Advertisement

குறை தீர்க்கும் புதிய, 'ஆப்'; ரயில்வே நிர்வாகம் அறிமுகம்

புதுடில்லி : ரயிலில் பயணம் செய்யும் பயணியர், தங்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிக்க, புதிய மொபைல் போன், ஆப்' எனப்படும், செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது, ரயில் பயணி யர், தங்கள் புகார்களை தெரிவிக்க, 14 விதமான புகார் பதிவு முறைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றைத் தவிர, வலைதளம், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட, சமூக வலைதள புகார் பதிவு முறைகளும், நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில், புதிய மொபைல் போன் செயலியை, ரயில்வே நிர்வாகம் அறிமுகம்
செய்துள்ளது. எம்.ஏ. டி.ஏ.டி., என அழைக்கப்படும், பயண நேரத்தில் தேவையான உதவிகளுக்கான இந்த செயலி, இந்த மாதம் முதல் செயல்படத் துவங்க உள்ளது.

'ரயில் பயணத்தின் போது, அசுத்தமான கழிப்பறை, தரமற்ற உணவு போன்ற புகார்களை, இந்த செயலி மூலம் உடனுக்குடன் தெரிவிக்கலாம். 'இந்த புகார்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களை நேரடியாகச் சென்ற டையும். எனவே, உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணியர் புகார் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை, பின்தொடரும் வசதியும் இந்த செயலியில் உள்ளது. மேலும், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பயணியருக்கு, உடனே தகவல் தெரிவிக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


'ரயில் டிக்கெட்டில் உள்ள, பி.என்.ஆர்., எண்ணை, செயலியில் குறிப்பிட்டு, புகார்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பின், எஸ்.எம்.எஸ்., மூலம், புகார் பதிவு எண் அனுப்பப்படும். 'அந்த எண்ணின் உதவியுடன், உங்கள் புகார் சரி செய்யப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்' என, ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.

'இந்த செயலி அறிமுகப் படுத்தப்பட்டாலும், மற்ற புகார் முறைகளும் வழக்கம் போலவே செயல்படும்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • Manian - Chennai,இந்தியா

  பர்சனல் ஹைஜீன் (தன் உடல் சுத்தம்) என்பதை பலரும் கற்பதில்லை. கற்பிப்பதில்லை. இரண்டுவித ஜனங்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் (சிலர் ஆகாய விமானதிலும் ) . அவர்களில் பர்சனல் ஹைஜீன் தெரிந்தவர்கள், பொதுவாக ரயிலில் டாய்லெட்டை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள். மற்றவர்களே பிரச்சினைக்கு காரணம். சைனா, ஜப்பான் போல் படங்கள் மூலம் இவற்றை சரி செய்ய முடியுமா என்பது அறியப்படவில்லை. நான் இதுவரை 12 தடவை ரயிலில் சென்றுள்ளேன். ஒவ்வொரு ஜங்க்ஷனிலும் சுத்தம் செய்ப்பவர்கள் வந்து சுத்தம் செய்கிறார்கள். அளவுக்கு அதிகமாக பிரயாணிகள் செல்ப் [ஒத்து அசிங்கம் அதிகம். பயோ டாய்லெட அதை தீர்க்கும். கொஞ்சம் பொறுமை தேவை. இப்போதெல்லாம் நாத்தம் வருவது அநேகமாக நின்றுவிட்டது. ரிசர்வேஷன் இல்லாத பெட்டிகளில் இந்த நாத்தம் அதிகம் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். ரயில்வே சிறுக சிறுக முன்னேறுகிறது.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  சில விபத்துக்கு தார்மிக பொறுப்பேற்று சமீபத்தில் ரயில்வேயிலிருந்து வர்த்தகத்திற்கு துறை மாறிய சுரேஷ் பிரபு மின்துறையில் சிறப்பான சாதனை படைத்தது இப்போது ரயில்வே அமைச்சராக இருக்கும் பியூஸ் கோயல் இருவரும் திறமையான மந்திரிகள் மேலும் ரயில்வே துறை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக சிறப்பாக வளர வாழ்த்துக்கள்

 • Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ

  ஆப்பு என்பவருக்கான பதில். நாம் டாயலெட் போகும்போது சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். உபயோகித்தபின் எத்தனைபேர் ஃப்ளெஷ் செய்கிறோம். யூரின் போய்விட்டு தண்ணீர் பிடித்து சுத்தம் செய்துவிட்டு வருகிறோமா ? யோசிக்கனும்.

 • Casb Balchandhar - Bangalore,இந்தியா

  Railways under ex and present railway minister working extremely well as a frequent traveler I can vouch safe it.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  I போன் 4

Advertisement