Advertisement

பி.ஏ.பி., அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை! பாசனத்துக்கு நீர் தராமல் கேரளாவுக்கு வழங்க எதிர்ப்பு

பொள்ளாச்சி: பரம்பிக்குளம் அணை தண்ணீரை பாசனத்துக்கு வழங்காமல், கேரளாவுக்கு வழங்குவதற்கு கண்டனம்
தெரிவித்து, ஆயிரக்கணக்கான விவசாயிகள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து, ஜன., 31 முதல், மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

முற்றுகைமுதல் சுற்று வழங்கிய நிலையில், இரண்டாம் சுற்று தண்ணீர் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப் பட்டது.ஆனால், பரம்பிக்குளத்தில் இருந்து திருமூர்த்தி அணைக்கு வரும் தண்ணீரை, ஆழியாறு அணைக்கு திருப்பி, கேரளாவுக்கு வினாடிக்கு, 450 கன அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், விரக்தி அடைந்த விவசாயிகள், நேற்று, பொள்ளாச்சி, பி.ஏ.பி., கண்காணிப்பு
பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர், பரமசிவம் கூறியதாவது:
திருமூர்த்தி அணையில் பாசனம் பெறும் விவசாயி கள், ஒவ்வொருமுறையும் போராடி, உரிமையை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இரண்டு நாட்களாக, பி.ஏ.பி., விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

போராட்டம்காய்ந்து போன பயிர்களை எப்படி காப்பாற்றுவது என, தெரியாமல் தவிக்கிறோம்.பிரச்னைக்கு முடிவு கிடைக்கும் வரை, கலைந்து செல்ல மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.கண்காணிப்பு பொறியாளர், கலைமாறன், ''கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடச் சொல்லி, அரசு உத்தரவிட்டதால் திறந்து விட்டுள்ளோம்; நிறுத்த சொன்னால் நிறுத்துவோம்; எங்கள் கையில் எதுவுமில்லை,'' என, தெரிவித்தார்.
இதனால், 'போராட்டம் தொடர்கிறது' என, விவசாயிகள் அறிவித்தனர். டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்திதலைமையில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் பீரங்கி, வஜ்ரா வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.வெளியிடத்தில் மதிய உணவு தயாரித்து, போராட்டம் நடந்த இடத்திலேயே வழங்கப்பட்டது. விவசாயிகள் வரிசையில் நின்று சாப்பிட்டனர்.

மாற்று ஏற்பாடு; அமைச்சர் உறுதிஉள்ளாட்சித் துறை அமைச்சர், வேலுமணிகூறியதாவது:கேரள தலைமைச் செயலருடன் நடத்தப்பட்ட பேச்சை தொடர்ந்து, சிறுவாணி தண்ணீர் நிறுத்தப்பட்டது. 'ஆழியாற்றில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்' என்ற கேரள விவசாயிகள் கோரிக்கையின்படியே, அங்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.ஆழியாற்றில் தண்ணீர் குறைவாக இருப்பதால், அங்கிருந்து, கேரளாவுக்கு தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என, விவசாயிகள்
கூறியுள்ளனர். ஆழியாற்றில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, பரம்பிக்குளம், காடாம்பாறை அணையில் இருந்து, நீர் திறந்து விடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ///....ஒன்று புரியவேண்டும். கேரளத்திற்கு ஒப்பந்தப்படி நீர் தரரவிட்டால், அதையே கர்நாடக சுப்ரிம் கோர்டில் சுட்டிக் காட்டி நீர் தருவதையே நிறுத்தி விடுவார்கள்...///. - உண்மைதான்.

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  நீ எங்கிருந்து எடுத்தா அது அங்கேயே எடுக்கப்பட்டது. திராவிட கையாலாகாத கவர்மென்டுகளா முதல்ல தமிழ்நாட்டில் வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை மற்றும் கட்டுங்கள்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நிலத்தை எல்லாம் பிளாட் போட்டுவிட்டு அப்பறம் ஏன் தண்ணீர்...?

 • Manian - Chennai,இந்தியா

  மூடர்களுக்கு ஒன்று புரியவேண்டும். கேரளத்திற்கு ஒப்பந்தப்படி நீர் தரரவிட்டால், அதையே கர்நாடக சுப்ரிம் கோர்டில் சுட்டிக் காட்டி நீர் தருவதையே நிறுத்தி விடுவார்கள். தமிழ் நாட்டில் இருந்தாலும், டெல்ட்டா விவசாயிகள் செத்தால் பரவாயில்லை, நமக்கு மட்டும் நெல் மூலம் லாபம் வேண்டும் என்பது திராவிட கொள்கை என்பதையே காட்டுகிறது. சுடாலினார், கமல், ரஜனி, ராமதாசு போனவர்கள் ஏன் அவர்களிடம் சமரசம் பேசவில்லை. மூத்திரம் குடித்தால் போதும், மக்கள் பணத்தில் கடன் தள்ளுபடி கேட்க வேண்டியது தானே. நியாயம் என்பது இல்லாவிட்டால் தமிழ் நாடு தண்ணிரியின்றி செத்துவிடும். சொட்டு நீர் பாசனம், தண்ணீர் சேமிப்புக்கு குட்டைகள், தடுப்பணைகள் வெட்டினார்களா?

 • jagan - Chennai,இந்தியா

  நாம கர்நாடகாவை சொல்றோம், நாமளும் அதேயே செய்யுறோம்...

Advertisement