைரியம் மிக்க, பயம் என்ற வார்த்தையை அறிந்தே இராத அண்ணன் வாய்க்கோ பெங்களூரு சென்று கர்நாடக சட்டசபை முன்பு ஆர்பாட்டம் நடத்துவார்... ஆக...அம்மி மேல் அம்மி வைத்தால் அடியும் நகரும் என்பதற்கிணங்க தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவு, கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தாவை கண்டிக்கும் விதமாக ஓசூரில் கர்நாடக வாகன மறியல் செய்வார்.... ஆக...காவிரி பிரச்னை காரணகர்த்தா கட்டுமரத்தானின் கோபாலபுர வீடு முழுவதும் கருப்பு வண்ணம் பூச படும்....ஆக...

Advertisement