Advertisement

ரயில்வே போலீஸ் -- மாணவர் நல்லுறவு குழு அமைப்பு

சென்னை: ரயில், பஸ்களில், மாணவர்கள் ரகளையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், மாணவர் - ரயில்வே போலீஸ் இடையே, நல்லுறவு ஏற்படுத்த, குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ரயில்வே போலீசார், கல்லுாரி முதல்வர்கள் ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
இதில், ரயில்வே, ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு மற்றும் சென்னையில் உள்ள கல்லுாரிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர்.
சென்னை, பட்டரவாக்கம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையங்களில், கல்லுாரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ரயில் மற்றும் பேருந்துகளில், மாணவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்கும் நோக்கில், இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில், ரயில்வே போலீசார் மற்றும் மாணவர்கள் இடையே, நல்லுறவை ஏற்படுத்த, கல்லுாரிகளுக்கு சென்று, மாணவர்களை சந்தித்து பேச, குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இக்குழு, ரயில், பஸ்களில், பொதுமக்களுக்கு இடையூறாக, மாணவர்கள் நடந்து கொள்ளக்
கூடாது.
நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை, அவர்களுக்கு, எடுத்துச் சொல்ல
வேண்டும்.
பிரச்னை செய்யும் மாணவர்களின் பெற்றோரை, கல்லுாரி முதல்வர்கள் அழைத்து, மாணவரின் செயல்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டது.
வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது, நடவடிக்கை எடுத்தால், பாதிப்பு என்னென்ன
என்பதையும், அவர்களுக்கு தெரிவிக்க
வேண்டும்.
மாணவர்கள், கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், அவர்களின் மனநிலையை, பெற்றோரும், கல்லுாரி முதல்வர்களும் மாற்ற முயல வேண்டும் என, ஆலோசிக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement