Advertisement

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு ரூ.11,000 கோடி மோசடி கண்டுபிடிப்பு: பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ.3,800 கோடி இழப்பு

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியின், மும்பை கிளையில், 11 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல்வெளியானதை அடுத்து, நேற்று, இவ்வங்கியின் பங்கு விலை, கடுமையாக வீழ்ச்சி கண்டது.


இதனால், இப்பங்குகளில் முதலீடு செய்தோருக்கு, நேற்று ஒரே நாளில், 3,800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கி உயரதிகாரிகள், மும்பை, பரோடியில் உள்ள வங்கி கிளையில், 5ம் தேதி, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வங்கி அதிகாரிகளான, கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் ஹனுமந்த் கராட் ஆகியோர், சில வாடிக்கையாளர்களுக்கு, ஏற்றுமதிக்கான கடன் பொறுப்பேற்பு ஆவணங்களில் மோசடி செய்தது தெரிந்தது.

நடந்தது என்ன?
இந்த மோசடி காரணமாக, வங்கிக்கு, 280 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மதிப்பிடப்பட்டது. இதையடுத்து, வங்கி அளித்த புகாரின்படி, டயமண்ட் ஆர் யு.எஸ்., சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டயமண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குதாரர்களான, நிரவ் மோடி, நிஷால் மோடி, அமிவ் நிரவ் மோடி, மெகுல் சின்னுபாய் சோக்சி ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.இந்நிலையில், சி.பி.ஐ., மேற்கொண்டு நடத்திய விசாரணையில், 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, 'மெகா' மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, பஞ்சாப் நேஷனல் வங்கி, நேற்று, மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பி உள்ள அறிக்கை:மும்பை பரோடி கிளையில், முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒருசில வாடிக்கையாளர்கள் ஆதாயம் அடைவதற்காக, அதிகாரபூர்வமற்ற தகவல் பரிமாற்றங்கள் நடந்துள்ளன.அவற்றின் அடிப்படையில், இதர வங்கிகள், வெளிநாடுகளில் உள்ள அந்த வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி உள்ளன.

விசாரணை
வழக்கமான வங்கி நடைமுறைகள் போன்றே, இந்த பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இந்த வகையில், 177 கோடி டாலர் அளவிற்கு, மோசடி பரிவர்த்தனைகள் நடந்து உள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.இதில், வங்கிக்கு உள்ள பொறுப்பு மற்றும் பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மை உள்ளிட்டவை, சட்ட விதிமுறைகளின்படி முடிவு செய்யப்படும்.இந்த மோசடி குறித்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரும்படி, சி.பி.ஐ.,யிடம், வங்கி ஏற்கனவே தெரிவித்துள்ளது.வங்கி, ஒளிவுமறைவற்ற, துாய்மையான செயல்பாடுகளை தொடர்ந்து பேணும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மும்பை பங்குச் சந்தையில், முன்தினத்தை விட, நேற்று, பஞ்சாப் நேஷனல் வங்கி பங்கின் விலை, 9.81 சதவீதம் குறைந்து,145.80 ரூபாயில் நிலை பெற்றது. மோசடி தொகை, வங்கியின் மொத்த சந்தை மூலதனமான, 36 ஆயிரம் கோடி ரூபாயில், ஒரு பங்கு; 4.5 லட்சம் கோடி ரூபாய் மொத்த கடனில், 2.55 சதவீதம் ஆகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (70)

 • a.s.jayachandran - chidambaram,இந்தியா

  ஒரு விவசாயி 10000 ரூபாய் கடன் கேட்டா ஜாமீன் கேக்குறீங்க சொத்து கேக்குறீங்க ,டிராக்டர் கடன் கொடுத்து வாங்கிய கடனை கட்டவில்லை என்றால் உடனே ஜப்தி பண்றீங்க இவனுங்களுக்கெல்லாம் எப்படிடா கோடி கணக்குல கடன் கொடுக்குறீங்க . இவனுக்கெல்லாம் எவன்கிட்டடா ஜாமீன் வாங்குனீங்க . என்னடா நீங்க நெனச்சா யாருக்கு வேண்டுமானாலும் கடன் கொடுப்பீங்க. உங்களை மாதிரி இருந்தால் ஏழைகள் எப்படி முன்னுக்கு வரமுடியும் .

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  கடன் வாங்கி விட்டு கட்டாமல் போராட்டம் செய்பவர்களுக்கு அரசு துணைபோனா பின்னென்னங்க லாபத்திலா ஓடும் வங்கி. மான்யம் இனாம் எல்லாம் இல்லாம ஒழித்தால் லாபத்தில் ஓடும்ங்க>>>>>>>

 • Mariappa T - INDORE,இந்தியா

  நல்ல வேளை FRDI சட்டம் அமலுக்கு வரலை. வந்திருந்தால் இப்போ அம்போதான்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  கறுப்பை வெள்ளையாக்க அரசுத்துறை வங்கியே பயன்படுவது கேவலம் .... ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கிறதா அல்லது செத்து விட்டதா ?

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  எங்க அக்கௌன்ட்ல 15 மில்லியன் டாலர் ரூவா கொடுக்கமின்னு சொலீ வசீபோட்டு, ந்த பேங்க் நடத்துறவங்க அக்கௌன்ட்ல எலிவேன் தோஸண்ட் பில்லியன் டாலர் ரூவாவ போட்டுவெச்சேய்ட்டாங்கலமா. சம்மிக்க முடியாதே, ஓகே கிடையதே. எங்க அக்கௌன்ட் ல தா போடோணும். ஆதார் எல்லம் ஏதுக்கூ வாங்கி வசீபோட்டீங்கலமா. பணம் கொடுக்கமில்லன்னா, அந்த ஜெயிலுக்குள்ள இருக்காருல்ல கநபதீ வி சி குடா சேத்துவச்சீ கம்பு குச்சியால் அடிச்சீ போடோணுமமா.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  போன வாரம் sbi நஷ்ட ராகம் பாடித்து..இந்த வாரம் pnb நஷ்ட கானம் பாடறது...வங்கிகளில் FD வைத்திருக்கும் அன்பர்கள் உடனே discharge செய்து வீட்டில் வைக்கவும். வட்டி தான் கிடைக்காது.. வங்கி யிலேயே வைத்திருந்தால் முதலுக்கே மோசமாயிடப் போகிறது. கடந்த 4 வருட ஆட்சியின் சாதனை.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இந்த கோல்மால் பிஜேபி ஆட்சியில் தான் என்று யாராவது எடுத்துச் சொல்லவும்.

 • Nanthakumar.V - chennai,இந்தியா

  நாம ஒரு கார் டியூ கட்ட லேட்டா அனா போன் பண்ணி சாவ அடிக்கிறானுங்க ....ரெண்டு இல்ல மூணு லட்சம்.. ,அக்கௌன்ட் கு வந்தா...இது எது எங்க இருந்து வந்திச்சி ...,பில் இருக்க ...ப்ரோப் இருக்கானு ஆயிரம் கேள்வி ... ....11300 கோடி .....ட்ரான்ஸபெர் போயிருக்கு ...இவனுகளுக்கெல்லாம் ஆதார் ,பான் கார்டு இருக்காதா என்ன ...இவனுங்க எல்லாம் லிங்க் பண்ணவே இல்லியா .....(நாங்க மட்டும் பயந்து போய்...ஓடோடி பண்ணனும் ...இதுல .ஆயிரம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேற .)... ....எந்த கேள்வியும் இல்லியா என்ன ????...எவ்ளோ பணம் எந்த தீவிரவாதி இல்ல பயங்கரவாதிக்கு போச்சோ ....எப்பவுமே தும்பை விட்டிட்டு வாலை பிடிக்கிறதே வேலைய போச்சி ....சமயத்துல வாலு மட்டும் கிடைக்கும் ... . ஆர் பி ஐ ...செல்லாத நோட்டு என்னவே பிஸி போல ....இதுல இவங்கள எங்க பிடிக்கிறது .மாஸ்டர் என்ன பன்றாரோ ...எதையும் கண்டுக்காம ...ஒரே பிஸி .

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இந்த ஆண்டின் மிகப்பெரிய காமெடி. இதில் வெறும் 11 ரூபாயையாவது பறிமுதல் செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம்..அப்படி செய்கிற அதிகாரிகளுக்கு நான் 11000 ரிவார்டாக தருகிறேன்.

 • ganesha - tamilnadu,இந்தியா

  மோடி ஒலிக அயோக்கியர்கள் இதற்கு பிஜேபி மோடி தான் காரணம் என்று கூவுவாங்களே.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  யாருனாச்சும் உடனே ஓடிப்போய் மும்பையில் சிஸ்டம் சரியில்லைன்னு நம்ம ஃபிகரு ஃ பிகருதான் நடிகர்கிட்ட சொல்லுங்கய்யா. உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்குமாம்.

 • siriyaar - avinashi,இந்தியா

  Every day news has 100 corruptions, 50rapes, 100 chain snatching, but rarely one or two punishments. That IPC, IPC only helps the judges and lawyer to make money, it dont stops crimes.

 • Somiah M - chennai,இந்தியா

  ஊழல் இல்லாத ஆட்சியில் நடக்கக் கூடிய காரியங்களா இவைகள் .

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  டிஜிட்டல் இந்தியா , கேஸ் லெஸ் எகானமி இதை வச்சி தான் லம்பா ஆட்டைய போடுலாம் , சிறந்த சீரிய , ஊழலற்ற நிர்வாகத்தில் இது எல்லாம் சகஜமப்பா

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ஹர்ஷத் மேத்தா அந்நிய வங்கிகள் துணையோடு நமது அரசு வங்கிகளையும் பங்குச்சந்தையையும் ஆட்டயப்போட்ட போது மன்மோகன் உறங்கினார். இதற்கெல்லாம்   என் தூக்கத்தை இழக்க மாட்டேனென்றார். ஆனால்  இப்போது நடந்திருப்பது திருட்டல்ல. வங்கியைப் பயன்படுத்தி  கறுப்பை வெள்ளையாகியிருக்கிறார்கள். மாட்டிக்கொண்டுவிட்டார்கள் .

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ///இவ்வளவு அமவுண்டு போயிருக்கு ரிசர்வ் பாங்கு என்ன பக்கடா துன்னுற்றுந்துச்சா நைனா?./// - யப்பா மவ்னே, அந்த ரிசர்வ் பாங்கு, பக்கடா துண்ணுட்டு, பீடா போட்டுட்டு, குந்திக்கீனு, வான்த்த பாத்துகீனு, பல் குத்திக்கீனு, இர்ந்திர்க்கும். பதில் சோக்கா கீதா மவ்னே?.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  எல்லாம் உள் கை வேலைதான்... புடிச்சு உள்ளே போட்டு நொங்கு எடுங்க.. பண மதிப்பிழப்பு நேரத்திலேயே வங்கி ஊழியர்களை சுளுக்கு எடுத்திருக்கணும்... பல வகையான முறைகேடுகள் மட்டுமில்லாமல் , மக்களின் துன்பங்கள் அனைத்துக்கும் இந்த ஊழியர்களே காரணம்..

 • yila - Nellai,இந்தியா

  கடந்த காலாண்டில் எஸ் பி ஐ வங்கி, 2500 கோடி நஷ்டம் என்று கூறியுள்ளது.... வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகையில் கைவைக்காமல் இருக்க வேண்டும்....

 • Shanmugam - Manama,பஹ்ரைன்

  தினம் தினம் புது புது அநியாயங்கள், ஊழல்கள். பழையவைகளை மறக்கிறோம். இதுவரை எத்தனையோ இதுபோன்ற செய்திகள் வந்துவிட்டன. அவைகளில் சம்பந்தப்பட்ட பணம் சொத்துக்களை மீது எடுத்ததாகவோ, தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டதாகவோ உருப்படியான செய்திகளை என்றாவது படிக்க முடிகிறதா. இது போன்ற தவறுகளை செய்பவர்கள் சாதாரண குடிமகனாக இருப்பதில்லை. அநியாயமாக பணம் சம்பாதித்து பணக்காரர் ஆனாலும் அவர்களுக்கு தனி மரியாதையை, அந்தஸ்து கொடுக்கப்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு மாட்டிக்கொண்டால் விசாரணை என்று வருபவர்களும் விலை போய், நீதியும் விலைக்கு கிடைப்பதால் தவறு செய்ய தயங்குவதில்லை. ஒரு லட்சத்தி எழுபதாயிரம் கோடி ஊழல் என்று ஒரு நாடகம் நடந்தது. குற்றவாளிகள் அக்மார்க் சுத்தம் என்று சொல்லி வெளியில் ராஜாவாகவும், மந்திரிகளாகவும் வலம் வருகிறார்கள். மொத்தத்தில் ஒரு தமாஷ் நடைமுறைகளே நடக்கிறது. மனிதர்கள் மனசாட்சிக்கு பயப்படாத காலம். இறைவனின் தீர்ப்பு என்றாவது தண்டிக்கும் என்று மனதை தேற்றிக்கொள்வோம்.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து 2 -வழக்குகள் சிபிஐ-க்கு வந்துள்ளன. பில்லியனரும் ,நகை வடிவமைப்பாளருமான நிரவ் மோடி என்பவரும், மற்றொரு நகை கம்பெனியும் ரூபாய் 10000 -கோடிக்கு அதிகமான சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதே அது. பிற விபரங்கள் சரியாக குறிப்பிடப்படவில்லை .

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  பஞ்சாப் நேஷனல் வங்கி கான் கிராஸ் இத்தாலி பப்பு அறுபதாண்டு ஊழல் காலத்தில் துவக்கப்பட்டதுன்னு சொல்றாங்களே. அப்படீங்களா?

 • Ramesh - chennai,இந்தியா

  மகா ஜனங்களே அரசு வங்கி அரசுக்குமட்டும் இருக்கட்டும். உங்களது fixed டெபாசிட் களை எடுத்து விடுங்கள். நல்ல forign banks களிலோ அல்லது சுந்தரம் பைனான்ஸ் போன்றகாண்பனி களிலோ போடுங்கள்

 • Prabhakaran - Delhi,இந்தியா

  தலைப்பை படித்துவிட்டு பலரும் வங்கி பணம் இழந்துவிட்டதாக கருத்து பதிவிடுகின்றனர். வங்கி தனது பணத்தை இழக்கவில்லை money laundering எனும் முறையற்ற பணப்பரிவர்த்தனை வங்கி உபயோகிப்பாளர்களிடையே நடைபெற்றுள்ளது. அதை கண்டறிந்து வங்கி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மேற்கொண்டு அதன்மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாள்பவர்களின் கடமை. ஆனால் என்ன நடக்கும் என்று நாம் அனைவருக்கும் தெரியும், இதுவரை நடைபெற்ற சிபிஐ ரைடு மாதிரித்தான்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  கண்ணில் விளக்கெண்ணெய் ஊத்தி ஒரு லட்சம் ருபாய் பணம் போட்டவனுக்கு நோட்டீஸ், இங்க என்னடான்னா சர்வ சாதாரணமாக பத்தாயிரம் கோடி, இனி ஆராய்ச்சி நடத்துவானுங்க, தேடுவானுங்க, கேசு போடுவானுங்க, அதுக்குள்ள மோடி அவர்களும் வீட்டுக்கு போயிட்டு அவரே இதை எதிர்த்து போராடுவாரு,

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  2015 ல் டெல்லியில் பேங்க் ஆப் இந்தியா கிளையில் இருந்து ஒரே நாளில் 16000 கோடி ரூபாய்கள் ஹாங்காங் க்கு பரிமாற்றம் செய்யப்பட்டது. முதலில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம், பின்னர் பாஜக எம்பி ஒருவரின் பங்கு என்று தெரிந்ததும் பத்திரிகைகள் அந்த சம்பவத்தை பற்றிய செய்திகளை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டன. இப்போது பஞ்சாப் நேஷனல் வாங்கி. இன்னும் இரண்டு நாட்களில் இந்த செய்தியும் இருட்டுக்குள் சென்றுவிடும்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  வங்கி ஊழியர்சங்கங்களுக்கு தெரியாமல் இது நடந்திருக்காது. ஆனால் மாதாமாதம் ஸ்டிரைக் செய்வதை மட்டும் நிறுத்தமாட்டார்கள் பழியை அதிகாரிகள் மீது மட்டும்போடுவர்.நெடுநாளாகவே பஞ்சாப் வங்கியின் சாப்ட்வேர் மீது புகார்களுண்டு மிகப்பெருமபாலானோர் காங் ஊழல் உதவியுடன் வேலை பெற்ற அயோக்கியர்களாகஇருக்கும்

 • RGK - Dharapuram,இந்தியா

  இந்த கம்யூனிஸ்ட் கோஷ்டி இதற்கு என்ன சொல்லப்போகிறது. தனியார் வங்கிகள் எவ்வளவு கண்டிப்புடன் கொடுத்த கடனை வசூல் செய்கிறது. அதே முனைப்புடன் அரசு வங்கிகளும் செயல்படுவதில்லை. இப்பொழுது கடிவாளம் போட்டால் மோடி கெட்டவர் ஆகிவிடுவார் . கொடுத்தக்கடனை வசூல் செய்யாமல் ஒரு வங்கி லாபமாக செயல்பட முடியாது

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  வங்கி அதிகாரிகளின் ஊழல் இது. சம்பந்தமட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும்

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  இவ்வளவு அமவுண்டு போயிருக்கு ரிசர்வ் பாங்கு என்ன பக்கடா துன்னுற்றுந்துச்சா நைனா?

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அய்யையோ, வர வர, இப்படிப்பட்ட பண மோசடிகள், அதிகமாகி வருகிறதே, இறைவா.

 • Vasu - Mumbai,இந்தியா

  ப.சிதம்பரத்தின் "particpatory note ' வங்கிகளின் ஊழல்களுக்கு வழி வகுத்துள்ளது. இதுவும் அதே வழியில் தான் நடந்துள்ளது. வங்கிகளை நாசம் செய்தது காங்கிரஸ். LIBA கருத்தரங்கில் PC பிஜேபி யை குறை கூறினார். இப்ப என்ன சொல்வார்?

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இப்படி எத்தனையோ? எல்லாம் வெளிவருமா?

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  வரியை முதலில் குறையுங்கள் வாங்கினாலும் கூடுதல் வரி விற்றாலும் கூடுதல் வரி, இப்படி இருந்தால் அப்புறம் எவன்யா வரி கட்ட முன்வருவான், ஒரு கோடிக்கு நிலம் விற்றவர் அதை வாங்கியவர் இருவருமே அரசுக்கு அதிக வரி கட்ட வேண்டுமே என்பதற்காக இருவருமே NRI யை பயன்படுத்தி வாங்கி மேலாளரின் உதவியுடன் வரி ஏய்ப்பு செய்தார்கள், அது என்ன தொழில் நுட்பமோ தெரியல ஆனாலும் இருவருமே வரி கட்டாமல் லாபம் அடைந்து விட்டார்கள். இது போல செல்வாக்கு உள்ளவர்களால் நாட்டில் எத்தனை பரிவர்த்தனைகள் செய்யப்பட்டனவோ தெரியவில்லை, இன்றைக்கு பஞ்சாப் வங்கி தெருவிற்கு வந்திருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்...............

 • makkal neethi - TVL,இந்தியா

  பிக்சட் டெபாசிட்டை வங்கியில் இருந்து மக்கள் திருப்பி எடுத்துக்கொண்டது சரிதான் என்றே தோன்றுகிறது ...திவாலாகும் வங்கிக்கு மத்தியே அரசு என்ன சப்போர்ட் செய்ய போகிறது மக்கள் பணம் ஏமாற்றப்படுமா ?திருப்பிக் கொடுக்கப்படுமா ? ஜெட்லீ மோடியின் பதில்தான் என்ன ?

 • Siva - Aruvankadu,இந்தியா

  அதை மூட சொல்வது யார். .இந்தியாவுக்கு ஒரே ஒரு வங்கி மட்டும் போதும். அதன் கிளைகள் இந்திய மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கட்டும்.... இந்தியாவில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு வங்கி போதும்...... எவன் செய்வான் மக்கள் பணி....

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  அந்த வங்கியில் பணிபுரியும் அலுவலர்களின் உதவியுடன்தான் நடந்திருக்கணும். அந்த கறுப்பாடுகளை உடனடியாக தண்டிக்கவும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement