Advertisement

'ஈரநிலம்' எனும் இயற்கை : இன்று உலக ஈரநிலங்கள் நாள் வளம்!

நாம் வாழும் பகுதிகளில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். காடுகள் உட்பட சில இடங்கள் மனிதர்களுக்கு நேரடி பலன்களை தரும். நேரடியாக மனிதர்களுக்கு பயனளிக்காவிட்டாலும் கூட சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்களிப்பை செய்யும். இதற்கு சிறந்த உதாரணம் சதுப்பு நிலங்கள். ஈரநிலங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது சதுப்பு நிலங்கள். இவற்றில் ஒன்றுதான் 'லகூன்' என்று அழைக்கப்படும் உப்பங்கழிகள் அல்லது உப்புநீர் ஏரிகள் எனப்படும்.முக்கிய கூறுகளான நீர் மற்றும் காற்று, உயிரினங்கள் வாழ அனு
மதிக்கிறது. இதில் காற்று அனைத்து இடங்களிலும் உள்ளது. ஆனால் தண்ணீர் எல்லா இடங்களிலும் இப்போது இல்லை. ஆதிகாலத்தில் மனிதனுடைய வாழ்விடம் ஆரம்பமானது நீர் நிலைகள் அருகில் தான். உயிரினங்களும் அங்கு தான்
வாழ்விடங்களை அமைக்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளை நாம் பாதுகாக்க வேண்டாமா?
விழிப்புணர்வு
நீர்நிலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே பிப்.,2ல் 'உலக ஈரநிலங்கள் நாள்' கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு 'ஒரு நிலையான, நகர்ப்புற எதிர்காலத்திற்கான ஈர
நிலம்' என்ற குறிக்கோளுடன்
கொண்டாடப்படுகிறது. இந்நிலங்கள்
பாதுகாக்கப்பட வேண்டிய
அவசியத்தை வலியுறுத்தி சர்வதேச அளவில் 1971 ல் 'ராம்சர் உடன்
படிக்கை' ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, அடிப்படையில் சர்வதேச
அளவில், மிக முக்கியத்துவம் வாய்ந்தது இந்தியாவின் முதல் நீர்நிலையாக அங்கீகரிக்கப்பட்ட 'சிலிகா' ஏரி.
'இயற்கை சீற்றங்களில் 90
சதவிகிதம் தண்ணீரால் தான் ஏற்
படுகின்றன,' என ஐ.நா., தண்ணீரமைப்பு கூறுகிறது. 1996லிருந்து 2015 வரை 1.35 மில்லியன்
மக்கள் இயற்கை சீற்றங்களால்
பலியாகியுள்ளனர். இதற்கு
காரணம், ஈரநிலைகளை நாம்
பாதுகாக்க தவறியதே.
அரிய பயன்கள்
இந்நிலங்கள் மண் அரிப்பை தடுப்பதற்கும், கடல் அலைகள் மற்றும் சூறைக்காற்றில் இருந்து
மக்களை காக்கவும், தண்ணீரை அதிக நாட்கள் சேமித்து வைக்கவும் உதவுகிறது. அதிக மழை காலங்களில் அதிக மழைநீரை சேமிக்கிறது. தண்ணீர் தரத்தை மேம்படுத்துகிறது. ஈரநிலங்களின் ஒன்றான சதுப்பு நிலக்காடுகள் மூலம் மீன்கள், கால்நடை தீவனம், எரிபொருள், கட்டடப் பொருட்கள், மருந்து, தேன் மெழுகு கிடைக்கின்றன. அதிகளவு கரியமில வாயுவை இந்நிலம் தன்னகத்தே பெற்றிருக்கிறது. துாய்மை கேட்டை அழிக்கிறது. மழை இல்லா காலத்தில் சேமித்த தண்ணீரினை வெளியேற்றி வறட்சி தொடங்குவதை தள்ளி வைத்து தண்ணீர் பற்றாக்குறையை குறைக்கின்றன.
தொழிற்சாலைகள், வீடுகள்
கட்டுவதால் அதிலிருந்து வரும் கழிவுகள் நீரின் தரத்தை கெடுக்கிறது.
சரியான திட்டமிடல் இல்லாத தொழிற்சாலைகள், சாலை அமைத்தல், கழிவு நீர் வெளியேற்றம்,
குப்பை அகற்றல் மூலம் இந்நிலங்களின் தன்நிலை மாறி விடுகிறது. பொருளாதார மற்றும் சுற்றுப்புற வீழ்ச்சி ஏற்படுகிறது. விவசாய நிலங்களாக மாற்றம், நீர்த்தேக்கம், கால்வாய், அணை கட்டுதல் போன்ற
வற்றால் நீர் நிலைகளில் நீரியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவு நீரின் நச்சு, வேதிப் பொருட்களால் அதிக நன்னீர் ஈரநிலங்கள்
பயன்பாட்டுக்கு இல்லாமல், அதில் உள்ள உயிரினங்கள் இறந்து விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. வெளிநாட்டின் வரவான நீர்த்தாமரை உள்ளிட்ட தாவரங்களினால், உள்நாட்டு தாவரங்கள் வளராமல் போய் விடுகிறது. அதிகளவு வெப்ப
நிலை, புயல், வறட்சி, வெள்ளம், அதிகளவு கரியமில வாயு மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வும் ஏற்
படுகின்றன.
அச்சுறுத்தல்கள்
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில், ஈரநிலம் என்ற சொத்துக்கள் குவிந்து
உள்ளன. இதில் பெரும்பாலும் கங்கை, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி மற்றும் தப்தி ஆகிய பெரிய ஆறுகளோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பில் உள்ளன. மொத்தம் 27,403 ஈர
நிலங்களில், 23,444 ஆறுகளோடும்,
3959 கடலோடும் ஒட்டியுள்ளன. 41 லட்சம் எக்டேரில் 15
லட்சம் எக்டேர் இயற்கை
யாகவும், 2.6 லட்சம் எக்டேர்
மனிதனாலும் (ஏரிகள்) உருவாக்கப்பட்டவை ஆகும்.
கடற்கரை அருகே உள்ள 80 சதவிகிதம் சதுப்பு நிலங்கள் மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் மற்றும்
அந்தமான் நிகோபார் தீவுகளில் பரவி
யுள்ளன. மீதமுள்ளவை ஒடிசா,
ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, கேரளா, கோவா, மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் உள்ளன.
இந்தியாவில் உள்ள 70 - 80 சதவிகிதம் சதுப்பு நிலங்கள் மற்றும் ஏரிகள் கடந்த 50 ஆண்டுகளில் காணாமல் போய்விட்டதாக, வனவிலங்கு கல்வி நிறுவனம்
தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 5 சதவிகிதம் அழிகின்றன. இதனால் அதிக வெள்ளப் பெருக்கு, உயிரினங்கள் அழிவு, தண்ணீர்
தரம் குறைபாடுகள் போன்ற அச்
சுறுத்தல்கள் ஏற்படுகின்றன.
பாசன தொட்டிகள்
தென்னிந்தியாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் தண்ணீர் தேவைக்காகவும், பறவைகள் வசிக்க, உணவு அருந்த மற்றும் இனப்
பெருக்கம் செய்ய பயன்பட்டது. சென்னை, மதுரை உட்பட முக்கிய நகரங்களில் பாசன தொட்டிகள், எண்ணிலடங்கா குளங்கள், விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் விஸ்வரூபத்தால் பிளாட்டுகளாக மாற்றப்பட்டன. 1994 லிருந்து 2011 வரை விவசாய மற்றும் நீர் நிலைகளின் அளவு 27.12ல் இருந்து 11.95 சதவீதமாக குறைந்து விட்டது.
முன்பெல்லாம் வீடுகளில் கிணறுகள் இருந்தன. இப்போது அந்நிலை இல்லை.
மதுரையில் பல குளங்கள் மறைந்துவிட்டன. ஆக்கிரமிப்பால்
குளங்களின் மேற்பரப்பு, இணைப்பு கால்வாய்களும் காணாமல் போய்விட்டன. அணைகள் மற்றும்
மதகுகள் பழுதடைந்து விட்டன. குளங்கள், கண்மாய் மற்றும் ஏரிகளில் தண்ணீர் தேங்கும் பரப்பு குறைந்து ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கின்றன. நன்மைகள்
ஏராளம் இருந்தும் இப்போது குப்பை போடும் இடமாக ஈர
நிலங்கள் மாறிவிட்டன.
உலக அளவில் நகர்ப்புற மக்கள் எண்ணிக்கை ஆண்டிற்கு 2.4 சதவிகிதம் அதிகரிக்கிறது. இன்றைய நிலவரப்படி 400 கோடி மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். வேலைக்காக நகருக்கு செல்வதால் 2050ம் ஆண்டு இதன் மதிப்பு 66 சதவிகிதமாக உயரும். இதனால் மேலும் பல ஈரநிலங்கள் அழிக்கப்படும்.
என்ன செய்ய வேண்டும்
நம்மை சுற்றி உள்ள ஈர
நிலங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். விதிமீறல் நடந்தால் சம்பந்தப்பட்ட அதி
காரிகளுக்கு தகவல் தெரிவிக்க
வேண்டும். விழிப்புணர்வு ஏற்
படுத்த வேண்டும். அழியக் கூடிய நிலையில் உள்ள ஈரநிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவற்றை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செய்தால் இயற்கை சீரழிவுகள், உணவுப் பற்றாக்குறையிலிருந்து
உலகத்தை பாதுகாக்கலாம்.
- எம். ராஜேஷ், பேராசிரியர்
அமெரிக்கன் கல்லுாரி
மதுரை
94433 94233

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement