Advertisement

பால் பசும்பால்,அப்துல் தரும் ஆரோக்யமான பால்.


பால் பசும்பால்,அப்துல் தரும் ஆரோக்யமான பால்.

கையில் இருந்த ஆரோக்கியத்தை தொலைத்துவிட்ட இந்த உலகத்திற்கு 'ஆர்கானிக்' என்ற வார்த்தைதான் இப்போது ஆறுதல் தருகிறது.

ஆர்கானிக்கில் காய்கள் பழங்கள் எல்லாம் உற்பத்தி செய்துதந்துவிடலாம் ஆனால் ஆரோக்கியத்தை அதிகம் தரவல்ல பசும்பால் மட்டும் கொடுப்பது கடினம்.

இந்தக் கடினமான பணியை சமுதாய நலனிற்காக ஏற்றுக்கொண்டிருப்பவர்தான் அப்துல்.சென்னையைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் காரணமாக கார்ப்பரேட் வேலையை விட்டவர்.அவர் எப்படி மக்களுக்கு பசும்பால் வழங்கிக் கொண்டு இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் பசும்பால் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது!

பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வாய்த்திருப்பது பசுவின் பால் என்கின்றன வேதங்கள். இதில் இருந்தே பசும்பாலின் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது, உடலுக்கு குளிர்ச்சி தருவது. உடல் பலம், மூளை பலம் இரண்டையும் தரவல்லது. சோர்வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மா மருந்தாக உள்ளது.

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. உலகம் முழுமைக்கும் பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப்படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது.

திண்டிவனம் கீழ்பசார் கிராமத்தில் இயற்கை சூழ்நிலையில் பழைய காலமுறையில் தீவனங்கள் சாப்பிட்டு மேய்ச்சல் செய்து ஆரோக்கியமாக வளரும் ராத்தி,சாஹி வால்,கிர்,தார்பார்க்கர் உள்ளீட்ட வட மற்றும் தென்னாட்டைச் சேர்ந்த 176 நாட்டு மாடுகளைக் கொண்ட பண்ணை வைத்துள்ளார் அஹமத்.இந்த பண்ணையில் உற்பத்தியாகும் பாலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அப்துல் ஏற்றுக்கொண்டார்.இந்த பால் ஏ2 ரக பாலாகும்.

திண்டிவனத்தில் இருந்து கறந்த பாலின் தன்மை மாறாமல் அப்படியே கொண்டு வந்து சென்னையில் விற்றுக்கொண்டிருக்கிறார்.ஆரம்பத்தில் ஐந்து பத்து என்று இருந்த இவரது வாடிக்கையாளர்கள் மிகக்குறுகிய காலத்தில் இப்போது முன்னுாறைத் தாண்டியுள்ளது.

இவரிடம் பால் வாங்கி பயன்பெற்றவர்கள் அப்துலின் பொருளில் உள்ள நல்ல மற்றும் உண்மைத்தன்மை காரணமாக அவரிடம் மேலும் சில பொருட்கள் கேட்டனர்.அதன் அடிப்படையில் பொள்ளாச்சியில் இருந்து மரச்செக்கால் தயாரிக்கப்பட்ட கடலை எண்ணெய்,நல்ல எண்ணெய் , தேங்காய் எண்ணெய் போன்றவைகளையும்,ஈரோட்டில் இருந்து தருவிக்கப்பட்ட ஆர்கானிக் பருப்பு வகைகளையும் நியாயமான விலையில் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.மக்களுக்கு மலிவு விலையில் சத்தான நல்ல கீரை கிடைக்கச் செய்யவேண்டும் என்பதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

இப்படி எதைச் செய்தாலும் மக்கள் நலனிற்கு ஏற்றதாக செய்யவேண்டும் என்ற எண்ணம் அப்துலுக்கு உதித்தது ஒன்றும் புதிதல்ல, சென்னை மழை வெள்ளத்தின் போது அதிக மக்களுக்கு உதவியவர்கர்களில் இவரும் ஒருவர் என்பதில் இருந்தே இவரது அணுகுமுறையை அறிந்து கொள்ளலாம்.

ஆகவே அடுத்த முறை பால் வாங்குவதற்கு முன் அப்துலை ஒரு முறை அழையுங்கள்.அவரது எண்கள்:8939991573,9840189403.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement