Advertisement

'மோடி கேர்' திட்டத்தில் தமிழகம் இணையுமா? டில்லி கூட்டத்திற்கு பின் முடிவு

'மத்திய அரசின், 'மோடி கேர்' திட்டத்தில், தமிழக அரசு இணையுமா என்பது குறித்து, டில்லியில் நடக்கும், மத்திய சுகாதார அமைச்சக கூட்டத்திற்கு பின் முடிவெடுக்கப்படும்' என, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


10 கோடி குடும்பம்
மத்திய அரசு, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில், 'மோடி கேர்' என்ற காப்பீட்டு திட்டத்தை கொண்டு வர உள்ளது. இத்திட்டத்தில், ஆண்டு தோறும், 10 கோடி குடும்பங்களுக்கு, சிகிச்சைக்காக, தலா, ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம், 50 கோடி பேர் பயன் பெறுவர் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.


'இத்திட்டத்துக்கு, ஆண்டு ஒன்றுக்கு, 11 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்' என, 'நிடி ஆயோக்'
அமைப்பும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும் கணித்துள்ளன. 'இதற்கான செலவினங்களில், 40 சதவீதம், மாநில அரசுகள் பங்களிக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.


இந்நிலையில், மத்திய அரசின், 'மோடி கேர்' திட்டத்தில், தமிழகம் இணையுமா என்பது, கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே, முதல்வர் காப்பீட்டு திட்டம் செயல்படுகிறது.


இத்திட்டத்தில், 1.57 கோடி குடும்பங்களுக்கு, சிகிச்சைக்காக, ஆண்டுக்கு, தலா, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. உயர் மருத்துவ சிகிச்சைக்கு, 22.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.


இதன் வாயிலாக, 3.5 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். இதனால், மேற்கு வங்கத்தை போல், 'மோடி கேர்' திட்டத்தில் இருந்து, தமிழக அரசு விலகி கொள்ளுமா அல்லது இணைந்து
செயல்படுமா என்ற குழப்பத்தில், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளனர்.


ஆலோசனை
இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: டில்லியில், 'மோடி கேர்' திட்டம் குறித்து, அனைத்து மாநில சுகாதாரத் துறை
செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.


தமிழகத்தில் இருந்து, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன்பங்கேற்கிறார். அப்போது, தமிழகத்தில், ஏற்கனவே செயல்படுத்தி வரும், முதல்வர் காப்பீட்டு திட்டம் குறித்தும், 'மோடி கேர்' திட்டத்தில் இணைவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்தும், மத்திய அரசிடம் விவரிப்பார்.


மத்திய அரசு காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கான வாய்ப்புகள் இருந்தால், அது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மத்திய அரசிடம் ஆலோசித்து, தமிழக அரசு, தன் நிலைப்பாட்டை, ஓரிரு நாட்களில் தெளிவுபடுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • ஆப்பு -

  இப்பிடித்தான் ஆளுக்கு கணக்கில் 15 லட்சம் போடுவோம்னு சொல்லிட்டு வந்தாங்க...கடைசியில் நம்ம கணக்கில் இருக்கறதையும் உருவுக்கிட்டிருக்காங்க... இப்போ 10 கோடி பேருக்கு ஆளுக்கு 5 லட்சம்னு வர்ராங்க... ஆதார் இல்லை, கோவணம் மட்டும் கட்டியிருந்தாதான் உதவி, பல் வலிக்கு இது பொருந்தாது, ரொம்ப வயசாச்சு...இன்னிக்கோ நாளைக்கோ கேசுக்கு உதவியில்லைன்னு சொல்லி நாம் கட்டற பிரிமியத்தையும் ஸ்வாஹா பண்ணிருவாங்க... நாம பாக்காத கேஸ் மானியக் கொள்ளையா? இதுல பல தனியார் இன்சூரன்ஸ், கார்ப்பரேட்டுகள் நல்லா கல்லா கட்டும்.

 • P.Narasimhan - Tirupattur,Vellore Dist,இந்தியா

  "இதற்கான செலவினங்களில், 40 சதவீதம், மாநில அரசுகள் பங்களிக்க வேண்டும்" - மோடி கேர் பெயருடன் மாநில முதல்வர்கள் பெயரையும் சேர்க்கவேண்டும்? ஆனா இந்த காசெல்லாம் மக்களிடமிருந்து வரியாக வசூலிக்கப்பட்டது. அப்போ என்ன பேரு வைக்கலாம்? மக்கள் காப்பீட்டு திட்டம்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  அதிகபட்சம் இன்னும் ஓர் ஆண்டுக்கு மட்டுமே ஆயுள் உள்ள இத்திட்டத்தில் இணைந்து என்ன பிரயோஜனம். மாநில அரசின் காப்பீட்டு திட்டத்தையே குறையின்றி செயல் படுத்துவது நல்லது.

 • Sampath Kumar - chennai,இந்தியா

  இணையுமாவா ??? அது தான் முதலில் இணைத்து விட்டது

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  தமிழகத்துக்கு எய்ம்ஸ் என்ன ஆச்சு? எங்க வருது?

 • kandhan. - chennai,இந்தியா

  முதலில் சுகாதாரத்துறை செயலரை மாற்றுங்கள் கந்தன் சென்னை

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மாநில அரசின் காப்பீட்டுத்திட்டம் வெளிமாநில மருத்துவமனைகளில் செல்லாது. எனவே பிரதமர் திட்டத்தில் இணைந்து சேருவதே நல்லது

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  திராவிடனா கொக்கா... காசடிக்க வாய்ப்பில்லை என்றால் இணையை மாட்டார்கள்..

 • அரு -

  இந்த மாதிரி சமூக நல திட்டங்கள் தமிழ் நாட்டில் உள்ள திராவிட கட்சிகள் அமுல்படுத்தி 10 ஆண்டுகளை கடந்து ஆயிற்று. நாம் தான் இதற்கு முன்னோடி. வேண்டும் என்றால் நமது திட்டத்தில் பாஜக இனையட்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement