Advertisement

இலங்கையில் அதிபர் தேர்தல் : ராஜபக்ஷே வலியுறுத்தல்

கொழும்பு: இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் கூட்டணி அரசு தோல்வி அடைந்ததை அடுத்து, அதிபர் தேர்தலை உடனடியாக நடத்தும்படி, முன்னாள் அதிபர், ராஜபக் ஷே தெரிவித்துள்ளார்.

இலங்கையில், அதிபர், மைத்ரிபால சிறிசேனா தலைமையில், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், ரணில் விக்ரமசிங்கே, பிரதமராக பதவி வகிக்கிறார். 2015ல் நடந்த தேர்தலில், இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. முன்னாள் அதிபர், ராஜபக் ஷேவின் இலங்கை சுதந்திர கட்சி தோல்வி அடைந்தது.
இதையடுத்து, இலங்கையில், சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷேவின், ஸ்ரீலங்கா மக்கள் கட்சி கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
இது குறித்து ராஜபக் ஷே கூறியதாவது: இப்போது ஆட்சி செய்யும் அரசு, சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளித்து, நாட்டின் சொத்துக்களை விற்றுவிடும் என, சிங்கள மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. எங்கள் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இப்போதைய அரசு, ஆளும் உரிமையை இழந்துவிட்டது. மக்களுக்கு புதிய அரசை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement