Advertisement

தமிழக கோவில்களில் கடைகளை அகற்ற உத்தரவு

சென்னை: தமிழக கோவில்களில் உள்ள கடைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து தமிழக கோவில்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்: ‛‛ தமிழகத்தில் உள்ள கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் வளாகங்கள், மற்றும் கோவில் மதில் சுவர்களை ஒட்டியுள்ள கடைகளை உரிய வழிமுறைகளை பின்பற்றி அகற்ற வேண்டும். கோவில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவிலில் உள்ள சிற்பங்களுக்கு சேதம் ஏற்படதாவாறு மின் வயரிங் செய்யப்பட வேண்டும்.


பக்தர்கள் கொண்டு வரும் நெய், எண்ணெய் ஆகியவற்றை சேகரித்து அன்றாட பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பெரிய கோவில்கள் அருகே தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கோவில்களில் தீ தடுப்பு கருவிகள் பொருத்தப்பட வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை தீத்தடுப்பு கருவிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.


இதுகுறித்து தணிக்கை செய்ய தலைமை செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான அதிகாரிகள், வல்லூநர்கள், ஊழியர்கள், நிதிகள் குறித்து 2 வாரங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அமைக்கப்படவுள்ள குழுவிற்கு கோவில் நிர்வாகம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவேண்டும். இவ்வாறு தனது உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (34)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "எங்களுக்கு (எனக்கு?) மணல் குவாரிகளின் மூலமே பல ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. கோவில்களில் உள்ள கடைகளின் மூலம் சில ஆயிரம் மட்டுமே வருமானம் வருகிறது. எனவே கோவில்களில் உள்ள கடைகளை உடனே அகற்ற உத்தரவிடுகிறேன்"

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அனைவருடைய ஆர்வக்கோளாறை பார்த்தா பாவமா இருக்கு. இவரு ஒண்ணும் கடையை நாளைக்கே மூடி காலி பண்ணிட போறதில்லை. பத்து வருஷம் ஆனாலும் எதுவும் மாறப்போறதில்லை. அதான் வெவரமா "உரிய வழிமுறைகளை பின்பற்றி அகற்ற வேண்டும்" ன்னு நல்லா அடித்தளம் போட்டு வச்சிருக்காரே. அது என்ன "உரிய வழிமுறை"ன்னு எவனுக்காவது தெரியுமா? ஹூஹூம்.. , லஞ்சம் கொடுத்தால் கண்ணை கட்டிக்கொள்வார்கள்.. இவங்களுக்கு தெரிஞ்ச வழிமுறை அதுமட்டும் தான்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஒன் சைடா ஆர்டர் போடுவதைவிட, வாழ்வாதாரத்தை இழக்க போகும், சிறு வியாபாரிகளுக்கு, மாற்று இடங்களை, அதே நேரம் ஒதுக்கீடு செய்வதுதானே?, நியாயம் தர்மம் எனலாம்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அப்புறம் இந்த பிரச்சினையில் மக்களை ஏமாற்ற கோவிலையெல்லாம், அது கோவிலே இல்லே, சர்ச்சுன்னு எழுதி கொடுத்துறாதீங்க. மூட சொன்ன டாஸ்மாக்கை தொறக்குறதுக்காக, ஹைவேஸ் எல்லாம் சாதா ரோடுன்னு மாத்தின கண்ணியவான்கள் ஆச்சே நீங்கள்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ஹைவேஸ்லே இருக்குற டாஸ்மாக், பார்களை சுப்ரீம் கோர்ட்டு எடுக்க சொன்னா மாரியா ஈப்பீஸ் அவர்களே? கர்ப்பக்கிரகம் இருக்குற இடம் தான் கோவில், மத்த பிரகாரம் எல்லாம் கோவில் இல்லன்னு நீயே உன் வண்டுமுருகன் வக்கீல்களை விட்டு சுப்ரீம் கோர்ட்டில் சொல்லி வாதாடுவீர்களா? அதை இந்த புகழ்பெற்ற சுப்ரீம் கோர்ட்டு சரின்னு சொல்ல, டாஸ்மாக்கை கூட உள்ளே நீர் திறந்து வைப்பீர்களா?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  மடத்தனமான முடிவு. கோவிலுக்கு வந்து கால்கடுக்க வரிசையில் நின்று தரிசனம் முடிந்து வந்து ஒரு காபி, டீ , கலர் குடிக்க வேண்டாமா? அர்ச்சனை தட்டு வாங்க கடை வேண்டாமா..

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  சுவாமி சிலைகளையும் நகைகளையுமே திருடி விற்று மற்றும் கடத்தி கொள்ளை லாபம் பார்த்துவிட்டனர்..... அதிகாரிகள் சில அர்ச்சகர்கள் மற்றும் அமைச்சர்கள் / அரசியல் வியாதிகள்.... இனி கடைகளைக் காலி செய்தாலென்ன செய்யாவிட்டாலென்ன.... அவர்கள் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றால் இன்னும் ஒரு மாமாங்கத்துக்குக் கடைகளைக் காலிசெய்ய வேண்டியதில்லை.... நடைபாதை நடப்பதற்கே.... ஆனால் அரசியல் வியாதிகள் / அதிகாரிகள் பணம் வாங்கிக் கொண்டு நடைபாதையில் கடைகள் வைக்கவும் அனுமதி கொடுத்து நடைபாதை வியாபாரிகள் சங்கம் என அதற்கும் அனுமதி கொடுத்து.....அநியாயம் செய்தார்கள்... எங்கே சென்னையில் எந்த நடைபாதையிலாவது ஆக்கிரமிப்பு இல்லாமல் மக்கள் சுதந்திரமாக நடக்க முடிகிறதா....??? அது போலத்தான்.... அரசாங்கத்திடமிருந்து கோவில்களைக் கைப்பற்ற வேண்டும்.... ஆனால் யாரிடம் ஒப்படைப்பது என்பதிலும் சிக்கல் தான் எழுகிறது.... நேர்மையான நல்லவர்களைத் தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது தமிழ்நாட்டில்... என்ன செய்ய...??? ஈஸ்வரோ... ரக்‌ஷது...

 • Bhaskaran - Chennai,இந்தியா

  கடைகளை அகற்றுவதில் மாற்றுத்திறனாளி அமைச்சருக்கு வேண்டியவன் அப்படின்னு பார்க்காமல் எல்லோரையும் அகற்றிவிடவேண்டும் பின் பக்தர்குழுவின் ஆலோசனைந்தபடிமட்டும் எங்கு கடைகள் vanthaal பாதுகாப்பாக இருக்குமோ அங்கு வைக்கலாம்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  கடைகளை எடுத்தால் மட்டும் போதாது. வருமானம் வரும் என்று டிவி சீரியல்கள், திரைப்படங்கள் எடுக்க அனுமதிப்பது போன்றவைகளும் தடுக்கப்பட வேண்டும். கடவுளை தரிசிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் வரும் பக்தர்கள் மட்டும் வந்தால் போதுமானது.

 • ராதாகிருஷ்ணன் -

  நல்ல முடிவு. வியாபாரிகள் பாதிகாதவாறு முடிவு எடுத்தால் நல்லது

 • balakrishnan - coimbatore,இந்தியா

  ஏதாவது ஒரு விபத்து ஏற்பட்டவுடன் தான் எப்போதும் போல எல்லா அரசுகளும் விரைந்து வேக வேகமாக நடவடிக்கைகளை துவக்குகின்றன, அதுவும் அவசரக்கோலத்தில் தான் நடவடிக்கை எடுப்பார்கள், அந்த காலத்தில் கோயில் என்றால் சில கடைகள் இருக்கும், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு சாமான்கள், கோயில் பற்றிய வரலாற்று புஸ்தகங்கள், பொம்மைகள், விபூதி, குங்குமம், தேங்காய் பழம் போன்றவை வைத்திருப்பார்கள், திருவிழா சமயங்களில் ஏராளமான கடைகள் திரும்பிய பக்கம் எல்லாம் இருக்கும், மக்களும் ஆர்வத்துடன் ஏதாவது ஒரு பொருளை வாங்கி செல்வார்கள், நாளடைவில் அது ஒரு பெரிய வியாபாரஸ்தலமாகி போய்விட்டது, அரசு ஒரு அளவோடு அனுமதித்திருக்க வேண்டும், கோயில் நிர்வாகம் சிறப்பான பாதுகாப்பு வசதிகளுடன் கடைகளை வைக்க அனுமதிக்கலாம், தீவிபத்து ஏற்பட்டது நிர்வாகத்தின் கவனக்குறைவு அதை கலைய முயற்சி செய்யாமல் கடைகளை எடுக்க உத்தரவு போடுவது பி.ஜெ.பிக்கு பயந்து எடுக்கும் நடவடிக்கை ஸ்ரீரங்கம் பெரிய கோபுரம் நுழைந்தால் வரிசையாக இருபுறமும் கடைகள் தான், அதற்கு எப்படி சட்டம் என்று தெளிவாக எதுவும் தெரியவில்லை, முதலில் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பறிமுதல் செய்யுங்கள், கட்டணமுறையில் தரிசனம் திட்டத்தை ரத்து செய்யுங்கள், தனிநபர் அர்ச்சனையை ரத்து செய்யுங்கள், கோயிலுக்கு என்று உள்ள வழக்கப்படி எத்தனை முறை பூஜையோ அதை மட்டுமே அனுமதிக்க வேண்டும், எல்லா கோயில்களிலும் வரிசையில் வந்து வணங்கி செல்லும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள், கோயில் சுவர்களில் எழுதுவதை தடை செய்யுங்கள், கோயில் முழுவதும் சுத்தமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யுங்கள், செய்யவேண்டியது ஏராளம் இருக்கிறது

 • S.KUMAR - Chennai,இந்தியா

  நல்லது ..

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது.....நாளையே ஒருவர் ஆளும்கட்சி/எதிர்க்கட்சி சார்பில் இதற்கு தடை உத்தரவு வாங்கி விடுவார்.......அறநிலைய துறை கோட்டா அலுவர்களுக்கு நல்ல வசூல் வேட்டை தான்

 • MUDIYATTUM VIDIYATTUM - TAMIL NADU,இந்தியா

  சூப்பர்

 • Global Citizen - Globe,இந்தியா

  ரோட்டில் சென்றால் விபத்து ஏற்படுகிறது என்று ரோட்டையே எடுத்துவிடலாமா? விபத்து நடைபெறாமல் இருக்கவும், அதையும் மீறி தீவிபத்து சம்பவம் நடைபெற்றால் அதனை அணைப்பதற்கு முன்னேற்பாடுகள் செய்வதும்தான் ஆக்கப்பூர்வமான விடயம்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இந்த நியாயமான உத்தரவுக்கு மகிழ்ந்து எந்த தமிழ் இந்துவும் நன்றிக்கடனால் உமக்கு வாக்களித்து விடப் போவதில்லை.  ஆனால் வழிபாட்டுத்தலங்களை ஆக்கிரமித்து  சுரண்டும் பலரின் வாக்குகளை நிச்சயம்  இழப்பீர்கள்.(அவர்கள் ஏ டி எம் போன்று உடனடி  தடையுத்தரவு வாங்கி இன்னும் பலதலைமுறைக்கும் சுரண்டப்போவது நிச்சயம் ) வாக்குவங்கி அரசியலை கருணாநிதிதியிடம் கற்காமல் விட்டீர்களே? அவர்  நாடறிந்த கொள்ளையன் வீரப்பனைக்கூட பிடிக்க முயலவில்லை. அரசியலில் நிலைத்திருப்பதற்கு  சாதிவாக்குவங்கி அவ்வளவு முக்கியம்.

 • Welcome Back to 1900AD - korkai,இந்தியா

  மின் வயரிங் ஆகம விதிகளில் உண்டோ? மின்சாரம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் இல்லை.

 • அகோரம் -

  மிகவும் சிறந்த, சரியான உத்தரவு. இதை பாரபட்சம் இன்றி நிறைவேற்ற வேண்டும்.

 • Ramganesh - Karaikudi,இந்தியா

  Very good Decision , கோவில் நுழைவு வாயிலின் இரு பக்கத்திலும் கோவிலின் மதில் சுவர் முடியும் வரை எந்த கடையும் வைக்க மாண்புமிகு முதல்வர் அவர்கள் அனுமதிக்க கூடாது மேலும் எதிர் பக்கத்தில் உள்ள கடைகளில் தேவஸ்தானக்கடை என்ற பெயரை யாரும் பயன்படுத்த கூடாது ,விற்கின்ற பூஜை பொருட்களுக்கு Bill கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பிக்கவேண்டும் .

 • chails ahamad - doha,கத்தார்

  எத்தனையோ ஏழை எளியோர்கள் கோவில் நுழை வாயில்களில் , கோவிலின் உள்ளே பயனற்ற இடங்களிலே , அந்த கோவில்களில் வீற்றிருக்கும் கடவுள்களுக்கு உரிய அன்றாட நைவேத்திய பொருள்களை விற்பனை செய்து காலம் ஓட்டி கொண்டு இருப்பவர்களை, தற்போதைய தீ விபத்து பிரச்சனையால் அந்த இடங்களை விட்டு அப்புறப்படுத்துவது ஏற்புடையதே என்றாலும் , அந்த ஏழைகள் பாதிக்கப்படாதளவில் அவர்களுக்கு உரிய மாற்று இடங்களை கோவில் நுழை வாயிலை ஒட்டியே ஒதுக்கீடு செய்வது அதை நம்பியுள்ள குடும்பத்தார்களுக்கும் வயிற்று பசி தீர்க்கும் வழியாகவும் இருந்திடும் , ஆட்சியாளர்கள் கருணையுள்ளத்துடன் பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு ஆதரவாய் இருப்பதும் இறைவனுக்கு உகந்த பணியாகவும் இருந்திடும் .

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  இந்த உத்தரவு கழகத்தவர்களை பெருமளவில் பாதிக்கும் என்பதால் செயல் தலைவர் முன்னிலையில் இளையதளபதி உதயநிதியார் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். அனைத்து கிளைக்கழக நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் இப்போராட்டத்துக்கான நிதி திரட்டும் பணியில் ஈடுபடுமாறு உடனே பணிக்கப்படுகிறார்கள். போராட்டங்களுக்கு ஆள் அனுப்பும் பணியை அண்ணன் வைகோ ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை அறியவும்.

 • Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ

  அப்ப ஏகப்பட்ட கமிஷனுக்கு வாய்ப்பு உள்ளது

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  இப்போவாவது தெளிவு பிறந்ததே

 • Anand - chennai,இந்தியா

  வரவேற்கத்தக்கது. சிலர் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடருவார்களே.........

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement