Advertisement

காந்திக்கு ரூ. 3 லட்சம்- மோடிக்கு ரூ.59 லட்சம்: மகாராஷ்டிரா அரசு பாரபட்சம்

மும்பை: மகாராஷ்டிராவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பற்றி புத்தகங்களை வாங்குவதில் மோடி பற்றி புத்தகங்கள் மட்டும் அதிக எண்ணிக்கையில் ரூ. 59 லட்சம் வரையில் கொள்முதல் செய்ததாக எதிர்கட்சிகள் புகார் கூறினர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பற்றி புத்தகங்களை வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதன்படி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றிய புத்தகம் 1,635,க்கும், தேசதந்தை மகாத்மா காந்தி பற்றி ரூ.3 லட்சத்து 25ஆயிரம் மதிப்பில் 4,343 புத்தகங்களும், சட்டமேதை அம்பேத்கர் பற்றி ரூ. 24 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும், பிரதமர் மோடி பற்றி ரூ. 59 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் 1,49,954 புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டது. நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட காந்தி உள்ளிட்டோரின் புத்தகங்களை குறைந்த எண்ணிக்கை கொள்முதல் செய்து, பிரதமர் மோடிக்கு மட்டும் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் கொள்முதல் செய்ததன் மூலம் மகாராஷ்டிரா அரசு பாரபட்சம் காட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறினர்.
இதனை கல்விஅமைச்சர் மறுத்துள்ளார். விதிமுறைகளின் படியே புத்தகங்கள் வாங்கப்பட்டது என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (91)

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  ரூவா நோட்ல வாழும் காந்தியின் போட்டோ போடாமலிருந்தா சரி...

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  வாழும் காந்தி....ஹி..ஹி..

 • Venkatapathy Perumalsamy - New Delhi,இந்தியா

  காந்திக்கு சுதந்திரம் வாங்கியதிலிருந்து எத்தனையோ கோடிக்கு புத்தகம் வாங்கி இருப்பாங்க மோடிக்கு இப்பதான் புத்தகம் வாங்கி இருப்பாங்க ,அட விடுங்கப்பா சும்மா மோடியை எதுக்குறோமுன்னு எதுவேணுனாலும் சொல்றதா ???

 • Bhaskaran - Chennai,இந்தியா

  காந்தியா யாரு அவரு ஓ. எங்களுக்கு தெரிந்த காந்திகள். சோனியா காந்தி ராகுல் காந்தி மேனகா காந்தி மற்றும் வருண் காந்தி ஆகியோர் மட்டுமே

 • hasan - tamilnadu,இந்தியா

  பக்கோடா வின் வாழ்க்கை வரலாறு பற்றி மாணவர்கள் தெரிந்துகொண்டு என்ன பிரயோஜனம் ,இவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா , தற்போதைய பிரதமர் என்ற அளவுக்கு தெரிந்து கொண்டால் போதுமே ,முழு வரலாறையும் தெரிந்து கொண்டால் வளரும் தலைமுறையினர் இப்படிப்பட்ட பிரதாமரையா நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்தனர் என்று நம் மீதே கோவம் கொள்ள போகிறார்கள்

 • Sandru - Chennai,இந்தியா

  நம் நாட்டை உருவாக்க துணை போனவருக்கு 3 லட்சம் ரூபாய் , நம் நாட்டை திண்டாடும் முயற்சியில் உள்ளவருக்கு 59 லட்சம் ரூபாய்?

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  காந்தியின் புத்தகங்களை நேருவின் புத்தகங்களை இத்தனை வருடங்களாக மாணவர்களுக்கு தரவே இல்லையா...?

 • manisuresh - little india,சிங்கப்பூர்

  Hello modi yaru avarukku name la ean books apdi ennatha pannitaru

 • Siva - Aruvankadu,இந்தியா

  ஓசி சோறு போய்விடும் என்ற கவலை தான் கண்ணுக்கு தெரிகிறது....... மோடி ஜி அவர்களை விமர்சனம் செய்பவர்கள் கவலை படவேண்டாம்..இலவச அரிசி உண்டு டாஸ்மாக் உண்டு குடும்பத்துடன் குதூகலம் உண்டு...4g unlimited உண்டு... மோடி ஜி அவர்கள் பாவம். இந்தியாவை உலக அளவில் முன் நிறுத்த முயற்சி செய்கிறார்.... ஆதரவு அளிக்க மனம் இல்லை என்றால் சற்று அமைதியாக இருங்கள்.

 • Mano - Madurai,இந்தியா

  டீ, பகோடா எப்படி செய்வது என்று முழு செய்முறை கொண்ட புத்தகம். நியாயமான விலை. படித்து முடித்தவுடன் வேலை செய்ய மிக முக்கியம்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  இதனால் வருங்கால மாணவர் சமூகம் அன்புக்கு பதில் வம்பை படிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது .

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  விடுங்க சார் மோடி புத்தகத்தை இப்போது வாங்கினால் தான் உண்டு. காந்தி உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் புத்தகங்களுக்கு எப்போதும் மதிப்பு உண்டு.

 • Divahar - tirunelveli,இந்தியா

  புத்தகத்தின் பெயர் " உலகம் சுற்றும் வாலிபன்" ?

 • Prabhakaran - Delhi,இந்தியா

  தமிழ் நாட்டுல இந்த புத்தகத்துக்கு வேல இல்ல. ஏற்கனவே facebook , whatsapp போன்ற சமூக வலைத்தளங்களில் மோடிஜி தான் பிரதான கதாநாயகன். அடுத்த ரெண்டு வருசத்துக்கு அவரை அடிச்சுக்க ஆள் இல்ல. அந்த புத்தகத்துல என்ன இருக்க போகுது, மோடி 4 மணி நேரம்தான் தூங்குறாரு மற்ற நேரமெல்லாம் கடின உழைப்பு என்று புரட்டு கதைகளும் மாய பிம்பங்களும் தோற்றுவிக்கப்பட்டிருக்கும்(phone wire பிஞ்சு நாலு நாள் ஆன கத தெரியாம).

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இதுல மோடிஜி வேற புதுசா எக்ஸாம் போராளிகள் என்று மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதை பற்றி புக் எழுதி இருக்கிறாராம் .. மோடிஜி தன் வாழ்நாளில் பல செமஸ்டர் பரீட்சைகள் எழுதி உள்ளதால் , அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக எழுதி இருக்கிறார் .. அணைத்து மாணவர்களும் மோடிஜி புக்கை வாங்கி படித்து எப்படி பரீட்சை எழுதுவது என்று கற்று கொள்ளுங்கள் .. ஆனா மோடிஜி எங்க படிச்சாருனு மட்டும் கேக்க கூடாது .. அது தேச ரகசியம் ..

 • srikanth - coimbatore,இந்தியா

  வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே. பின்னாடி வருகிறவர்களுக்கு நாம எப்படி ஆட்சி செஞ்சோம் இன்னும் உண்மை தெரியவா போகுது.

 • Divahar - tirunelveli,இந்தியா

  யாரும் காசு கொடுத்து வாங்கி படிக்க மாட்டார்கள். அதனால் இப்படி ஒரு மடத்தனமான யோசனை?

 • Nagarajan S - Chennai,இந்தியா

  பிஜேபி அரசிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்?

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  கொள்ளையர்களுக்குதானே மக்கள் நம்புறாங்க

 • B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்

  காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 95 சதவிகித திட்டங்களுக்கு நேருவின் குடும்ப பெயர் வைக்கப்பட்டதே, அப்பொழுது எந்த எதிர்ப்பும் இல்லையே ஏன்? இன்று அது போன்று நடப்பது இல்லையே. அது பாராட்ட தகுந்தது அல்லவா?

 • Hari Bojan - Ootacamund (Ooty),இந்தியா

  இதுதான் உங்களது விதிமுறையோ? அப்படி என்னதான் செய்துவிட்டார் இந்த பிரதமர்

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  நேரு பற்றிய புத்தகம் 1635 ... இது மனப்பூர்வமாக அரசு செய்யும் இருட்டடிப்பு ..... ஆசியா ஜோதி , இந்தியாவின் நவநாகரீக சிற்பி ... இந்த பிஜேபியின் இன்னும் கொஞ்சம் நாட்களில் வரலாற்றையே மாற்றி எழுதுவார் ....

 • Rockie-பாலியல் ஜனதா கட்சி - Nellai,இந்தியா

  எல்லாமே ஒரு psychological approach தாங்க. மாணவர்கள் நேரு, இந்திரா, ராஜீவ் என்று பிரதமர்களை பற்றி பேசும்போது தானாகவே காங்கிரஸ் இடையேறுவது போல, மோடி பற்றி வாசிக்கும்போது/பேசெயும்போதோ தானாகவே பிஜேபி இடையேறும், இதுஒரு தாக்கத்தை நிச்சயமாக பிற்காலத்தில் ஏற்படுத்தும். ஒருசிலரை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் என்பதுபோல.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  balakrishnan நேரு இந்திரா பற்றி உங்க தானைத்தலைவர் பலநேரங்களில் சொன்ன பொன்மொழிகளை (?) ஞாபகப்படுத்தவா? திடீர் பாசம் மிகவும் ஆபத்து. ஆனால் நேரு எந்த இனத்தை நான்சென்ஸ் என அழைத்தாரென்பதைக்கூறி நோகடிக்க நான் விரும்பவில்லை)

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  உண்மை இந்தியாவிலேயே இருந்து அளப்பரிய தியாகம் செய்து இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்தது ..நான்கு வருடங்களாக போய் ஊரை சுற்றி சுற்றி வலம் வந்தது...மக்கள் வாழ்க்கையை தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள்...

 • Power Punch - nagarkoil,இந்தியா

  விரைவில் இன்னொரு காந்தி வர வேண்டும்.. பிஜேபியிடமிருந்து மக்கள் விடுதலை பெறுவதற்கு...

 • RamRV -

  இது போன்ற முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள் வரும் போது மக்களுக்குத் தெளிவு தரும் விவரங்களையும் கூறுவது மீடியாவின் கடமை. 70 வருடங்களாகப் பல நூறு புத்தகங்கள் நூலகங்களில் வாங்கப் பட்டிருக்கும். ஆனால் மோதியைப் பற்றிய நூல்களி தற்போது தான் வெளி வர ஆரம்பித்திருக்கின்றன. தவிர சமீப காலங்களில் காந்தியைப் பற்றி புதிய நூல்கள் வந்துள்ளனவா என்று கூடப் பார்க்க வேண்டும். போகிற போக்கில் எதையாவது கொளுத்திப் போட்டுவிட்டுப் போவது பொறுப்பின்மையாகும்.

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  மோடிய தாமர மணவாளனுவ,,பிசெபி செப்புக்கள தவித்து எந்த நைனாக்களுக்கும் புடிக்காதுங்கிறதுதா அப்பட்டமான ஒண்மை...

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  மோடிக்கெல்லாம் கோடிகளில் போட்டு பொஸ்தகம் வினயோகிச்சாலு ஊசு இல்லே நைனா. மிச்சரு,பொரிகடலை கடக்கிதா போவு..காந்திக்கு அப்டி இல்ல..அஞ்சி பொஸ்தகம்னாலு சாமி படத்துக்கு முன்னாலதா வரு...

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  காந்தி நாட்டுக்காக சுயபரிசோதனை மேற்கொண்டவர். மோடி நாட்டுக்காக குடும்பத்தை மட்டுமல்ல சுற்றத்தையும் ஒதுக்கி வாழ்பவர். வளரும் தலைமுறை தலைவர்களின் மூலம் சுய நலம் ஒதுக்கி தியாகத்தை மட்டுமே அறிந்து கொள்ளவேண்டும்.

 • Murugan - Mumbai

  ஆயிரம் மோடிகள் வருவர் போவர் ஆனால் ஒரே காந்தி தான்

 • balakrishnan - coimbatore,இந்தியா

  அதிக கிரிமினல் குற்றச்சாட்டுக்களை சுமந்து கொண்டிருக்கும் முதல்வர், வேறு எப்படி நடந்து கொள்வார், அடுத்த வருஷம் வரை ஆட்டம் பலமாக இருக்கும், நாம் தான் பொறுத்து இருக்கவேண்டும்

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ஒண்ணு "சத்திய சோதனை", இன்னொன்னு "சத்தியத்துக்கே வந்த சோதனை", இல்லை ரோதனை, வேதனை இப்படி கூட வச்சிக்கலாம்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  நல்லா பக்கோடா, மிக்ஸர் கட்டி தர முடிகிறதாம்..

 • K.Sugavanam - Salem,இந்தியா

  காற்றுள்ளபோதே வியாபாரம் பண்ணிக்கொள்கிறார்கள்.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  வெள்ளையன் நம் நாட்டை விட்டு வெளியேறியதற்க்கு முழு முதல் காரணம் காந்தியும், நேருவும் தான். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்பதன் உண்மையான பொருள் இது தான்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மோடிக்கு அதிகமாக கொடுத்தால் என்ன...அந்த நோட்டுக்கள் எல்லாவற்றிலும் காந்திதான் உள்ளார்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லா பணமும் காந்திக்கு தான் சொந்தம்... அவருடைய உருவம்தான் எல்லா நோட்டிலேயும் உள்ளது...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அமரர் காந்தி ஏன் குறைவு என்று கேட்கமாட்டாரே... ஆனால் மற்றவர் கேட்பாரே.....

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  மாணவர்கள் மோடிஜி புத்தகங்களை விரும்புகிறா?, மாநில அரசு, அது போன்ற புத்தங்களை வாங்குறா?, என்பது போன்ற நிலை உருவானால், என்ன தாங்க பண்ணுறது?, ஓர் மாநில அரசு. எது எப்படியோ, மாணவர்களிடம், பொது விசயம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை, படிக்கும் ஆர்வம் வருதே?, அதுவே, ஓர் பெரிய விசயம்தாங்க. ஆகவே, இப்படியாவது, மாணவர்களிடம், பொது அறிவு பற்றிய புத்தகங்களை, படிக்க வேண்டும், தங்கள் பொது அறிவு விசய ஞானத்தை, வளர்த்து கொள்ள வேண்டும், என்ற ஆர்வம் வருதே?, அதுக்கு, பிரதமர் மோடிஜியின் புத்தகங்கள் பயன்பட்டால்?, அது ஒன்றும் தப்பில்லைதானே?. சரியா?.

 • krishnan - Chennai,இந்தியா

  இவர் புத்தகம் வேற எழுதுறாரா ?

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  காந்தி புத்தகங்களுக்குப் பதிலாக சுபாஷ் சந்திர போஸ் புத்தகங்கள் வாங்கியிருக்கலாம்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இந்த எழுபதாண்டுகளில் காந்தியைப் பற்றி அரசு வாங்காத புத்தகங்களா ?அப்போதெல்லாம் ஒரு புத்தகம் ஓரணா அல்லது இரண்டணா? அவற்றால் எல்லா மாணவர்களும் அஹிம்சாவாதிகளாகிவிட்டனரா? நேரு புத்தகங்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்கப்பட்டு அதன் ராயல்டி தொகை அவர் குடும்பத்துக்குப் போனதே அது என்ன தியாகமா? அதில் எத்தனை உண்மைகளை மறைத்து பொய்களை நுழைத்து எழுதியிருந்தனர்? இந்திரா ராஜீவ் புகழ்பாட கல்வித்துறையின் நிதி போனது மறக்குமா? அவற்றை வைத்து எத்தனையோ புதுப்பள்ளிகளை துவக்கியிருக்கலாமே? அடுத்த தலைமுறையாவது நிதர்சனமான நிகழ்கால உலகைத் தெரிந்து கொள்ளட்டும்

 • kumarkv - chennai,இந்தியா

  3 laks is too much

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  தான் மாநிலத்திலும் மத்தியிலும் 'ஆட்சி' செய்த பெருமையைப் பீற்றிக்கொள்வதுதான் முக்கியம். நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தந்தும், அரசியல் சாசனத்தை வரைந்தும் உதவியவர்களை அலட்சியப்படுத்தும் போக்கு நல்லதல்ல

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement