Advertisement

ஜோரா...மீரா...

கோலிவுட்டில் மும்பை, பெங்களூரு, கேரளா என மற்ற மாநில நடிகைகள் ரசிகர்களை 'ரவுண்டு' கட்டி வரும் நிலையில் மயங்க வைக்கும் தமிழ் பேச்சாலும், கிறங்கடிக்க செய்யும் விழி வீச்சாலும் இளசுகளை வீழ்த்த வந்திருக்கிறார் இவர். அடுத்தடுத்த பட வாய்ப்புக்களும் குவிந்து வருவது இவருக்கு ஒரு எதிர்காலம் இருப்பதை பறைசாற்றுகிறது. ரசிகர்களின் மனங்களில் எனக்கும் ஒரு இடம் உண்டு என்கிறார், நடிகை மீரா. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் பேசியதிலிருந்து...

* 'தரிசு நிலம்' கை கொடுத்ததா?அது தான் என் முதல் படம். கிராமத்து நாயகியாக கவுரவ கொலைக்கு எதிராக நான் 'நச்'சுனு பேச வசனம் கிடைத்தது. மதுரை என் மண் என்பதால் கிராமத்து பேச்சு யதார்த்தமாக அமைந்தது. நல்ல பெயர் கிடைத்தது.

* தற்போதைய படங்கள்?'பழங்குடி' என்ற படத்தில் நடித்து வருகிறேன். இதுதவிர 3 பெயர் வெளியிடாத புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளேன்.

* படிப்பு டூ நடிப்பு வரை?படித்தது தகவல் தொழில்நுட்பம். மதுரையில் பிறந்தாலும் சென்னை தான் தற்போதைய வீடு. இரு ஆண்டுகள் முயற்சிக்கு பின் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

* சினிமாவிற்கு முன்?படிப்பு முடிந்ததும் 'மாடலிங்' செய்தேன். சீரியல்கள் கை கொடுத்தன. நடிப்பு ஆர்வத்தை பார்த்து, அப்பா தான் சினிமாவிற்குள் நுழைய ஊக்கம் அளித்து, வாய்ப்பும் தேடி தந்தார். அவர் சில படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார்.

* நடிக்க விரும்பும் கதாபாத்திரம்?அறம் படத்தில் நயன்தாரா 'கதாபாத்திரம்' கிடைத்தால் அசத்துவேன். 'வில்லி கதாநாயகியாக' நடிக்கவும் ஆசை.

* சந்தித்த சவால்?பெண் என்பதே சவால் தான். வெளிமாநில நடிகைகள் வரவிற்கு இடையே தமிழ் பெண்ணாக பல சவால்களை சந்தித்தேன். முயற்சிக்கு பிறகு தான் கதாநாயகிக்கான அந்தஸ்து கிடைத்தது.
* முதல் 'சூட்டிங்' அனுபவம்?'சூட்டிங்'கில் டெக்னீஷியன்கள் வரை ஆண்கள் தான். பெண்கள் ஒரு சிலரை தான் பார்க்க முடியும். 'தரிசு நிலம்' படத்தில் முதல் காட்சியில் தயக்கம், வெட்கம் இருந்தது. அதன் பின் சூட்டிங்கில் உள்ளவர்களை எங்க வீட்டிலுள்ள அண்ணண், தம்பி போல் நினைத்துக் கொண்டேன்.

* மறக்க முடியாத டயலாக்?முதல் படத்தில் முதல் டயலாக். 'பொம்ளைங்கனா உங்களுக்கு கிள்ளுக் கீரையாடா...? நீயும் நானும் சமம்தாண்டா...' என மிரட்டல் 'டயலாக்' அது.
* நடிப்புக்கு தேவை?அழகு, திறமையுடன் அதிர்ஷ்டமும் கை கொடுக்க வேண்டும்.

* தமிழ் ஹீரோக்கள்?'சிக்ஸ்பேக்' காட்டுவது ஹீரோயிசம் இல்லை. மக்களுக்கு பிடித்த மாதிரி நடிக்கணும். விஜய்சேதுபதி, தனுஷ், விஜய், அஜித், சூர்யா என பலரும் அதுபோல கலக்குறாங்க.

* 'கிளாமர்' அவசியமா?நடிப்புக்கு தேவையென்றால் கிளாமர் தப்பில்லை. அதே நேரத்தில் அதற்கு ஒரு எல்லையும் நடிகைகள் போட்டுக்கொள்ள வேண்டும். நயன்தாரா அதில் சரியாக உள்ளார்.
* லட்சியம்?மக்களுக்கு பிடித்த மாதிரி நடிக்க வேண்டும். தேசிய விருதுகள் பல பெறவேண்டும். அதுதானே நடிகைகளின் 'டார்கெட்'.

* நடிகர்கள் கட்சி ஆரம்பிச்சுட்டாங்களே?அய்யோ... ஆளை விடுங்க...அரசியலெல்லாம் நமக்கு 'செட்' ஆகாது. யாராக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்தால் ஓ.கே., தான்.
தொடர்புக்கு actressmeeratamilgmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement