Advertisement

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா''?

மதுரை: வருவேன், வந்துடுவேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தவரை விட, வர மாட்டார் என நினைத்துக்கொண்டு இருந்தவர், வந்து விடுவார் போலிருக்கிறது. கமலைத் தான் சொல்கிறோம், என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

விஸ்வரூபமா:
இதுவரை தமிழகத்தில், வயதானதால் அல்லது மார்க்கெட் போனதால் அரசியலுக்கு வந்தவர்களே அதிகம். கமலைப் பொறுத்தவரை, வயது ஆகி இருக்கலாம்; மார்க்கெட் போய்விட்டது என்று கூற முடியாது. இவர் சமீபத்தில் நடித்த ‛பாபநாசம்' கூட வெற்றிப் படம் தான்.

அப்படியானால், இவரை அரசியலை நோக்கி இழுப்பது எது? மார்க்கெட் இருக்கும்போதே, அந்தப் புகழை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அவர் நினைத்திருக்கலாம். அத்துடன், எல்லோரும் கூறும் காரணமான, ‛ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தமிழக அரசியல் களத்தில் அறுவடை செய்ய நினைக்கிறார்' என்பதும் கூட இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும், அவரது பாய்ச்சல், வேகம் எடுத்துவிட்டது தெளிவாக தெரிகிறது. இதற்கு இன்னொரு ஆதாரம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய பிறகு, இப்படி கூறி, ஆழம் தெரியாவிட்டாலும், அரசியல் குளத்தில் ‛டைவ்' அடிக்க தயாராகி விட்டதை, அடையாளம் காட்டி விட்டார்.

மதுரையில் முதல் மாநாட்டை கமல் நடத்துவதும், ஒரு கேள்வியை எழுப்பி உள்ளது. அந்தக் காலம் முதல், பெரும்பாலான தலைவர்கள், கட்சி மாநாட்டை மதுரையில் தொடங்குவதையே வழக்கமாகவே வைத்துள்ளனர். மதுரையில் மாநாடு நடத்தினால் ‛ராசி' என்ற ‛சென்டிமென்ட்', இதற்கு முக்கியமான காரணம்.

பகுத்தறிவு பேசும் கமல், மதுரையில் மாநாடு நடத்துவதன் மூலம், தானும் ஒரு ‛சென்டிமென்ட் சாமி' தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். மதுரையில் ஒரு பிரமாண்ட கூட்டத்தைக் கூட்டி, தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்பது தான் அவரது திட்டமாக இருக்க வேண்டும்.

எம்ஜிஆர் - சிவாஜி, எம்ஜிஆர் - கருணாநிதி. தமிழக சினிமாவும், அரசியலும், இப்படித் தான் இரு துருவங்களுக்கு இடையே, ஊசலாடிக்கொண்டு இருந்தது.

‛‛சினிமாவில் இன்றைய நிலைமை, ரஜினி - கமல் என்ற இரு துருவங்கள். அரசியலிலும் அதே இரண்டு துருவங்கள் தான் இருக்க வேண்டும்; இருக்கப் போகின்றன. எங்கள் தலைவர் அப்படித் தான் நினைக்கிறார்'' என்கிறார் நீண்ட கால மதுரை கமல் மன்ற நிர்வாகி ஒருவர்.

பஞ்ச‛தந்திரமா':
ஒரு வினைக்கு எதிர்வினை இருக்கத் தானே செய்யும். அது போல், கமலின் அரசியல் பிரவேசமும் ஒரு ‛ஸ்டன்ட்' என்று ஒரு கூட்டம் சொல்கிறது. படங்கள் பரபரப்புடன் ஓட வேண்டும் என்பதற்காகவே அரசியல் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் கமல் என்கிறார் மதுரை ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர்.

‛ஒவ்வொரு முறையும் தனது படம் ரிலீசாகும் முன் ரஜினியை அப்படி கூறுவார்கள். கமலும் அதையே செய்கிறாரோ என்று சந்தேகிக்கிறோம். வயதானாலும் உடல் ரீதியாக கமல் ஆரோக்கியமாகவே இருக்கிறார். தாராளமாக இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர் நடிக்கலாம். இனி வரும் படங்கள் நன்கு ஓட வேண்டுமே என்ற கவலையில், தந்திரமாக அரசியல் செய்கிறார் கமல்'' என்றும் அந்த ரசிகள் கூறுகிறார்.

பிப்.21ம் தேதி மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் கட்சியின் முதல் மாநாட்டை கமல் கூட்டுவார் என எதிர்பார்ப்படுகிறது. அதன் பிறகு தெரிந்துவிடும், கமல் எடுப்பது ‛விஸ்வரூபமா' அல்லது பஞ்ச‛‛தந்திரமா'' என்று.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (77)

 • Babu Desikan - Bangalore,இந்தியா

  புஸ்வானம்

 • Sivagiri - chennai,இந்தியா

  மத்த எல்லா சினிமாக் காரணிகளும் கை காசை இழந்தார்கள் . . . இவன் மத்தவங்களை குறிப்பா ரசிகர்களை ஆட்டைய போட்றதுல கில்லாடி . . . சரி . . . மதுரைக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்த மாதிரி வருவாரா ? கலைஞர் ட்ரெய்ன்ல கூபே போட்டு வந்த மாதிரி வருவாரா ? . . . காந்தி காமராஜர் பெரியார் ராஜாஜி பாத யாத்திரையாவும் ஜெனெரல் கம்பார்ட்மெண்டுலயும் வந்த மாதிரி வருவாரா ? . . . அது ரசிகர்கள் வசதியை பொறுத்ததா . ? . . .

 • P. Kannan - Bodinayakkanur,இந்தியா

  இவன் மோசமான ஆள் ,?????......

 • Kalyani S - Ranipet,இந்தியா

  எம் ஜி ஆர் இறந்தவுடன் எம் ஜி ஆர் பக்தர்கள் யாரும் திமுகவிற்கோ மற்றக்கட்சிகளுக்கோ வாக்களிக்க வில்லை, அதிமுகவிற்கு தலைமையேற்ற ஜெயலலிதாவையே நம்பி வாக்களித்தார்கள். கலைஞர் உயிருடன் இருக்கும் போதே ஸ்டாலின் அவர்களை தன அரசியல் வாரிசாக அறிவித்துள்ளதால் திமுகவினர் யாரும் திமுகவை தவிர யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். எனவே ரஜினியும் கமலும் சரியான, திறமையான தலைமையில்லாத அதிமுக வாக்கை வேண்டுமானால் பிரித்து கொள்ளலாமே ஒழிய திமுகவின் வாக்குகளில் ஒன்றை கூட அவர்களால் பெற இயலாது. மேலும் பொது வாக்காளர்கள் அரசியலில் அனுபவமுள்ள ஸ்டாலின் தலைமையில் இயங்கும் திமுகவிற்க்கே வாக்களிப்பார்கள்.

 • HSR - Chennai,இந்தியா

  ஹிந்துக்களுக்கு எதிராக வாய் விடுவதில் இவன் விஸ்வரூபம்.. பச்சையப்பன்களுக்கு பஞ்சதந்திரம்.. ஆனால் இது ஒரு டம்மி பீஸ்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  கமல் விதவிதமான பைத்தியங்கள் வேஷம் போடுவதில் வல்லவர் , குணா, தெனாலி என்று பல படங்கள். அதில் ஒன்றுதான் நடக்கப்போகிறது.

 • Govindarajan Suresh - chennai,இந்தியா

  சீமான் , திருமா வரிசையில் இன்னொரு ஹிந்துமத எதிர்ப்பு, பெரியாரிய மார்க்சிய "முற்போக்கு" லெட்டர் பேடு கட்சி உருவாகாமல் இருந்தால் சரி

 • suresh - chennai,இந்தியா

  ஆன்மிக அரசியல் என்ற சொல் ரஜினியை பின்னுக்கு தள்ளிவிட்டது, பாஜகவின் பினாமி என்ற குற்றசாட்டு வேறு, ரஜினிக்கு தான் ஓட்டு என இருந்தேன், ஆனால், கமலின் தெளிவான பார்வை, பேச்சு, எதிர்கால திட்டம் என எதுவும் ரஜினியிடம் இல்லை, கமலுக்கே என் ஒட்டு

 • suresh - chennai,இந்தியா

  வரும் தேர்தலில், தினகரன், எடப்பாடி, ஸ்டாலின், கமல், ரஜினி, என ஐவர் அணி புகுந்தால், தொங்கு சட்டமன்றமா ? இது போகு கொசுறு தமிழிசை, விஜயகாந்த் சீமான், நோட்டா, அய்யோயோ தலையே சுத்துது கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக ஏதாச்சும் கூட்டணி வச்சிக்கும்.

 • Dhanraj Jayachandren - Madurai,இந்தியா

  நான் ஒரு அரசு அதிகாரி, மக்களோடு தொடர்பு உடையவன், அவர்கள் சொன்னது, அடுத்து ஸ்டாலின்தான் முதல்வர்..ஆனால் இவர் ஒருத்தர் இருக்காரே கமல் அவர் வந்த அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்.... மக்கள் யாரை தூங்குவார்கள் யாரை ஏறுக்குவார்கள் என்று தெரியாது ஆனால் ...இவரின் அறிவு சார்ந்த அரசியல் எனக்கு பிடித்தது போல் பல மக்களுக்கு பிடித்து உள்ளது...

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  விஸ்வரூபமும் இல்லை பஞ்சதந்திரமும் இல்லை. 16 வயதினிலே பரட்டை வேஷம் காரண்டீ. பாக்ய ராஜ், TTR, SVS, SK, VK .... இப்படி எத்தனையோ நடிகர்கள் வரிசையில் கமல் நின்றாக வேண்டும்.

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  சப்பாணியையும் பரட்டையையும் மீண்டும் சேர்த்து நடிக்க வைக்க முயற்சிக்கிறார்கள், துருவங்கள் தானாக உருவாக வேண்டும், இப்படி செயற்கையாக உருவாக்கிவிடலாம் என்பதெல்லாம் வெற்று முயற்சியாகத்தான் போக போகிறது. மக்கள் இந்த செயற்கை, சினிமா செட்டிங் மூன்றாம்பிறையை புறக்கணிக்கப் போவது உறுதி.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வந்துட்டேன் என்று சொல்லு ஒருவர் நின்ற இடத்திலேயே நிக்கிறார்... மற்றொருவர் வராமலேயே வருவேன் வருவேன் என்று வாய் அசைத்து கொண்டு இருக்கிறார்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வயதானதின் விஸ்வரூபம் தான் பஞ்ச தந்திரமாக அரசியலில் காலடி எடுத்து வைப்பது...

 • Ashokkumar -

  ஒரு அடக்க விலை டீ கடை நடத்தி கூட மக்களுக்கு நன்மை செய்ய முடியாதவர்கள், மகாராணி காலத்தில் குடி ஆறாக ஓடியபோது வாயை திறக்காமல் சுக போகங்களில் திளைத்தவர்கள ரசிகனை புறங்கையால் தள்ளும் பிறவிகள் முதல் அமைச்சர் ஆனவுடன் நாடு வளர்ந்து தொங்கும் நம்புங்கள்.

 • MahiSiva - Coimbatore,இந்தியா

  இப்ப இருக்கற அரசியல் தலைவர்கள் (தலைவர்களா??) யாராவது நல்லது செய்வாங்கனு நம்ப முடியுமா?? ரஜினி ஆகட்டும், கமல் ஆகட்டும், யாரவது புதுசா வரட்டுமே. அவங்களுக்கு இப்ப இருக்கற அரசியல்வாதிகளைக் காட்டிலும் கண்டிப்பா கொஞ்சம் நடப்பு அறிவு இருக்கு. இத்தனை நாளா அரசியலுக்கு வெளிய நின்னு நாட்டு நடப்பைப் பார்த்தவங்க. ஏதாவது கொஞ்சமாவது மாறட்டும். கண்டிப்பா அவங்களுக்குனு மக்கள் மத்தியில இருக்கற செல்வாக்கை ரெண்டு பெரும் கெடுத்துக்க மாட்டாங்கன்னு நம்புவோம். ரஜினியைக் காட்டிலும் கமல் வந்தா நல்லா இருக்கும். நல்லதே நடக்கட்டும்

 • இட்லி நேசன் - Dublin,அயர்லாந்து

  கமல் போன்ற திறமைசாலிகள் நிச்சயம் அரசியலுக்கு வருவது நல்லது.. இன்றைய அரசியல் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணமே திறமையற்றவர்களை தேர்ந்தெடுத்ததின் விளைவுதான்... என்ன அவரின் வயது சின்ன தடங்களை ஏற்படுத்தக் கூடும்.. ஆனால் நிச்சயம் அவருடைய திறமை வெளிப்படும்.. எக்காரணம் கொண்டும் ரஜினியுடனோ பிஜேபியுடனோ கூட்டணி அமைக்காமலிருந்தால் நல்லது

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  @rdகுமார்:: பாபா முதலே ரஜினி படமெல்லாம் தோல்வி தான். குசேலன், கோச்சடையான், லிங்கா, கபாலி எல்லாம் படமா, நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள். 68 வயது ரஜினி கட்சி ரெஜிஸ்டர் பண்ணும் போது 69, முதல் தேர்தலின் போது 70...ஸ்ஸ் அபா.... இப்பவே கண்ண கட்டுதே...

 • ஆப்பு -

  மஹாநதி, குணா ரேஞ்சுக்குப் போகாம இருந்தா சரி....ஒருவேளை இவர்தான் ஆளவந்தானோ? தலை சுத்துது.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இரண்டும் இல்லை .... புஸ்வானம் ....

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  சிணிமா படத்த எடுதூவசீபோடப்போறங்கலமா. அரசாரடீ அப்டீன்னு பேரவச்சீ போட்ருக்காரமா. ஹீரோஈனே இல்லாம படமெடுத்துவச்சா யாரூ பாக்கு வாங்குலமா. அந்த டீவீ குள்ளரேயே பிக்பாஸ் 3 அப்டின்னு வச்சிப்போட்டு நடிக்கலமில்ல.

 • mindum vasantham - madurai,இந்தியா

  Stalin's benami already stalin is in 3rd position as by rknagar polls ,this guy will take with him stalin further down

 • bal - chennai,இந்தியா

  விஸ்வரூபமும் இல்லை பஞ்ச தந்திரமும் இல்லை. இவர் செய்ய போவது உணர்ச்சிகள், மன்மத லீலை, வாழ்வே மாயம்.

 • vns - Delhi,இந்தியா

  இந்த கேடுகெட்ட மனிதன் தெருவில் பிச்சை எடுப்பதை பார்க்க வேண்டும்.. என்னுடைய ஒரே ஆசை

 • v rajagopal - Chennai,இந்தியா

  சப்பாணிதான்

 • KGSriraman -

  விஸ்வரூபமும் ,இல்லை பஞ்சதந்திரமும் ,இல்லை,,,, களத்தூர் கண்ணம்மா,, மாதிரி, மோடி கண்ணம்மா,,,, தி. மு. க. வாக்கு வங்கியை. சிதறடிக்க,,,, இவர் களம் வருவதாக கூறுகிறார்,,, இவர் நிச்சயம். களம்,,,,அதாவது. தேர்தலில் போட்டியிட வரமாட்டார். ,ஏன் எனில் இவர் , காந்தி, பெரியார்,, அரசியல், செய்யப்போகிறார்...

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  போற போக்கை பார்த்தால் முதல் அமைச்சர் ஆயிடுவாரோ

 • C.Elumalai - Chennai,இந்தியா

  விஸவருபமும் இல்லை,பஞ்சதந்திரமும் இல்லை. வசூல் ராஜா நடிகர், நான் பாதி மிருகம் பாதி, தெனாலி ஆவார்

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  இவர் உண்மையிலே நாத்திகனாக இருந்தால் ஆண்டாள் ப்ரஸாஹானியில் வரைமுத்துவை ஆதரித்து இருக்க வேண்டும். நல்லவனோ கெட்டவனா தைரியம் இல்லாத ஒருத்தனை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் . அதுவும் குள்ளநரி குணம் உள்ளவனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் .

 • rajkumar - Rajapalayam

  Ippadiye Pudusa varavana patti comment adinga,approm Langam,Ulal nu sollityu marubadium,ADMK kum,DMK kum vota potunga

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  யப்பா, நான் பள்ளியில் படித்த, இரண்டு பூனைகள், ஓர் அப்பம், ஓர் குரங்கு, அந்த அப்பம் பங்கு பிரிக்கப்பட்ட கதைதான், இப்போ நினைவில் வருதுங்க. அதாவதுங்க, இவிங்க ரெண்டு பேரின் ரசிகர்கள் செல்வாக்கை, யார் ஆட்டையை போட போறாங்களோ?. புரியுதுங்களா?, வாசகர்களே?.

 • s t rajan - chennai,இந்தியா

  அவரை கமல் எனபதைவிட க-முள் என்று அழைக்கலாம். ஊழலை எதிர்க்கிறேன் என்கிறார், ஆனால் ஊழலின் மூலவிக்ரஹமாம் கருணா காலில் விடுகிறார். ஜெயா இருந்தவரை வாய் திறக்காத மனிதன், இப்போ கருணாவின் பினாமியாகி ஓட்டைப் பிரிக்கத்துணை போகிறார் சுய வாழ்வில் ஒழுக்கமே இல்லாத இன்னும் ஒருத்தரை அரசியலில் நுழைய விடுவது தமிழகத்துக்கும் நாட்டுக்கும் பேராபத்து. ஆரெஞ்சு நிற பிஜேபியை எதிர்க்கிறார் ஆனால் வெளி நாட்டு வெள்ளையும் பச்சையையும் ஏற்கிறார். இந்திய புராணங்களை கொச்சைப் படுத்து கிறார். ஆனால் புனிதமேரி மட்டும் கன்னியாய் ஏசுபிரானை ஈன்றெடுத்தார் என்பதை மறுக்க முடியுமா இவரால். தூய்மை வாய்மை நேர்மை இல்லாத ஒரு நபரை அவர் ரசிகர்கள் கூட ஏற்கமாட்டார்கள்.

 • தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி - சோழர்கள் நாடு ,இந்தியா

  இவர் அரசியலில் இறங்கினால் நம் நாடு இவர் நடித்த சகலகலாவல்லவன் படம் போல் ஆகிவிடும்

 • Dhanraj Jayachandren - Madurai,இந்தியா

  மக்களை அறிவு சார்ந்து ஈர்க்க முயல்கிறார், வளர்ச்சி கிராமத்தில் இருந்து ஆரம்பிக்கிறார், வரவேற்க வேண்டிய ஒன்று, மக்கள் இதை போன்ற மாற்று சிந்தனையைத்தான் விரும்புகின்றனர் ...ஆனால் இவர் ஜெயிப்பாரா என்று தெரியாது.. இங்கு காமராஜரே தோற்று இருக்கிறார் தேர்தலில்...

 • RavishankerHarikrishnan -

  இரண்டுமே இல்லை, தரித்திரம்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இவ்வளவு அநாகரிகமான காட்டுமிராண்டி வாசகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் , கதிரழகன்/ கோ கிருஷ்ணன் போன்றோரைத்தான் சொல்கிறேன். கமல்ஹாசன் அறிவிற்கு முன்னால் மண்டிபோடக் கூடத் தகுதியற்றவர்கள் என்று அவர்களின் கேவலமான எழுத்தில் தெரிகிறது

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  நம்ம சாமிகளை திட்டி நாத்திகம் பேசினா அரபி அடிமை ஐரோப்பிய கைக்கூலி ஒட்டு வளச்சு போடலாம்ன்னு கணக்குபோடுறான் மடையன். அந்த காலம் போச்சு. பத்து அரபி ஐரோப்பிய ஒட்டு வந்த பதினொண்ணு முருக கணேச ஆண்டாள் பக்தர்கள் ஒட்டு போவும். அதுதான் இந்த காலம். பப்பூவே சிவன் கோவில் ராமர் கோவில்ன்னு போவுது. சோனியா போட்டு வெச்சு ஒட்டு பிச்சை எடுத்து அப்புறம் போயி பாவ மன்னிப்பு கூண்டுல ஜெபம் செய்யுது. இந்த ஆளு எந்த மூளைக்கு. கமால் ஹுசைன் பப்பு வேகாது.

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  திருடனின் பினாமி சுடலினின்கிட்ட கேட்க வேண்டும் ...எந்த படம் என்று ... துட்டு அவன்கிட்ட இருந்துதானே வந்துள்ளது ...

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  பஞ்சத்தில் அடிபட்ட தெர்தரம்... இப்போது முஸலாமியரை முறைத்து கொள்ள மாட்டான் இந்த ஜடம் ... திராவிட தண்ணியை குடித்து வளர்ந்த ஜடம் ...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  பரட்டையும், சப்பாணியும் பாஜகவின் ஏஜெண்டுக்கள் தான் ...அந்த TV யில் பெருசு பாச்சு நிகழ்ச்சி வரும்போதே ராம்தேவ் வந்தார் ...பெரிய மனுஷரை சல்லிக்கட்டு போராட்டத்தில் கிண்டல் பண்ணிய சூலியை வச்சு செஞ்சார்கள்..இதிலிருந்தே சப்பாணி , பாஜகவின் ஏஜெண்டு என்று புரிந்து கொள்ளலாம்... .ஆக , திமுகவின் பகுத்தறிவு ஓட்டுக்களை பிரிக்க வந்தவர் சப்பாணி ...அதிமுகவின் ஓட்டுக்களை பிரிக்கவந்தவர் பரட்டை.. பரட்டையும் சப்பாணியும் கடைசியில் கூட்டணி அமைத்தால், இது உண்மை என்று புலப்படும்...... அப்படி நடக்கவில்லையென்றாலும் பரட்டை வெற்றி பெற சப்பாணி திமுக வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதே அஜெண்டா.... ,ஆனால், ... பரட்டையின் ஓட்டை , சப்பாணி தனியாக போட்டியிட்டால் பிரிக்க கூடும் என்பது தான் நிதர்சன உண்மை .... ஆக சப்பாணியின் அரசியல் பிரவேசம் விஸ்வரூபமும் இல்லை , பஞ்ச தந்திரமும் இல்லை ....குருதிப்புனல்... கிழிந்து தொங்கப்போகிறது இவர்களின் இந்த வயதான காலத்திய கூத்து...[ உண்மையான போட்டி ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கும், தினகரன் தலைமையிலான கூட்டணிக்கும் தான் இருக்கும்... அரசு கலைந்து தேர்தல் வந்துவிட்டால், இப்போதைய அதிமுகவில் ஒரு சிறு பகுதி ரஜினி கட்சிக்கும், இன்னொரு பெரும்பகுதி தினகரன் வசமும் வந்தால், அதிமுக தினகரன் வசமாகும்.... RK நகரில் தினகரன் வெல்வார் என்ற எனது கணிப்பு தப்பவில்லை ...அதுபோல தினகரன் மற்றும் ஸ்டாலினிக்கும் தான் போட்டி என்ற எனது கணிப்பும் தப்பாது ] பரட்டையும் சப்பாணியும் செல்லாக்காசுகள்.... கூலிக்கு மாரடிப்பவர்கள் ... திராவிடத்தை அழிக்க, பாஜக என்னும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் ...

 • Krish Sami - Trivandrum,இந்தியா

  இவரை விட அடுக்கு மொழி பேசியவர்தான், இவரை விட தெளிவான தமிழ் பேசியவர்தான், இவரை விட பெரும் தலைவர்களுடன் (காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம் ஜி ஆர், இந்திரா காந்தி என பலர் ) தொடர்ந்த தொடர்பில் இருந்தவர்தான், இவரை விட பல காலம் அரசியலில் உழைத்தவர்தான், இவரை விட , ஏன், இன்னும் பலரையும் விட நல்லவர்தான், அப்படிப்பட்ட சிங்க தமிழன் சிவாஜி கணேசனுக்கு நடந்ததை மறந்து, இன்று இந்த சிறுபிள்ளை துள்ளி விளையாடுவது விந்தையிலும் விந்தை. வீழ்ந்து பட மனதார வாழ்த்துகிறேன்.

 • Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்

  தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன் ,,,,,,,,,,,,,இது தமிழகத்தில் நன்கு செயல்படுகிறது ,,, முட்டாள் தமிழன் மேல் குதிரை சவாரி செய்ய தமிழன் குனிந்தே கிடக்கிறான் ,,,,, திருந்தாத தமிழன் இருக்கும் வரை யாரும் சவாரி செய்ய முடியும் ,,,

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  கூத்தாடிகள் , காமிரா வழியாக மக்களுக்கு சேவை செய்திட நினைத்து அதன் மூலம் மக்களை பார்ப்பவர்கள் . இருக்கும் லெட்டர் பெட் தமிழக காட்சிகளில் இன்னோரு கட்சி கமல் ஆரம்பிக்கிறார் . சினிமா அரங்குகள் மூலம் வசூல் செய்த்தவர் , GST கேட்க்கிறார் . தமிழன் கொடுத்துதான் பழக்கம் கொடுப்பார்கள் , கூத்தாடி வாங்கித்தான் பழக்கம் வாங்குவார் . பழனியும் பன்னீரும் அரியணை அமரும்போது கூத்தாடிக்கு ஆசை வருவது சகஜம்தான் .

 • RajanThana -

  Nalai namathe vetriyum namathe

 • rdkumar -

  there were two movies after papanasam. both were disasters at box office.. idhula market vera iruku solreenga? kadaisiya nadicha padam therilana avar enna munnani hero?

 • tsgs -

  வாழ்த்துக்கள் கமல்..

 • siriyaar - avinashi,இந்தியா

  His problems mainly d by BJP, they recruit gowthami into BJP, she left him alone, lot of pressure for him so he started and fighting hindutuva since BJP follows it. BJP should give her back so that he will be busy with her.

 • teeran - new jersey,யூ.எஸ்.ஏ

  எப்படியோ ரசினி ரசிகர்கள் ஆட்டம் குறையும் ,,, காலம்போன காலத்துல வந்து ரசிகர் மன்றத்துல இணைய சொல்றான்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஸ்டைலுக்கு டெப்பாசிட் கிடைக்காத வகையில் இவர் போன்றவர்கள் சதி செய்கிறார்கள்...

 • P.SARAVANAN - coimbatore,இந்தியா

  விஸ்வரூபம் தான்

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  16 வயதினிலே வாங்கிய அடி மறந்துபோச்சா?

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அன்பேசிவம் மாதிரி சுட்ட கதையா இருக்க போகுது..

 • Hari Adhi - MADURAI,இந்தியா

  குணா தான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement