Advertisement

தேசிய விருது ஒரு முள்கிரீடம் - தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் சாபு ஜோசப்

ஒரு படத்தோட கதை போக்கு, வேகம், உணர்ச்சி நிலைகள்... சுருக்கமா சொல்லணும்னா படத்தோட தலையெழுத்தை தீர்மானிக்கறதே எடிட்டிங் தான். சூப்பர் கதை மொக்கை ஆவதும், மொக்கை கதை சூப்பர் ஆவதும் எடிட்டர் கையில தான் இருக்கு. அப்படி எடிட்டிங் துறையில் சாதித்து, விருதுகளை வசமாக்கி வருபவர் சாபு ஜோசப்.
அவருடன் ஒரு நேர்காணல்...


* 'எடிட்டர்' அவதாரம் எடுத்தது எப்படி?
ஆரம்பத்துல எடிட்டிங் மேல இனம்புரியாத ஈர்ப்பு இருந்துச்சு. 2002ல் சென்னை நியூ காலேஜ்ல விஷூவல் கம்யூனிகேஷன் படிச்ச அப்பறம் எடிட்டிங் மேல ஆர்வம் அதிகமாச்சு. எடிட்டர் வி.எம்.உதயசங்கரன், சதீஷ் - ஹர்ஷா, ஆன்டனி, நடிகர் சுதீப்பின் கன்னட படங்கள் என 25 படங்களுக்கு மேல் உதவியாளராக பணியாற்றினேன். பின்னர் 'ஆண்மை தவறேல்' படம் மூலமா எடிட்டரா அறிமுகம் ஆனேன்.


* 'வல்லினம்...'
என் வாழ்க்கையையே மாற்றின படம்... முதல் படத்துக்கு அப்பறம் ரொம்ப நாள் எந்த படத்துலயும் கமிட் ஆகலை. பின், 'ஈரம்' படத்தோட ட்ரெய்லர் மட்டும் எடிட் பன்ற வாய்ப்பு கிடைச்சுது. ரஜினி தான் டிரெய்லர் ரிலீஸ் பண்ணினார். அதற்கப்புறம் தான் டைரக்டர் அறிவழகன் மூலமா
'வல்லினம்' வாய்ப்பு வந்தது. அதுல புது புது எடிட்டிங் டெக்னிக்ஸ் எல்லாம் பயன்படுத்தினேன். 2013 - 2014ம் ஆண்டின் சிறந்த எடிட்டிங்னு 'வல்லினம்' படத்தை அறிவிச்சாங்க.
ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியலை. பிலிம் ஸ்டூடன்ட்ஸ் எல்லோருக்கும் 'வல்லினம்' படம் பாடமா மாறுச்சு. எப்பவும் மறக்க முடியாத ஒரு தருணம் அது.


* அப்புறம்...
அப்புறம் என்ன... தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், யாகாவாராயினும் நா காக்க, ஒரு நாள் கூத்து, காஷ்மோரா, யாக்கை, இப்போ ஜூங்கா என 25 படங்கள் பண்ணியாச்சு.


* தேசிய விருது தான் உங்களுக்கு இந்த மாதிரி கதைகளை கொண்டு வந்து சேர்க்குதா?
இருக்கலாம். ஆனா, எனக்கு பயமே அது தான். என்கிட்ட வர டைரக்டர்ஸ் என்னை ரொம்ப நம்புறாங்க. அவங்க நம்பிக்கையை எப்படியாவது காப்பாத்தணும்ங்கற நினைப்பு என்னை துாங்க விட மாட்டேங்குது. தேசிய விருதுங்கறது என்னைப் பொறுத்த வரைக்கும் 'முள்கிரீடம்' மாதிரி தான்.


* உங்களுக்கும் எடிட்டிங்க்கும் பூர்வஜென்ம கனெக் ஷன் எதுவும் இருக்கா?
(சிரிக்கிறார்) தெரியலங்க... ஆன்டனியிடம் வேலை பார்க்கும் போது தான் ராஜலட்சுமி அறிமுகம் ஆனாங்க. அப்பறம் காதல், கல்யாணம். அவங்களும் சில படங்கள் எடிட் பண்ணிருக்காங்க. அவங்க அப்பா சி.ஆர்.மணியும் எடிட்டர் தான். ஒருவேளை நீங்க சொன்ன மாதிரி ஏதோ ஒண்ணு இருக்கும்னு தான் நெனக்கிறேன்.


* இளைய எடிட்டர்ஸ்க்கு உங்க அட்வைஸ்...
பொறுமை. அப்பறம், சாப்ட்வேர் தெரிஞ்சுகிட்டு எடிட்டிங்கே தெரிஞ்சுக் கிட்டதா நெனச்சுட்டு இருக்காங்க இன்னைக்கு உள்ள ஆட்கள். அது தப்பு. எடிட்டிங் அவ்வளவு ஈஸியான வேலை அல்ல. நுண்ணுணர்வு ரொம்ப முக்கியம்.

வாழ்த்த 98841 69999

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement