Advertisement

முதல்வருடன் ஸ்டாலின் சந்திப்பு; 27 கோரிக்கைகள் வைத்தார்

சென்னை: முதல்வர் பழனிசாமியை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து போக்குவரத்து கழகத்தை சீர் செய்வது குறித்த 27 பரிந்துரைகளை வழங்கினார்.

சந்திப்புதமிழகத்தில் கடந்த மாதம் திடீரென பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பஸ் கட்டண உயர்வு குறித்து ஆய்வு நடத்திட தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்ட குழு தனதுஅறிக்கையை ஸ்டாலினிடம் சமர்பித்தது. இதனை முதல்வர் பழனிசாமியிடம் ஒப்படைக்க திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேரம் கேட்கப்பட்டது.
நேரம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து இன்று தலைமை செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் முதல்வர் பழனிசாமியை ஸ்டாலின் சந்தித்து, போக்குவரத்து கழகத்தை சீர் செய்வது குறித்த திமுகவின் அறிக்கையை வழங்கினார்.27 பரிந்துரைகள்
பின்னர் நிருபர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது: போக்குவரத்து கழகத்தை எப்படி சீரமைப்பது குறித்து ஆராய திமுக சார்பில் குழு அமைப்பட்ட குழு 27 பரிந்துரை வழங்கியுள்ளது. இதன்படி செயல்பட்டால், மக்கள் தலையில் பஸ் கட்டணத்தை சுமத்த வேண்டிய அவசியமில்லை.

இந்த அறிக்கையின்படி,
போக்குவரத்து கழகத்தை மக்களின் சேவையாக கருதி நஷ்டத்தை அரசே ஏற்க வேண்டும்.
டீசல் மீதான கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரிகளை ரத்து செய்ய வேண்டும். ஒரே சீரான 10 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்க வேண்டும்.
டிரைவர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு நல்லிணக்க கூட்டம் நடத்த வேண்டும்.
பஸ்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளோம்


அனைத்து கட்சி கூட்டம்முதல்வருடனான சந்திப்பின் போது, துணை முதல்வர், போக்குவரத்து அமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் இருந்தனர். எங்களது கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளோம். அரசு தரப்பில் எந்த உறுதியும் அளிக்கவில்லை. பார்ப்போம் என கூறியுள்ளனர். அரசு நிர்வாகம் செயல்படாத நிலையில் தான் எதிர்க்கட்சியாக நாங்கள் யோசனை கூறியுள்ளோம்
எங்கள் பரிந்துரைகளை செயல்படுத்தனால், வரவேற்போம். இல்லாதபட்சத்தில், தேவைப்பட்டால், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்வோம். பொருட்கள் கட்டுமானத்தில் கமிஷன் வாங்குவதை கட்டுபடுத்தினால் கடனை குறைக்க முடியும்.


விளக்கம் வேண்டும்அவர்கள் மீதான தவறுகளை மறைக்க, அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இது குறித்து ஏற்கனவே விளக்கமளித்துள்ளோம். சட்டசபையில், ஜெயலலிதா படத்தில் எந்த அடிப்படையில் திறக்கப்பட்டது என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும். ஜெயலலிதா பட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர்,கவர்னர் அழைத்தும் வரவில்லை ஏன் வரிவில்லை என்பது குறித்து விளகக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (48)

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  கட்டண உயர்வை ஒரே அடியாக உயர்த்தாமல் ஆண்டு தோறும் பட்ஜெட் போடும் காலத்தில் அரசு போக்குவரத்து துறை பட்ஜெட் போட்டு அதில் ஏற்படும் பற்றாக்குறையை சரிசெய்ய பெர்மிட் வரி அல்லது பொது மான்யம் வழங்கலாம்... ஊழலை கட்டுப்படுத்த வேண்டும். லாபம் இல்ல வழித்தடங்களை ஏலம் விடலாம் .. அதிகப்படி ஊழியர்களை vrs மூலம் குறைக்கலாம் ..

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஸ்டாலின்: "எங்கள் கட்சியின் கொள்கையும், உங்கள் கட்சியின் கொள்கையும் ஓரளவு ஒன்றுதான். ஒரே ஒரு வித்தியாசம், நீங்கள் பதவியில் இருக்கும் பொழுது எங்களால் கொள்ளையடிக்க முடியவில்லை. அதற்க்கு தக்க ஏற்பாடு செய்தால், உங்கள் பதவி காலம் முடியும் வரையிலும் நாங்கள் எந்த 'கரைச்சலும்' செய்யாமல் உங்களுக்கு மறைமுக ஆதரவு தருவோம்".

 • madhavan rajan - trichy,இந்தியா

  இவருடைய காட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் தொழிற்சங்கம் என்ற போர்வையில் வேலையே செய்யாமல் சம்பளம் மற்றும் படிகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்களே அந்த நபர்களுக்கெல்லாம் பனி அளித்து ஒழுங்காக எட்டு மணிநேரம் வேலை செய்யச் சொல்லலாம் என்று ஆலோசனை அளித்துள்ளாரா? அது செய்தாலே பல கோடி பணம் மிச்சமாகும்.

 • Sivagiri - chennai,இந்தியா

  அடடா . . . இந்த அறிவுரைகள் எல்லாம் கடந்த காலங்களில் இவரது தலைவரும் கூட்டாளிகளும் செய்ய தவறிய மாபெரும் சாதனைகள் . . . (பதவி) போதை வந்த போது புத்தியில்லையே . . . புத்தி வந்த பொது பதவி இல்லையே . ..

 • ManiS -

  Ivarum balti sambbar lam adichu paakarar. Ennna panradhu panninadhu konjama? makka marakka maatengudhuga. Ini marandhaalum punniyam illa.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இது ஒரு சிறந்த அணுகுமுறை என்று தான் தோன்றுகிறது, அதேபோல பா.மா.கா வருட வருடம் மாதிரி பட்ஜெட் போடுவார்கள், விவசாயத்திற்கு என்று சில விஷயங்களையும் கூறி வருகிறார்கள், அரசு நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும், அது நல்லது

 • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

  கொள்ளை கொள்ளை யாய் அடித்தது நீங்களும் தான் இன்று ஆட்சியில் அவர்கள் இருக்கிறார்கள் இல்லையென்றால் மக்களின் வாழ்க்கைத்தரம் கூடிவிட்டது வாங்கும் திறன் அதிகரித்து விட்டது எனவும்.டீசல் விலை உயர்வால் தவிர்க்க முடியாது.எனவும் எதிர் கட்சிகள் மக்களை குழப்புகின்றன எனவும் கருத்து சொல்லியிருப்பார் ஆட்சியில் இருந்திருந்தால். இனிமேல் ஆட்சியில் அமர போவதில்லை அணைத்து விலைவாசி உயர்வுக்கும் அடிப்படை காரணமே இந்த திராவிடக்கட்சிகள்தான் அதிலும் இந்த திமுக மாதிரி கட்சி இந்திய முழுவதும் இருந்திருந்தால் கருணாநிதிக்கு மாநிலத்திற்கு ஒரு மனைவி கிடைத்திருக்கும் ஆனால் மக்களுக்கு நிம்மதி கிடைக்காது மக்களை இலவசம் போதை உண்டாக்கி போதையை விட்டு வராமல் தடுத்ததுடன் ஏழ்மையாக்கி இதனை பயன் படுத்தி கொள்ளை அடிக்க குடும்பம் முழுவதும் சுரண்டுவதற்கு நம் மக்களே காரமானவர்கள் பின்னுக்கும் எத்தனை காலம் தான் தமிழக மக்களை ஏமற்றவர்களோ மக்களும் எத்தனை காலம் தான் ஏமாறுவார்களோ.ஆண்டவனுக்கே வெளிச்சம்.

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  ஹி ஹி என் அன்பு மகன் உயநிதி ஒரு பேருந்து நிறுவனம் அமைக்க போகிறார் RTO தொல்லை இல்லாமல் நீங்கள் தான் பார்த்துக்கொள்ளவேண்டும் மற்றபடி வேறு ஒன்றும் இல்லை ஹி ஹி உங்களுக்கு வர வேண்டிய கட்டிங்/கமிஷன் சரியாக வந்து சேரும் பன்னீர்செல்வத்தை நீங்கள் கழட்டி விட்டால் கழகம் பார்த்து கொள்ளும் உங்கள் ஐந்து ஆண்டு ஆட்சியை ஹி ஹி

 • Arivu Nambi - madurai,இந்தியா

  எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சியுடன் சேர்ந்து செயல் படுவதுதான் மக்களுக்கு பயன் கிடைக்க வழிவகுக்கும் ,ஆனால் இங்கே முட்டாள்களின் கருத்துகள் நிறைய உள்ளதை பார்த்தால் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களை எதிரிகளாக நினைக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது .

 • KGSriraman -

  ஆக்க பூர்வமான. எதிர்க்கட்சி யாக ,, தி.மு.க., செயல் பட்டுள்ளது ஆம். செயல் தலைவர் அல்லவா?? செயல்படுகிறார்!!! இப்படி, திட்டமிட்டு. செயல் பட்டு இருந்தால்,,, தமிழகத்தில் தி.மு.க. தொடர்ந்து. ஆட்சி புரிந்து இருக்கும்!!!என்ன செய்வது?? ஆளும் கட்சியாக, இருக்கும் போது. மக்கள் நலன்,,,நாட்டு நலன் என அக்கறை கொண்டு. செயல்படாமல்,, தி. மு.க. ஆட்சியை பறி கொடுத்து விட்டது..கடந்த தேர்தலில். நமக்கு நாமே,, என செயல் தலைவர்,,,,கஷ்ட்டப்பட்டு,,,உழைத்தார்,, ஓரளவு. நல்ல வெற்றியை கண்டார்,,, இப்படி. மக்கள் நலம் சார்ந்த விஷயங்களை,,,கையில் எடுத்து,,,,,செயல் படவேண்டும்.,,கூடவே இனி திராவிடம். ஆரியம்,, பார்ப்பனர்,,,கடவுள் இல்லை,,, பகுத்தறிவு. என பேசும். வழக்கத்தை கைவிட்டு,, அப்படி பேசுபவர்களை,,,தன் பக்கத்தில் வைத்து கொள்ளாமல் செயல் தலைவர் செயல் பட வேண்டும்,,

 • sankar - trichy,இந்தியா

  முதல்வர் சீட்டின் அருகில் சென்று விட்டார் ஸ்டாலின் என்று செய்தி போடுங்க ஐயாத்துரை சந்தோச படட்டும்

 • C.Elumalai - Chennai,இந்தியா

  செயல்,செயல்படாதஅரசு என்கிறார், அப்போ எதற்கு சந்திப்பு.? ஒரு நாளைக்காவது முதல்வர், நாற்காலியில் அமரவேண்டும். அதற்கு நாற்காலியை கடன் கேட்டிருப்பார். இதற்குதானே முதலவர் உடன் சந்திப்பு.

 • Magath - Chennai,இந்தியா

  தனிமையில் முதல்வர் சந்தித்தால் கட்டிங் கேட்டுவிடுவார் என்று பயந்துதான் அவர் கூட்டமாக சந்தித்து விட்டார். இந்த ஆய்வு அறிக்கையை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். ஒருவேளை ஆட்சி கவிழ்ந்து வேறு ஏதாவது கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்தால் இதையே கொண்டு வந்து விடலாம்.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  28 வது கோரிக்கையாக கடந்த 3 மாதங்களாக எனக்கு வரவேண்டிய பங்கு வரவில்லை என்று கோரிக்கை விடுத்தாராம் நமது பந்தா தலைவர்.

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  சட்டசபையில் நீர் உட்பட யார் குற்றவாளி இல்லை தள

 • Anton - Sydney,ஆஸ்திரேலியா

  காமெடி பீஸ், அம்மா இருந்துந்தால் இதை கொடுத்திருப்பாரா? அம்மாவுக்கு முன்னால் நிட்பதிட்கு ஒரு தைரியம் வேணும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இதைவிட தனக்கு முதல்வர் பதவியையே கேட்டு இருக்கலாம்..

 • KUMAR. S - GUJARAT ,இந்தியா

  போக்குவரத்து கழகங்களில் 46 யூனியன்கள் எதற்கு? யூனியன்களால் பெருத்த நஷ்டமென்று ஏற்கனவே பத்திரிகைகள் சுட்டி காட்டி இருக்கின்றன. யாரும் சரியாக பணி செய்வதில்லை.. அண்ணா பெயரில் ஒரு யூனியன். எம் .ஜி.யார் பெயரில் யூனியன். அம்மா பேரவை,..தி மு க பெயரில் யூனியன்.... ஸ்டாலின் பெயரில் யூனியன்...மற்றுமுள்ள கட்சிகள் பெயரில் எல்லாம் யூனியன்கள்... எங்கிருந்து உருப்படும்...யூனியங்களை அகற்ற வேண்டுமென்று எந்த கட்சியும் சொல்லாது.. .சொல்லவும் மாட்டார்கள்... கம்யூனிஸ்ட் உட்பட... கட்சி சார்பற்று ஒன்று இரண்டு யூனியன்கள் போதாதா...?

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  உருண்டு புரண்டு மக்களை சந்தித்து வாக்குகள் வாங்கிய ஒரு தலைவர் ஸ்டாலின். ஊழல் பேரரசி ஜெயா காலில் விழுந்து அப்புறம் ஊழல் தோழி சசி காலில் வீழ்ந்து , கவ்வி கொடுக்க அமரத்தப்பட்ட ஒருவர், ஆட்சியில் அ ஆ இ ஈ தெரியாத, விபத்தில் அரியணை ஏறி அமர்ந்துள்ள கேவலம் பழனியிடம் புகார் மனு கொடுக்கும் அவலம் தமிழ்கத்தில் நடக்குது . இதுதான் ஜனநாயகத்தின் ஒரு கடுமையான பக்கம் . MLA களை 3 கிலோ தங்கம் 3 கோடி கொடுத்தது வாங்கி மோடியிடம் கூஜா தூக்கினால் ஒரு மாநிலத்தை அழித்திட முடியும் என்பதற்கு பழனி பன்னீர் தெர்மாக்கூல் கூட்டம் முன் உதாரணம் .

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம். நீங்க ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீங்க?

 • Urimai Kural - CHENNAI,இந்தியா

  உனது கட்சி மட்டும் தமிழ்நாட்டில் இல்லை என்றால் 27 கோரிக்கைகள் தேவையே இருந்திருக்காது

 • Suresh - Narita,ஜப்பான்

  சந்தித்து...... இத்தனை வருடங்களாக போக்குவரத்து துறையில் கொள்ளையடித்ததை இரு கழகங்களும் திருப்பி கொடுத்து மக்களை சந்தோஷ வெள்ளத்தில் தள்ளும்னு பார்த்தா.....அதற்க்குள் கனவு கலைந்து விட்டது

 • narayanan iyer - chennai,இந்தியா

  Thanks for both Cm and Stalin to met in person. Stalin should have spoke to the labour union and convince them at the time of strike knowing the problem of financial crises. Jayalalitha photo was installed because she was ruled the Tamilnadu and had third party MP majority in India. Lot of plans introduced to public who was called by them as MOTHER. He would have left with humanity ground. I would like ask question ,is he wants to say that as all MLA are clear hand? No not even single MLA is clean hand. All are corrupted person but the court has not d, because the cases are not have been booked. That 's all. If President, Prime minister or Governor attended the function ,will you or your letter pad parties keep quite? Therefore you are playing some cards to keep your party in tact.

 • G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா

  தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று முதல்வர் பழனிசாமி அவர்களை சந்தித்தவுடன். 1.எண்ணெய் விலையை மத்திய அரசு பாதியாக குறைத்து விடும் 2.பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை தழிழக அரசு பாதியாக குறைத்துவிடும். 3.போக்கு வரத்து ஊழியர்களின் மாதச்சம்பளம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிடும் 4. மொத்ததில் மக்களுக்கு அனைத்து பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கும் என இன்று மாலை முதல் மக்கள் எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  முதல்வரை ஸ்டாலின் முறைத்து பார்த்திருப்பார் , ஐந்துமுறை , 18 வருடம் முதல்வராக இருந்தவர் என் தந்தை , பிறந்ததில் இருந்து அரசியலில் இருக்கிறேன் , ஆனாலும் எனக்கு முன்னர் இவர் முதல்வராக நிற்கிறார். இவரிடம் நான் மனுகொடுக்க வேண்டியுள்ளது. என்ன கொடுமை இது.

 • மூக்குநோண்டி -

  ஏரியா பிரிச்சுருப்பாங்களோ!!

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  வேறொன்றும் இல்லை போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த சில திட்டங்களை அதிமுக போட்டிருக்கும் அதை மோப்பம் பிடித்த இவர்கள் உடனே ஒரு குழு , அதன் பரிந்துரை என்ற பெயரில் கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்துவிட்டார்கள். நாளை நல்லது நடந்தால் எந்த கஷ்டமும் படாமல் அதற்கு நாங்கள்தான் காரணம் என்று தம்பட்டம் அடிக்கலாம்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  Muthalvar looks like pacha pillai

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  நஷ்டத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை விட நல்ல யோசனை ஒன்று உள்ளது. மக்கள் எல்லோரும் பஸ்ஸில் இலவசப் பயணம் செய்யலாம்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Mr.staline played his role as a constructive opposition leader by presenting suggesting some useful measures to the CM for the improvement of the Arasu Pokkuvaraththu Kazhagam in person as the present EPS government has given a lot of problem to the public by increasing the bus fares at one go.Now the ball is in EPS government's court whether to divert the ball towards goal post or outside the ground.

 • Venkat Iyer - Mumbai,இந்தியா

  "தங்கள் ஆட்சிக்கு காலத்தில் செழிப்புடன் இருந்த போக்குவரத்து துறையை சீரழித்து விட்டது அதிமுக அரசு " என்று செயல் சொல்லாதவரை நன்று. நாலு நாட்கள் முன்பு அவசர வேலையாக திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை வரை பஸ்-இல் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆலங்குளம் தாண்டி நல்ல மழை.ஒருவர் கூட சீட்டில் அமர முடியாதபடி முழு பஸ்-ம் ஒழுகல்.நல்ல கட்டமைப்பு,சாலை வசதிகள் ஒழுங்கு இருந்தால் கட்டணம் ஏற்றும் போது மக்களும் சிறிது முகம் தூக்காமல் இருப்பார்கள்.இந்த பயணம் செய்வதற்கு இலவசமாக கூட ஒருத்தனும் ஏறமாட்டான்.இந்த கேவலத்துக்கு ஆளும் கட்சி எதிர் கட்சி அடிதடி வேறு.

 • குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா

  படித்துறை பாண்டியும் குவாட்டர் குட்டி கோயிந்தும் டீக்கடை பெஞ்சில் பேசினால் என்ன பலனோ அதுவே இவர்கள் சந்தித்தாலும்

 • கல்யாணராமன் - Chennai,இந்தியா

  27 பரிந்துரைக்கு பதில் நான் கூறும் ஒரே ஒரு பரிந்துரை பேருந்தை தனியார்மயம் ஆக்கவும். எல்லாம் சரியாகிவிடும்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு///முதலில் முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்துக்கள் இது நல்ல நடைமுறை, ஒரு எதிர்க்கட்சி தலைவர் சந்திக்க வேண்டும் என்று சொல்லும்போது, அதுவும் அரசின் நடைமுறைப்பற்றி, அதுவும் admin பற்றி பேசவேண்டும் அதில் சில பரிந்துரைகள் என்று சொல்லும்போது ஜெயா இருந்திருந்தால் இது நடைமுறை சாத்தியமா என்று பார்க்கவேண்டும், சந்திக்கவே முடியாத சூழ்நிலையில் சந்தித்த அவர்களின் பரிந்துரைகளை வாங்கி கொள்வதென்பது மிக நல்ல உதாரணம், இது நடைமுறைக்கு வரும் என்று சொல்லவில்லை, வராமலும் போகலாம், வரவும் செய்யலாம், ஆனால் இந்த சந்திப்பே நலன் விஷயம் இருவருக்கும் வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகள்.. இது தொடர்ந்தால் நல்ல ஆரோக்கியமான விஷயமே.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  அவங்கமாதிரி இவங்களும் பொட்டூ எல்லாம் வசீங்களாமில்ல. பெரிய நெத்தி இற்கு. மொட்டையா இர்க்ககூடுது. வெள்ளை மூஞ்சிகீ சாண்டல் கும்கும் பொட்டூ வைக்கோணும்.

 • G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா

  தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று முதல்வர் பழனிசாமி அவர்களை சந்தித்தவுடன். 1.எண்ணெய் விலையை மத்திய அரசு பாதியாக குறைத்து விடும் 2.பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை தழிழக அரசு பாதியாக குறைத்துவிடும். 3.போக்கு வரத்து ஊழியர்களின் மாதச்சம்பளம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிடும் 4. மொத்ததில் மக்களுக்கு அனைத்து பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கும் என இன்று மாலை முதல் மக்கள் எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement