Advertisement

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க ‛நீட்' கட்டாயம்

புதுடில்லி : மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வு எழுவதுபோல, வெளிநாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் படிக்கவும், நீட் தேர்வு நடத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


மருத்துவக் கல்லுாரியில் சேருவதற்காக, 'நீட்' எனப்படும் நுழைவுத் தேர்வு, 2016 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெளிநாடுகளில் மருத்துவம் படிப்போர், நாடு திரும்பி டாக்டராக பணி புரிவதற்கான லைசென்ஸ் பெற வேண்டும். இதற்காக, எப்.எம்.ஜி.இ., எனப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்ட தேர்வு என்ற தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


ஒவ்வொரு ஆண்டும், 7,000 பேர், மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடு செல்கின்றனர். குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யாவுக்கு பெரும்பாலானோர் செல்கின்றனர். ஆனால், இந்த தகுதித் தேர்வை எழுதுவோரில், 15 சதவீதம் பேரே தேர்ச்சி பெறுகின்றனர். தேர்ச்சி பெறாதவர்கள், டாக்டராகப் பணிபுரிவதற்கான லைசென்ஸ் பெறாமலேயே, டாக்டராக பணியாற்றுகின்றனர்.


இதை தடுக்கும் வகையில்,நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், மருத்துவம் படிக்க வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்ற நடைமுறைக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • இட்லி நேசன் - Dublin,அயர்லாந்து

  எல்லா துறைகளிலும் தரம் என்பது நிச்சயம் தேவைதான்.. ஆனால் ஏற்கனவே ஓரளவுக்கு தரமிருக்கும் துறைகளை மேலும் மேம்படுத்துவதற்கு முன்பு அரசியலிலும், நீதித்துறையிலும் தரத்தை உயர்த்துவது மிக மிக அவசியம் .. பல துறைகளின் அவலச்சணத்திற்கு காரணமே இந்த இரு துறைகளும்தான்

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  என்ன கொடுமை ?? இங்கே இருந்து வெளி நாடு சென்று தன் அப்பா அம்மா கட்டும் காசில் வேறு நாட்டு அரசு கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரியில் படிக்க இங்கே எதுக்கு அரசு நீட் நடத்த வேண்டும் ?? அங்கே படித்து இங்கே திரும்ப வந்தால் , இங்கே ப்ராக்டிஸ் செய்ய தகுதி தேர்வு தான் ஏற்கனவே இருக்கிறதே ?? இப்போது எதுக்கு படிக்க போகும் முன்னரே தேர்வு ?? அங்கே படிக்கும் ஒருவர் அங்கேயே தங்கி இருக்க முடிவு செய்தால் ? அப்போது இந்த தேர்வு எதற்கு ?

 • srikanth - coimbatore,இந்தியா

  நம்ம ஜனநாயக நாட்டில இப்ப தான் "கட்டாயம்" ங்குற வார்த்தை கட்டயாமா அடிக்கடி கேட்க முடியுது. கட்டாயமா இது ஜனநாயக ஆட்சி தானா ?

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  இரண்டுமே ஒன்று தான், அதாவது போலி மருத்துவர்களை அரசாங்கத்தால் ஊழல் அதிகாரிகளை வைத்து கொண்டு தடுக்க முடியவில்லை, எனவே இனிமேல் படுத்துகிட்டு போத்தி கொள்ள முடியாது ஆனால் போத்தி கொண்டு படுத்துக்கொள்ளலாம், ஏதோ ஒரு வகையில் தூக்கம் வந்தால் சரிதான்..........

 • B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்

  நல்ல முடிவு. இங்கே தகுதி இல்லை என்று நிராகரிக்கப்பட்டவர்கள், பண பலத்தால் வெளி நாட்டில் தரம் குறைந்த கல்வியை கற்று, தாய் நாட்டில் வந்து மருத்துவம் பார்ப்பதால், தவறான மருத்துவம் பாமர மக்களுக்கு கிடைக்கும் சூழல் இருந்தது. இது ஓரளவுக்கு தவிர்க்கப்படும் இந்த முடிவினால். பெரும் வரதட்சணை பெறுவதற்காகவும் இது போன்று சிலர் வெளிநாடு சென்று பட்டம் பெறுகிறார்கள். இதுவும் இதனால் தவிர்க்கப்படும்.

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  இனி டாக்டரின் மகன் டாக்டர் ஆக முடியாது... அதனால் என்ன இனி COMPOUNDER ஆகலாம்?...

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  அப்டியா நைனா அப்போ அடுத்து வெளிநாடு போவ பாஸ்போட் இருக்கோ இல்லயா ஆதார் வேணும்ங்கிற மாண்புமிகு திட்டத்தை எப்ப அறிவிக்க போறீங்க தாமர நைனா ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தொடர்ந்து தமிழக அரசியல்வாதிகளுக்கு வேலை கொடுத்து வருகிறீர்கள்... நல்லதுக்கு இல்லை...

 • K.Sugavanam - Salem,இந்தியா

  நீட்டா கதையை முடிச்சிட்டாங்க..

 • VOICE - CHENNAI,இந்தியா

  வெளிநாட்டில் படிப்பதற்கு நீட் எதற்கு ? இங்கு சேர நிர்பந்தித்து லஞ்சம் வாங்கவா ? அவர்கள் இந்திய வந்து மருத்துவம் பார்த்தால் தான் நீட் தேவை. வெளிநாட்டில் மருத்துவம் படித்து அங்கு செட்டில் ஆகும் நபருக்கு எதற்கு நீட் ? அவர் சொந்த செலவில் படிக்கப்போகிறார் அரசிடம் பணம் கேட்டார்களா ? நம் நாடு அரசியல்வாதிகள் நடிகர்கள் இங்கு மருத்துவம் பார்க்காமல் வெளிநாடு தான் ஓடுகிறார்கள். ஜெயலலிதா உடல் குறைவுடன் இருந்தபொழுது எய்ம்ஸ் டாக்டர் வந்து ஏதும் செய்ய முடிந்ததா ? லண்டன் டாக்டர் தான் சிகிச்சை அளித்தார்கள். இங்கு இருப்பவருக்கு குறைந்த செலவில் மருத்துவம் சொல்லிக்கொடுக்க அருகதை இல்லை இதில் தான் சொந்த பணத்தில் வெளிநாட்டில் படிக்கப்போகும் மாணவர்களை தடுக்க நினைப்பது முட்டாள்தனம். மிகவும் பின்தங்கிய மருத்துவ முறை வைத்து கொண்டு அதி நவீன தொழில்நுட்பம் படிக்கச் போகாதே என்று எப்படி சொல்லமுடியும் ? 3 மாத கோர்ஸ் வெளிநாட்டில் படிப்பதற்கு அப்ளை செய்துவிட்டு அங்கு போனவுடன் மருத்துவத்தில் சேரவேண்டியதுதான். வெளிநாட்டில் படித்துவிட்டு இந்திய வந்து செட்டில் ஆகும் நபர்களுக்கு நீட் தேர்வு எழுதுவது அவசியம். வெளிநாட்டில் செட்டில் ஆகவேண்டியவருக்கு தேவை இல்லை.

 • Arivu Nambi - madurai,இந்தியா

  நல்லதுதான் ,ஆனால் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விட மாட்டார் என்பதுதான் நினைவுக்கு வருகிறது .பாவம் மாணவர்கள் .அரசியல்வாதிகள் பாடாய் படுத்துகின்றனர் ...

 • இந்து தமிழன்.. - Chennai,இந்தியா

  சூப்பர்.. பணத்த கட்டி இனிமேல் doctor ஆக முடியாது

 • anand - Chennai,இந்தியா

  கொஞ்சம் மூளை இருந்தால் தான் டாக்டர் ஆக முடியும்..பணம் இருப்பார் எல்லாம் ஆக முடியாது..மருத்துவர்கள், அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்ப்பார்கள்.. அவர்கள் குடும்பத்தினர் எல்லாம் இனி பணத்தால் டாக்டர் ஆக முடியாது அல்லவா.. நேரடியாக எதிர்க்காமல் வேறு வழியில் எதிர்ப்பார்கள்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  கல்வியில் தரம் நிரந்தரமாக்கும் அரசின் அமுலாக்கத்தில், தப்போ தவறோ இல்லை எனலாம். ஆனால், அதில், போட்டியாளர்களாக கலந்து கொண்டு, தேர்வுகள் எழுதும் அனைத்து மாணவர்களுக்கான கல்வி போதனைகள், பயிற்ச்சிகளும் தரமானதாக இருக்கும்படி, பார்த்து கொள்ளுதலும் பராமரித்தலும் அதிகாரம் செயல்படுத்தலும் அவசியம்தானே?.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement