Advertisement

சாட்சிகள் சமர்ப்பித்த ஆவணங்கள் சசிகலா தரப்பிடம் ஒப்படைப்பு

சென்னை : சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்கள் சமர்ப்பித்த, 16 ஆவணங்கள், நேற்று சசிகலா தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள ஆவணங்களையும் அளிக்க, ஜெ., விசாரணை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் விசாரித்து வருகிறது.

சம்மன்
இதுவரை, 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அவர்களில் பலர், சசிகலாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, டிச., 21ல், சசிகலாவுக்கு கமிஷன் சம்மன் அனுப்பியது.


உடன், சசிகலா மீதான புகார்கள் குறித்த விபரங்களை கேட்டும், புகார் கொடுத்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரியும், சசிகலா சார்பில், அவரது வழக்கறிஞர், ராஜா செந்துார்பாண்டியன் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த கமிஷன், ஏழு நாட்களுக்குள் சசிகலா தன் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய வேண்டும் என, ஜன., 30ல் உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து, சசிகலா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சசிகலாவுக்கு எதிராக கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட புகார்கள் மற்றும் பிரமாண பத்திரங்கள் அனைத்தையும் அளிக்க வேண்டும்.


'ஆவணங்கள் பெறப்பட்ட, 10 நாட்களுக்குள், அவர் தரப்புவாக்குமூலம் தாக்கல் செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.மேலும், 'சசிகலாவுக்கு எதிராக கமிஷன் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும்; அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை முடிந்த பின், குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்' என்றும், புதிய மனுவில், சசிகலா தரப்பு கோரியது.


இந்த மனு மீதான விசாரணை, நேற்று நடந்தது. அப்போது, சசிகலா தரப்பு வழக்கறிஞர், ராஜா செந்துார் பாண்டியன் ஆஜரானார்.

உத்தரவு
விசாரணையின் போது, சென்னை மருத்துவக்கல்லுாரி பேராசிரியர், சுதா சேஷய்யன், தி.மு.க.,பிரமுகர், டாக்டர் சரவணன், சமூக சேவகர், ஜோசப் உட்பட நான்கு சாட்சிகளின், 16 ஆவணங்கள், சசிகலா தரப்புக்கு வழங்கப்பட்டன. சசிகலா தரப்பின் பிற கோரிக்கைகள், வரும், 26ல், விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என, நீதிபதி, ஆறுமுகசாமி தெரிவித்தார்.

மேலும், சாட்சியங்கள் அளித்த அனைத்து ஆவணங்களையும், ஓரிரு நாட்களில், சசிகலா
தரப்புக்கு அளிக்கவும் உத்தரவிட்டார்.
விசாரணை முடிந்து வெளியே வந்த வழக்கறிஞர், ராஜா செந்துார் பாண்டியன் கூறியதாவது:சசிகலாவுக்கு எதிராக சாட்சியளித்தவர்கள், தாக்கல் செய்த ஆவணங்களை, ஓரிரு நாட்களில் கமிஷன் எங்களுக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளது.


அதன்படி, 450 ஆவணங்கள் எங்களுக்கு வர வேண்டும்.ஆவணங்களை ஆராய்ந்த பின், சசிகலாவின் வாக்குமூலம் அடங்கிய பிரமாண பத்திரத்தை, வரும், 26ல் தாக்கல் செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அய்யப்பன் ஆஜராகவில்லை விசாரணை கமிஷனில், நேற்று ஜெ.,யின் கார் டிரைவர், அய்யப்பன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், உடல்நிலை சரியில்லாததால், ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், கமிஷன் குறிப்பிடும் மற்றொரு நாளில் ஆஜராவதாகவும், அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, அய்யப்பன் மற்றொரு நாளில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட உள்ளது. அதேநேரத்தில், ஜெ., விசாரணை கமிஷனில், இன்று இளவரசியின் மகனும், ஜெயா, 'டிவி'யின் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் ஆஜராகி, விளக்கம் அளிக்க உள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • karutthu - nainital,இந்தியா

  நீதி அரசரே தயவு செய்து குற்றவாளிகளை மட்டும் தப்ப விட்டுவிடாதீர்கள் ஏனோ தெரியவில்லை விசாரணை ஜவ்வு மாதிரி இழுத்தடிக்கப்படுகிறது கோர்ட் என்றால் ஒரு பயம் இருக்கவேண்டும் . நீங்கள் தயவு செய்து ரொம்ப கறாராக இருக்கவேண்டும் .குற்றவாளியின் மீது இரக்கம் தேவையில்லை

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  சதிகாரி தான் நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அதுக்காகத்தான் அவளிடம் எல்லா ஆவணங்களையும் கொடுத்தார்கள், எந்த கூமுட்டை இந்த மாதிரி செய்யச்சொன்னது????

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஹா ஹா ஹா.... பிரமாதம். 450 ஆவணங்கள் ரெண்டு நாளில் சசியிடம் கொடுக்கணும், செராக்ஸ் காப்பி சரியில்ல, எனக்கு இங்கிலிஷ்சத்தெரியாது, தமிழில் வேணும், கன்னடத்தில் வேணும் என்று ஒரு மூணு வருஷம் தள்ளலாம், அப்புறம் அவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று என்று படித்தால் கூட 450 நாட்கள் ஆகும், அதுக்கு 450 பதில்கள் எழுத இன்னொரு 450 நாட்கள். அதுக்குள்ள அடுத்த தேர்தல் அதுக்கடுத்த தேர்தல் வந்து, கமிஷனின் தலைவரையே மாத்திடுவாங்க,, அப்புறம்..மறுபடியும் மொதல்ல இருந்து.. அரசு ஆபீஸ், அரசு கார், சம்பளம், இன்ன பிற வசதிகளோடு இன்னொரு கமிஷன் தலைவர் வருவார்...ஹா ஹா ஹா

 • Raja - chennai,இந்தியா

  DMK should also request for these documents as they are also one of the party in this investigation.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  புகார் கொடுத்தவர்கள் உயிருக்கு யார் உத்தரவாதம். ஒன்னுமே புரியவில்லையே?

 • Murugan - Bandar Seri Begawan,புருனே

  குற்றவாளியிடம் வாக்குமூலம் வாங்குவதை விட்டு, இது என்ன கூத்து? நீதிபதி சசிகலாவின் அடிவருடி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி...

 • Shanmugam - Manama,பஹ்ரைன்

  விசாரணை என்ற பெயரில் உண்மை கூறும் ஆட்களை கண்டறிந்து குற்றவாளியிடம் ஒப்படைக்கும் கமிஷன். என்ன கேலி கூத்து.

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  இப்படி செய்வதன் பெயர் தான் நீதி விசாரணையா??? ஆறுமுக சாமி நீதிபதியா? அல்லது புகழேந்தியின் அல்லக்கையா????

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  முதலில் விசாரிக்க வேண்டியது ஓ. பன்னீர் செல்வம் மற்றும் நமது உலகம் சுற்றும் வயோதிகர் மோடிஜி தான்..

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  திருடர்கள் கையில் சாவியைக் கொடுத்து, வீட்டையும் திறந்துவிட்ட பிறகு என்ன அழகில் விசாரணை நடக்கும்.

 • joshua - doha,கத்தார்

  வாழ்க பாரத ஜனநாயகம். ஹி ஹி. பணநாயகம் , ரொம்ப அவசியம் சசிகலாவிடம் குடுக்கனுன்னு. எதுக்கு ஆவணங்களை சசிகலாவிடம் ஒப்படைத்தார்? SASIKALA GOVT? JUDGE? PM? ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ????? சாட்சிகள் காலி. போங்கடா நீங்களும் உங்க விசாரணையும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கண்துடைப்பு இன்னும் எத்தனை நாளைக்கு... கடைசியில் ஊழல் ராணியை உத்தம ராணிகளாக....ஜான்சி ராணிகளாக ,, வேலு நாச்சியாராக... காட்டும் வரையா...?

 • spr - chennai,இந்தியா

  கமிஷனுக்கு எவ்வளவு கமிஷன்? குற்றம் சாட்டப்பட்டவரிடம் அவருக்கு எதிராக சாட்சியம் சொன்னவரின் சாட்சிய ஆவணங்களைத் தரவேண்டிய அவசியம் என்ன? அது அந்த சாட்சியங்களைச் சொன்னவருக்கு அபாயம் விளைவிக்காதா? அல்லது அந்த சாட்சியங்களையே மாற்றுமளவிற்கு பிறழ் சாட்சியமாக மாற்ற அச்சுறுத்தல் தொடராதா? இதற்கு வழக்கு என்று ஒன்றே தொடர்ந்திருக்க வேண்டியதில்லையே உயர் நீதிமன்றம் உறங்குகிறதா?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  புகார் கொடுத்தவங்களுக்கு ராணுவப்பாதுகாப்பே கொடுத்தாலும் போதாது அங்கும் இருபது ரூ விநியோகம் பண்ணியவாவது உள்ளே நொழஞ்சிருவாங்க .கடவுள்தான் காப்பாத்தணும்

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  சர்ச்சை சசி வாயை திறந்து பேச தொடங்கி வி ட் டா ரா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement