Advertisement

ஜனநாயக நாட்டில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை: சரத்யாதவ்

கேன்டிகார்க்: நாட்டில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் சரத்யாதவ் கூறினார்.
பீஹாரில் முதல்வர்நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து விலகிய சரத் யாதவ் புதிய கட்சி துவங்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி, ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை, மத உரிமை உண்டு. ஆனால் அதற்கு பேராபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. சிறுபான்மையினர் எல்லா நிலைகளிலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாகத்தான் நான் இதை பார்க்கிறேன். மொத்தத்தில் நாட்டில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை ஏற்படுவதை போன்ற நிலை உள்ளது.
வருங்காலத்தில் காங். தலைவர் ராகுல் மெகா கூட்டணி அமைப்பதற்கான திறமை உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • yaaro - chennai,இந்தியா

  ஆமாம்பா , அறிவிக்கப்படாத எமெர்ஜெண்சி நடக்குது ., அதால அறிவிக்கப்பட்ட எமெர்ஜெண்சி பண்ணிய காங்கிரஸுடன் கூட்டு சேருவோம் , கரெக்ட்டா

 • Siva - Aruvankadu,இந்தியா

  பீகாரின் கருணா....நடந்துங்கடா.... உன்னை எல்லாம் சிவன் கவனிப்பார்.......அதுவரை ஆடுடா....

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  நெருக்கடி மக்களுக்கல்ல ... அரசியல் வியாபாரிகளுக்கு நெருக்கடி .... ஊழல் பன்றிகளுக்கு நெருக்கடி ... இத்தாலி மாஃபியா கும்பலுக்கு நெருக்கடி .... மதமாற்ற வியாபாரகளுக்கு நெருக்கடி .... அமைதி மூர்க்க பயங்கரவாதிகளுக்கு நெருக்கடி .... இப்போது இந்த சரத்யாதவுக்கு பணநெருக்கடி ... அதனால் எவரிடமோ கூலி வாங்கி கொண்டு கூவுகிறது ....

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  அப்படிஎல்லாம் ஒன்றும் நடந்துவிடவில்லை....மக்கள் அச்சப்படவில்லை. அச்சத்தில் இருப்பவர்கள் சிறுவன் ராகுலும்...சரத்யாதவ் போன்றோர். ...

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  நாலு வருஷத்துக்கு முன்னால மக்கள் செஞ்ச தப்புக்கு இப்ப தண்டனை கிடைக்க ஆரமிச்சாச்சு..இத மக்கள் அனுபவிச்சிதா ஆவனு நைனா

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இது ஒரு ஆரம்பம் தான், ஒரு வேலை அடுத்த ஆண்டு மீண்டும் வந்தால் அதிரடி ஆட்டம் அப்போது தான் முழுமையாக இருக்கும், இது ஒரு வெள்ளோட்டம் தான்

 • K.Sugavanam - Salem,இந்தியா

  நீட்டா நெருக்குகிறார்கள்..

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  பீகாரில் சுனாமி வரப்போகுது. பீகார் மாநிலத்தில் கடலோரம் வசிக்கும் மக்கள் எல்லோரும் தங்கள் வீட்டை காலி செய்து சரத் யாதவ் வீட்டின் பக்கத்த்தில் சென்று தங்கி கொள்ளவும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ரொம்ப நெருக்கடியாக இருப்பதால்தான் நமது பிரதமர் எப்பவுமே வெளிநாடுகளில் இருக்கிறார் போலா...

 • JShanmugaSundaram -

  இப்படியேபேசிபேசி நாட்டை குட்டிச்சுவராக ஆக்கினதுதான் மிச்சம் யாரோட கூட்டணி எவ்வளவு கொல்லை அடிக்கலாம் மக்கள் என்னஏ மாளிகளா எந்தகூட்டணிவச்சாலும் இனி பருப்புவேகாது

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இவரது ஒரே நெருக்கடி பதவியில்லாமல் இருப்பதுதான்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  இப்பெல்லாம், அவரவரின், சுய விருப்பு வெறுப்புக்களை, சுய ஆசை அபிலாசைகளை எல்லாம், ஏதாவது, ஒரு பொது பிரச்சனைகளில், மறைமுகமாக கோர்த்து சொல்வதுதாங்க, இன்றைய ட்ரெண்ட் எனலாம்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  கொள்ளையடிப்பவர்கள் சிறுபான்மைதான் திண்டாடுபவர்கள்தான் பெரும்பான்மை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement