Advertisement

ரூ.1.79 லட்சம் இழப்பீடு : நிறுவனத்திற்கு உத்தரவு

சென்னை: பொருட்களை முறையாக ஒப்படைக்காத, கன்டெய்னர் பார்சல் நிறுவனம், இழப்பீடுடன், வாடிக்கையாளருக்கு, 1.79 லட்சம் ரூபாய் வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை, கே.கே.நகர், சண்முகம் சாலையைச் சேர்ந்தவர், பாலசுப்பிரமணியன். இவர், டில்லியில் இருந்து, வீட்டு உபயோக பொருட்கள், கார் ஆகியவற்றை, கன்டெய்னரில், சென்னைக்கு அனுப்பினார்.
ஹரியானா மாநிலம், குர்கானில் உள்ள,
பார்சல் நிறுவனம், 72 ஆயிரம் ரூபாய் கட்டணம் பெற்று, தனி கன்டெய்னர், ஏற்பாடு செய்து கொடுத்தது.
இந்த பார்சல், சென்னையில், ஒப்படைக்கப்பட்ட போது, பல பொருட்களை காணவில்லை. சில பொருட்கள், உடைந்திருந்தன.
காரின், சில பாகங்களும் உடைந்திருந்தன.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி,
பார்சல் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், 2016, ஏப்ரலில், பாலசுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், நீதிபதி ஜெயபாலன், நீதித் துறை உறுப்பினர், உயிரொலிகண்ணன் பிறப்பித்த
உத்தரவு:
பார்சல் லாரி நிறுவனம், உரிய சேவை வழங்கவில்லை. பார்சலில், காணாமல் போன பொருட்களுக்கு, 36 ஆயிரம் ரூபாய், உடைந்த பொருட்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய், உடைந்த காருக்கு, 28 ஆயிரம் ரூபாய், கன்டெய்னர் வாடகை, 10 ஆயிரம் ரூபாய், இழப்பீடாக, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் வழக்கு செலவு, 5,000 ரூபாய் என, மொத்தம், 1.79 லட்சம் ரூபாய், மனுதாரருக்கு, பார்சல் நிறுவனம், வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement