Advertisement

மதத்திற்கு அப்பாற்பட்டது ராணுவம் : ஓவைசியின் கருத்துக்கு பதில்

புதுடில்லி: 'ராணுவம், மதத்திற்கு அப்பாற்பட்டது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இங்கு அவர் வீரராகவே பார்க்கப்படுகிறார். படையில், மதத்தை புகுத்துவதில்லை' என, ராணுவம் தெரிவித்துள்ளது.


ஜம்மு - காஷ்மீரில், சுன்ஜுவான் ராணுவ முகாமில், சமீபத்தில், பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இது குறித்து, ஏ.ஐ.எம். ஐ.எம்., எனப்படும், அனைத்திந்திய மஜ்லிஸ் இத்யாதுல் முஸ்லிமின் கட்சி தலைவர், அசாதுதின் ஓவைசி கருத்து கூறியிருந்தார். 'முஸ்லிம்களின் தேசப் பற்று குறித்து சந்தேகம் எழுப்புகின்றனர். ஜம்மு - காஷ்மீரில் நடந்த தாக்குதலில், உயிரிழந்த ஏழு பேரில், ஐந்து பேர் முஸ்லிம். முஸ்லிம்கள், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்கின்றனர்.'ஆனால், எங்களை பாகிஸ்தானியர் என்கின்றனர். பயங்கரவாதிகளுக்கு முஸ்லிம்கள் என்ற பாகுபாடு கிடையாது. ஆனால், எங்களுடைய நேர்மையை நிரூபிக்கும்படி, இந்த நாடு கேட்கிறது' என, ஓவைசி கூறியிருந்தார்.


இதற்கு பதிலளிக்கும் வகையில், ராணுவத்தின் வடக்கு பிராந்திய தளபதி லெப்டினென்ட் ஜெனரல், தேவ்ராஜ் அன்பு கூறியதாவது:ராணுவம், அனைத்து மதத்தினருக்கானது. இங்கு, அனைத்து மதத்தினரும் வரவேற்கப்படுகின்றனர். ராணுவத்தில், ஜாதி, மதம் பார்ப்பதில்லை. இங்கு அனைவருக்குமே, வீரர்கள் என்ற அடையாளம் மட்டுமே உண்டு. மதத்தின் அடிப்படையில், இங்கு எந்த பாகுபாடும் கிடையாது; பிரித்து பார்ப்பதும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (70)

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  இஸ்லாமியன் நல்லது செய்தால் அவன் இந்தியன் ஆகிவிடுகிறான்.. அதே இந்தியன்(முஸ்லிம்) தவறிழைத்தால் இஸ்லாமியன் ஆகி விடுகிறான்.. இதுதான் பாரத தேசத்தின் நீதி???

 • mindum vasantham - madurai,இந்தியா

  Whoever is in alliance with dmk and vck should be destroyed

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ராணுவத்தில் முஸ்லிம்கள் எத்தனை பேர் ? இந்திய மக்கள் தொகையில் அவர்கள் எத்தனை சதவிகிதம் உள்ளனரோ, அதே சதவிகிதத்தில் ராணுவத்தில் பணி செய்கிறார்களா ? ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும், மூன்று படைகளிலும் அவர்கள் சேர்கிறார்களா அல்லது சேர்க்கப்படுகிறார்களா ? ஆம் என்றால் பிரச்னை இல்லை .... ஆனால் இதற்கு விடை இல்லை என்றால் அது ஏன் ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாமல் ஒவைசியை அல்லது தேவராஜ் அன்பு அவர்களை ஆதரித்தோ எதிர்த்தோ எழுதுவது முட்டாள்தனம் ....

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  இந்தியாவில் உள்ள எல்லா ஹிந்துக்களையும் கொல்வேன் என்று கூறிய உத்தமர் இந்த ஒவைசி..

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  ஏண்டா ? அப்போ அவுங்களை கொன்னதுவும் இஸ்லாமிய தீவிரவாதிகள் தானே ? அதுக்கு என்ன சொல்ல போற ? புனித போரில அப்பாவி இஸ்லாமியர்களும் கொல்லப்படலாம்ன்னு சொல்றியா ? மானங்கெட்டவன்கிட்ட வேற என்னத்த எதிர்பார்க்க முடியும் ?

 • yaaro - chennai,இந்தியா

  "எனது படை வீரனின் நம்பிக்கையே எனது நம்பிக்கை, அவன் இந்துன்னா நான் இந்து, அவன் முஸ்லிமான நான் முஸ்லீம் " அப்படிங்கற தத்துவத்தை சயீத் அட்ன ஹசெய்ன் என்கிற முன்னாள் கர்னல் சொன்னார். அப்படிப்பட்ட உயரிய பாரம்பரியம் கொண்ட படை நமது . ஒவாய்சி போன்ற ஆட்களுக்கு என்ன தெரியும் ..

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  பாஜக தப்பு கணக்கு போடுகிறது....மக்களுக்கு இப்போது எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்து, ஒரு முடிவுக்கு வரத்தெரியும்...ஆக பாஜகவின் பப்பு வேகாது... கர்நாடகாவில் காங் மீண்டும் அமோக வெற்றி பெற்று பாஜகவின் கனவுக்கு முற்று புள்ளி வைக்கும்... காங் அல்லது காங் கூட்டணி தான் அடுத்தும் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும்

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  நீதான் குல்லா வாங்கி கொடுத்தியா நாலு வார்த்தை படிக்கவெச்சது எதுக்குன்னு இன்னும் உனக்கு புரியவில்லை

 • unmaiyai solren - chennai,இந்தியா

  ஒவைசி சொன்னதில் தவறேதுமில்லை உண்மைதான்

 • rajan. - kerala,இந்தியா

  ராணுவத்தின் மேல் வீசுபவர்கள் பாகிஸ்தான் முஸ்லீமா இந்திய முஸ்லீமா? சொல்லு. கல்வீசுபவனை சுட்டு தள்ளீடுவோம். அவனுங்கெல்லாம் பாகிஸ்தான் கைகூலிகள் தானே, போட்டுதள்ளி கிளீன் கஷ்மீர் ஓவைசி.

 • Abu Faheem - Riyadh,சவுதி அரேபியா

  இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றை அவ்வபோது சங்கப்பரிவாரங்கள் சோதித்து பார்க்கும்போது இந்த ராணுவ அதிகாரி எங்கிருந்தார்? அப்போது ஏன் சங்கப்பரிவரங்களுக்கு எதிராக வாய் திறக்கவில்லை

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஒவைசி மட்டுமல்ல பல கேவலங்கள் இது போல கேவலமான கருத்துக்களை பரப்பி வருகின்றன...

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  ராணுவத்தை கேவலப்படுத்திய காவி தலைவருக்கு கண்டனம் தெரிவிக்க ராணுவ தளபதிக்கு தைரியம் இல்லை இதுல மதசாயமாம் சாயம் பூசுவது பெயிண்ட் அடிப்பது எல்லாம் வேறு நபர்கள் அய்யா அவர்கள் செயலை விமர்சிக்கும் தைரியம் உங்களுக்கு இல்லை.

 • Roopa Malikasd - Trichy,இந்தியா

  ஒரு நாட்டில் கடவுளுக்கு அடுத்தபடியாக , மக்கள் நீதி துறையையும் , பாதுகாப்பு துறையையும் மிகவும் மதிக்க வேண்டும்.. இந்த இரு துறைகளையும் கண்டமேனிக்கு வசை படுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் நமக்கு நாமே சேற்றை அள்ளி பூசிக்கொள்வது போன்றது... இதில் பத்திரிக்கைகள் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும்... ஊடகங்கள் தான் நாட்டின் கண்ணாடி... பிம்பங்களை மிகவும் கவனமுடன் பிரதிபலிக்க வேண்டும்...

 • Raghul Smart - mos,ரஷ்யா

  ஒவைஸி காஷ்மீரில் இருந்து ஹிந்துக்கள் வெளியேற்றப்பட்டார்களே அவர்களை காஷ்மீர் ஏற்று கொள்ளுமா ? தப்பாக பேசும் இசுலாமியர்களை தான் பாக் போக சொல்லுகிறார்கள் நல்ல இஸ்லாமியர்களை இல்லை .

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  இந்திய ராணுவம், அது அதுவாகவே இருக்கட்டும். எந்த அரசியல் வியாதிகளும், நம் ராணுவத்துக்கு, மத சார்பு சாயத்தை பூச வேண்டாமே?. யப்பா, சில அரசியல் வியாதிங்க, எங்க பார்த்தாலும் மூக்கை நுழைத்து, சாதி மத சாயங்களை பூசுறதையே, பொழப்பா வைச்சின்டு இருக்காலே(திரியராலே)?.

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  தளபதி பேரு தேவராஜ் அன்பு. தமிழன்டா. தளபதிடா. பிராந்திய ராணுவம் அத்தனைக்கும் தல. தமிழன் வீர மரணம் அடையும்போது "தமிழன் பலிகடா.. வட இந்தியன் தளபதி" ன்னு பிரித்தாளும் சூழ்ச்சியை இன்னும் செய்யறானுவ வெள்ளைக்காரனின் கைக்கூலிகள். பாத்து வயிறு எரிஞ்சே சாவுங்கடா.

 • Selvakumar - Trichy,இந்தியா

  சிறுபான்மையான கிருஸ்தவர்களும் முஸ்லீம்களும் பாஜக ஆட்சியில் பாஜக MLAகளால் தரம் தாழ்த்தி பேசுவது உண்டு. அதனால் தன் ஜனத்தை உயர்த்தி பேசியிருக்கிறார். தவறில்லை

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தமிழகத்திலே மீனவன் சாகிறான்.....ராணுவமே இங்க வாங்க....

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  ராணுவத்தில் இறக்கும் முஸ்லீம் வீரர்களை முஸ்லீம் வீரர்கள் என்று சொல்லணும்..ஒவைசி...சரி..ஒப்புக்கறோம்.. குண்டு வைக்கும் முஸ்லீம் தீவிரவாதிகள் என்று சொல்லும் நேரத்தில் மட்டும் தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என்று சொல்லுதீயளே பாய், அது எப்படி பாய்?..

 • chails ahamad - doha,கத்தார்

  இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகவும் , இன்று வரை இந்திய எல்லை பாதுகாப்புக்காவும் உயிர் தியாகம் செய்தவர்கள் ஏராளம் என்பது வரலாறில் பதிந்து இருப்பதை இந்திய குடி மக்களில் இன பேதம் பாராமல் அறிந்தவர்கள் ஏராளம் , யாரோ எவரோ நாட்டு பற்று என்றால் கிலோ என்ன விலை என கூறுபவர்களின் பேச்சாகிய இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் என மதவெறியில் கூறும் சிந்தை மழுங்கியவர்களை இந்தியர்கள் எவரும் பொருட்படுத்த தேவையில்லை , பொதுவாக ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் இந்திய முஸ்லிம்களை இன்றைய பா ஜ ஆட்சியாளர்களின் காலத்திலே அவதூறு பேசுவபவர்களை நம்மக்கள் இனம் மதம் பாராமல் ஒன்று திரண்டு விரட்டியடிக்கும் காலங்கள் அருகாமையில் இருப்பதையும் கவனத்தில் கொள்வோம் .

 • காவிகள் (மாட்டு) மூத்திரம். - cuddalore,இந்தியா

  தற்போதைய பகோடா அரசின் செயல்பாட்டில் ஒவைசி பேசுவது சரிதான்

 • Devaraj - moolekaodu ,சுரிநாம்

  எந்த விசயங்களை மத அரசியல் ஆக்க வேண்டும் என்று ஒவைசீக்கும் காவி கட்சிகாரனுக்கும் சொல்லி தர வேண்டுமா?.

 • I love Bharatham - chennai,இந்தியா

  அவர்களது பூர்விகம் ....அரேபியா ......பின் எப்படி இந்தியா மீது பற்று வரும் ......

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  இதே ஆளுதான், போலீசும் ராணுவனமும் கண்டுக்கவில்லையென்றால் மொத்த இந்தியாவையும் பாகிஸ்தான் ஆக்கிவிடுவேன் என்று சொன்ன மத அரசியலவியாதி

 • S.KUMAR - Chennai,இந்தியா

  வெளியில் இருந்து வரும் தீவிரவாதிகளுக்கு உள்ளூர் பிரிவினைவாதிகள் சப்போர்ட் செய்வதால் தான் பிரச்சனையே தீவிரவாதிகளை தாக்க வரும் ராணுவத்தை கல் எரிந்து தாக்கும் பொதுமக்கள் போர்வையிலான தீவிரவாதிகளும் தான் முதல் காரணம். கண்ணுக்கு தெரியும் எதிரியை விட கண்ணுக்குத் தெரியாத துரோகிகள் மிக ஆபத்தானவர்கள்.

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  ஒவைசி சொன்னதுல தப்பு லேது நைனா..முசுலீம் நைனாக்கள எப்ப பாத்தாளு வாச பாடுற நாம,,நம்ம நாட்டுக்காக உயிர தியாகம் பண்றப்ப மட்டுஞ்சொல்றது இல்ல ஏன் நைனா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement