Advertisement

மூன்றாம் பாலினம் என்பதால் பணி மறுப்பு; கருணை கொலை கோரி கடிதம்

புதுடில்லி: மூன்றாம் பாலினத்தவர் என்பதால் ஏர் இந்தியா நிறுவனம் பணி வழங்க மறுத்துள்ளதாகவும், இதனால் தான் வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படுவதால் தன்னை கருணை கொலை செய்ய கோரி தமிழகத்தை சேர்ந்த ஷனாவி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்தவர் ஷனாவி பொண்ணுசாமி, இவர் மூன்றாம் பாலினத்தவர். இவர் கடந்த 2010ம் ஆண்டு பொறியியல் பட்டதாரியானார். பின் சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தில் சேர்ந்து கஸ்டமர் சப்போர்ட் எக்ஸிகியூட்டிவ் ஆக சுமார் 13 மாதம் பணியாற்றியுள்ளார். இதற்கிடையில் அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக மாறினார். மேலும் தனது பெயரையும், பாலினத்தையும் தமிழக அரசு விதிப்படி கெஸட்டில் பதிவும் செய்துள்ளார்


இந்நிலையில் அவர் ஏர் இந்தியா நிறுவனத்தின் கேபின் க்ரூ பணிக்காக விண்ணப்பித்தார். அவர் கடந்த 4 முறை விண்ணப்பித்தும் இறுதி பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து விசாரித்த போது. இந்த பணி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இவருக்கு அந்த பணி கிடைக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு தொடர்ந்தும் பதில் வரவில்லை.


இந்நிலையில் அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‛‛ தான் மாற்று பாலினத்தவர் என்பதால் ஏர் இந்தியா நிறுவனம் எனக்கு பணி வழங்க மறுத்து எனது அடிப்படை உரிமையை மறுத்துள்ளது. அரசு நிறுவனமான ஏர் இந்தியாவே எனக்கு பணி மறுத்தால் மற்ற தனியார் நிறுவனங்களில் என் கதியை சொல்லி தெரியவேண்டியதில்லை. தற்போது நான் வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்பட்டு வருகிறேன். எனது தின உணவுக்கான செலவுக்கே திண்டாட வேண்டிய நிலை உள்ளது. அதனால் என்னை கருணை கொலை செய்ய வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்

  Irukkuratha uttuttu parakka aasaipadakoodaadu

 • P. Kannan - Bodinayakkanur,இந்தியா

  நல்லா பிறக்கிறவனுக்கே இங்கே வேலை கொடுக்க மாட்டேன் என்கிறான், இன்னோம் இங்கே உங்கள் பாலினத்தவரை பற்றிய புரிதல் யாருக்குமே இல்லையே, பின் ஏன் முறையீடு, பேசாம சிவனை நோக்கி தவமிரு , அவருதான் உங்க ஆளு ஏதாவது வழியை காட்டுவார்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  உங்களிடம் பணம் இருந்தால் பணி..... இல்லையா கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் இது தான் அரசியல்வாதிகளின் அரசு வேலைகளில் எழுதப்பட்ட விதி.... புலம்பி பயனில்லை ..இருந்தாலும் உங்களுக்கு இறைவன் நல் வழியை ஏற்படுத்தி தருவான்...

 • vnatarajan - chennai,இந்தியா

  இவர் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் கஸ்டமர் சப்போர்ட் எக்சிகியூடிவ் வேளையிலேயே நீடிக்கலாம் அவர் அவருடைய வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படவேண்டிய தேவையில்லையே .

 • makkal neethi - TVL,இந்தியா

  வேலைக்கான கல்வி தகுதி இருக்கும்போது பாலினம் பார்க்காமல் வேலை கொடுப்பதில் தவறேதும் இல்லையே

 • Arivu Nambi - madurai,இந்தியா

  இந்த செயற்கை பெண்ணுக்கு ஏர் இந்தியா நிறுவனம் இயற்க்கை ,பெண்ணாகவே நினைத்தாலும் வேலை கொடுத்தே ஆகவேண்டும் என்று கட்டாயம் கிடையாது ,இந்த வேலைக்கு உங்களின் தகுதி போதாது என்று காரணம் கூறியிருக்கலாம் ,அதைவிடுத்து குசும்பாக மறுப்பு கடிதம் அனுப்பியது தான் தவறு .தவளை தன்வாயால் கெட்டுள்ளது. தவளைக்கு கண்டனம் தெரிவிக்கலாம் . ஆனால் செயற்கையின் பிடிவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது ,எல்லோரையும் முட்டாள்கள் என்று நினைத்து ஜனாவுக்கு கடிதம் எழுதியுள்ளது அவருடைய முட்டாள்தனம் ,,வேறு வேலை தேடி செல்வதுதான் நாகரீகம் .உங்களின் செயற்கையை காரணம் கூறி முறையற்றவகையில் பயன் பெற நினைப்பது தவறு .

 • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

  அவருடை பேச்சும் பெண் போல் இருப்பதால் வேலை கொடுக்கலாமே ,இந்த அரவாணி பெண்ணுக்கு

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியில் இவர்களுக்கு பங்கில்லையா. என்னடா இது கொடுமை .

 • Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா

  இவர் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வேலைகளை விட்டுவிட்டு முன்னர் பார்த்த வேலையோ அல்லது பொதுவான வேலைகளுக்கோ முயற்சி செய்யலாமே இது போன்று navy யிலும் சமீபத்தில் நடந்தது. ஆணில் இருந்து பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்டவருக்கு அவர் முன் செய்த பணி(ஆண்களுக்கானது) இல்லாமல் வேறு பணி தரப்பட்டது

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  இது குறித்து வழக்கு தொடர்ந்தும் பதில் வரவில்லை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு கடிதம் எழுதியுள்ளார். எனது தின உணவுக்கான செலவுக்கே திண்டாட வேண்டிய நிலை உள்ளது. அதனால் என்னை கருணை கொலை செய்ய வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார். சீவாமணிங்களா இந்த அம்மையார் காங்கிரஸோட செட்டப்பா ஈக்குமே?

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  பொறுக்கிகள் திருடர்கள் கேவலமான பொம்பளே பொறுக்கிகள் வாழலாம் என்றால் இவளும் மனித இனமே தான் நிஸ்ச்சயம் 100% வாழும் உரிமை உண்டு மறுப்பர்களையோ ஏளனம் செய்பவர்களையோ தண்டிக்கவேண்டும் என்பது தான் சட்டம்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மல்லையா உங்களை முன்பாக பார்த்து இருந்தார் என்றால் உங்களையும் வெளிநாடு கொண்டு சென்று இருப்பார்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இதற்க்கு தனியாக ஒரு வழிவகையை எல்லா அரசுகளும் கடைபிடிக்கவேண்டும்...

 • Mani Srinivasan - Chennai,இந்தியா

  அவர் வேறு பாலினத்தவர் என்பதால் பனி கிடையாது என கூறுவது அபத்தம் வேலை யார் செய்த்தால் என்ன

 • susainathan -

  actually this 3rd gender fellow did operation it means naturally this fellow not 3rd gender so government should punish that 3rd gender fellow we give respect for who is born to 3rd gender not for did some. surgery to hospital changing the gender

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  கடவுளோ இருதயத்தை பார்கிறார், மனிதனோ முகத்தை பார்கிறான். ஒரு நிறுவனத்தில் தானே பணி கேட்கிறார். உங்களுடைய வீட்டில் கேட்கவில்லையே

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அதுவரைக்கும் கடந்த சுமார் 13 மாதம் பணியாற்றிய கஸ்டமர் சப்போர்ட் எக்ஸிகியூட்டிவ் பணியை தொடரலாமே சகோ?

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  ஏர் இந்தியாவே தனியார் மயம் ஆகிறது . இனி இட ஒதுக்கீடு கருணை வேலை வாய்ப்பு , தொழிலாளர் நலன் எதுவும் இருக்காது . விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஒரு வருடம் மேல் சமபளபாக்கி வைத்து உள்ளார் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement