Advertisement

இஸ்ரேல் பிரதமர் மீது போலீசார் ஊழல் புகார்


ஜெருசலம்: ஊழல் செய்ததாக இஸ்ரேல் பிரதமர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இஸ்ரேல் போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெத்தன்யாகூ மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு பல முறை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இஸ்ரேல் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேல் போலீசார் அந்நாட்டு அட்டர்னி ஜெனரலுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். அதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூ, ஹாலிவுட் திரைபட தயாரிப்பாளர் ஆர்னோன் மில்சரிடம் பரிசுப்பொருட்கள் வாங்கியது. ஆஸ்திரேலிய தொழிலதிபரிடம் ரூ. பல கோடி லஞ்சம் பெற்றது உள்ளிட்ட ஊழல் செய்ததற்கான ஆதாரம் உள்ளன. இது தொடர்பாக அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டினை . நெத்தன்யாகூ இதனை மறுத்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • Somiah M - chennai,இந்தியா

  இஸ்ரேலே............................... நீயுமா

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  It is a common decease in the world and this type of decease all politicians get while they are in the power and those who have more cunning knowledge may escape unaffected and those who are not these cunning knowledge will be affected and suffer till last." Vaiyulla pillaigal" always escaped and become honest and gentle and those pillaigal won't escape from the God's judgement and they will get punishment during their lives time as well as in eternal lives also.These people can escape from this in this world by their cunningness but cannot escape from God's Kingdom when they called there. "Dhivam Nindru Kollum" proverb has.come only for the people who are involved in public scam

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  மணவாளனுவ எங்க போய் பம்மிட்டானுவ?வாங்கடா நைனாக்களா..ஈச புத்துக்குள்ள ஈந்து கெயம்பி வாங்க...

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  நம்ம நாட்டு தலைவர்கள்தான் ஊழலே செய்வதில்லையே... அதான் போலீஸ் விசாரிப்பதில்லை...

 • Nagarajan S - Chennai,இந்தியா

  இப்போ தான் நம் இந்திய பிரதமர் அவருடன் மிக நெருக்கமாக இருந்து இந்தியா -இஸ்ரேல் இடையே பல ஒப்பந்தங்களை போட்டுள்ளார். அதற்குள். இஸ்ரேல் பிரதமர் மீது லஞ்சஊழல் குற்றச்சாட்டா? இன்னும் என்னென்ன வழக்குகள் வருமோ?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அன்றைக்கே சொன்னது தான். இன்னும் கொஞ்ச நாளில் அந்தந்த நாட்டு சிறைகளிலிருந்து தகவல் பரிமாறிக்கொள்வார்கள். இவர் கொஞ்சம் முந்திக்குவார், அந்த ஊரு போலீசும், நீதிமன்றமும் கொஞ்சம் கறார்.

 • JIVAN - Cuddalore District,இந்தியா

  பிரதமராக பதவியில் இருக்கும் போதே பல முறை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி, அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசார் அனுமதி கேட்டிருக்கின்றனர் ஆனால் நம் நாட்டில் பதவியில் இல்லாத ஊழல் செய்த ஒரு கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாலும் பல்வேறுகட்ட அதிகார வர்க்கங்களின் அனுமதி தேவைப்படுகிறது.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  நம்ம நாட்டில் இப்படி எல்லாம் செய்யமுடியுமா, அல்லது பேசத்தான் முடியுமா, சட்டத்தின் முன் யாராக இருந்தாலும் அவன் சரிசமம் தான் என்ற நிலை ஏற்படவேண்டும்

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  ஆதாரம் இருந்தாலு மறுக்கிறது நாம ஸ்டைலு நைனா...மோடியோட திறமையான நல்ல கூட்டாளிங்க எல்லாரும் ஊழல் குற்றசாட்டுல சிக்குறாங்களே? ஜெயா அம்மாயார் மோடிக்கு நல்லதொரு நண்பரும் கூட..நேதன் யாஹூவும் அதே...நம்ம தலீவரால கூட இருந்த அம்மையார் ஊழல்ல அவுட்டு,,,இப்ப நேதன் யாஹூ ஊழல்ல அவுட்டு,,இந்தியா தலீவர் கையில ஈக்கு இன்னா ஆவப்போவுதோ..நைனா கபலீஸ்வர நீதா எல்லாரயு காப்பாத்தனு...

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ஆஸ்திரேலிய தொழிலதிபரிடம் ரூ. பல கோடி லஞ்சம் பெற்றது உள்ளிட்ட ஊழல் செய்ததற்கான ஆதாரம் உள்ளன.. - நண்பரிடம் உதவி கேட்கலாம், யாரை என்கவுண்டர் செய்தால் இதிலிருந்து தப்பிக்கலாமென்று.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அடச்சை......, இது என்னப்பா, உலகம் முழுக்க, இந்த நோய்(ஊழல் குணம்) இல்லாத நாடே இல்லையோ?.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இது மாதிரி இங்கே அந்த நிலை எப்போ வரும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement