Advertisement

நான் புத்தகத்தை தான் காதலித்தேன்! - பா.விஜய் பளிச்

கவிஞன் மட்டும் தான் 'கருப்படு' பொருளை உருப்பட வைப்பவன். கற்பனையில் படைப்பதால் அவன் ஒரு பிரம்மன்தான். வெண்ணிலாவை 'தயிராடைக்கட்டி' என்றும், வெள்ளை கொய்யாவை 'பாலாடைக்கட்டி' எனவும் வர்ணிக்க கவிஞர்களால் மட்டும் தான் முடியும்.வானத்து மீதினிலே... வண்ணத்து அழகினிலே... மேக வீதியிலே... மோக ரீதியிலே... தேனிசை ராகத்திலே, ராப் பகலாய் பாட்டெழுதி ராஜ கவியானவர்கள் உண்டு. இவர்களில் தன்னம்பிக்கை கவிதை எழுதி, தனிக்கவியானவர்தான் கவிஞர் பா.விஜய்.
கவிஞர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்கள் எடுத்துள்ள அவரிடம் சண்டே ஸ்பெஷலுக்கு ஒரு நேர்காணல்:
* கவிதை பிறந்தது எந்த வயதோ?எனது சொந்த ஊர் கும்பகோணம். கோவைக்கு பிழைப்புக்காக வந்தோம். நான் 6ம் வகுப்பு படிக்கும் போதே கவிதை எழுதினேன். அப்போதே தன்னம்பிக்கை கவிதை எழுத துவங்கினேன்.
* உங்களுக்கு பிடித்தது 'கவி' தான் எனது உயிர். அது என்னுள் பிறந்தது. மற்றது எல்லாம் நான் தேடி சென்றது. அது நிலைக்கலாம்; நிலைக்காமலும் போகலாம்.
* சினிமாவில் முதல் பாடல் நடிகர் பாக்யராஜ் இயக்கிய படத்தில் 'மணிமாட புறாவே...' என்ற பாடல் தான் எனது முதல் வாய்ப்பு. இது வெற்றி பெற்றாலும், அதன் பின்பு 3 ஆண்டுகள் வாய்ப்பு இல்லாமல் தான் இருந்தேன். இதற்கு பின்புதான், 'நீ வருவாய் என, வானத்தை போல, கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு' என எழுதிய பாடல்கள் சிறப்பு பெற்றன.

* தேசிய விருது பெற்றதுஆட்டோ கிராப் படத்தில் 'ஒவ்வொரு பூக்களுமே' என்ற தன்னம்பிக்கை பாடல் தான் எனக்கு தேசிய விருதை பெற்று தந்தது. இதற்கு பின்புதான் என்னிடமும் பலர் 'ஆட்டோகிராப்' வாங்கினர்.

* உங்கள் குரு எனது குரு, கவிஞர் வாலி தான் என்னை வாரிசாக அறிவித்தார். 'கவிஞராக இருப்பது கடினம், அதை விட கடினம் மனிதராக இருப்பது. பா.விஜய் இந்த இரண்டுமாக இருக்கிறார்' என என்னை புகழாரம் சூட்டினார். வாலி எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

* தற்போதுள்ள உங்கள் படைப்புகள்...?இதுவரை 47 கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளேன். இன்னும் மூன்று புத்தகம் தயாராகி வருகிறது. விரைவில் வெளியிடுவேன்.
* கவிஞருக்கு காதல்?நான் புத்தகத்தை தான் காதலித்தேன். சிறு வயதில் காதல் கவிதை எழுதியது இல்லை. தன்னம்பிக்கை கவிதை தான் அதிகம் எழுதினேன்.
* இளைஞர்கள் தன்னம்பிக்கை பெற?இளைஞர்கள் புத்தகங்களையும், செய்தி தாள்களையும் அதிகம் வாசிக்க வேண்டும். புத்தகங்கள், செய்தி தாள்கள், கதை, கட்டுரைகளை படிக்கும் போது மனதில் தனிமை தெரியாது. நம்முடன் அறிஞர் இருப்பது போன்று நம்பிக்கை ஏற்படும். பல பிரச்னைகளை படிப்பதால், நமக்கு பிரச்னை ஏற்படும்போது தீர்வு காணவே, மூளை முயலும். தற்போது இளைஞர்களிடம் வாசிப்பு இல்லை. முகநுால், வாட்ஸ்அப்புக்குள் செல்கிறார்கள். மனதில் வெறுமை மிஞ்சுவதால் தன்னம்பிக்கை குறைகிறது.
* இதற்கு தீர்வு?பெற்றோர், ஆசிரியர்கள் வாசிக்க சொல்லி கொடுக்க வேண்டும். தன்னம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்கள் என்ன செய்கிறார்களோ அதைத்தான் பிள்ளைகள் செய்வர். நான் மாணவர்களிடம் பேசும்போது, கவிதை எழுதும்போது, தன்னம்பிக்கை வளர்க்கும் கருத்தை விதைக்கிறேன். பெற்றோர் நல்ல புத்தகங்களை குழந்தைகளுக்கு பரிசாக அளிக்க வேண்டும். தொடர்ந்து அளியுங்கள்; அவர்கள் வாசிப்பை நேசிப்பர்.
* பிடித்த இசை அமைப்பாளர்இளையராஜா. அவருக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளதை நேரில் சென்று பாராட்டினேன். ''இறைவனை தேடும் உலகினில், இவனோ மனிதனை தேடுகிறான்' என நான் ஒரு புது பாடல் எழுதியுள்ளேன். அதை அவர் இசையமைத்து பாடி உள்ளார்
* ஆருத்ராவில் நீங்கள் கதாநாயகனாநானே தான். முதலில் கதாநாயகனாக நடிப்பது கஷ்டமாக இருந்தது. தற்போது பழகி போய்விட்டது. எளிதாக நடிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.இவரை pavijhaygmail.comல் இவரை தொடர்பு கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து (4)

  • suresh - chennai,இந்தியா

    வாழ்க்கை கவிதை வாசிப்போம், வானம் அளவு யோசிப்போம்,முயற்சி என்ற ஒன்றை மட்டும், மூச்சை போல சுவாசிப்போம், லட்சம் கனவு கண்ணோடு, லட்சியங்கள் நெஞ்சோடு, உன்னை வெல்ல யாருமில்லே உறுதியோடு போராடு,மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும், அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும் தோல்வி இன்றி வரலாறா, துக்கம் என்ன என் தோழா,ஒரு முடிவிருந்தால் .. அதில் தெளிவிருந்தால், அந்த வானம் வசமாகும் ,மனமே ஒ மனமே நீ மாறிவிடு, மலையோ அது பனியோ நீ மோதிவிடு.,, அருமையான வரிகள், அவரின் புலமையை பற்றி பேச வேண்டிய இடத்தில், தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவது வேதனைக்குரியது, அதில் ஒரு பெண்ணின் கருத்து வேறு.

  • Girija - Chennai,இந்தியா

    லாட்டரி மார்டினை கருணாநிதியுடன் இணைத்து பணப்பொருள் கண்ட அதி புத்திசாலி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement