Advertisement

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை

ஐதராபாத்: 'தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், காதலர் தினத்தன்று, கிளப் மற்றும் ஓட்டல்களில், சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது' என, பஜ்ரங்தள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


உலகம் முழுவதும், காதலர் தினம், நாளை(பிப்.,14) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, பூச்செண்டுகள், பரிசு பொருட்கள் விற்பனை, களைகட்ட துவங்கி உள்ளன.இந்நிலையில், 'வெளிநாட்டு கலாசாரமான காதலர் தினத்தை, இந்தியாவில் கொண்டாடக் கூடாது' என, பஜ்ரங்தள் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.


இதையடுத்து, 'ஐதராபாதில் உள்ள கிளப் மற்றும் ஓட்டல்களில், காதலர் தினத்துக்காக, சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது' என, பஜ்ரங்தள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வாழ்த்து அட்டை, பரிசு பொருட்கள், பூங்கொத்து விற்கும் கடைகளிலும், காதலர் தினத்துக்காக, ஸ்பெஷலாக எதுவும் விற்பனை செய்யக் கூடாது என்றும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


அன்று, பொது இடங்களில் காதலர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்து உள்ளதால், ஐதராபாத்தில், இளைஞர்கள் கூடும் இடங்களில், போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (40)

 • SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்

  Bajrang thala amaippu ivvaru seivathu thavarilla.Ithai aadharippavarkal avarkal veettu pengal avvaru kadalar dinam kondadinal oppukolvarkala.

 • Scorpio - Alaska,யூ.எஸ்.ஏ

  அமேரிக்காவில் லவ்வுக்கு காப்பி ரைட் யாரோ போட்டுள்ளதாக ஒரு வதந்தி - இனி அதுவும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் போல - கப்பம் கட்டிட்டு தான் அப்புறம் எல்லாம் -

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காதல் இல்லை என்றால் பிரபஞ்சமே ஸ்தம்பித்துப்போகும்...

 • Bala Subramani - Pittsburgh,யூ.எஸ்.ஏ

  ஒன்றும் பிரச்சனை இல்லை காதலித்தவர்களை திருமணம் செய்துவைத்தால் போதும். அப்பொழுது தெரியும் கள்ள காதலா? இல்லை நல்ல காதலா? என்று.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம், கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம், ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே. - முண்டாசுக்கவிஞன், பாரதி.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ராமனின் மோதிரத்தை கொண்டு போய் சீதையிடம் சேர்த்து சீதா-ராமரின் காதலை வளர்த்தவன் அனுமன், திரும்பி வந்து "கண்டேன் சீதையை" - முதலில், "கண்டேன்" என்று சொல்லி ராமனின் மனதுக்கு ஆறுதல் சொன்னாராம், கம்பரின் சொல் விளையாட்டில் உள்ள காதல். முதலில் "சீதையை" என்று சொன்னால், "கண்டேன்" என்பதற்குள் ராமன், என்னவாயிற்றோ என்று நினைத்து வருந்துவான் என்று நினைத்தது அனுமன் சீதா-ராமரின் காதலை அவ்வளவு உயர்வாக பார்த்ததால் தானே? அப்படி காதலை வளர்த்த அனுமாரின் வானர சேனை, காதலை எதிர்ப்பது அவ்வளவு உசிதமில்லை. அதீத அன்பும், காதலும் பக்தியின் இருவேறு தோற்றங்களே. கண்ணன் மேல் கொண்ட காதலுக்கு அடையாளம் ராதை. மால் மேல் கொண்ட காதலுக்கு அடையாளம் ஆண்டாள் கோதை. காதல் பருவத்தில் வந்த அபரீத உணர்வை பக்தி கலந்து பாடியவை தான் நாச்சியார் திருமொழி, சவுந்தரிய லகரி போன்ற பக்தி படைப்புகள். இளைமையை துறக்க முடியாமல் அதன் வேகத்தை பக்தியாக வடித்தார்கள். காரைக்கால் அம்மையாரும், ஔவையாரும் அதன் வேகத்தை உணர்ந்து மூப்பை வரமாக பெற்றார்கள். காதல் தவிர்க்க முடியாதது. ஆதலினால் காதல் செய்வீரே

 • Kumar - Chennai,இந்தியா

  காதலர் தினம் என்பதை கலாச்சார சீரழிவு தினம் என்று பெயரிடவேண்டும் அல்லது தவறொழுக்க தினம் என்று பெயரிடவேண்டும். பெற்றோர்கள் இதனை உற்சாகப்படுத்தாமல் தங்களது பிள்ளைகளை அறிவுறுத்தவேண்டும்.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  விஷ் யு ஆல் ஹாப்பி வாலெண்டின்ஸ் டே. ஐ லவ் யு சோ மச் தினமலர். அண்ட் மங்கி மவ்ஸ், சன்னி, ரீஸ்வரன், பையர் சிவா, அண்ணா ஹே ஊறா சுத்தா போரேன், ஜாலீ.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  பன்வாலன்டின்ஸ் டே அப்டீன்னு செலிப்ரட் பண்ணமான்னு சொல்லீ வச்சி போட்ருக்காங்கலமா. அங்கல்லம் லீவு கொடுக்குவங்களா. ஜாலியாட்டமா இருந்துவச்சிரும்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  காதலர்கள், காதலர் தினம் என்ற பெயரில் ரோட்டிலேயே எல்லா கருமத்தயும் செய்து தொலைக்காதவரை இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. மேற்கத்திய பாணியை கடைபிடிக்கிறேன்னு சொல்லி கேனத்தனமான நடந்து கொள்வதுதான் பிரச்சினையே. சிலதெல்லாம் வெளிநாட்டுக்கு சரி ஆகும். நம்ம ஊருக்கு ஒத்து வராது. ஆகையால் கண்ணியமாக நடந்துகொண்டால் ஓகே. இல்லைனா நாறி போக வேண்டியது தான் நாறி.

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  கொண்டாடினால் தான் காதல்.... இல்லையேல் காதல் இல்லையா...??? பண்டைய காலத்திலிருந்தே காதலும், வீரமும் செறிந்தது தானே நம் தமிழர் வாழ்க்கை....??? அப்போதெல்லாம் வேலண்டைன் என்ற பாதிரியார் பிறக்கவுமில்லை... கொண்டாட்டமும் இல்லை....

 • Power Punch - nagarkoil,இந்தியா

  Divorce பண்ணலாமா??

 • Power Punch - nagarkoil,இந்தியா

  இந்த கும்பல் எல்லாம் காதல் திருமணம் செய்தவர்களாக தான் இருப்பார்கள்

 • Madhav - Chennai,இந்தியா

  கஜுராகோ கோயில் நமது கலாச்சாரத்தில் உள்ளது. நமது இலக்கியங்களின் படி காதல் காமம் எல்லாம் வேறில்லை இரண்டும் ஓன்று தான். அறத்துப்பாலுடன் இன்பத்துப்பாலும் இணைவதே இல்லறம் அதுவே நல்லறம். பிறன் மனை விழைதல் ஆண்மைக்கு/பெண்மைக்கு இழுக்கு. யோக தினம் மேற்கொண்டு காதலர் தினம் வரை,ஒரு நாள் கூத்துக்கள் அனைத்துமே ஊரை கொள்ளையடிக்க கண்டு பிடிக்கப் பட்டவை.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  காதல் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக நமது இலக்கியங்களில் இருக்கிறது, எங்கேயும் இளைஞர்கள் ஆபாசமாக நடந்துகொள்ளாமல் இருந்தால் சரி, ஆனால் எல்லா பார்க், பொது இடங்களில் மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் காதலர் தினம் என்று அல்ல, எல்லா தினங்களிலும் ஒன்றாய் உருண்டு புரண்டு ஒன்றிப்போய் கிடக்கிறார்கள்,

 • susainathan -

  Valentines Day, also called Saint Valentines Day or the Feast of Saint Valentine,[1] is celebrated annually on February 14. Originating as a Western Christian feast dayhonoring one or two early saints named Valentinus, Valentines Day is recognized as a significant cultural, religious, and commercial celebration of romance in many regions around the world, although it is not a public holiday in any country. Valentines Day 1909 Valentines card Also calledSaint Valentines Day or the Feast of Saint ValentineObserved byPeople in many countries Anglican Communion(see calendar) Lutheran Church (see calendar)TypeChristian, cultural, commercialSignificanceFeast day of Saint Valentine the celebration of loveand affectionObservancesSending greeting cards and gifts, dating, church servicesDateFebruary 14 (fixed by the Western Christian Church)July 6 (fixed by the Eastern Orthodox Church)July 30 (fixed by the Eastern Orthodox Church)Frequencyannual Martyrdom stories associated with various Valentines connected to February 14 are presented in martyrologies,[2] including a written account of Saint Valentine of Romes imprisonment for performing weddings for soldiers, who were forbidden to marry, and for ministering to Christians persecuted under the Roman Empire.[3] According to legend, during his imprisonment Saint Valentine restored sight to the blind daughter of his judge,[4] and before his execution he wrote her a letter signed "Your Valentine" as a farewell.[5] The day first became associated with romantic love within the circle of Geoffrey Chaucer in the 14th century, when the tradition of courtly love flourished. In 18th-century England, it evolved into an occasion in which lovers expressed their love for each other by presenting flowers, offering confectionery, and sending greeting cards(known as "valentines"). In Europe, Saint Valentines Keys are given to lovers "as a romantic symbol and an invitation to unlock the giver’s heart", as well as to children, in order to ward off epilepsy (called Saint Valentines Malady).[6] Valentines Day symbols that are used today include the heart-shaped outline, doves, and the figure of the winged Cupid. Since the 19th century, handwritten valentines have given way to mass-produced greeting cards.[7] Saint Valentines Day is an official feast day in the Anglican Communion[8] and the Lutheran Church.[9] Many parts of the Eastern Orthodox Church also celebrate Saint Valentines Day, albeit on July 6 and July 30, the former date in honor of the Roman presbyter Saint Valentine, and the latter date in honor of HieromartyrValentine, the Bishop of Interamna (modern Terni).[10] read about it without knowing anything dont talk about cheap for Valentines day give respect for the day

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  மாணவ மாணவிகள், இளைஞர்கள் எல்லாம் படிப்பு, வேலை, பணச்சிக்கல்களால் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். ஏதோ ஒருநாள் எதாவது பேரில் சந்தோஷமா இருக்கறதை ஏன் பெரிது படுத்த வேண்டும்.

 • Mano - Madurai,இந்தியா

  இவிங்க செப்புறது சரிங்கறேன், நான். காதலாவது கத்தரிக்காயாவது.

 • susainathan -

  most of Indian doesnt now true Valentines day festival in forighner country compared to India there have good celebration and they sharing love with there each and every relatives so must check it on Google not for clubbing drinking at all happened recently with Indian cultures of cinema dont know anything talking about forighner cultures here Valentines day mean only lovers getting remember there not like that check it in Wikipedia

 • chails ahamad - doha,கத்தார்

  காதலர் தினம் என்பது நம்முடைய கலாச்சாரத்துக்கு ஏற்புடையது இல்லை என்றாலும் , அதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது இருப்பதை ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோர்களும் கண்காணிப்பு மேற்கொள்வது அவசியமே

 • Arivu Nambi - madurai,இந்தியா

  காமத்தைத்தான், காம கவர்ச்சி ,அதாவது ஒரு பெண்ணை பார்த்து ஒரு ஆணுக்கு உண்டாகும் இயற்கையான கவர்ச்சியைத்தான் காதல் என்று சிறப்பு பெயர் கொடுத்து ,அதற்க்கு இளைஞர் மற்றும் இளைஞிகள் சீரழிவதை ஏற்கமுடியாது ..இப்படிப்பட்ட காம்தினம் இந்தியாவுக்கு தேவையா .

 • suresh - chennai,இந்தியா

  ஆங்கில புத்தாண்டு மற்றும் காதலர் தினங்கள்.... ஏன் தீபாவளியே தமிழர் கலாச்சாரத்திற்கு தேவை இல்லாத ஒன்று, ஆதி தமிழன் வணங்கியது, உணவு தந்த மண்ணையும், ஒளி தந்த சூரியனையும் தான், அதன் பின் அனைத்தும் படையெடுப்பில் புகுந்தவை., இருப்பினும் கடவுளை வணங்கினோம், ஏற்று கொண்டோம், ஆனால் இன்று நவீன உலகம் என்றாலும் இது போன்ற காதலர் தினம், ஆங்கில புத்தாண்டு என்பது தேவை இல்லாத ஒன்று, ஆனால் அதற்காக கலாச்சாரத்தை காக்கிறோம் என இது போன்று பேசுவதும், அதனை ஆதரிப்பதும், தாலிபான்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பது போல் ஆகிவிடும்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  காதலென்பதைத் தடை செய்யமுடியாது அது ஒரு தனிப்பட்ட உணர்ச்சியே .ஆனால் அதனை ஒரு குறிப்பிட்டதினத்துக்குள்ளே சுருக்கி அந்நிய கலாச்சாரப்படி பலர் காணக் கொண்டாடி பிறகு பிரேக் அப் என சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு விடுவது சகஜமாகி விட்டது. ஏதோ பொழுதுபோக்கு விளையாட்டாக வாழ்க்கையை நினைக்கும் மாணவர்களுக்கு சமூக அங்கீகாரம் தவறு .அதே நேரத்தில் இதனை மிகப்பெரிதாக்கி வன்முறையிலும் அடாவடித்தனத்திலும் இறங்குவது சரியில்லை . அடுத்த தலைமுறை தனக்களிக்கப்பட்ட கூடுதல் சுதந்திரத்தை சரியாகப் பயனபடுத்துவது அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது

 • AG Singh - Nellai-Town,இந்தியா

  சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? இது காவிகளில் அத்துமீறல். இதுதான் இந்து தீவிரவாதம்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  என்னெங்கடா இது காதலர் தெனம் கத்திரிக்கா தெனம்னுட்டு... ஒரு எழவும் வேணாம்டா... இந்தெ நார தெனங்கெல்லாம் வர்றத்துக்கு முன்னாடி இந்தியாவுல ஒரு பொக்கையும் லவ்வு கிவ்வு பண்ணலயா, கலியாணம் கெட்டலையா, புள்ள குட்டிதான் பெத்துக்கலயா ....?

 • suresh - chennai,இந்தியா

  காதலர் தினத்தை கொண்டாட கூடாது என உத்தரவு போட இவர்கள் யார் ? அரசு இயந்திரமா ? உச்சநீதிமன்ற நீதிபதிகளா ? காதலர்தினத்தை கொண்டாடும் ஜோடிகளின் தாய் தந்தையர்களா ? கூட பிறந்தவர்களா ? அல்லது மாமன் மச்சான்களா ? 18 வயதை கடந்தால், பெற்றோரே உத்தரவு போட முடியாது, இவர்கள் யார் உத்தரவு போட ? இது என்ன தாலிபான்களின் தேசமா ? இவர்களை சட்டம் ஒன்றும் செய்யாதா ? தட்டி கேட்காதா ? உத்தரவு போடுபவர்களை முட்டிக்கு முட்டி தட்டாதா ? கலாச்சார சீர்கேடு எனில், அதனை ஒவ்வொரு கால்லூரிகளின் முன்பு துண்டு பிரசுரம் கொடுத்து உங்கள கருத்தை எடுத்து சொல்லுங்கள், நமது ஜனநாயக தேசம் அளித்த சுதந்திரத்தை சட்டப்படி உங்கள் கருத்தை தெரிவியுங்கள், நமது கலாச்சாரத்தை அவர்கள் புரியும்படி எடுத்து சொல்லுங்கள், மிரட்டி திணிக்காதீர்கள், தடியோடு தாக்குவதும், மிரட்டுவதும் என்பது கூட்டம் இருக்கிறது என்ற முதுகெலும்பு இல்லாத கோழைத்தனம்.

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  வெளிநாட்டில் காதலர் தினம் கொண்டாடுகிறார்கள் என்றால் அங்கே, இலவச மருத்துவம், இலவச கல்வி, வேலை இல்லாவிட்டால் அரசு பண உதவி என்று சமூக பாதுகாப்பு உள்ளது......ஆனால் இந்தியாவிலோ அப்படி இல்லை, இங்கே 18 வயதில் காதல் கல்யாணம் செய்துவிட்டு சோத்துக்கு வழியில்லாமல் அந்த தொழில் செய்யும் கொடூர நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டதை நிறையவே பார்க்கிறோம். இவர்கள் காதலையும் காமத்தையும் பிரித்து பார்க்க தெரியாத வயதில் சிக்கி சீரழிவதை தடுக்கவேணும்

 • ஆப்பு -

  அனுமார் தான் பிரம்மச்சாரி....நாங்க இல்லையே...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement