Advertisement

விமான விபத்து : நான்கு பேர் பலி

சான்டா கிளாரிட்டா: அமெரிக்காவில், சிறிய ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே, தனியாருக்கு சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம், நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. மலைகள் நிறைந்த அப்பகுதியில் தாழ்வாகப் பறந்த விமானம், திடீரென விபத்தில் சிக்கியது.
இதில், அந்த விமானத்தில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழந்தனர். விமானத்தின், எரிந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய முழுமையான தகவல் தெரியவில்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement