Advertisement

ஆதார் பெயர் கூறி சலுகைகளை மறுக்காதீர்: மாநில அரசுகளுக்கு அறிவுரை

புதுடில்லி: ஆதார் கட்டாயம் எனக்கூறி, மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களை தடுக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.


இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: சிறந்த நிர்வாகத்திற்கும், அரசுக்கு பணம் மிச்சப்படுத்துவதற்கும் ஆதார் பெரிய திட்டம். அதேநேரத்தில், ஆதாருக்கு என சட்டம் உள்ளது. இதன்படி, ஆதார் கட்டாயம் எனக்கூறி, அரசின் நலத்திட்ட பலன்கள் மக்களுக்கு செல்வதை மாநில அரசுகள் தடுக்கக்கூடாது.

ஆதார் இல்லாத நபரிடம், ஆதார் பெற வேண்டும் எனக்கூறிவிட்டு, வேறொரு சான்று மூலம் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். ரேசன் கடைகளில் ஆதார் காரணம் கூறி பொருட்கள் மறுக்கப்படுகிறது. இது நடக்கக்கூடாது. ஏழைகளுக்கு ரேசன் பொருள் கிடைப்பதை தடுக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (27)

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  balakrishnan - coimbatore,இந்தியா 13-பிப்-2018 20:25 நலத்திட்டங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களிடம் ஆதார் இருந்தால் தான் வைத்தியம் பார்ப்போம் என்று கட்டுப்பாடு போடக்கூடாது என்பதை வலியுறுத்துங்கள், ...... Athaithaanya amaichar solliyirukaaru

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  123@

 • V Gopalan - Bangalore ,இந்தியா

  This kind of confusion d by BJP Govt only. The same BJP prior to come into power they said we will discord Aadhaar but now they bring proposal to produce Aadhaar for using the Public Toilet. Recently, in one of the Hospital refused to give treatment for not producing Aadhaar and finally the mother gave a birth. By suspending the Hospital is of not excuse but because of the Rulers audacity to go in after Aadhaar. And now to link with Driving Licence, so again the common man has to run after the RTO Office. Really BJP showed more ore less Dictatorship less regard to common man's problem. Any way, the golden chance given to them could not be utilised and giving red carpet to the dynasty rule. This showed that the BJP is absolutely failure to control motor mouth, introducing de-monitisation, GST et all None of the Millionairs stood on the Q for exchanging the notes only common man has to struggle to exchange his own hard earned money. BJP will reap good dividend during the next general elections 2019, of course will be in two digits may be 10 or equivalent to now the Congress.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  நலத்திட்டங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களிடம் ஆதார் இருந்தால் தான் வைத்தியம் பார்ப்போம் என்று கட்டுப்பாடு போடக்கூடாது என்பதை வலியுறுத்துங்கள்,

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அனைத்து துறைகளிலும், அனைத்து விசயங்களில், அனைத்து மக்களுக்கும் சேவைகள் நலதிட்டங்கள் வழங்கிடும் போது, முறையாகவும், ஃபோர்ஜரிகள் இல்லாமல், அந்த அந்த பயனாளிகளுக்கு, அந்த விசயங்கள் எந்த இடைஞ்சலும் இல்லாமல் சென்றடையவும், நிர்வாகங்களில் டிஜிட்டலைஸ் வழியாக பராமரித்து, மறு ஆய்வுகள் செய்யவும் இந்த ஆதார் அட்டை மிக உபயோகமாக, அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் பயன்படும்தான். இப்போ என்னா பிரச்சனைன்னா, அதார் அட்டையில் உள்ள குளறுபடிகளும், பிற துறையில் அதை இணைக்க, மக்கள் சந்திக்கும் கஷ்டங்ளுமே, ஆதார் மீது மக்களுக்கு ஓர் வித வெறுப்பு வருகிறது எனலாம், இது ஒரு வகை அதிர்ப்தியாகும். அடுத்து என்னான்னா, காலம் முழுக்க முறைகேடுகள் லஞ்சம் ஊழல்கள் அராஜகங்கள் போன்றவற்றின் மூலம் பணமும் சொத்துக்களும் சேர்த்து சுக போகமாக இருந்தவர்கள், இந்த ஆதார் அட்டையை முற்றிலும் ஒழித்துவிட, முன்னே கூறியபடி உள்ள, அந்த பொதுமக்களின் மனக்குறைகளை(ஆதாரால்) பெரிதுபடுத்தி, ஆளும் அரசுகளுக்கு எதிராக, ஓர் எதிர்ப்பு அலையையே உருவாக்கி வைத்திட்டார்கள் எனலாம். இனி வரும் வருடங்கள், பொது தேர்தல்கள் அல்லவா, நாட்டை ஆளுவோர்கள், இப்போ, ரொம்பவே யோசிக்கிறார்கள், ஆதார் கட்டாயத்தை தளர்த்துகிறார்கள் எனலாம்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஆதார் பேரை சொல்லி சலுகைகள் மறுப்பது மட்டுமல்ல, மருத்துவ சிகிச்சை கூட பிஜேபி ஆளும் மாநிலங்களில் மறுக்கப் படுவது தான் கொடுமை.

 • அப்பு -

  எல்லோருக்கும் ஆதார் கொடுக்காமல் என்ன ஆணி புடுங்கறீங்க? ரேசன் கடைக்கு ஒருத்தர் ஆதார் இல்லாம போனா உடனே உக்காத்தி வெச்சு ஆதார் குடுத்துற வேண்டியது தானே?

 • அப்பு -

  அந்தர் பல்டி அடித்தே பழக்கப் பட்டு விட்டார்கள்.. .எலக்‌ஷன் பயம் வந்துருச்சோ என்னவோ?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சில விஷயங்களில் இதுசரிதான் குக போன்ற பல விஷயங்களில் மென்மையானபோக்கு நாட்டுக்கு கெடுதலாய் முடிந்ததுபோல சில விஷயங்களிலாவது கட்டாயப்படுத்தினால் தான் ஆதார் கார்ட் வாங்கவே முயல்வர். ஒரு கட்டாயமுமில்லாவிட்டால் ஏமாற்றுப்பேர்வழிகளுக்குத்தான் ஆதாயம் . ஆனால் சட்டப்படி (ஒரே ஒரு ஒரிஜினல் மட்டுமே என்பதற்கு ) ஆதார் என்பது ஒரு எண் மட்டுமே .ஆதார் கார்டு பாஸ்போர்ட் அல்லது ரேஷன் அட்டை போன்றதல்ல

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சில ஜென்மங்கள் ஆர்வக்கோளாறால் நல்லபெயரெடுக்க இதுபோல செய்யும் .மற்றவை தாமதிக்கவும் அதனைமூலம் அலைக்கழித்து லஞ்சம்வாங்கவும் இதனை செய்யும் . பழியை எப்போதுமே மத்திய அரசின்மீது போடுவது எளிது

 • makkal neethi - sel,இந்தியா

  தொட்டிலை கிள்ளிவிட்டு பிள்ளையை ஆட்டுவதற்கு பெயரே நயவஞ்சகம்

 • B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா

  அந்த ஆதார் எழவை எடுத்து அரசு கேட்கும் இடங்களில் கொடுப்பதற்கு நம் மக்களுக்கு ஏன் வலிக்கிறது... உண்மையிலேயே திருட்டுத்தனம் செய்ய நினைப்போருக்குத்தான் ஆதார் என்ற சொல்லை கேட்டாலே மிகவும் எரிச்சலாக வருகிறது..

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  அனைத்திற்கும் ஆதார் என அறிவித்துவிட்டு இப்படி கேம் ஆட பிஜேபி யால் மட்டுமே முடியும்...

 • Lourdu Irudayaraj - coimbatore,இந்தியா

  தற்போது சில வங்கிகளில் ஆதார் அட்டையை கொடுத்தால் போதாது ,நேரில் வந்து கைரேகை வைத்தால்தான் அப்டேட் ஆகும் என்று கூறுகிறார்கள் .ஒய்வு ஊதியம் வங்கிகளின் மூலமாக எங்களை போன்ற வயதானவர்கள் நேரில் வந்து மீண்டும் கைரேகை எப்படி வைப்பது .முதலில் ஆதார் கொடுக்கும் போதே கைரேகை ,கண்விழித்திறன் ஆகியவை எடுத்துதான் ஆதார் கொடுக்கிறார்கள் .பிறகு மீண்டும் எதற்கு கேட்கிறார்கள் என்று தெரியவில்லை .பொதுமக்களை எவ்வளவு அலைக்கழிக்கவேண்டுமோ அவ்வளவு அலைக்கழிக்கிறார்கள்..கேட்டல் RBI ரூல்ஸ் என்கிறாரகள் இதையெல்லாம் மாட்றவேண்டும்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  எல்லாம் கந்தர்கோலம்...இப்போ வாவது புத்தியில் பட்டதே,,..

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  முதல் ல இந்த றிவுரையை பாஜக ஆளும் மாநில முதல்வர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆதார் இல்லாததால் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கமுடியாது என்று மறுத்த செய்திகள் நாள்தோறும் வெளியாகின்றன, அதுவும் பாஜக ஆதரவு நாளிதழில். இறந்தவர் சடலத்தை எடுத்து செல்ல ஆதார் இல்லாததால் அமரர் ஊர்தி மறுக்கப்படுகிறது உபியில். தமிழ்நாட்டிலோ மேற்குவங்கத்திலோ கேரளத்திலோ கர்நாடகாவிலோ இப்படி ஆதார் இல்லாததால் இந்த வசதி கிடையாது என்பது போன்ற சம்பவம் நடைபெற்றதாக செய்திகளோ இல்லை.

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  இதெல்லா மாநில அரசுகளுக்கு குறிப்பாக அதிமுகவிற்கு செவுட்ராயன் காதுல ஊதுன வலம்புரி சங்கு மாறிதா நைனா

 • Selvakumar - Trichy,இந்தியா

  என் பாட்டன் அரசாண்ட போது சலுகைகளை உரிமையாக்கி விட்டு போனான்.இன்று நீங்கள் எங்கள் உரிமைகளை சலுகைகளாக்கி விட்டு போகிறீர்கள் . காரணம் சலுகைகள் நிறுத்தபடலாம் உரிமைகள் அழிக்க கூட முடியாது.

 • s.f.edison - chennai,இந்தியா

  இதனை எத்தனை தடவை சொன்னாலும் BJP ஆளும் மாநிலங்களில் தானே இந்த பிரச்னை. BJP எப்போது கோர்ட்டை மதித்தது

 • Selvakumar - Trichy,இந்தியா

  புள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டினால் எப்படி சார். பேங்க் ல ஆதார் இணைக்கனும் லைசன்ஸ்ல ஆதார் இணைக்கனும் pancard லயும் இணைக்கனும். இப்படி இந்திய பாமர மக்களிடம் இருந்து எப்படியல்லாம் பணத்தை tax என்ற அடிப்படையில் கொள்ளையடிக்க முடியுமோ எல்லா வகையிலும் ஆதாரை இணைக்க சொல்லி விட்டீர்கள். மாநில அரசு வழங்கும் மக்களின் உரிமைகளை சலுகைகள் என்று சொல்லுவது தவறு.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///ஆதார் பெயர் கூறி சலுகைகளை மறுக்காதீர்: மாநில அரசுகளுக்கு அறிவுரை///ஆரம்பித்து வைத்தவர்கள், இவர்கள் தான், இப்போ சும்மா பாவலா காட்டுகிறார்கள். மக்களிடம் நல்ல பேர் வாங்க, வரப்போகும் தேர்தலில் வாக்கு கேட்டு வீதிக்கு வரவேண்டுமே, இதுவரை மாடமாளிகைகளில், உப்பரிகைகளில் தாங்கியாகிவிட்டது, இனிமேலும் அப்படியே இருக்க முடியுமா? மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்குமே என்று கதை விட ஆரம்பித்திருக்கிறார்கள், இனிமேலும் நிறைய கதை வரும். காதை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள், கதைகள் கேட்கலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement