Advertisement

தடுப்பு வேலியை உடைத்து ஆக்கிரமிப்பாளர்கள் அட்டகாசம்

ராயப்பேட்டை : பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில், ஆக்கிரமிப்புகளை தடுக்க அமைத்த இரும்பு வேலியை சிதைத்து, ஆக்கிரமிப்பாளர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனாம்பேட்டை மண்டலம், 115வது வார்டு, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியை, சிலர் ஆக்கிரமித்து வசித்து வந்தனர்.

நடவடிக்கை இல்லை:

இதனால், மேம்பாலத்தின் கீழ் பகுதியில், வாகன ஓட்டிகள், திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மேம்பாலத்தின் கீழ் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சியினர் அதிரடியாக அகற்றினர். மேலும், ஆக்கிரமிப்புகள் தொடராமல் இருக்க, வேலி அமைத்ததுடன், எச்சரிக்கை பலகையையும் வைத்தனர்.இந்நிலையில், தடுப்பு வேலியை சிதைத்து, ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் அங்கே வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சியினர், அதன் பின், அப்பகுதியை கண்காணிப்பதில்லை. இதனால், மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்து விடுகின்றன.பீட்டர்ஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் சிலர் கஞ்சா, மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிரந்தர தீர்வு:

சில தினங்களுக்கு முன், அப்பகுதியில், கீதா என்ற பெண்ணை, அண்ணாசாலை போலீசார் கைது செய்தனர்; அவரிடமிருந்து, 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.எனவே, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை உடனே அகற்றி, அதற்கு நிரந்தர தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement