சிறுவர் திரைப்பட விழா:வரும் 16ல் துவக்கம்
கோவை:கோவை திரைப்பட இயக்கம் மற்றும் கேசர்ஸ் பன்னாட்டுப் பள்ளி சார்பில், நான்காவது சிறுவர் திரைப்பட விழா- நடக்கிறது.ஏப்., 16ல் துவங்கி, 20ம் தேதி வரை நடக்கும்இந்த விழாவில், உண்மைச்சம்பவம், வரைகலை சித்திரம், ஆவணப்படம், குடும்பச்சித்திரம், நகைச்சுவை என, ஐந்து வகையான சிறுவர் திரைப்படங்கள் ஒவ்வொரு நாளும் மாலை, 5:00 மணிக்கு, சின்னவேடம்பட்டியிலுள்ள கேசர்ஸ் பன்னாட்டுப்பள்ளி அரங்கில் திரையிடப்படுகின்றன.
கோவை திரைபட இயக்கத்தின் தலைவர் பாஸ்கரன் கூறியதாவது:கோவை திரைப்பட இயக்கம், குழந்தைளுக்கான திரைப்படவிழாவை நான்காவது ஆண்டாக நடத்துகிறது. சிறுவர்களிடம் திரை கலை ரசனையை உருவாக்கும் நோக்கத்தில், சர்வதேச அளவில் சாதனை படைந்த சிறந்த சிறுவர் திரைப்படங்களை திரையிட்டு வருகிறோம்.இந்த ஆண்டு, 'செக்கரட்டரியேட், பராகா, டயரி ஆஃப் விம்பி கிட், ஹாச்சி' உள்ளிட்ட ஐந்து திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. பள்ளி விடுமுறையில் நல்ல திரைப்படங்களை இலவசமாக குழந்தைகள் பார்த்து ரசிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 90039 17667 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!