Advertisement

கட்சிக்கு பெயர் என்ன: கமல் ஆலோசனை

அரசியல் பயணம் குறித்தும், கட்சிப் பணிகள் தொடர்பாகவும், நடிகர் கமல், சென்னையில், நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.


தமிழக அமைச்சர்கள் மற்றும், பா.ஜ.,வினரை விமர்சித்து வந்த கமல், புதிய கட்சி துவங்கப் போவதாக அறிவித்தார். பின், ராமேஸ்வரத்தில் உள்ள, மறைந்த ஜனாதிபதி, கலாம் வீட்டில் இருந்து, பிப்., 21ல், தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்கப் போவதாக அறிவித்தார்.இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகருக்குச் சென்ற கமல், 'இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை' என, அறிவித்தார். சென்னை திரும்பியதும், அரசியல் சுற்றுப்பயணம் மற்றும் கட்சிப் பணிகள் தொடர்பாக, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், மன்ற நிர்வாகிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.


இந்த கூட்டத்தில், புதிய கட்சிக்கு, 'மக்கள் கட்சி' என, பெயரிட்டு இருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.கட்சியின் பெயரை, டில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது தொடர்பாகவும், வழக்கறிஞர்களுடன் விவாதிக்கப்பட்டது.


மதுரையில் கட்சியின் பெயரை அறிவித்த பின், அதை பதிவு செய்வதற்கான பணிகள் துவங்கப்படும் என, தெரிகிறது..
மேலும், கட்சிக் கொடி வடிவமைப்பு, சுற்றுப்பயண அட்டவணை, பொதுக்கூட்ட ஏற்பாடுகள் மற்றும் அரசியல் கொள்கைகள் குறித்தும், நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அவரது சுற்றுப்பயண விபரம், 18ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது


நடிப்புக்கு முழுக்கா? மன்ற நிர்வாகிகளுடன், நேற்று ஆலோசனை நடத்திய பின், கமல் அளித்த பேட்டி: முழு நேர அரசியலுக்கு வந்த பிறகே, நடிப்பை தொடர்வது குறித்து, முடிவு எடுக்கவுள்ளேன். தற்போது, மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளேன். அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்ய, டில்லி செல்லும் திட்டம் இப்போதைக்கு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (36)

 • bal - chennai,இந்தியா

  எல்ல காட்சிகளிலும் ஓர் திராவிடம், ஒரு முன்னேற்றம், ஒரு கழகம் பெயர் இருக்கதான் செய்யும். மக்கள் குழப்பமடைந்து விடுமாறு பெயர் இருக்க வேண்டும். கமல் முன்னேற்ற கழகம்...KMK ஹொவ் ஐஸ் இட்?

 • venkat -

  க மலக் கட்சி

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  கலவையர் முன்னேற்ற கழகம் (கமுக)?.

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  இச் இச் தமிழன்பனார் கழகம். இந்த பேரு ஓ கே வா ஜி.

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  மௌத் கிஸ் முன்னேற்ற கழகம். உங்க குணத்துக்கு ஏற்ற பெயர்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  டாஸ்மாக் நாட்டை விட்டே சென்று விடுவேன் என்று பீலா விட்டுட்டு, சினிமாவை விட்டுவிட்டு இந்த மாதிரி கட்சி ஆரம்பித்தால் டாஸ்மாக் நாடே கதி என்று இருக்க வேண்டுமே, பரவாயில்லையா வாணி சரிகா கவுதமி கமலே .

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  டாஸ்மாக் நாட்டு திராவிட கழகம். அதன் லோகோவில் ஒரு பக்கம் Virgin ஆயீஷா இன்னொரு பக்கம் Virgin மேரி அதன் கொள்கை. 1 ) யாருடன் வேண்டுமானாலும் யாரும் இணைந்து இருக்கலாம் 2 ) இந்து விரோத கழகம் அல்ல ஆனால் இந்துக்களும் நல்லவர்களே முஸ்லிம்களைப்போல, கிறித்துவர்களைப்போல 3 ) புடவை, பணம், கூப்பாடு எனபதே எமது மூன்று முக்கிய கொள்கை.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  கமல் திராவிட முன்னேற்ற கழகம் ( KDMK ) இதில் உங்கள் கொள்கை , கட்சி தொடங்கிய நோக்கம் அனைத்தும் இடம் பெற்றுள்ளது.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  மகள்கள் நல கட்சி என்று பெயரிட்டு ஸ்ருதி , அக்ஷரா படத்தை போட்டு கொடி விட்டால் கொஞ்சம் தாய்குலத்தின் வோட்டு கிடைக்கலாம்.

 • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

  மக்கள் மனித நேய கட்சி என பெயரிடலாமே

 • mindum vasantham - madurai,இந்தியா

  Kiss munnetra kalakam,manjal thundu adimai kalakam,you can be aryan or dravidian but not slave of gopala puram

 • vns - Delhi,இந்தியா

  கிருத்துவ முஸ்லீம் திரவிஷ முன்னேற்ற கழகம்.. இது இந்து விரோத கட்சி அல்ல. தமிழகத்தில் தான் இந்துக்கள் இல்லையே இருப்பவர்கள் ஒன்று இஸ்லாமியர் அல்லது கிருத்துவர் அல்லது திரவிஷர்கள்.. அவர்கள் மூவரையும் உள்படுத்தியுள்ள கட்சி.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  உன்னால் முடியும் தம்பி என்ற கிராம முன்னேற்ற படத்தில் நடித்த கமல் தனது மக்கள் கட்சிக்கு உன்னால் முடியும் தம்பி என்ற லோகோவையும் சேர்க்கலாம்

 • Dhanraj Jayachandren - Madurai,இந்தியா

  மக்களின் ஆதரவு கமலுக்கு உண்டு....

 • C.Elumalai - Chennai,இந்தியா

  க தி மு இ ம க (கம்யூனிஸ்ட்,திராவிட முன்னேற்ற இந்து மதச்சார்பற்ற காங்கிரஸ்) இந்தபெயர்தான் கமலுக்கு சரிவரும். தானும்குழம்பி, மக்களையும், குழப்பலாம்.

 • SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்

  தமிழக முற்போக்கு திராவிட கழகம் (இந்த பெயர் தான் சரியாக இருக்கும் )

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  திராவிட திருட்டு கழுதைகள் கட்சி. (தி தி க க). விக்கல் வந்தவன் பேசுவது போலவும் இருக்கும்..கருப்பு சட்டையின் அட்ரஸ் இதில் இருக்கிறது..திராவிடம் இதில் இருக்கிறது..அவர்களின் குலத்தொழில் இதில் இருக்கிறது..மற்றும் அவர்களால் வணங்கப்படும் வாகனமும் இதில் இருக்கிறது. உங்கள் கட்சிக்கு பொருத்தமான பெயரை எடுத்து தந்ததால், அப்போ எனக்கு உரிய பணமுடிப்பை தவறாமல் எனக்கு தந்து விடுங்கள் கமல் அவர்களே.

 • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

  ஸ்டாலின் டி குடிக்க கூப்பிட்டால் போய்விடாதீர்கள் கமலஹாசன்

 • Manian - Chennai,இந்தியா

  சு தி க (சுட்ட திராவிடர்கள் கழகம்)

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  வாசக அன்பர்கள் நிறைய உள்ள கட்சி. எனவே வா .ச. க. கட்சின்னு பெயர் பொருத்தமாக இருக்கும்( இது வாணி கணபதி, சரிகா, கவுதமி ஆகியோரின் முதலெழுத்துக்கள் என நினைக்கவேண்டாம்)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பீபுள்ஸ் பார்ட்டி பி பி ஊதாமல் இருந்தால் சரி

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  மக்கள் திராவிட கட்சியா ..திராவிடம் என்ற பெயர் இல்லாமல் இருக்காது .

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  'மக்கள் கட்சி" - மக்கள் நலக் கூட்டணி தான் ஞாபகம் வருது.. பாவம்.

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  என்னடா இது அரசியலுக்கு வந்த சோதனை.... தமிழ்நாட்டில் நோட்டாவுடன் போட்டி போடும் ஒரே கட்சி பிஜேபி என்று பார்த்தால்... இப்படி வரிந்து கட்டி கொண்டு ஆளாளுக்கு குதிக்கிறாங்கோ ....

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  கமல் பேசறது யாருக்கும் புரியாது......அதனால கட்சியின் பெயரை குழப்ப கட்சி என்று வைக்கலாம்........

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  ஒரு குல தெய்வ திட ம் போய் ,ஐய்யர் உங்கள் காதுக்குள் பூரக்கூடியதாக சொல்கிற பெயரை வையுங்கள். தோஷம் நீங்கினதாயுமிருக்கும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கமல் முகவிடம் ஆசி வாங்கி கட்சியின் பெயரை வெளியிடுவார்... திமுகவுக்கு கிடைக்கும் கொஞ்சநஞ்சம் வாக்குக்களையும் இவர்கள் பிரித்து ஸ்டாலினின் முதல்வர் பதவியை நிரந்தர கனவாக ஆக்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன்...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  மக்கள் கட்சி நல்ல பெயர். ஆனால் தலைவர் தான் பார்ட் டைம் தலைவர். கமல் பிஜேபியை தள்ளிவைத்து இருந்தாலும், இவர் பிஜேபி யின் தமிழக புறக்கணிப்பு செயல்களை துணிவாக எதிர்க்காத வரை, இவரை பிஜேபியின் மூன்றாம் அணி என்று தான் அழைப்பார்கள். ரஜினி குருமூர்த்தியின் இயக்கத்தில் விவாசாயி படம் நடிக்கிறார் என்று தெளிவாக விளங்குகிறது. ஆனால் கமல் தான் தோன்றித்தனமாக இயக்குனர் குருமூர்த்தியின் வேலையில் பாதியை தானே செய்கிறார். அதன் வெளிப்பாடுதான் திராவிடம் என்று சொல்லி வருகிறார்.

 • Manian - Chennai,இந்தியா

  கதம்ப-திராவிடர்கள் எழுச்சி கழகம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement