Advertisement

ஓமியோபதி மருத்துவம் அறிவோமா

இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் மருத்துவம் பற்றி விழிப்புணர்வு உள்ளது.நல்ல உணவுகளையும், நல்ல உணர்வுகளையும் புறக்கணித்ததின் விளைவாக நம்மில் பலர், பல நோய்களுக்கு ஆட்பட்டு துன்பப்பட்டு வருகிறோம்.ரயில் போன்ற பயணங்களில் காலை நேர உணவுக்குப் பின் பெரும்பாலானோர் தங்கள் பைகளில் இருந்து பல வண்ணங்களில் உள்ள மாத்திரைகளை விழுங்க ஆரம்பிக்க, அவர்கள் படும் சிரமம் பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறது. இதற்கு காரணம் உணவே மருந்தாக அமைந்த நமது வாழ்க்கை முறையை புறக்கணித்து, மேலைநாட்டு உணவுகளை சாப்பிட்டது தான். இதனால் ஆங்கில மருத்துவ முறையும் நம்மை தொற்றிக் கொண்டது. 200 ஆண்டுகளுக்கு முன்னர் இதை உணர்ந்து டாக்டர் சாமுவேல் ஹனிமன் புதிய மருத்துவ முறையை கண்டுபிடித்தார்; அது தான் ஓமியோபதி.நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்'என்ற குறளுக்கு ஏற்ப, ஒருவர் எவ்வாறு நோய்வாய்ப்படுகிறார் என்பதை உணவின் வரலாறு மூலமும், அவருக்கு நிகழ்ந்த மகிழ்ச்சி, கவலை, மன அழுத்தம் போன்ற மனம் சார்ந்த நிகழ்வுகள் மூலமும் அறிய வேண்டும். இதை ஓமியோபதி மருத்துவர் துல்லியமாக கணிப்பார். ஓமியோபதி, நோய்களைப் பரவ விடாமல் குணமாக்குகிறது. இது செலவு குறைவான மருத்துவம் என்பது அறிந்ததே.பக்கவிளைவுகள் இல்லைஓமியோபதி பக்க விளைவு ஏற்படுத்துவதில்லை. இயற்கையாக வரும் எல்லா நோய்க்கும், எல்லா வயதினருக்கும் இதில் மருந்து உள்ளது. நோய் மீண்டும் வராமல் குணமாக்க வல்லது.நாட்பட்ட நோய்களையும் எளிதில் குணமடையச் செய்கிறது.அறுவை சிகிச்சை முறை இல்லை. ஒரு நோயினைக் குணமாக்க பல வகையான மருந்துகளை உண்ண வேண்டிய அவசியமில்லை.ஒரு நோய்க்கு பலவித அறிகுறிகள், பலவித காரணங்கள் இருக்கலாம். ஒரு அறிகுறியோ, காரணமோ இருந்தால் ஒரு மருந்து என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகளோ, காரணங்களோ இருந்தால் அதற்கு வேறொரு மருந்து என, 'நோய்' குறித்து தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் ஓமியோபதி மருந்துகளின் வெற்றி சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.ஒரு நோய்க்கு என்னென்ன அறிகுறிகள் இருக்கலாம். அவற்றுக்கான மருந்துகள் என்னென்ன என்று தெளிவாகவும், எளிதில் புரியும் வகையிலும் ஓமியோபதியில் எழுதப்பட்டுள்ளது. ஒரு நோய் என்றால், அது எதனால் ஏற்படுகிறது, அவற்றுக்கான அறிகுறிகள் என்னென்ன, நோய் வந்தால் என்ன செய்வது, நோய் வராமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.தனித்தனி பிரச்னைஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர் என்பது போலவே, ஒவ்வொரு மனிதருக்கு வரும் நோயும், அதன் காரணங்களும் தனியானவை. ஒருவருக்குத் தலைவலி வருகிறதென்றால், அதற்கு ஒற்றைப் பொது மருந்து கிடையாது என்பதே ஓமியோபதி காட்டும் வழிமுறை. ஒவ்வொரு உயிரும், அதற்கே உரிய பிரத்யேக உயிர்சக்தியால் கட்டுப்படுத்தப்படவும் நிர்வகிக்கவும் படுகிறது என்பதை உலகுக்கு முதலில் சொன்னவர் டாக்டர் ஹானிமன்.ஜெர்மனியைச் சேர்ந்த இவர் 1796 ல் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஓமியோபதி. அலோபதி மருத்துவத்தின் பக்க விளைவுகள் குறித்துப் பெரும் கவலை கொண்டிருந்த டாக்டர் ஹானிமனுக்கு, ஓமியோபதி மருத்துவம் பெரும் மனநிம்மதியைத் தந்தது. டாக்டர் ஹானிமனுக்குப் பிறகு மருத்துவ அறிவியல் எத்தனையோ வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது. முதலில் நுண்ணோக்கி வந்தது. அதன்வழி நுண்ணுயிர்களைப் பார்க்கும் தொழில் நுட்பம், மருத்துவ அறிவியலில் பெரிய திருப்புமுனையாக இருந்தது. மரபணு ஆய்வுகள் மேலும் பல சாளரங்களைத் திறந்துவிட்டன. ஒவ்வொரு தனிமனிதரின் மரபணுவும் பிரத்யேகக் குணாம்சங்களைக் கொண்டது இதன்மூலம் நிரூபணமானது. ஆனால், இந்த உண்மையை டாக்டர் ஹானிமன், நவீன மருத்துவம் சொல்வதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார். அவர் அதைச் சொன்னபோது, வெகு சிலரே அவரது கூற்றை நம்பினர்.கிரேக்க சொற்கள்ஓமியோபதி என்பது இரண்டு கிரேக்கச் சொற்களால் ஆனது. இதன் பொருள் 'ஒத்த மருத்துவம்'. அதாவது நோயாளியிடமுள்ள நோயின் அறிகுறிகளை ஒத்த, நோயின் அறிகுறிகளை உண்டாக்கும் மருந்துப் பொருளே நோயை குணப்படுத்தும் என்பதாகும். எந்தப் பொருள், எந்த நோயை ஆரோக்கியமான நிலையிலுள்ள மனிதனிடத்தில் தோற்றுவித்ததோ, அந்தப் பொருள்களைத் துாய்மையான நிலையில் வீரியப்படுத்திக் கொடுத்தால், அந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்பதே ஓமியோபதியின் அடிப்படைக் கோட்பாடு.அந்த மருந்துப் பொருள்தான் வெள்ளையாக, சிறுசிறு ஜவ்வரிசி உருண்டைகள் போல ஓமியோபதி மருத்துவர்களால் கொடுக்கப்படுகின்றன. எல்லா மருந்துகளும் வெள்ளையாக இருக்க காரணம் அதில் உள்ள லாக்டோஸ். லாக்டோசை ஊடகமாக வைத்து அதற்குள் மருந்தை உட்புகுத்தி தரப்படுகிறது. ஓமியோபதி மருத்துவ முறையைப் பொறுத்தவரை, நோயின் அறிகுறிகளுக்கு மட்டும் மருந்து அளிக்கப்படுவதில்லை. நோயாளியின் உடல், உளவியல் பண்புகள் விசாரிக்கப்படுகின்றன.கவுன்சிலிங்ஒரே நோய் காரணமாக அவதிப்படுபவர்களாக இருக்கலாம். ஆனால், அந்த நோயால் ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு காரணங்களால், வழிமுறைகளால் பாதிக்கப்படுகிறார். அந்தக் காரணியையே ஒரு ஓமியோபதி மருத்துவர் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். ஓமியோபதியைப் பொறுத்தவரை, மன அழுத்தம், கவலை ஆகியவை உடலை வெவ்வேறு வகை நோய்களாக பாதிக்கின்றன. இது தான் மற்ற மருத்துவமுறைகளில் இருந்து ஓமியோபதியை வித்தியாசப்படுத்துகிறது. இது பல அரிய நோய்களை நுணுக்கமாக சரி செய்து வருவது நிதர்சனம். குறிப்பாக, குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஆட்டிஸம் போன்ற நோய்களுக்கு ஓமியோபதி சிறந்த நிவாரணம் தருகிறது.ஓமியோபதி மருத்துவத்தில் கவுன்சிலிங் என்ற முறை முக்கிய பங்கு வகிக்கிறது. தன்னுடைய குணம், ஆசை, நிராசை போன்றவை குறித்து மருத்துவரிடம் உண்மை பேச வேண்டும். நம்முடைய உடல்நலம், மனநலத்தோடு தொடர்பு உடையது என்பது நமக்கே தெரிந்த விஷயம் தான். இருந்தாலும் நமது மாய மனம் உண்மையை புரிந்து கொள்ள தடுமாறுகிறது.- டாக்டர் தி.செம்பருதிஓமியோபதி மருத்துவர், மதுரை94433 56971

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement