Advertisement

ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதியாக அறிவித்தது பாக்.,

இஸ்லாமாபாத்: ஐ.நா.,வின் பயங்கரவாத பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதியாக அறிவிக்கும் சட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் கையெழுத்திட்டார்.


மஹாராஷ்டிர தலைநகர், மும்பையில், 2008 நவம்பரில் நடந்த, தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில், ஏராளமானோர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதல்களின் பின்னணியில், பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜமாத் - உத் - தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீத் மூளையாக செயல்பட்டான். இவனை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., மற்றும் அமெரிக்கா அறிவித்துள்ளன. அங்கு அவன் அரசியல் கட்சி துவக்கி வரும் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறான்.


இந்நிலையில், ஐ.நா.,வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தானில் தடை செய்யும் அவசர சட்டத்தில் அந்நாட்டு அதிபர் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு மைய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.


இந்த பட்டியலில் ஹபீஸ் சயீத் மற்றும் அவனது ஜமாத் - உத் - தவா அமைப்பும் மற்றும் சில பயங்கரவாதிகளின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த சட்டத்தின்படி, பட்டியலில் இடம்பெற்றுள்ள பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களது அலுவலகங்கள், மற்றும் வங்கி கணக்குகளை முடக்கி வைக்கவும் முடியும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (78)

 • rajan. - kerala,இந்தியா

  NOW CHINA LASTS ITS FACE IN U.N FOR THIS HABIES CASE. THIS IS THE TIME FOR INDIA TO MOOT AGINST HABIES IN U.N

 • Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ

  இருபுறமும் கடுமையான விமரிசனம் செய்வோர் உள்ளனர். மோடி இந்தியப் பிரதமர் என்ற முறையில் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர். ஆனால் சில இஸ்லாமிய பதிவாளர்கள் மிகவும் தரம் தாழ்ந்து விமரிசிக்கின்றனர். இது தேசப் பற்றுள்ள யாராலும் பொருத்துக்கொள்ள இயலாது. அதன் விளைவாக பொதுவில் வசைகின்றனர். அனைவருக்கும் பொருமையும் கட்டுப்பாடும் வேண்டும்.

 • அப்பு -

  அடுத்த வேளை உணவு இல்லேன்னா இது மாதிரிதான் செய்யணும்....

 • பிரிதிவிராஜ் - காஞ்சிபுரம் ,இந்தியா

  அவன் பயங்கரவாதியா ? எங்களுக்கு தெரியாது - இது தான் பாகிஸ்தானின் தேசிய பதில்

 • Indhuindian - Chennai,இந்தியா

  நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அக்ஷர மாதிரி அஷு இப்படியே அமெரிக்கக்காரனை ஏமாத்திடலாம் அந்த கூமுட்டையும் இதை நம்பி பில்லியன் கணக்காக டாலரை நமக்கு கொடுப்பான் ஒரே ஜாலி

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  ஜமாத் உட் தாவா இனி மும்மத் உட் தாவா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு, நானா அப்படி செய்தேனா? எல்லாவே என்று பொய் சொல்லி போவது தான் இவனுக்கும் இவனை சேர்ந்தோருக்கும் வாடிக்கை, ?

 • Mohammed Jaffar - Chennai,இந்தியா

  மனம் வெம்பி நான் இதை எழுதுறேன்.. ஏன்தான் இந்த அளவுக்கு முஸ்லீம், இஸ்லாம் வெறுப்போ தெரிய வில்லை.. இவன் ஒரு பயங்கரவாதி, இந்த ஹபீஸ் திட்டுங்க.. தூக்குல போடுங்க.. நம்ம நாட்டுக்கு எதிரி, எனக்கும் எதிரிதான்.. அவனைத்தான் திட்டவேண்டும்.. அவன் நாட்டை திட்டுங்க.. அத விட்டுட்டு சில பேர் இஸ்லாத்தை பற்றி.. அது ஒழிந்தால்தான் நிம்மதி என்ற கருத்து பதிவு செஞ்ச நியாமா?? இப்ப இந்த சில பேர் செய்வதற்கு மற்றவரையோ. அல்லது அவரின் குடுமத்தையோ.. அலலது இந்து மதத்தையோ சொன்னால் அது நியாமா? தினமலர் வாசகர்கள் சொல்லுங்கள். நான் ஆரம்பத்தில் மாற்று மத அன்பர்கள் வணங்குபவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை.. யாருடைய நம்பிக்கையும் புண்படுத்த கூடாது இதன் என் கொள்கை. ஆனால் சில கருத்துக்கள் எப்பவும் எல்லா கருத்திலும் இஸ்லாத்தை பற்றியும், எங்கள் நபியை பற்றியும், அல்லாஹ்வை பற்றியும், குரானை பற்றியும்.. பார்த்து பார்த்து.. மிகவும் வெறுப்பாகி கொஞ்சம் கடுமையா எழுதிஉள்ளேன்.... அதற்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். என்னை அறியாமல் ஆத்திரம் ஆத்திரம் வருகிறது.. இதைத்தான் சில பேர் விரும்புகிறீர்களா என்று தெரியவில்லை. எங்கள் வணக்க வழிபாடுகளை பற்றி கேடு கெட்டத்தனமா சொல்லுவது முறையா??? இப்படி சொல்வது எங்களுக்கு மனது கஷ்டபடாத??? அனைவரும் நடு நிலைமைய சொல்லுங்க. எனக்கு எல்லாம் இந்து நண்பர்கள்தான்.. இந்த மாதிரி கருத்து படிக்க படிக்க.. ஒரு துவேஷ உணர்வுதான் வருகிறது. நமது நாட்டுக்கு எதிரா ஒரு சின்ன விஷயம் கூட செஞ்சது இல்லே.. ஒழுங்கா TAX கட்டிக்கிட்டுதான் இருக்கேன்.. எங்க தாத்தா சுதந்திர போராட்ட தியாகி. நான் ஒரு இந்தியன்.. இஸ்லாமை பின் பற்றுபவன், தமிழ் மொழிதான் எங்கள் மொழி. தினமலர் படிக்கும் அனைவரும் மிகவும் புத்திசாலி.. மிகவும் நல்லவர்கள்.. சிலரைதவிர.. கடவுள் தான் அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும்... அந்த சில பேர்களுக்கு சொல்லி கொள்வது ஒன்றுதான்.. எல்லாரும் யோக்கியன் இல்லை.. நம்ம நாடு வரும்போது உயிரை கொடுக்க கூட முஸ்லீம் தயங்குவது இல்லை.. வரலாற்றில் பாருங்கள். நம்ம நாட்டுக்கு எதிரி அது அனைவருக்கும் தான்.. அது பாகிஸ்தானை இருந்தாலும் சரி.. சவுதியை இருந்தாலும் சரி.. தயவு செய்து துவேசம் வளர்க்காதீர்கள்.... அந்த தீயை அணைப்பது ரெம்ப கஷ்டம்.. ஒரு நாள் நீங்களும் அந்த தீயில் மாட்டி கொள்ள நேரிடலாம். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்: என்பும் உரியர் பிறர்க்கு. சில கருத்துக்கள் படிக்க படிக்க கஷ்டமா இருக்கு.. அதனால்.. இன்றுடன் நான் வெளியேறுகிறேன்.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  ப்ரிசன் ஜெயிலுக்குள்ளற போட்டுவைக்கோமுன்னு சொன்னங்களமா. அதால பய்ங்கராவதி அப்டீன்னு சொலீவஸ்டாங்கலாமா. பய்ங்கராவதி அப்டீன்னு சொன்னா அவங்கள பாகிஸ்தான் பிரீ யா விட்ருமமா.

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  சோ, வாட் என்று கேட்டு விட்டு ஊர் சுற்றி வருவான். மேலும் இடைஞ்சல் செய்தால் பாகிஸ்தானுக்கும் குண்டு வைப்பான் இந்த பேமானி.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இவனை சுதந்திரமாக விடவில்லை என்றால் பாகிஸ்த்தானுக்கு குண்டு வைப்பார்கள் அங்குள்ளவர்கள்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  Ivan pakistaniya moorkarkalin thalaivan inge karunanithi ,seeman ,owaisi pola

 • Kumz - trichy,இந்தியா

  இதெல்லாம் உலக நாடுகளை ஏமாற்றும் ஒரு கண்துடைப்பு

 • Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை, ஒவ்வொரு வளைகுடா நாடுகளில் உருவாக்க 50 ஆண்டுகள் ஆனது பாகிஸ்தானுக்கு. எல்லா வளைகுடா நாடுகளிலிருந்தும் பாக்கிஸ்தானை, தனிமைப்படுத்த மோடிஜிக்கு 4 ஆண்டுகள் ஆனது பிரதமர் மோடி க்கு இது ஒரு பெரிய இராஜதந்திர வெற்றி என்று நீங்கள் நினைதால் மிகையில்லை. இந்தியாவுக்கு இந்த பெருமையும் பெற்று தந்த பாக்கியம் மோடிஜி, சுஷ்மா ஸ்ஸ்வராஜ் ஜி, அனைத்து தூதுவர்கள்களும் மற்றும் அஜித் டோவல் அவர்களையே சாரும்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  வரும் தேர்தலை முன்னிட்டும் அமெரிக்காவின் அழுத்தத்தை முன்னிட்டும் இவனை தடை செய்வார்கள் என்று எதிர்பார்த்ததுதான். (சென்ற மாதம் இதை எழுதி இருந்தேன்). இப்போது பழைய (ராணுவ) ஜனாதிபதியுடன் சேர்ந்து கொண்டு, தேர்தலுக்காக மக்களுக்கு உதவும் பல சமூக சங்கங்களை ஏற்படுத்தி மக்களை வளைத்துப் போட்டுள்ளான். அவர்களை சமாளிக்க வேண்டும்.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  ஹபீஸ் சயீத் அமைப்பு பாகிஸ்தானில் கலாச்சார அமைப்பு நடத்துறான்னு இவளோ நாளா சொல்லிட்டு இருந்ததே பாகிஸ்தான் அரசு? இப்போது அவன் அரசியல் கட்சி தொடங்கி டெவெலப் ஆகிறான் என்றவுடன் பாகிஸ்தான் அரசே உண்மையை ஒப்பு கொண்டது அவன் தீவிரவாதி என்று .. ஒரு அரசே தீவிரவாதிகளை வளர்த்து விட்டுருக்கிறது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது .. இவனை எல்லாம் இந்தியாவில் கொண்டு வந்து தூக்கிலிட வேண்டும் .. இங்கேயும் ஒரு போலி காலாச்சார அமைப்பு இருக்கு , அது எப்போ தடை செய்யபடுதோ அன்னைக்கு தான் இந்தியாவுக்கு விடிவு காலம் ..

 • PrasannaKrishnan -

  During the time of freedom , all Muslims were asked to go to Pakistan. Mohd Jinna the root cause for this. May be it will become a history in future like where Muslim population is more and hence terrorism. Not to hurt any Muslim. But its a sad truth.

 • Mohammedமூக்குநோண்டி -

  ஐயோ பாவம்

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  அபீஸு சையது நைனா உயிரு போவுற வர தூக்குல துடியா துடிச்சு சாவ வேண்டிய ஒரு குரூரமான குத்தவாளி

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  ஐயோ இவரை யாரும் குறை சொல்ல வேண்டாம். இந்தியாவின் மதசார்பின்மை பாதிக்கப்படும் . இவர் அவரது நாட்டில் வழக்கு நடத்த , காங் மற்றும் கம்மி கட்சிகள், நிதி உதவி அளிக்க வேண்டும் . பாவம் ஒரு அப்பிராணியை இப்படியா செய்வது ?அய்யகோ நெஞ்சு பொறுக்குதில்லையே ? விரைவில் தி க மற்றும் திமுக சார்பில் இவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும் . இது சதி. ஆரிய பித்தலாட்டம் . ஹஹஹஹஹ

 • srgmsbhaskar - Trichy,இந்தியா

  Financial Action Task Force (FATF) இந்த அமைப்பு தான் உலக நாடுகள் கடன் கொடுப்பதை முடிவு செய்யும். அவங்க அடுத்த வாரம் மீட்டிங். அதனால ஹபீஸ் அக்கவுண்ட வேற பேருக்கு மாத்தி இருப்பாங்க. ஹபீஸ் pathila அவனோட கைத்தடி அதை தலைமை தாங்கும். காச வாங்கிட்டு திருப்ப தீவிரவாதத்தை நல்ல தீனி போட்டு வளப்பாங்க. பொறிக்கிஸ்தான் நாக்கு துண்டா பண்ணத்தான் அவணுங்க்குல சண்டை பொடுக்குவாங்க.

 • Gunasekaran -

  அவங்க நாட்டிலேயே கட்சி அமைக்கும் அளவு வளர்ந்தவுடன். அவன்கட்சி வளரக்கூடாது என்பதற்கு தற்காப்பு அரசியல்.

 • Gunasekaran -

  எல்லா அயுதங்களையும் கொடுக்க தாமதமானதால்.லேட்டாக ஒரு நாடகம். பின் லேடனை தேடியது போல்.

 • Nanthakumar.V - chennai,இந்தியா

  ஹலோ பிரெண்ட்ஸ் ...அவசரப்பட்டு கருத்து போட்டுட்டீங்களேப்பா ????? இத கொஞ்சம் படிங்க ...விஷயம் என்னனு புரியும் . பாக் குடுமி மட்டும் சும்மா ஆடுமா ஜி .....The White House has said it would consider lifting the freeze if it sees action by Pakistan against terrorist groups. The budgetary proposal says that the military aid depends on Pakistan taking action against terrorist safe havens. "The budget requests $256 million for Pakistan in economic and other assistance to help increase stability, promote economic growth and opportunities for US businesses," said the annual budgetary proposals sent by the White House to the Congress.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  இந்த உத்தரவே கூட அமேரிக்கா இவர்களுக்கு கொடுக்க இருக்கு 300 மில்லியன் டாலர் பணத்திற்க்காக இருக்கலாம், ஆனால் இந்த சட்டம் இவனை ஒன்றும் செய்யாது வழக்கம் போல ஆட்டம் இருக்கும்.

 • sagar saritha - Chennai,இந்தியா

  அமெரிக்கா நிதி குடுக்க மறுத்திருக்கும் இல்லன்னா இவங்க நாட்டுலேயே இந்த தீவிரவாதியால ஏதாவது ஆபத்தை எதிர்பார்த்திருப்பாங்க. தலைவலியும் , காய்ச்சலும் அவரவர்களுக்கு வந்தால் தானே தெரியும்

 • anand - Chennai,இந்தியா

  இவனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லனும்

 • Rajesh -

  the big turning point is that China got nose cut as they were the one opposing in the UN to this man as the terrorist and supporting Pakistan , now Pakistan itself agreed to him as a terrorist and signed in the UN

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  பாகிஸ்தான் உண்மையில் சர்வதேச அளவில் பெயரை கெடுத்துக் கொண்டு முழித்துகொண்டு இருக்கிறது. அரபு நாடுகளே பாகிஸ்தானை வெறுப்போடு பார்ப்பது பாகிஸ்தானின் அரசியலை சிந்திக்கவைக்கிறது எனக்கு தெரிந்து அநேக நாடுகள் பாகிஸ்தானியருக்கு விசா கொடுப்பதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டனர் முரட்டுத்தனமான இஸ்லாமிய கொள்கை மட்டுமே கடைபிடிக்கும் பாகிஸ்தானியர் அதில் உள்ள மென்மையான நல்ல கொள்கைகளை வசதியாக கற்றுக்கொடுப்பது இல்லை. காஷ்மீர் ஆதரவூ என்ற கொள்கை எடுத்து கடைசியில் உலக தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் காரணமாகிவிட்டது பாகிஸ்தான். இப்போது அது நிறைய நடவடிக்கை எடுக்க வேண்டும் அறவே காஷ்மீர் தீவிரவாதத்தில் இருந்து விடுபடவேண்டும் இல்லையெனில் இந்திய பாகிஸ்தானை ஒரு தீவிரவாதிகள் நாடு என தொடர்ந்து சொல்லிக்கொண்டே தான் இருக்கும் இந்தியாவின் பேச்சு எடுபடும் அலவிற்கு பாக்கித்தானின் குரல் இனி சர்வதேச அளவில் ஒலிக்க வாய்ப்பு இல்லை. உருப்படியாக உண்மையாக பாகிஸ்தான் ஆயுதங்களை கீழே போடாவிட்டால் இந்தியாவின் கருப்பு நடவடிக்கைகள் பாகிஸ்தானை நொங்கெடுக்கும்.

 • Siva Rama Krishnanan - Mayur Vihar,இந்தியா

  பாக்கிஸ்தான் சிறையிலும் சைய்யித்திற்கு ராஜா போக வாழ்க்கை தான் மும்பையில் பல பேரை சுட்டுக்கொன்ற கசாபுக்குகே பிரியாணி போட்டு நாம் உபசரித்தோம்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  அப்பாடா இன்றோடு உலகில் பயங்கரவாதம் ஒழிந்தது. இனி உலகம் அமைதியாகி விடும். குண்டுக்கள் வெடிக்காது.. கழுத்தறுப்புக்கள் நடக்காது.. அனைவரும் சந்தோஷ கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவார்கள்..மூர்க்கம் என்ற ஓன்று இந்த பூவுலகில் இருக்கும் வரை ஏன் இந்த கற்பனைகள்?

 • HSR - Chennai,இந்தியா

  இது ஆரம்பித்த கட்சியை முடக்கு.. அப்புறம் அவன இந்திய அரசிடம் ஒப்படை.. அப்போது நம்புகிறோம்

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  கேட்க நல்லதா இருக்கும், ஆனால் இந்த சட்டம் இவனை ஒன்றும் செய்யாது, எப்போதும் போல சுதந்திரமாக தான் இருப்பா

 • hasan - Chennai,இந்தியா

  இவங்களை வெளியில் நடமாட விடக்கூடாது, இவனை கைது செய்தால் உடன் தூக்கில் ஏற்றுங்கள் இவனால் இஸ்லாத்துக்கும் கேடுதான். இஸ்லாத்தில் தீவீர வாதம் கிடையாது.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  வாழ்த்துக்கள்.... அப்படியே இவனை இந்திய ராணுவத்திடம் ஒப்படிக்கவேனும்.

 • indhumadhi - Paris,பிரான்ஸ்

  அமெரிக்கா பாடியளக்க மறுப்பு. அதனால் வேண்டா வெறுப்பாக எடுத்த முடிவு. உண்மையென்றால், அவனை பிடித்து ட்ரம்ப் இடம் கொடுத்துவிடு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement