Advertisement

பூவா தலையா போட்டு பேராசிரியர் பணி நியமனம் செய்த அமைச்சர்

சண்டிகர்: பஞ்சாபில் பேராசிரியர் பதவிக்கு நாணயத்தை சுண்டி பூவா,தலையா போட்டு ஆட்களை நியமித்த சம்பவம் நடந்தது.

பஞ்சாப் மாநிலத்தில் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றிற்கு மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் பணி நியமனத்திற்கு பஞ்சாப் அரசு தேர்வாணையத்தின் மூலம் 37 பேர் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்றவர்கள் அவரவர் இடங்களில் பணியை துவக்கினர். காத்திருந்த பட்டியலில் உள்ளஇரண்டு பேர் மட்டும் ஒரே இடத்திற்கு போட்டி போட்டனர்.தகவலறிந்த அம்மாநில தொழில்நுட்ப கல்வி அமைச்சர் சரண்ஜித்சிங், என்பவர் ஒரு இடத்திற்கு போட்டி போடும் இரு மனு தாரர்களையும் அழைத்து நாணயத்தை சுண்டி பூவா தலையா போட்டு பார்த்து தேர்வு செய்தார். அமைச்சரின் இந்த செயல் குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (35)

 • Gopi - Chennai,இந்தியா

  அமைச்சர் (வேலைக்கு விண்ணப்பித்தவர்களை பார்த்து ) ஏய் இங்க வா. என்ன படிச்சிருக்க ? வேலைக்கு விண்ணப்பித்த முதல் நபர்: BA . அடுத்த நபரை பார்த்து அமைச்சர்: நீ இங்க வா. என்ன படிச்சிருக்க. வேலைக்கு விண்ணப்பித்த இரண்டாம் நபர்: SSLC . உடனே அமைச்சர்: நீ அவனைவிட ரெண்டெழுத்து அதிகமா படிச்சிருக்க உனக்கு பணி ஆணை இந்த கையில் பிடி. குடி இருந்த மக்கள்: ங்கே.......

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  பஞ்சாப் மாநில தொழில் நுட்ப கல்வி அமைச்சர் சரன்ஜித் சிங் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இருவரில் ஒருவரை பூவை,தலையா போட்டு பார்த்து வேலைக்கு எடுத்தது குற்றமே.அந்த இருவரில் ஒருவர் மட்டுமே "அடுத்த" சீனியராக அதாவது 38 -வது ஆளாக இருந்திருப்பார்.அவரைத்தான் தேர்வு செய்திருக்க வேண்டும்.தமிழ் நாட்டில் என்றால் அதிக பணம் கொடுப்பவர்களுக்கு "ஆட்டோமேட்டிக்"-க்காக போயிருக்கும்.இந்த பிரச்சினை எழுந்திருக்காது.

 • a.thirumalai -

  எல்லாம் அவன் செயல்

 • ELAVARASI.R - George town,மலேஷியா

  மிக்க மகிழ்ச்சி விளங்கிடும்,அடுத்தக முறை மக்கள் இப்படியே பூவா தலையைனு பார்த்தல்?

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  அரசாங்க வேலைன்னா சும்மாவா..... அதிர்ஷ்டமும் வேண்டும்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இந்த நாட்டில் ஊழல் பண்ணி காசை வாங்கி ஒருவருக்கு உதவி செய்வதற்கு பதில் , இது பரவாயில்லை என்று நினைக்க தோணுது .

 • மைதிலி -

  பிங்கி பிங்கி பாங்கி கூட போட்டுப் பார்க்கலாம்.

 • Ram Babu - Trivandrum,இந்தியா

  பணம் வாங்கிகொண்டு ஆர்டர் போட்டால் நல்லது . பூவா தலையா போட்டு ஆர்டர் போட்டால் தப்பா? ரொம்ப நல்லாருக்கு .

 • JAYARAMAN - CHENNAI,இந்தியா

  The law has to say something, when such disputes occur. In an election, if two candidates got equal highest number of votes, how ec will decide on this.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  பூவா தலையா போட்டதுல ஜெயிச்சவரு அனுமன் ஸ்தோத்திரம் சொல்லிட்டு வந்திருப்பாரோ?

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  இனி தேர்வு பெற்றவர்களை இங்கி, பிங்கி, பாங்கி போட்டு எலிமினேட் செய்துவிட்டு தேர்ந்தெடுக்கலாம். மக்களும் வோட்டு மிஷினிலும் இதே முறையைக் கையாளலாம். இப்ப மட்டும் என்ன, ஒவ்வொரு கட்சியும் கொடுத்த தொகைக்குத்தானே வோட்டுவிழுந்தது

 • Indhuindian - Chennai,இந்தியா

  காசு வாங்கிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் நியமனம் செய்வதை விட பூவா தலையா எவ்வளவோ மேல்

 • balakrishnan - coimbatore,இந்தியா

  எல்லோருமே தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான், ஒரே இடத்திற்கு ரெண்டு பேர் போட்டி என்கிறபோது, பிரச்சனை எளிதில் முடிந்துவிட்டது, கோர்ட்டுக்கு போய் அது பத்து வருஷம் நடந்து தீர்ப்பு வருவதற்குள் சம்பந்தப்பட்டவர் டிக்கெட் வாங்கியிருப்பார்,

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  இன்னாப்பா ஈத்து படா கலீஜாகீது?

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  கருத்து சொன்ன அனைவரும் , ஊழல் இல்லை என்பதில் ஆதரித்து உள்ளனர். நாமும் இதனை தமிழகத்தில் எதிர் பார்ப்போம்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இனி ஒத்தையா ரெட்டையா?,வலமா இடமா?விளையாட்டுதான் நாடு பூரா பிரபலமாகும் போல..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மந்திரியின் கைதடி கணபதியை போல இல்லாமல் இருந்தால் சரி...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பூவா தலையா தெய்வத்தின் வாக்கு... பணம் வாங்கி கொண்டு போட்டு இருந்தால் தான் தப்பு..

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இறைவனுக்கு பூ போட்டு பார்ப்பது, பூவா தலையா போட்டு பார்ப்பது, என்பது இறைவனின் தீர்ப்பாகவே பார்ப்பார்கள். காங்கிரஸின் கூட்டாளி நாடான இலங்கையில் சில தினங்களுக்கு முன் நடந்த உள்ளுராட்சி தேர்தலில், ஒரு தொகுதியில் ஒரே வாக்கு தொகையை பெற்ற கட்சிகள் இரண்டு, யார் வெற்றியாளர் என்று பார்க்க நாணயத்தை சுண்டி பூவா தலையா போட்டு தெரிவு செய்தது சர்வதேச அளவில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. எப்படியோ 30 இலட்சம் வாங்காமல் பிரச்சனையை முடித்துவைத்தாரே.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட விடுங்கப்பா, இப்படியாவது, நேர்மையாக, இந்த பிரச்சனைக்கு, இந்த அமைச்சர், ஓர் தீர்வை கண்டாரே?, அதுவே, ஓர் சிறந்த விசயம் எனலாம். 20-லட்சம் ரூபா குடு, 30-லட்சம் ரூபா குடு(லஞ்சம்) என்று கேட்காத வரை, இந்த மந்திரியை, நாம் பாராட்டுவதில் தப்பே இல்லை எனலாம்தானே?.

 • ARUN.POINT.BLANK -

  punjabla endha katchi aatchila irukkunu kuripidavum

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  கணபதியிடம் பூ போட்டு பார்த்திருக்கலாம்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தமிழகம் போல கமிசன் வாங்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement