Advertisement

தோல்விகளே வெற்றிக்கான படிகள்

முள் குத்தாமல் ரோஜா மலரை பறிக்க முடியாது. தேனீ கொட்டுமே என்று பயந்தால் தேன் கிடைக்காது. இருண்டு கருத்திருக்கிற மேகத்தில் தான் வானவில் தோன்றும். எதிராளி ஒன்று இல்லாவிட்டால் ஆட்டங்களில் வெற்றி பெற முடியாது. உங்களுடைய மனதில்சோகம் இருந்தாலும் உதடுகளில் புன்னகையை தவழ விடுங்கள். முகத்தில் மலர்ச்சியைக் காட்டுவீர்கள். அது மற்றவர்களுக்கு உற்சாகமூட்டும். அந்த உற்சாகம்உங்களையும் கூட தொற்றிக் கொள்ளும்.உங்களுக்கு நன்மை செய்கின்ற எண்ணங்களே நேர்மறை எண்ணங்களாகும். நேர்மறையான எண்ணமுள்ளவர்களுக்கு வாழ்க்கையில் ஏமாற்றங்களும், தோல்விகளும் தவிர்க்க முடியாதவை என்று தெரியும். தோல்விகளே வெற்றிக்கான படிகள் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.இலக்கு நிர்ணயம்உங்களுடைய இலக்கினை நிர்ணயித்து கொள்ளுங்கள். அவற்றை எட்டுவதற்கு உண்மையாக உழையுங்கள். திட்டமிட்டு செயல்படுங்கள். திட்டமிடாமல் எதையும் உங்களால் செய்ய முடியாது. இலக்கே இல்லாமல் யாராலும் வாழ முடியாது. சோம்பேறிகளுக்கு கூட வேலை செய்யாமலிருப்பது ஓர் இலக்காக இருக்கும். சிறப்பான இலக்குகளை நிர்ணயித்து கொண்டு திட்டமிட்டு முழு ஆற்றலையும் செலவழித்து உழைத்தால் வாழ்வை மேம்படுத்தி கொள்ள முடியும்.''எங்கு எதிர்ப்பு இல்லையோ அங்கு வெற்றி இல்லை'' என்றார் பெர்னார்ட்ஷா. வெற்றியைஅடைவதற்கு நீங்கள் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய விலை 'உழைப்பு.' கடுமையானபோராட்டங்களினால் வருபவை மதிப்பு வாய்ந்த வெற்றி. நம்முடையதிறமைகளை உரிய முறையில் ஒழுங்காகவும், நேர்மையாகவும் வகைப்படுத்தி வளர்த்து கொள்ள வேண்டும். அதனை அழகாகமுழுமையாக வெளிப்படுத்தி மேன்மை படுத்துவதில் தான் வாழ்க்கையுடன் வெற்றியும் அடங்கி இருக்கிறது.''வீசும் காற்றும், எழும்அலையும் எப்பொழுதும் மிகத்திறமையான மாலுமியின் பக்கமேஇருக்கும்'' என்கிறார் பிரபலஆங்கில வரலாற்று ஆசிரியர்கிப்டன். கிடைக்கின்ற வாய்ப்பையும் உருவாகும் சூழ்நிலையையும் தங்களுக்கு ஏற்ற வகையில் ஏற்றம் அளிக்கும் வகையில் சரியாகவும், சாமர்த்தியமாகவும் பயன்படுத்தி கொண்டவர்கள் தான் தோல்விகளை கூட வெற்றிகளாக ஆக்கி கொண்டவர்கள்.
வெற்றியின் மூலதனம் : சுறுசுறுப்பே வெற்றியின் மூலதனம். நமக்கு சுறுசுறுப்பு தோன்றிவிட்டால் தேர்ந்து எடுக்கும் அறிவுத்தெளிவு, ஆலோசனை, தீர்மானம் செய்யும் மனஉறுதி, காரியத்தில் கவனம் ஆகியவை உருவாகும். தொடர்ந்து சுறுசுறுப்பை கொண்டிருக்கவும், இடையே கைவிடாமல் இருக்கவும் தன்னம்பிக்கை வேண்டும். மேற்கொண்டு எடுக்கும் எந்த காரியத்தையும் நம்மால் செய்து முடிக்க முடியும்.எந்த தடை வந்தாலும் அதற்காக தளர்ந்து விடக்கூடாது. சக்தியும் திறமையும் நம்மிடம் இயங்கினால் நிச்சயம் வெற்றி பெற முடியும். தேர்ந்து எடுக்கப்பட்ட செயலை சுறுசுறுப்பாக செய்தால் நிச்சயம் வெற்றி நமக்குத்தான். இதில் சந்தேகமே இல்லை.சுறுசுறுப்பு என்பது மனதிலே உற்சாகமும் உடம்பிலே தெம்பும், செயல் முறையிலே ஓர் எழுச்சியையும் கொண்டிருப்பது தான். சுறுசுறுப்பிற்கு அடிப்படையாக அமைந்திருப்பவை உணவு, உழைப்பு,உறக்கம், ஓய்வு எனலாம்.நமது திறமை வளர வேண்டுமானால் நம்மை எதிர் நோக்குகின்ற அபாயங்களை கண்டு பயந்து ஓடக்கூடாது. அவற்றை எதிர்த்து நின்று சமாளிக்கவேண்டும். தோல்வியே ஏற்பட்டாலும், துணிவை இழந்து விட கூடாது.
போராட்டம் : 'எதுவும் சரிப்பட்டு வராது' என்று நீங்கள் நினைத்த இடத்தில் தான் உங்கள் வெற்றிக்கான முதல்படி அமைந்திருக்கிறது.போராட்டமற்ற வாழ்க்கை நிலை இல்லை. பரம ஏழையாக இருந்தாலும் பெரிய பணக்காரராக இருந்தாலும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப, தகுதிக்கு ஏற்ப, வாழ்க்கையில் பிரச்னைகளை, நெருக்கடிகளை, போராட்டங்களை சந்தித்தே தீர வேண்டும்.தோல்விக்கான எண்ணங்களை அறவே ஒழிக்க வேண்டும். தோல்வி என்பது மீண்டும் ஒரு முயற்சியை மேலும் திறமையுடன் தொடங்குவதற்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு என்பதை, எப்போதும் நினைவில் கொண்டிருக்க வேண்டும். சாதனை மனிதன் எதிர்ப்புகளை பற்றியோ, எதிரிகளை பற்றியோ சிந்தித்து காலத்தை வீணாக்க மாட்டான். புதிய கண்ணோட்டத்துடன் ஒரு செயலில் ஈடுபட்டும், அதிக உழைப்பை கொடுத்தும் நம்மால் இலக்கை அடைய முடியவில்லை. அதன்பிறகு என்ன செய்கிறோம்? முயற்சி செய்வதையே விட்டு விடுகிறோம். தோல்வி மனப்பான்மை வந்து விடுகிறது. ஏன்? நாம் வேதனையை தவிர்க்க விரும்புகிறோம். மறுபடியும் தோல்வியடைவதை தவிர்க்க விரும்புகிறோம். அதிருப்திகரமான முடிவுகளுக்கு பயந்து மீண்டும் முயற்சி செய்ய மறுக்கிறோம். சில அதிருப்திகரமான முடிவுகளுக்கு பிறகு புது முயற்சி என்பதையே விட்டு விடுகிறோம். 'எதுவும் சரிப்பட்டு வராது' என்று சோர்ந்து போகிறோம்.உங்களது நடவடிக்கைகளை மாற்றுவதன் மூலம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்ற முடியும். ''நான் ஒரு போதும் சோர்ந்து போவதில்லை. காரணம் ஒவ்வொரு தவறான முயற்சியும் அடுத்த கட்டத்துக்கான முதல் அடி,'' என்று தாமஸ் ஆல்வா எடிசன் கூறியுள்ளார். ஆகவே உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான முதல் பாடம் உங்கள் எதிர்மறையான கருத்துக்களையும், பயத்தையும் துாக்கி எறிவது தான்.
வெற்றி நிச்சயம் : வெற்றி பெற்ற மனிதர்களின் கதையை கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். அவர்கள் புறக்கணிப்பை பொருட்படுத்துவதில்லை. 'இல்லை' என்ற வார்த்தையை ஏற்று கொள்வதில்லை. அவர்களுடைய லட்சியம் நடைமுறையாக மாறும் வரை அவர்கள் சோர்ந்து போவதில்லை. நெப்போலியனின் மிகப்பெரிய தாரக மந்திரம் 'முடியாது என்பது முட்டாள்களின் அகராதி' என்பதாகும். எந்த பிரச்னையும் நிரந்தரமானது அல்ல, எந்த பிரச்னையும் உங்கள் மொத்த வாழ்க்கையையும் பாதித்து விடாது, தோல்வியே வெற்றி தொடங்குவதற்கான இடம், தொடர்ச்சியான எதிர்மறை போக்கு இல்லாத முயற்சி வெற்றிக்கு வழிகாட்டும்.அமெரிக்க ஜனாதிபதிகளில்ஒருவரான ஜான்கென்னடி ஒரு முறை சிறுவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்ட இறுதியில் ஒரு சிறுவனை அழைத்து ''உனது எதிர்கால லட்சியம் என்ன?'' என்று வினவினார். ''உங்களை போல நானும் ஜனாதிபதியாக விரும்புகிறேன்'' என்று பதில் வந்தது.அப்படி கூறிய சிறுவன் தான் பில் கிளின்டன். எண்ணம் உறுதியாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நமக்கு எதில் ஈடுபாடு இருக்கிறதோ, அதிலேயே நமது நாட்டம் இருக்க வேண்டும். எந்த லட்சியத்தை அடைய விரும்புகிறோமோ, அதனை ஒரு தாளில் எழுதி அட்டையில் ஒட்டி கண்ணில் படுமாறு சுவரில் மாட்டி வைக்க வேண்டும். படுக்கைக்கு செல்லும்போதும், படுக்கையை விட்டு எழும்போதும் அந்த லட்சியம் கண்ணில் பட வேண்டும். படுக்கைக்கு செல்லும்போது அதை பார்த்து விட்டு கண் உறங்குவோமாயின், உறங்கும்போது அந்த லட்சியம் உள் மனதில் ஆழ பதிந்து விடும்.
நேரத்தை வீணாக்காதீர்கள் : நீங்கள் உண்மையில் 'வெற்றிகரமான மனிதன்' என்று நம்ப ஆரம்பிக்கும் போது ஒளி பொருந்தியபாதையில் அடி எடுத்து வைப்பதை அறிவீர்கள். உங்களுக்கு பிடிக்காதவர்களை பற்றியும், உங்களுக்கு துரோகம் செய்தவர்களை பற்றியும் சிந்தித்து உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்.இன்று முதல் நீங்கள் ஒரு சாதனையாளர் என்ற உறுதியான நினைப்புடன் உங்கள் காரியங்களை கவனியுங்கள். இப்படி உயர்வாக நினைப்பதால், உங்கள் சிந்தனைகளில் செயல்களில் வெற்றிகரமான அம்சங்களே தொடர்ந்து தோன்றும். தோல்விகள் கூட வெற்றி படிகளாகும்.-----
முனைவர்தி.பாலசுப்பிரமணியன்எழுத்தாளர், காரைக்குடி.96002 48107

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement