Advertisement

வேடசந்தூர் மாஜி எம்.எல்.ஏ., ஆண்டிவேல் கொலை

திண்டுக்கல்: வேடசந்தூர் முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆண்டிவேல் கொலை செய்யப்பட்டார்.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிவேல் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். வேடசந்தூர் அருகே தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் கழுத்தறுபட்ட நிலையில் அவரது உடல் கிடந்தது. உடலை கைபற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2001 முதல் 2006 வரை வேடசந்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக ஆண்டிவேல் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  தமிழ்நாடு அரசு எதிலும் ஊழல் லஞ்சம் என்று ஆட்சி செய்யும் போது எப்படி மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் ?

 • சுரேஷ் குமார். - சொக்கநாதபுரம். ,சிங்கப்பூர்

  ஈமு கோழி விவகாரத்தில் நிறைய அப்பாவி மக்களை ஏமாற்றியவர் என்ற புகார் இருந்தது.. பணத்தை இழந்த யாரவது போட்டுத்தள்ளி இருப்பார்கள். இவருக்கெல்லாம் இரக்கப்படக்கூடாது

 • Mani Srinivasan - Chennai,இந்தியா

  இது அவர்களுக்குள் ஏற்பட்ட குரோதம் காரணமே பழி வாங்கும் நிகழ்வே இதற்கு கரணம்

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  Please read J&K News also

 • HariHaranSubramanian -

  பாமர மனிதருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத அரசாங்கம் ,முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருக்கும் எப்படி அளிக்கும் ???

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஒருமுறை நாகை பாராளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டார் இவர்கள் பதவியிலிருக்கும் போட்டதும் பின் அதன்பின்பும் முறைகேடாக சொத்துக்கள் சேர்த்தத்திலும் கட்டப்பஞ்சாயத்திலும் பெண் விவகாரங்களிலும் எவ்வளவுப் பெயரை விரோதித்துக் கொண்டாரோ என்னமோ இருப்பினும் இறைவன் கொடுத்த உயிரை மனிதர்கள் பறிப்பது காட்டுமிராண்டித்தனமான செயலே

 • pu.ma.ko - Chennai,இந்தியா

  முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்கு நடுவில் தான் வாழ்ந்து வருகின்றனர். அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 • ppmkoilraj - erode.10,இந்தியா

  தமிழக கொலைகள் பெரும்பாலும் கூலிபடைகளால் செய்யப்படுகிறது. இதில் ரோட்டில் விபத்தை ஏற்படுத்தி 304Aசெக்ஷன் என ஈஸியா போலீஸ் விபத்தாக,மாற்றுவது ஆங்காங்கே நடக்கிறது. கொலைகாரர்கள் உடனுக்குடன் தூக்கில் போட்டால் மட்டுமே கொலகளை 50சதவீதம் குறைக்கலாம். உயிருக்கு பயந்து பலர் சாட்சி சொல்ல வருவது இல்லை இ தனால் கொலை யாளி. விடுதலை ஆகிவிடுகிறார்கள். அப்படி விடுதலை ஆகிவிடும் குற்றவாளி அவர் ஜருரா வெளி நடமாடுகிறார். இதனை பொறுக்க முடியாமல் வி டுதலயான குற்றவாளி ,பாதிக்க பட்டவர்களால் பி ன்கொலை செய்யபடுகிறார்.கொலை தொடர்கிறது.இப்படித்தான் தமிழக காவல் துறை இயங்கு கிறது.குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை ஓகே.அப்ப கொலை பண்ணியவர் யார்?இதனை மீண்டும் கோர்ட் வலியுறுத்தி கேட்பதில்லை.பைல் குளோஸ்.இந்த நிலை மாறி பைல் குளோஸ் பண்ணாமல் உண்மை குற்றவாளியை மீண்டும் கண்டு பிடித்து கோர்ட் தண்டிக்கிறதோ அப்போது கொலைகள் குறைந்து விடும்.கோர்ட்மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது.

 • chails ahamad - doha,கத்தார்

  மனதை கனக்கின்றது இன்றைய ஆளும் கட்சியின் முன்னாள் எம் எல் ஏ வையே கழுத்தறுத்து படுகொலைகள் நடைபெறுவது சாதாரண மக்களாகிய நம்மையே குலை நடுங்க செய்கின்றது , மனதையும் வேதனைக்கின்றது, கொலையாளிகள் யாராக இருப்பினும் தயவு தாட்சனைகள் இன்றி கடுமையான நடவடிக்கைக்கு உள்படுத்தினாலே , மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெறாது இருந்திடும் , தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவதின் எடுத்துக்காட்டாக இந்த கொலை வெறி சம்பவங்கள் நம்மை அஞ்ச செய்கின்றது. கொலையுண்ட ஆன்மா அமைதியடையவும் , அவரது குடும்பத்தார்களுக்கும் மன அமைதியை தந்தருளவும் இறைவனை வேண்டுகிறேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement