Advertisement

நான் அரசியலுக்கு வருவது உறுதி : ரஜினி அறிவிப்பு

சென்னை : நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன் என நடிகர் ரஜினி கூறியுள்ளார்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 6வது நாளாக, நடிகர் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து, போட்டோ எடுத்து வருகிறார். இன்றும் வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதி ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

முன்னதாக ரசிகர்களிடம் பேசிய ரஜினி, ரசிகர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. ரசிகர்கள் கட்டுப்பாடுடன், அமைதியாக போட்டோ எடுத்து சென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கட்டுப்பாடு மட்டும் இருந்தால் நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். நான் பில்டப் கொடுக்கவில்லை. தானாக பில்டப் கொடுக்கப்பட்டது. எனக்கு அரசியலுக்கு வருவது பற்றிய பயம் இல்லை. மீடியாக்களை பார்த்து தான் பயம். பெரிய பெரியா ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள். நான் ஒரு குழந்தை. எப்படி பயப்படாமல் இருக்க முடியும். நான் எதை பேசினாலும் அதை விவாதம் ஆக்கி விடுகிறார்கள். பத்திரிக்கையாளர் சோ இருந்திருந்தால் எனக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கும்.

அரசியலுக்கு வருவது உறுதி :நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். காலம் குறைவாக உள்ளதால் அதற்கு முன் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது முடிவு செய்யலாம். பேருக்கோ, புகழுக்கோ ஆசைப்பட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. அதை நான் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு பல மடங்கு நீங்கள் ஏற்கனவே எனக்கு கொடுத்து விட்டீர்கள். பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை. அப்படி நான் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் 1994 லேயே என்னை தேடி வந்தது. அப்போது வரதா பதவி ஆசை, 68 வயதில் எனக்கு வருமா? அப்படி ஆசைப்பட்டால் நான் பைத்தியக்காரன். நான் ஆன்மிகவாதி என சொல்லிக் கொள்ள தகுதி இல்லாதவன்.

பதவி ஆசை இல்லை :அரசியல் மிகவும் கெட்டு விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுபோய் உள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகள், சம்பவங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தலைகுனிய வைத்து விட்டது. எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள். இப்போது நான் என்னை வாழ வைத்த தெய்வங்களான மக்களுக்க நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருகிறேன். அப்போதும் நான் வரவில்லை என்றால் என்னை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்ற குற்றஉணர்வு நான் சாகும் வரை எனக்குள் இருந்து கொண்டே இருக்கும்.அனைத்தையும் மாற்ற வேண்டும், அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உண்மையான, வெளிப்படையான, நேர்மையான, ஆன்மீக அரசியல் கொண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். விருப்பம். தமிழக மக்கள் அனைவரும் அதற்கு என் கூட இருக்க வேண்டும். அரசியல் கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிடுவது சாதாரண விஷயம் இல்லை. நடுக்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது. கடவுள் அருள், மக்களின் நம்பிக்கை, அபிமானம், ஆதரவு, அன்பு இருந்தால் சாதிக்க முடியும். அது கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.


முதலில் தயாராவோம் :

அரசர்கள் அடுத்த நாட்டின் கஜானாவை கொள்ளை அடித்தார்கள். இப்போது ஜனநாயத்தின் பெயரால் ஆட்சிக்கு வருபவர்கள் சொந்த நாட்டையே கொள்ளையடிக்கிறார்கள். சிஸ்டத்தை மாற்றனும். எனக்கு தொண்டர்கள் வேணாம். காவலர்கள் வேணும். அவர்களின் உழைப்பால் ஆட்சி அமைந்தால் அரசிடம் இருந்து மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களை, சலுகைகள் சேர செய்யும் காவலர்கள். யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்டும் காவலர்கள் வேணும். அவர்களை கண்காணிக்கும் பிரஜையின் கண்காணிப்பாளர் தான் நான்.

பதிவு செய்யப்படாத மன்றங்களை ஒருங்கிணைக்கனும். ஒவ்வொரு பகுதியிலும் நமது மன்றம் இருக்கனும். கட்டுப்பாடு, ஒழுக்கம் தேவை. தயாராகும் வரை நான் உட்பட யாரும் அரசியல் பற்றி பேச வேண்டாம். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். அறிக்கை விடவும், போராட்டம் பண்ணவும் நிறைய பேர் உள்ளனர். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெறுவோம். பிறகு நாம் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என கூறிவோம். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் 3 ஆண்டுகளில் நாமே பதவியை ராஜினாமா செய்து விட்டு போவோம்.


உண்மை, உழைப்பு உயர்வு தான் எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை. ஜனநாயக போரில் நம்ம படையும் இனி இருக்கும். இவ்வாறு ரஜினி பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (369)

 • Ramachandran Madambakkam - Chennai,இந்தியா

  மாற்றம் ஏற்படுத்துவதை மாற்ற யாராலும் முடியாது. மாற்றம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். மக்கள் தற்போதைய கட்சிகளுக்கு மாற்றாக ஒரு இயக்கம் உருவாக வேண்டுமென்ற பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

 • SHANMUGA NATHAN ARUMUGAM - hidd,பஹ்ரைன்

  தலைவர் ராமையா பாட்டுல சொன்னமாரி ஊரு சுத்த பிளான் பண்ணிட்டாரு

 • Venkatesvaran G - Chennai,இந்தியா

  வா வரலாம் வா வல்லவா

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  ஆன்மிக வாதிகள் என யாரையும் அழைக்கலாம் புத்தர்/ ஏசு / கிருஷ்ணன் / அல்லா / பாபா.................என யார் யாரெல்லாம் இறைமீது நம்பிக்கைகொண்டு பிரதிபலனை எதிர்பார்காமல் தொண்டு செய்கிறார்களோ அவர்கள் ஆன்மிக வழியில் செயல் படுபவர்களாக கொள்ளப்படுவர். ரஜினி கூட அரசியலில் மக்களுக்கு தொண்டு செய்ய எந்த்த பலனையும் (கொள்ளை, லஞ்சம், விஞ்ஞான ஊழல் என...) எதிர்பாராமல் செயல் படுவார் என் நம்புவோம்

 • Sadhana - madurai,இந்தியா

  அரசியல் க்கு வருவதால் எந்த ஒரு மாற்றமும் வர போவது இல்லை ஆகவே அனைவரும் அவர்கள் வேலைகளை பாருங்கள் உங்கள் நேரங்களை வீண் செய்யாதீர்கள் ...

 • Prakash JP - Chennai,இந்தியா

  ஆன்மீக அரசியல் புதுவரவு.. சோ ராமசாமி தான் ரஜினியின் அரசியல் வழிகாட்டியாம், குருவாம்.... சாகும்வரை ஈழ விடுதலையை, ஈழ போராளிகளை, தமிழ் மொழியின் வளர்ச்சியை கடுமையாக எதிர்த்தவர்தான் சோ.. திருக்குறளை சொல்லி ஆரம்பிக்காமல் பகவத்கீதையை சமத்கிருத்ததில் சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பிப்பது ஏன்? இதுதான் ஆன்மீக அரசியலின் ஆரம்பமா?

 • partha - chennai,இந்தியா

  பூச்சி, ஜெயாவையும் MGR யும் திட்டும்போதே தெரியவில்லையா அவர் மற்றைய திராவிட கொள்ளை கூட்டத்தை சேர்த்தவர் என்று

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  அரசியல் கூட்டங்களுக்கு கால்ஷீட் காசு வாங்காம தருவாரா

 • Ray - Chennai,இந்தியா

  இவர் படம் வெளியிடும்போது மற்ற எல்லா பட வெளியீடுகளை தள்ளிப் போட ஏற்பாடு செய்து கொள்வார் அதுபோல மற்ற கட்சிகள் இவருக்கு வழி விட்டு அரசியல் துறவறம் அறிவிக்கலாம் எதிராளி இளிச்ச வாயனாயிருந்தால் தம்பி சண்டப் ப்ரசண்டன்னு ஒரு சொலவடை உண்டே

 • Raja USA - Newyork,யூ.எஸ்.ஏ

  முக்காலமும் உணர்ந்த மூதறிஞர் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் நிலைப்பாடு அவரது உரிமை. ஆனால் பொதுமக்களுக்கு அவர் எப்படி தொண்டாற்ற உள்ளார் என்பதற்கான திட்டவரைவு அறிக்கையை முதலில் வெளியிட வேண்டும். பொதுமக்களின் தலையாய பிரச்சினை லஞ்சம். ஏழையோ பணக்காரனோ ஐந்தாயிரம் எடுத்து வைத்தால்தான் பிணம் தகனமேடை ஏறும். அந்த சோகத்தோட போய் இறப்புச்சான்று வேணும்னு கேட்டா ஒரு ஆயிரம் வெட்டணும். செத்தவனோட வாரிசு சான்று வேணுமா ஒரு ஐயாயிரம் கொடுத்துட்டு விஏஒ, ஆர்ஐ, தாசில்தாரனு ஒருவாரம் அலையனும். அப்படி செத்தவன் பேர்ல இருக்கற ஓலைக்குடிசையை வாரிசு பேருக்கு மாத்தணும்னா, இன்னொரு ஐயாயிரம் வெட்டணும். இப்படி செத்தவன்கிட்டயே வாய்க்கரிசி கேட்கற வருவாய் துறை அதிகாரிகள கேட்டா அவுங்க சொல்ற பதில் "உங்ககிட்ட வாங்கற பணத்துல நாங்க ஆர்டிஓ, சப்-கலெக்டர், கலெக்டர், துறை சார்ந்த அமைச்சர், சின்னம்மா, பெரியம்மா (அல்லது தளபதி, தானை தலைவர்) எல்லோருக்கும் கப்பம் கட்டுறோம்" அப்படிம்பாங்க. மேற்சொன்ன உதாரணம் கோடியில் ஒன்று. சுடுகாட்டில் ஆரம்பித்து சென்னை கோட்டை வரை லஞ்சம் லஞ்சம் எதிலும் லஞ்சம். இப்படி புரையோடிய லஞ்சத்துக்கு ரஜினியின் தீர்வு என்ன, திட்டம் என்ன? புரையோடிய அரசு அலுவலர்களையும், காவல்துறையையும் எப்படி மீட்டு எடுக்க போகிறார்? அவருடைய மனைவியையும், மகள்களையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் அவர், அவருடைய அரசியல் வாரிசுகளை/வட்டம்/மாவட்டங்களை எப்படி கட்டுப்படுத்த போகிறார்?

 • kk -

  Please all these media dont give importance to such news. Let him come with a agenda for the people and then we can jump to a conclusion. Today to win election you need money power. This was evident in RK nagar. Like our Former president Mr. APJ dream let us hope the next younger generation at least will make the change required to clean the corrupt system. I dont have faith in people who wanted to ride on others.

 • Girija - Chennai,இந்தியா

  சரியான கால நேரத்தில் எடுத்த முடிவு , ஆ தி மு க அதோகதியில் , தி மு க திக்கு தெரியாமல் தவிக்கையில், காங்கிரஸ் உட் கட்சி கலகத்தில் மூழ்கியிருக்க, கம்யூனிஸ்டுகள் காணாமல் போய் பல வருடங்கள் ஆகியிருக்கும் வேளையில் தக்க முடிவெடுத்த ரஜனிக்கு வாழ்த்துக்கள் வெற்றி பெற

 • Arasu ( Aanda Parambarai ) - Madurai,இந்தியா

  நான் அரசியலுக்கு வருவது உறுதி : ரஜினி அறிவிப்பு , ini notta kkum unakkum thaan pooti

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இப்ப கூட எப்ப வருவேன்னு சொல்லல்லை. ஆண்டவன் சொல்லும் போது வருவேன்னு தான் சொல்லிக்கீறார். அதுக்கே இங்கே அடிதடியா கீது. இவரு வர்றதுக்குள்ளே ஆண்டவனே அரசியலுக்கு வந்துடுவான்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  மாற்று கிட்னியும், டயாலிசிஸும் அரசு செலவில் பண்ணக்கலாம்னு லதா ரஜினி சொன்னார்களாம். அதன் அண்ணன் அரசியலில் குதிக்க போறேன்னு சொல்லிட்டாரு போல.

 • karthi - chennai,இந்தியா

  ரஜினி அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் தந்து கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், ஜெயலலிதா மர்ம மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஜெயலலிதாவின் கடைசி நாட்கள் முடித்துவைக்கப்பட்டன. இப்பொழுது அதே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஆர்.கே.நகர் தேர்தலில் நூதனமான முறையில் பணம் விநியோகித்து MLA வாகி விட்டார். மக்கள் பீதியோடு இந்த தேர்தல் முடிவை பார்க்கிறார்கள். தேர்தல் ஆணையம், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் இவை அனைத்தும் இன்னும் அந்த தேர்தலின் முடிவை எதிர்த்து ஒன்றும் செய்யவில்லை. நாளை இதே குடும்பத்தின் கையில் முதல்வர் பதவி போனால் என்னாவது என்பது தான் மக்களின் பயம். ரஜினி மற்றும் கமல் சேர்ந்தோ அல்லது தனித்தோ மாபியா கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றவேண்டும். சசிகலா கும்பல் அரசியலில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட வேண்டும். இதுதான் மக்களின் விருப்பம்.

 • skandh - chennai,இந்தியா

  3 வருடத்துக்கு சஸ்பென்ஸ் வைத்தால் ரசிகர்கள் தொந்தரவில்லாமல் வியாபாரம் செய்யலாம்.கட்டாயம் 2019 இல் பீ ஜெ பியை தூக்கிவிடவே இந்த சஸ்பென்ஸ்.அதாவது சட்டசபை தேர்தலில் தனக்கு வாய்ப்பு வேண்டுமானால் பீ ஜெ பிக்கு ஒழுங்காக வேலைசெய் என்பதே இந்த வாய்ஸ் .கட்டாயம் குருமூர்த்தியுடன் நடத்தப்படும் நாடகமே.அடையாளங்கண்டு இவரது எல்லாப்படத்தையும் தோற்கடிக்க வேண்டும். இந்த ஏமாற்றி வேலை டர்ஹாமிழனிடம் எடுபடாது என்பது எல்லாருக்கும் உணர்த்த வேண்டும். எல்லா கட்சி களும் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  கடந்த ஒருவருடமாக இல்லை கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக திராவிட ஆட்சியில் அல்லோலப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அப்போது எங்கே சென்றீர்கள்? கலைஞ்சர் மற்றும் ஜெ இருக்கும்போது அவர்கள் செய்த அட்டூழியங்களை எல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு மாறி மாறி அவர்களை வரவேற்த்துவிட்டு இப்பொது நடை முறை அரசியலில் அவர்கள் விடை பெற்றபின் உங்களுக்கு ஞானோதயம் வந்தது போல பேசுகிறீர்கள். தமிழர்கள் முதுகில் மத்திய மாநில அரசுகள் பலவிஷயத்தில் இன்னும் குத்திக்கொண்டு இருக்கிறார்கள் அதை பற்றியெல்லாம் ஒரு வார்த்தை பேசி இருப்பீர்களா? சாதாரண மக்களாகிய நாங்களாவது கடந்த எட்டு வருடமாக எங்களின் மனக்குமுறல்களை இங்கே கருத்து வடிவில் கொட்டி தீர்த்து இருக்கிறோம் ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் வருவது எல்லாமே வேறு கணக்கு. அந்த கணக்கை இப்போ சொல்றேன். தமிழகத்துல உள்ள பிஜேபி தலைவர்களை வைத்து ஒரு மண்ணும் நோண்ட முடியாதுன்னு மோடிக்கு தெரியும். அதனால அவர்களை நம்பி பிஜேபி இங்கு ஒரு ஆணி கூட புடுங்க முடியாது. ஏற்கனவே பிஜேபி ஆளும் அதிமுகாவை சின்னாபின்னமாக்கிட்டாங்க, அவங்க கூட கூட்டணி வச்சா ஒரு ஒரு தொகுதியில் இருக்கும் ஆயிரத்தி ஐநூறு ஓட்டு கூட கரைந்து விடும். பிறகு திமுக ஆட்சிக்கு வந்துட்டாங்கன்னா அவங்களை வழிக்கு கொண்டு பிஜேபிக்கு பெரும் பாடு ஆகிடும். சோ இப்பத்திக்கு ரஜினியாகிய உங்களை அதுருதுல்ல உதிருதில்லன்னு பேசவச்சி உங்க மூலம் முதுகெலும்பு இல்லாத ஒரு தலையாட்டி பொம்மை ஆட்சியை தமிழகத்துல உருவாக்க பிஜேபி முயற்சி செய்றாங்க. உங்களுக்கு முதுகெலும்பு இருந்திருந்தா நீங்க தான் எப்பவோ அரசியலுக்கு வந்துட்டு இருப்பீங்கள்ல. கூட்டி கழிச்சி பாருங்க கடைசியில ஆந்திராவில சிரஞ்சீவி கட்சி ஆரம்பிச்சி காங்கிரஸ் கூட சேர்த்த மாதிரி தான் நாளைக்கு நீங்களும் கட்சி ஆரம்பிச்சி பிஜேபி கூட சேர்க்க்க போறீங்க வாழ்த்துக்கள் முதுகெலும்பு இல்லாத தலைவரே

 • K.Palanivelu - Toronto,கனடா

  ஆன்மிகம் என்றாலே அது இந்துமதத்தை சார்ந்துதான் இருக்குமா? ஏன் வீரமணி, திருமா போன்றோர் பதறவேண்டும்? ரஜனி தனதுக்கட்சிக்கு இஸ்லாம் மத சாயலில் பெயரிட்டால் இது மதசார்பற்ற கட்சி என்று விழுந்து விழுந்து ஆதரிப்பார்கள் என்பது திண்ணம்.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  ரஜினி அரசியலுக்கு வருவதில் இலங்கை ராஜபக்ஷேயை மகன் சந்தோஷமாம் . இனியாவது தமிழனுக்கு யார் விரோதி யார் துரோகி என்று தெரிந்தால் சரி .

 • Ramesh Lal - coimbatore,இந்தியா

  பத்திரிகையாளர் சோ. இருந்திருந்தால் ஒரு ஆண்டுக்கு முன்பே உங்களை பி.ஜெ.பி. இன் தமிழக தலைவராக்கி இருப்பார். ஜெயலலிதா இருக்கும் வரை நீங்கள் அரசியலுக்கு வந்திருந்தால் ஜெ.ஜெ. பாதிக்கப்படுவார் என அவர் கருதியதால் உங்களை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தார். இது உங்கள் மனசுக்கு தெரியும்.

 • Ramakrishnan, Chennai - ,

  I onbehalf of all commentators on this issue, wish people of TN & Rajinikanth a very happy new year ...

 • sun - Atlanta,யூ.எஸ்.ஏ

  ரஜினி அரசியல்வாதி ஆகி விட்டார். ஏனன்றால் 1. Cheating Chennai corporation - He don't want to pay regular normal rent for his Travel agency. 2. Cheating Indian Bank - pledging his low value land to a higher amount for movie production. 3. Cheating Landlord - Not paying rent for his School landlord. 4. Cheating employees of his school - Not paying Salary in time. 5.

 • அப்பு -

  கூத்தாடிகளை அறிவுஜீவிகள், தலைவர்கள் என்று தமிழர்கள் நம்ப ஆரம்பித்த நாள் முதலே வீழ்ச்சி தொடங்கி விட்டது.

 • Hariharan Raman - erode,இந்தியா

  இவர் அரசியலுக்கு வருகிறேன் என்றவுடன் இங்குள்ள பல அரசியல் நபர்கள் மற்றும் அவர்களின் அடி வருடிகள் பலர் தூக்கம் துலைத்து பேந்த பேந்த விழிக்கிறார்கள்.

 • S A Sarma - Hyderabad,இந்தியா

  ரஜனிகாந்த் அவர்கள் அரசியலில் பிரவேஷம் செய்ய முடிவுசெய்துள்ளார் . எந்த விதத்தில் , தமிழக அரசியலில் மாற்றம் எந்த அளவு ஏற்படுத்தும் என்று எதிர்காலம் மட்டுமே சொல்லும். அதுவும் தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளது. தமிழன் என்ற வார்த்தையை வைத்தே அரசியல் பிழைப்பை நடத்தும் கூட்டம் பல. தமிழ் மொழி என்று கூறி, ஹிந்தி மொழியை எதிர்த்து பதவிக்கு வந்த தி மு க , தமிழை மறந்தது அனைவருக்கும் தெரியும். தனது சொந்தகாரனுக்கு ஹிந்தி மொழி தெரியும் என்று கூறி, மாறன் குடும்பத்திற்கு மத்திய அரசில் இடம் வாங்கித்தந்தது இன்றும் மக்கள் மறக்கவில்லை. தமிழ், தமிழ் மக்கள் என்று சொல்லி ஐம்பது வருடமாக மக்களை ஏமாற்றினார்கள். அது மட்டுமல்ல , அதற்கும் ஒரு பதில். பேச்சை வைத்தே ஒரு அரசியல் நாடகம் நடத்தி , அரசியலை ஒரு வியாபார தலமாக மாற்றிய பெருமை, திராவிட கட்சிகளையே சாரும். தமிழ், தமிழன் என்று சொல்லி புதிதாக வந்த கூட்ட தலைவர்கள்- சீமான், திருமாவளன், திருமுருகன் போன்ற மனிதர்கள். இவர்கள் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பெரியாரை தமிழன் என்பார்கள், கருணாநிதியை சுத்த தமிழின் என்பார்கள், ரஜினிகாந்தை மராத்தியன் என்பார்கள். பணம், மற்றும் பதவி கொடுத்தால், இவர்கள் தமிழ் மக்களுக்காக வாழும் உண்மையான தமிழர்கள் என்பார்கள். ரஜினிகாந்த் சொன்ன முக்கிய அறிவிப்பு – “ஆன்மீக அரசியல்“. இது ஒரு புதிய வார்த்தை. ஆன்மீகத்தை தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடித்து வெகு நாட்கள் ஆகி விட்டது. ஆன்மிகம் இல்லாத மனிதன், உயிர் இல்லாத மனிதன். ஆன்மிகம் இல்லாத அரசியலை நாம் ஐம்பது வருடமாக பார்த்து கொண்டு உள்ளோம். திருமாவளவன் செய்யும் அரசியல், மதத்தை வைத்து பிணத்தை கூட விலை பேசும் அரசியல்வாதி. ரஜினிகாந்த் திருமாவளவன் மூலம் அறிய வேண்டியது – பிணத்தை வைத்து அரசியல் நாடகம் செய்யக்கூடாது, ஆன்மிகம் உண்மையை தேடும் பாதை. ஆன்மீக பாதையில் நாம் ஆயிரம் ஆயிரம் வருடமாக நடந்து வந்திருக்கிறோம். உண்மையான ஆன்மிகம் உண்மையை தேடி செல்லும் வழி. ஆன்மிகம் உண்மையின் வழி. நேர்மையின் பாதை. நாட்டின் ஒற்றுமையை வழிஉறுத்தும் திசை. நமது ஆன்மிகம் உலகத்தையே ஒன்றாக நினைக்கும் பரந்த நோக்கம். இல்லையென்றால், நமது நாட்டில் வேறு மதங்கள் தழைக்க வழியில்லை. திராவிட கட்சிகள், சீமான் மற்றும் அறிவில்லா அறிவாளிகள் செய்த மாபெரும் பாவசெயல் –ஆன்மீகத்தை தமிழ் நாட்டில் இருந்து விரட்டி அடித்து, கோவிலை கொள்ளை அடித்து, மற்ற மத கோட்பாடுகளை உண்மை என்று கூறி , அரசியல் வியாபாரம் செய்தார்கள். எனவே ரஜினிகாந்த் அவர்கள் மிக பெரிய , கஷ்டமான பாதையை தேர்வு செய்துள்ளார். இவர் இப்பாதையில் செல்வது மிக கடினம். ஆன்மீக அரசியல், நாட்டின், மற்றும் மக்களுக்காக வாழும் அரசியல் வாழ்க்கை. நமது சுதந்திர போராட்ட வீரர்கள் , ஆன்மீக அரசியல் மூலம் நாட்டை புதுப்பித்தார்கள். அரவிந்தர், திலக், கோகலே போன்ற தலைவர்கள் ஆன்மீகத்தின் மூலம் நமக்கு வழி காட்டினார்கள். வினோபா பாவே எளிமையான வாழ்வு வாழ்ந்தார். மகாத்மா காந்தி போன்றவர்கள் வாழ்க்கையின் வசதிகளை உதறித்தள்ளினார்கள். நேதாஜி அவர்கள் நாட்டிற்காக தன் பதவியை விட்டு எறிந்தார். மகாகவி பாரதி போன்றவர்கள் , கவிதையால் தேசியத்தை வளர்த்தார்கள். பாரதி மற்றும் சிதம்பரனார் வாழ்ந்த தமிழ்நாட்டில் , சீமானும், திருமாவளவனும் இப்பொழுது அரசியல் வியாபாரம் செய்கின்றார்கள். ரஜினிகாந்த் அவர்கள் சிந்திக்க வேண்டும். ஆன்மீக அரசியல், தியாகத்தாலும், நேர்மையாலும் வளர்க்க படவேண்டும். காமராஜ் அவர்கள், நாட்டிற்கு பாடு பட்டு, இறக்கும் சமயத்தில், தமிழ்நாட்டின் அவல நிலையை கண்டு வருத்ததுடன் இறந்தார். சிதம்பரனார் கடனுடன் மடிந்தார். பாரதி பாடி பாடி , அவரது வீட்டை காக்காமலே இறந்து விட்டார். நாம் இதை போன்ற தலைவர்களை பற்றி பேசிக்கொண்டே போகலாம். அந்த தமிழ்நாட்டில் தான் வீட்டுக்காக ஒரு கட்சி, குடும்பத்திற்காக ஒரு கட்சி, ஒரு மனிதனுக்காக ஒரு கூட்டம், ஒரு கூட்டத்திற்காக ஒரு தலைவன் என்று அரசியல் பேசி தமிழ்நாட்டை ஒரு பண வெறி பிடித்த மாநிலமாக மாற்றிவிட்டார்கள். ஆன்மிகம் அரசியலில் வேண்டும். ஆன்மிகம் நம்மை ஒருமை படுத்தும். ஆனால் , நமது திராவிட கூட்டம் , ஆன்மீகத்தையே ஒரு அரசியலாக மாற்றி, அவர்களின் கொடிகளை எங்கும் நட்டு, தமிழ்நாட்டை ஒரு ஆன்மா இல்லாத ஒரு கூடாரமாக மாற்றி விட்டார்கள். இதை பற்றி ரஜினிகாந்த் அவர்கள் யோசிக்க வேண்டும். தமிழ் நாட்டில் எங்கும் ஒரு பேராசை. மக்கள் தங்கள் ஐந்து வருட வாழ்க்கையை இருபது ரூபாய்க்கும் , ஐநூறு ரூபாய்க்கும் விற்கும் அவல நிலை. ஆன்மீகம் இல்லா வீடு, உண்மையில்லா அரசியல், நேர்மையற்ற தலைவர்கள் நடுவே ஆன்மீக பாதை மிகவும் ஒரு நீண்ட பாதை. தினகரன் போன்ற அரசியல் வியாபாரம் செய்யும் மனிதர்களை தோற்கடிக்க நமக்கு தேவை ரூபாய் இருபது நோட்டு இல்லை. நாணயமான மனிதர்கள். நாணயம் ஆன்மீகத்தின் வேரில் தான் வளர முடியும். ஸ்டாலின் போன்ற கும்குமத்தை அழிக்கும் தலைவர்களை நாம் ஆன்மீகத்தின் ஆற்றலால்தான் தகர்த்து ஏறிய முடியும். சீமான் மற்றும் திருமாவளவன் போன்ற வேஷதாரிகளை , அவர்களின் போலி சித்தாந்தத்தை நாம் தகர்த்து ஏறிய நமக்கு தேவை , ஆன்மீகத்தில் முதிர்ந்த ஞானிகள். தமிழ்நாட்டிற்கு தேவை மக்களை மதமாற்றம் செய்யும் மத வியாபாரம் இல்லை. மதம் ஒரு வெறும் பாதைதான் என்று கூறும் ஆன்மீக தலைவர்கள். ஆன்மிகம் நமது நாட்டின் உயிர்மூச்சு. அதன் நோக்கமே நாம் எல்லாம் ஒன்று என்பது. இந்த நாட்டில் உள்ள ஆன்மீக சிந்தனை போன்று எந்த நாட்டிலும் இல்லை. நமது ஆன்மீகத்தை வைத்து வியாபாரம் செய்த கூட்டம் திராவிட கழகம். அதை நாம் கண்டு கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் எந்த பிரிவினையும் இல்லை. பிரச்சனை எல்லாம், நமது அரசியல்வாதிகளிடமும், மத வியாபாரம் செய்யும் கூட்டமும். மதத்தை வைத்து ஹிந்து மக்களை பிரிக்கும் கூட்டம் தான் திராவிட கழக கும்பல். ஹிந்து இல்லா மக்களை வாக்கிற்காக இணைக்கும் கூட்டம் –மதசார்பற்ற செக்குயுலரிசம் என்ற மதத்தால் வாழும் கூட்டம். இதை எல்லாம் ரஜினிகாந்த் அவர்கள் சந்திக்க நேரிடும். இந்த கூட்டத்திற்கு ரஜினிகாந்த் அவர்கள் பதிலை வைத்து கொண்டு செயல் படவேண்டும்.. நரேந்திர மோடி அவர்களை எப்படி அர்ச்சனை செய்கின்றார்களோ, அதே போல் , ரஜினிகாந்த் அவர்களை , அவரின் ஆன்மீக அரசியல் பாதையை தினமும் அர்ச்சனை செய்யவும், முகநூலில் காரி துப்பவும் செய்வார்கள். இதற்கெல்லாம் மீறி , எதிர்த்து நிற்க வேண்டும். மரம் கீழே விழுந்தால் கூட , ரஜினி அரசியல் வந்ததால் நடந்தது என்பர். குடித்து விட்டு பேசும் மக்களை விட மோசமாக பேச ஆரம்பிப்பார்கள். இந்த ஆன்மீக அரசியலே ஒரு பெரிய மாற்றம். இதை தமிழ்நாட்டில் பேசுவதற்கே ஒரு தைரியம் தேவை.

 • VIGNESHKRISHNAN -

  ரஜினி இன்று தான் அரசியலுக்கு வருவதாக அரிவித்திருக்கிறார். இப்போதுதான் கருவே உருவாக ஆரம்பித்து இருக்கிரது அதற்குள்ள அதை வளர விட்டால் நம்மை அழித்துவிடும் என்று உணர்ந்த சில பேர் அதை கருவிலேயே அழித்துவிடலாம் என்று பயந்து , இதெல்லாம் நடக்காது , இது பெரியார் பிறந்த மண் என்று புலம்புகிறார்கள். பாவம் இப்படி தான் கிருஷ்ணர் பிறக்கும் போது ஹம்சன் கருவிலேயே கொல்ல நினைத்தான், பின் குழந்தையாக இருக்கும் போது கொல்ல முயன்றான் , ஆனால் அக்குழந்தை அவனை கொன்றது. தர்மமே வெல்லும். அதுபோல் தர்மமான நியாயமான ஆன்மீக அரசியலே வெல்லும்... பெரியார் மட்டும் அல்ல ராமானுஜர் பிறந்த மண்ணும் இதுதான்.. ஜெய் ஹிந்...

 • Naga - Muscat,ஓமன்

  அப்ப ட்விட்டர் நாயகன் கமல் முதலமைச்சரா ஆகமுடியதா?

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  எல்லாம் மாயை... காலா திரைப்படம் வெளிவரும் வரை....

 • Kirubakaran - Nagapattinam,இந்தியா

  ரசினி ஒரு வேஸ்ட் பெல்லோ.அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.. நடிப்போடு நிறுத்தி மரியாதையை கடைசி காலத்தில் காப்பாற்றி கொண்டு செல்வதை விட்டு மிச்சம் மீதி இருக்கும் கவுரவத்தையும் கெடுத்து கொண்டு போக போகிறார். அதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ரசினி சார்.

 • Naga - Muscat,ஓமன்

  ரஜினி சார் எனது வாழ்த்துக்கள் , நீங்கள் 1994 ல வராம இருந்தது தமிழன் பாக்கியம் சார் இப்பயாவது கொஞ்சம் அரசியல்னா என்னனு தெரியுது. உங்கள் காலடி மணல் எடுத்து பெட்டு வைய்க்காம தமிழன் தப்பினான்.

 • Jesudass Sathiyan - Doha,கத்தார்

  நான் அரசியலுக்கு வருவது உறுதி... அனால் எப்போது என்பது தெரியாது... வரும்போது வருவேன் - ரஜினி அறிவிப்பு

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  ஆமாம் இது காலத்தின் கட்டாயம் தான்....போண்டியாக வேண்டும் என உங்க தலையெழுத்து..... அந்த ஆண்டவரே சொன்னாலும் நீங்க உங்க தலையெழுத்தை மாற்றிக் கொள்ள முடியாதே....

 • Gopalkrishnan GS Secunderabad - Hyderabad,இந்தியா

  சரியான கணிப்பு. ஆர். கே நகரிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. இன்று அங்கே பணம் வாங்காத ஆளே இல்லை. தந்தித் தொலைக்காட்சியில் ஒருவர் வருகிறார் விவாத மேடைகளில். ஆர். கே நகரின் வாக்காளர் என்கிறார். தேர்தலுக்கு முன்பு அவர் பேச்சு முழுதும் மழுப்பல். அப்போது இவர் செட் அப் என்று தெரிந்துவிட்டது. ஏன் மக்கள் தினகரனுக்கு வாக்கு அளித்தார் என்ற கேள்விக்கு, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று சொல்கிறார். ஒப்பு கொள்வோம். ஒரு வருடமாக அரசின் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. தினகரன் ஓடவிட்டார். இப்போது நயாகரா அருவியை கொட்டும் என்று நினைக்கிறார்கள். இந்த அளவு தரம் கெட்டுவிட்டது. இப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் தேவையில்லாதது. இன்றைய தேவை ஒரு இளைஞர், நல்லவர், நாணயமானவர்.

 • Thamizhan - Tamizhnadu,இந்தியா

  ரஜினியை கடவுளின் அருளாகத் தான் பார்த்தேன் ஆனால் அவரையே காசுபார்க்கும் இயந்திரமாக மாற்ற துணிந்து விட்டார்கள் பாவிகள் ,மக்களுக்கு இவரால் நன்மைபயக்கும் காலம் போய் மக்களால் இவரைசுற்றி உள்ளவர்களுக்கு நன்மைபெற களம் இறங்குகிறார் .என்னால் இந்த கடவுளின் அருள் ஆசைப்படும் என்பதை நம்பமுடியவில்லை .

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பாருங்கள் ..... வேறொரு தினசரியில் வந்த செய்தி ..... \\\\ லஞ்சம் தர மறுத்த விவசாயின் வெள்ளரிக்கொடிகளை பிடுங்கி எரிந்த நஞ்சு அதிகாரி //// ரஜினி முதல்வர் ஆகிறார் என்றே வைத்துக் கொள்வோம் .... இந்த இழிநிலை மாறிவிடுமா ?

 • Raman - Lemuria,இந்தியா

  வருங்கால முதல்வர் ,தமிழக வைன்ஸ்டென் தனுஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

 • jagan - Chennai,இந்தியா

  பா ஜ தமிழ் நாட்டில் ரொம்ப வீக். எனவே இவரை கட்சி தொடங்கவைத்து, தொண்டர் கூட்டி பா ஜவிடம் சேர்ந்தால் நல்லது...இவர் ரெண்டு விரல் சின்னமே தாமரை மேல் தான் உள்ளது (மேலே உள்ள முதல் படத்தில்) , ஆரம்பம் ஓகே , பாக்கலாம்

 • நண்பா - kudamook,இந்தியா

  கொள்கையில்லையாம், மக்கள் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்க மாட்டாராம், போராட்டம் பண்ணவும் மாட்டாராம், நேரடியாகத் தேர்தலில் இறங்கி வெற்றி பெறுவாராம். நம்ம மக்களை எவ்ளோ மட்டமா நினைச்சிருந்தால் இப்படியெல்லாம் வெளிப்படையாக சொல்வார் தினகரனிற்கு வாக்களித்தக் கூட்டத்தைப் பார்த்துப் பெரும் நம்பிக்கை வந்துவிட்டது போல

 • Sivakumar - Chennai,இந்தியா

  நோட்டாவுக்கு மீண்டும் சோதனையா ?

 • a.thirumalai -

  யாரும் அச்சமடைய தேவை இல்லை. அறிவை மட்டும் வளர்த்து கொள்ளாமல் இருங்கள்.

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  ஆன்மீக தலைவர்கள் தமிழ் நாட்டுக்கு தேவை , வருக , காமராஜர் போல நல்ல ஆட்சி தருக , ஒட்டுண்ணி , மூட்டைப்பூச்சி களை அழிக்கவேண்டும் . சுபராம காரைக்குடி

 • moorthy moorthy - chennai,இந்தியா

  நாட்டிற்கு இன்றைய முக்கிய தேவை ஆன்மீக, தர்மம் கொண்ட அரசியலே. அது வந்தால் அரசியல், அரசு, சிஸ்டம், மக்கள் அத்தனையும் தானாகவே சரி ஆகும். அதை உரக்க சொன்னதற்கே ரஜினியை பாராட்டலாம். அதிலும் தமிழகம் போன்ற மாநிலத்தில் சொல்வதற்கு தில் வேண்டும். வாழ்த்துக்கள். Welcome thalaivaa,,,,,

 • கட்டத்துரை - Trichy,இந்தியா

  நஷ்டம் ரஜினிக்கும்,பாஜகவிற்கு தான்.தமிழகத்துக்கோ தமிழக மக்களுக்கோ எந்தவிதத்திலும் லாப,நாட்டம் அல்லது பாதிப்பு என்று எதுவும் இல்லை.

 • srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ

  கடைசியாய் காமராஜர் ஆண்ட வரை ஆன்மீகம், கடவுள் பயம், மக்களுக்கு சேவையாற்றும் மனப்பான்மை என்றிருந்த வரை ஊழலற்ற ஆட்சி நடந்தது. என்று திருட்டு திராவிட கட்சிகள் கடவுள் மறுப்புக்கொள்கையுடன் ஆட்சியை பிடித்தார்களோ அன்று பிடித்த ஏழரை இன்னும் விட்டபாடில்லை. ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலில் இறங்கலாம். மக்கள் பணத்திற்கு (வோட்டுக்கு ) ஆளாய் பறக்கும் இந்த காலத்தில் ரஜினியின் அரசியல் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

 • Shanmugam - Manama,பஹ்ரைன்

  ரஜினி கட்சி ஆரம்பித்தால் நமக்கும் ஒரு துண்டு கிடைக்கும் என்று ரசிகர்கள் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன்தான் கூட வருவார்கள். அவர்களே வருங்காலத்தில் எதிரியாக மாறுவார்கள். ரசிகர்களுடன் வெறும் போட்டோ எடுத்துக்கொண்டு அதை ஒரு ஹிட் படமாக்க முயலும் முயற்சியே தன்னம்பிக்கை இல்லா செயலாக உள்ளது. இந்த வயதில் அடிக்கடி ஒரு ஹெல்த் செக்கப், நடை பயிற்சி, எளிமையான உணவு, தெய்வ வழிபடு இவைகளே உகந்தது.

 • MUDIYATTUM VIDIYATTUM - TAMIL NADU,இந்தியா

  இவரும் அட்டக்கத்தி வீரன் தான் அந்த பொம்பள இருக்கும் வரை வீட்டுக்குள் புகுந்து கொண்டிருந்து அவர் மறைவிற்கு பின் வீரம் வந்தது போல பேசுகிறார் இவர் போஸ் தோட்டத்தில் பட்ட கஷ்டங்களை அன்று தீர்த்துவைத்தவர்கள் ஸ்டாலின் வெற்றிவேல் மற்றும் கராத்தே தியாகராஜன் அன்று ஜெயா கொடுத்த குடைச்சலில் அவர்கள் மூன்று பேர் உதவவே தமிழ்நாட்டில் இருந்தார் இல்லை எனில் ஓடி இருப்பார். இவரிடம் உள்ள பணம் அனைத்தும் தமிழ்நாட்டின் இளிச்சவாயன்கள் பணம் அதன் மீது சவாரி செய்ய நினைக்கிறார்

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  ரஜனி ஒரு தமிழன் இல்லை. அவர் நடிப்பில் மிக சிறந்தவர் .இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆன்மீகம் வேறு அரசியல் வேறு சினிமா வேறு என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர் அரசியலுக்கு வருவதை வரவேட்கிறேன்.. ஆனால் தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும். ரஜனி பிஜேபி யின் முதல்வர் வேட்பாளர் .பன்னீர்செல்வம் உதவி முதல்வர் வேட்பாளர்.. MGR amma வால் உருவாக்கப்பட்ட கட்சிக்கு ஒரு தலைவன் தினகரன் பிறந்து இருக்கிறான் .அம்மாவின் பணிகளையும் ஆட்சியையும் காப்பாற்ற ஆர் கே நகர மக்கள் ஒரு சுயேட்சை வேட்பாராளரை அமோக வெற்றி பெற செய்து இருக்கிறார்கள் இந்த பன்னீரும் பழனியும் வீட்டுக்கு போவது உறுதி. ரஜனியின் ரசிகர்கள் சற்று சிந்தித்து ரஜனியின் அரசியலுக்கு முற்று புள்ளி வைக்கவேண்டும் .தமிழ்நாட்டை சுத்த தமிழ்நாட்டு தமிழன்தான் ஆள வேண்டும்

 • Hari Riag - Bengalore ,இந்தியா

  தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல தலைவர் இல்லமே போச்சு, ரஜினிகாந்த் வருக வருக

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  பெற்றோருக்கு கூழ் ஊத்த வக்கற்றவர்கள் இவர் கட் அவுட்டுக்கு பால் ஊத்துவதை முதலில் நிறுத்துவாரா ?

 • Radha -

  நம் நாட்டு கலாச்சாரத்தையும் கோவில் களையும் மன்னர்களையும் கடவுளையும் அழித்து அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களையும் அரேபியர்களையும் மறந்துவிட்டு அவர்கள் கடவுள் தான் உண்மையான கடவுள் அவர்கள் பூமி தான் உண்மையான புனித பூமி என்று மாறிவிட்ட நாம்... இன்று அண்டை மாநிலத்தில் பிறந்த சகோதரர் ஆளப்போவதாலா நாம் நம் தன்மானத்தை இழக்க போகிறோம்?

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். காலம் குறைவாக உள்ளதால் அதற்கு முன் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது முடிவு செய்யலாம். பேருக்கோ, புகழுக்கோ ஆசைப்பட்டு நான் அரசியலுக்கு வரவில்லை இவர் பலமுறை இவரது ரசிகர்களை ஏமாற்றியது போல் இப்போது ஏமாற்ற போவது நிச்சயம் .இவர் மாட்டிக்கொண்டார் ,கழுவிய நீரில் நழுவிய மீன் போன்று இவர் ஒவ்வொருமுறையும் ரசிகர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். அனால் இந்த முறை சிக்கிக்கொண்டார் என்று அனைவரும் நம்பிய வேளையில் கடந்த ஐந்தாறு நாட்களாக அவர் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட போது ,'அவர் கட்சி ஆரம்பிக்க ,மாட்டார் 'ரஜினி பேரவை ' என்ற மைப்பை முதலில் உருவாக்குவார் என்று பல அரசியல் ஆய்வாளர்கள் கருத்து கூறிய நிலையில் ,மிகவும் சாமர்த்தியமாக 'சட்டமன்ற தேர்தல் சமயம் கட்சி தொடங்கி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி' என்று காலத்தை கடத்தியுள்ளார். அரசியலுக்கு வருவது உறுதி எனில் கட்சியை தொடங்கி ,அதற்கு பெயரிட்டு , அதன்பின் அவர் கூறியது போல் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டால் போதுமே ' அவரது இரு படங்கள் 'காலா , எந்திரன் -2 -0 வெளியிட்டபின் ஏதேனும் காரணம் கூறி அவர் அரசியலில் நுழைவதை தவிர்க்க வாய்ப்புள்ளது. உண்மையிலே அரசியலில் நுழைவது உறுதி என்றால் ஒரு கட்சியை தொடங்கி , அதன் கட்டமைப்பை பலப்படுத்தி , வரும் எந்த தேர்தலாயினும் அதை எதிர்கொள்வது சரியானது . வேறு வழியின்றி மத்தியில் இருக்கும் பாஜகவின் வற்புறுத்தலால் (இல்லையெனில் வருமானவரித்துறை சோதனை )காலம் இறங்குவதாக 'பாவலா ' காட்டும் வேலைதான் இது. இதனால் பாஜக இப்போதைய அதிமுக பொம்மை ஆட்சியை மேலும் மிரட்டி காரியம் சாதிக்க இது உதவும். குருமூர்த்தி சிந்தனையால் உருவான இந்த திட்டம் ஒருபோதும் வெல்லப்போவ தில்லை . கிட்டத்தட்ட 85 % வாக்குவங்கியை வைத்திருக்கும் திராவிட கட்சிகள் இவரை கட்சி தொடங்க அனுமதிக்க மாட்டார்கள்.

 • appaavi - aandipatti,இந்தியா

  என் choice 'லதா சௌந்தர்யா ஐஸ்வர்யா (LSIMK)' முன்னேற்ற கலக்கம்....

 • appaavi - aandipatti,இந்தியா

  இனி வாளையே கையில் தூக்க தெம்பில்லாத போதுதான் தலைவர் போருக்கு கிளம்புவார்...

 • Visu Iyer - chennai,இந்தியா

  ஆலோசனைக்கு வை கோ வை வைத்துக் கொள்ளுங்கள்..

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  இவரு அரசியலுக்கு வந்துட்டாராம் ஆனால் மன்றங்கள் எல்லாம் இணைந்து பெரியவர்களையும் ரசிகர் மன்றத்தில் சேர்த்த பிறகு தான் அரசியல் செய்வாராம் அதுவரை ரஜினியோ ரசிகரா யாரும் அரசியலில் பேசக்கூடாதாம் . ஏதோ சுயநல திட்டம் போல உள்ளது . அரசியலுக்கு வரேன் என்று இன்னும் 10 படம் ஓட்டிவிட்டு 2019 பிஜேபி ஆட்சி போன பின் அப்பாடா இனி IT ரைட் தொல்லையில்லை என்று அரசியல் முடிவை கைவிட்டுவிடுவார்

 • Ramakrishnan, Chennai - ,

  TN has been mudslinged with Dravidian politics...in turn separatists (Dravidian parties) never have allowed merit to take lead in governing body, thus taking the State backward for the last 60 years.... atleast now someone talks about "niyayam, nermai, naduthiram" to progress.. lets encourage him to bring in the much wanted CHANGE towards progressive society.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  சீமானை பற்றி அவனின் தொண்டன் சொன்னது ஆதாரத்தோட என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர விரும்புகின்றேன். நான் ஒரு "நாம் தமிழர் " கட்சியில் தீவிர தொண்டனாக வலம் வந்தவன், என்னை விட கட்சி பணியில் தீவிரம் காட்ட முடியாதளவுக்கு சூறாவளியாக கட்சியை வலுபடுத்த நானும் ஒரு பங்கு உதவினேன், இதெல்லாம் யாருக்காக நம் தமிழ் இனத்துக்காக, எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் எங்களிடம் விதைத்த விதை அப்படி " நானும் அப்படிதான் இயங்கினேன், என் குடும்பத்தை கூட கவனிக்காமல் முழு நேர தொண்டனாக திகழ்ந்தேன் 'அன்று ஒருநாள் அதாவது பாம்பனில் எழுச்சிக் கூட்டம் நடைபெற்ற அன்று காலை 3:40 மணியளவில் அண்ணன் அழைத்திருந்தார், மேடையில் பேசக் கூடிய நபர்களில் நானும் ஒருவன். என்னிடம் அண்ணன் சீமான் அவர்கள் : திமுக பற்றி இந்த மேடையில் விமர்சிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார், அதுமட்டுமில்லாமல் நம் பேச்சு அனைத்தும் "பாஜக " அரசை தாக்கியே பேச வேண்டும் என கட்டளையிட்டார் "நான் அப்போது ஈழதமிழர்கள் வாழ்வாதாரத்தை இழந்ததற்கு முழுகாரணம் காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சி திமுக வும் தானே என்று வினவினேன், இப்படியே பேசி கொண்ட நேரத்தில் வாய் போர் முற்றியது, இறுதியில் அந்த மேடையில் என்னை பேச விடாமல் தடுத்துவிட்டார், அன்று எழுச்சி கூட்டம் முடிந்து, அடுத்த நாள் பிரபல திமுக பிரமுகர் சீமானை சந்திக்க வந்தார், அப்பொழுது தான் புரிந்தது "என் மரமண்டைக்கு சீமான் கட்சி நடத்துவது தமிழர்களுக்காக அல்ல "அவருடைய வருமானத்திற்கென்று, நாம் தான் சீமானை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம், சீமானுக்கு கிறித்துவ மிஷனரிகளிருந்து கட்சி நன்கொடை என்று மாதந்தோறும் சேருகின்றது, சீமானுக்கு தமிழகத்தில் தேவையானது "இரண்டு தான் மக்களை ஏமாற்றி அரியணையில் ஏறி இந்தியாவை துண்டாடுவது, இந்து மதத்தை இந்தியாவிலிருந்து துரத்துவது, நான் அன்றே சீமானின் கட்சியிலிருந்து விலகி விட்டேன். நான் இந்து மதத்தையும், இந்தியாவையும் துண்டாட நினைக்கும் ஒரு அயோக்கியனுக்கு துணை போவதில்லை என்று என் இன தமிழ் மக்களே, நாம் தமிழர் என்ற அயோக்கிய கட்சியை விட்டு விலகுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் சைமன் என்கிற சீமானின் தொண்டனாக இருந்து ஏமாந்து போன கதையை மதுரையை சேர்ந்த ஒருவர் அனுப்பியதாக வாட்டசாப்ப் உலா வரும் செய்தி ...புட்சா மொளைச்சி இருக்கிற பூசாரி மற்றும் சைமனின் சிஷ்ய கோடிக்கு இந்த செய்தி சமர்ப்பணம் ...

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  பாபா முத்திரை தான் சின்னம் என்றால் பாபா படம் போல தோற்பது உறுதி .

 • senthilkumar - Chenai Arummbakkam,இந்தியா

  Welcome தலைவா Nallavarl jeipathu illai. nallavarkalukku utthaum chanakiyathan mattu me jaikkum

 • senthilkumar - Chenai Arummbakkam,இந்தியா

  Sir welcome to Tamil Nadu politics ippva oruthan kaiya kodukkala kala kodukalanu arampithutan.inum oruthan anmigam yanpathu yantha matha samyam poosalamnu amidian . so please deep plan.nalla varkal jaithathu iillai so please plan as like kaliyuga chankkiyan do well .plan do poor people and improve poor TamilNadu. valzha nama paratham valzha nama tamilagam. (Nalla Chanakiya thantharame vellum) yanna yathu munetrm threiyatha jathi. matham. panakkaran. Inu mutta piece neraiyya irruku athu than periya problem.all The best.

 • S.Palanivelu - Chennai,இந்தியா

  கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு என் நாடு ஏன் இப்படி கூத்தாடிகளின் பின்னால் போகின்றது . ஏ தாழ்ந்த தமிழினமே..

 • Kailash - Chennai,இந்தியா

  இங்கே ரஜினிக்கு எதிராக கருத்து எழுதுபவர்கள் அனைவருமே எதோ ஒரு கட்சியை சார்ந்தவர்கள் தான்... அவர் வருவதை நான் ஆதரிக்கிறேன்... காரணம்.. நான் மாற்றத்தை விரும்புபவன். அவர் வரக்கூடாது என்று கூறுபவர்கள் யாருக்கு ஓட்டுபோடுவார்கள்? பாஜ, காங், திமுக, அதிமுக என்றுதான் போடுவார்கள் 5 % கீழே உள்ள கட்சிதான் பாமக, நாம் தமிழர், மதிமுக, வி சி க போன்றவை. காங் திமுக அதிமுக வந்தால் ஊழல் கொள்ளை, பாஜ வந்தால் மதவாதம் + கார்பொரேட் அரசியல் அராஜகம், நாம் தமிழர் என்றால் இனவாதம் அவர் கூறும் தமிழர் அர்த்தம் தலையை சுற்றும்... அனைவரும் ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டனர்... வேறு யாரவது வந்தால் தான் சரியாகும் அது ரஜினியாக இருந்தால் என்ன... அவரும் வரட்டும் வெல்லட்டும் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்... வரவே கூடாது என்று எப்படி கூற முடியும்?... தமிழன் கன்னடன் தெலுங்கன் என்று உளற கூடாது.. அப்படி உளறுபவர்கள் கோழைகள்... ரஜினியை எதிர்ப்பவர்கள் வீரமுள்ள ஆண்மகனாக இருந்தால் இங்கே இந்த கருத்து பகுதியில் எதிர்க்கக்கூடாது.. போர்க்களத்தில் தேர்தல் என்ற போரில் நின்று வெற்றிபெறட்டும்...

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  எல்லா தொகுதியிலும் தோற்பது உறுதி . அதுக்கு முன்னே 3 வருடங்கள் உள்ளது .

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ரஜினி எங்கே சார் அரசியல் பிரவேசம் பண்ணினார்?? என்ன கட்சி0என்ன கொள்கை என்ன கொடி எதையுமே சொல்லவில்லை. "உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை, அடுத்த சட்டமன்ற தேர்தலில் கட்சி ஆரம்பித்து போட்டி யிடுவாராம். //இது பேர் அரசியல் பிரவேசமா

 • ramesh -

  தலைவர் வரார்னதும் டெப்பாசிட இதுவரை வாங்காத கட்சிகள்தான் அதிகம் பயப்டுறானுங்க... நாகரிகமான அரசியலை தலைவர் முன்னெடுக்கிறார் . இந்த டெபாசிட் ல்லாத கேஸ்களுக்கு நாம் பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை. தலைவர் வந்த்துட்டார் இதுவே எங்களுக்கு மகிழ்ச்சி

 • Thamizhan - Tamizhnadu,இந்தியா

  நிச்சயமா உன்னை யார் இயக்குகிறார்கள் என்று புரிந்துவிட்டது நீ தமிழக மக்களுக்காக செய்தது என்ன ,இப்பொழுது எதற்க்காக அரசியலில் களமிறங்குகிறாய் ,,உண்மையாகவே மக்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால் இருபது வருடங்கள் முன்பாகவே நீ அரசியலில் களமிறங்கியிருப்பாய் ,ஆனால் நீ அப்படி செய்யவில்லை ,கடவுள் இருக்கிறான் ,உண்மை வெல்லும் .

 • பூசாரி புண்ணியகோடி - Langawi,மலேஷியா

  தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு பஞ்சம்..வாங்க சொட்ட ரஜினி சார் வாங்க...உங்க கட்சி வந்து,உங்க தலைமைல தமிழகத்துக்கு விடிவெள்ளி வரப்போகுது.பாலார்,தேனார் போன்றவற்றில் நனைந்து மூழ்கி மகிழ மக்கள் ரெடியாக இருப்பார்கள்...

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எட்டாவது எட்டெ தாண்டினப்புறமும் "எட்டா கனி"க்கு ஆசைபடராம்ப்பா, எசமான்... ஹய்யய்ய்யோ...., ஹய்யய்ய்யோ...

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இவனெல்லாம் நம்மை ஆளவேண்டும் என்று இவன் நினைப்பதை நினைத்தாலே உடம்பெல்லாம் அரிக்கிறது......... ரஜினி ரசிகர்கள் இன்னமும் முட்டாள்களாக இருக்காமல் இவன் பின்னால் சுத்துவதை நிறுத்துங்கள்.

 • Mohan Nadar - Mumbai,இந்தியா

  நீங்கள் டிக்கெட் என்ற பெயரில் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து கோடிக்கணக்கில் சேர்த்த்து கொண்டு , கட்சி தொடங்கும் அளவூக்கு வளர்த்தத்திற்கு தமிழன் சரியில்லை

 • S.Palanivelu - Chennai,இந்தியா

  இன்னும் எத்தனை ஆண்டுகள் தமிழ்நாடு சீரழிய போகுது என்பதை இன்னும் தமிழக மக்கள் உணராதது ஏன் ..?

 • SSTHUGLAK - DELTA,இந்தியா

  ரஜினி கவனிப்போம் என்று சொன்னதை போல நாமும் ரஜினியை கவனிப்போம் .............தற்போதைக்கு வேறு வழி இல்லை

 • elango - trichy,இந்தியா

  எம்ஜிஆா் காலத்தில் இருந்த ஏமாளி தமிழா்கள் இப்போது இல்லை ஒரு நாளும் கன்னடனை ஆள விட மாட்டோம்

 • Raja -

  இந்த நாடகம்........காலா மற்றும் 2.O வருவதாலா ? வாயை மூடிக்கொண்டு இரு ப்பது .....ரஜினி க்கு நல்லது

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  அரசியலை சாக்கடை என்பார்கள்...அதை பூக்கடையாக மாற்ற வந்த பொக்கிஷமே வருக...வருக...என வரவேற்கிறோம்....

 • spr - chennai,இந்தியா

  திரையுலக காவற்துறை குற்றவாளிகளை பிடிப்பதனை நிஜவாழ்வில் நடத்திக்காட்ட எண்ணி உயிரைவிட்ட காவற்துறை அதிகாரி போல நாட்டையும் முதல்வன் பாணியில் ஆள முடியும் என்றெண்ணும் முட்டாள் அல்ல ரஜினி எனவே கீரி பாம்பு சண்டையிடுவதாக கும்பலைக் நம்ப வைக்கும் வித்தைக்காரர் போல நம்மை ஏமாற்ற நினைக்கிறார் Mr Beens திரைப்படம் ஒன்றில் வரும் நீச்சல் குள காட்சி வாட்ஸ் ஆப் மூலம் வலம் வருவது சிரிக்க வைக்கிறது

 • Jaiganesh -

  மகிழ்ச்சி தலைவா

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  பீதி அடைந்துள்ள பெருங்கூட்டமே... தலைவர் கட்டளையால் தவம் இருக்கிறோம்....தமிழகம் முன்னேற மூடர்களை விரட்டி வெற்றி காண்போம் விரைவில்.....

 • DESANESAN -

  சிவாஜியின் அனுபவம் 🦂சிவாஜி ராவுக்கும் கிட்டும்😥.43  ஆண்டுகள் இங்கு வாழ்ந்தும் ஒரு தூய தமிழரையே மணந்தபின்னும்  டுமிலர்களைப் பற்றி புரிந்துகொள்ளவில்லையே. (காலா தயாரிப்பாளர் மாப்பிள்ளை தனுஷுக்கும்  ஆழ்ந்த அனுதாபங்கள்🦁)

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ரஜினிக்கு அறிவு கிடையாது, அவனது ரசிகர்களுக்கு எங்கே இருக்க போகிறது.

 • srinivas - london,யுனைடெட் கிங்டம்

  ஏப்ரல் 1க்கு தர வேண்டிய வசனத்த யாருப்பா முன்னாடிய கொடுத்தது. 2.0 அவர் பாணில வேகமா சொல்லிட்டாரு.

 • mindum vasantham - madurai,இந்தியா

  Thathu manual kollayan vaikundarajanin benami seemanukku rajini Mel ,kalaignarai is a vellalar a classical Tamil e even in ures,jaya was a Tamil iyengar with chola kingdom srirangam as her native Zeeman questioning both on identity is stupid despite his identity being unclear

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஆக மொத்தம் அந்த கொலரு வாயன் கமலஹாசனுக்கு பெரிய ஆப்பு. முட்டையை குலுங்கின மாறி முழிச்சுக்கின்னு ஒக்காந்து இருப்பாரு தளிவரு. காத்து இருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டிட்டு போன கதையா, நாலஞ்சு மாசமா உட்ட டுமீல் பூரா நாசமா போச்சு. என்ன கமழு ஏதாச்சும் சொல்லுறியா?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  யாரு, எவ்வளவு பேரு வந்தா என்ன? மக்களுக்கு ஒரு அறிவு வேண்டாமா? எவன் வந்தாலும் ஒரு பத்து பேரு அவன் பின்னாடி போயி, கூட்டம் போட்டு அவன பெரிய ஆள் ஆக்கி உடுறாங்களே, இந்த கேடு கெட்ட முட்டாள் தனத்துக்கு ஒரு முடிவு வேண்டாமா, ஒரு விடிவு இல்லியா? அன்னிக்குத்தான் டி.வி இல்ல வெளிச்சம் இல்ல, ஒரு கரன்ட்டு இல்ல, மைக்கு போட்டு பேசுபவன் பூரா உண்மைன்னு நெனச்சிங்க. இன்னிக்கு அப்புடியா, இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தும், உலகம் உங்க கைக்குள்ள வந்ததுமே, முட்டா பசங்களா இருக்கிற நம்ம மக்களை மாற்றாத வரைக்கும், தமிழ்நாடு மட்டுமில்லை, இந்தியாவே எப்படி உருப்படும்? சொல்லுங்க? ஹ்ம்ம் தமிழகம் கண்டிப்பா ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்பா. தமிழகம் ஏறக்குறைய 50, 60 ஆண்டுகள் பின்தங்கியே இருக்கு.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  முதல்ல வேஷ்டியை மடிச்சிக்கட்டி அரைமணிநேரம் சேறு சகதியில் நடந்து காட்டுங்க..தானே ஒரு தொண்டனா இருக்குறவன்தான் உண்மையான தலைவனா இருக்கு முடியும். பல்லக்கு தூக்க நாலு பேர் வேணும்னு சொல்றவன் முதல்வரா கனவுல கூட வரமுடியாது.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  நாட்டிற்கு இன்றைய முக்கிய தேவை ஆன்மீக, தர்மம் கொண்ட அரசியலே. அது வந்தால் அரசியல், அரசு, சிஸ்டம், மக்கள் அத்தனையும் தானாகவே சரி ஆகும். அதை உறக்க சொன்னதற்கே ரஜினியை பாராட்டலாம். அதிலும் தமிழகம் போன்ற மாநிலத்தில் சொல்வதற்கு தில் வேண்டும். வாழ்த்துக்கள்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  ஊடகங்களை பார்த்து பயம்..வூட்ல இருக்கறவங்களை பார்த்தும் பயம்...எல்லாம் பயம் மயம்.. எப்படியா ஊரை திருத்தப்போற?

 • Shanmugam - Manama,பஹ்ரைன்

  சினிமாவில் ஹீரோ. அரசியலில் காமெடியன். கட்டிட டவர் உச்சிவரை ஏறிபோனத்துக்கு அப்புறம் சாவிய கீழ வச்சுட்டு வந்தது நியாபகம் வர போவுது. ஒரு நப்பாசை.

 • tamildesa nesan - kabadapuram,இந்தியா

  சினிமா செய்தியில் போடவேண்டியதை அரசியல் செய்தியாக போட்டிருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.இது அரசியல் செய்தி அல்ல தமிழக அரசியல் நையாண்டி.காரணம்..இவர் ரசிகர்களிடம் கருத்துக்கேட்டு ஆலோசித்து அவர்களை சந்தோஷப்படுத்த அறிக்கை விட்டிருக்கிறார். அதேபோல் அவர் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றாலும் அவரின் அடிப்பொடிகள்,ரசிககுஞ்சுகள் வாக்களித்தால் போதுமானது. தமிழக மக்கள் பற்றியோ அவர்களின் கடந்தகால,நிகழ்கால,எதிர்கால பிரச்னை (ஈழத்தமிழர்,தமிழக மீனவர்,காவிரிநீர்,கூடங்குளம்,நீட்,மீத்தேன்,நியூட்ரினோ,..etc ..)பற்றியோ அவர் இதுவரை பேசியதுமில்லை,இனிமேலும் பேசப்போவதும் இல்லை. எனவே நாமும் வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை.இவரால் தமிழக மக்களுக்கு ஒரு துரும்பும் நன்மை கிடைக்காது.ஆனால் தேர்தல் கமிஷனுக்கு கட்டுத்தொகை (டெபாசிட்)234 பேரிடம் இருந்து அதிகம் கிடைக்கும்.

 • sams - tirunelveli,இந்தியா

  In above reader told that the retired collectors who have better management capabality have to come to politics. But the collectors are the main reason for the corruption. Because the total administration was under him if he works correctly and as per law ,the tashildar office,RTO office,VAO offices are corruption free because he is the team leader for them.about 1 % collectors may be non corrupt but 99% are corrupt. They are not upheld constitutional rights given to them but they do only do chmcha for politician from local ward secratary of ruling or oppasition party (deping upon money power and bribe)to ministets and nothong to public.just for mediator for the bribe in contracts for ministers and mp mla etc.the govt should abolish collector post to avoid corruption in public services because even a begger was contributing 30 paise for his salary as tax(for his daily need of food material (GST from that food)the begger was paid tax from begged amount to govt.so even a begger is a right to question him because collector got a salarycontribution 15 rupeesper month from the begger.but the collector is responisible for another about 10 rupees which also waste as a salary for the corrupt staff under him this amout came from daily taxpay of that begger by various way(e.g tax for food materials and food processing material -because the begger should spent around 75 rupees for his food from that neat 15 %tax by various way means 10 rupees).but this collectors are working as a breeder of corruption and thieves as they are the main culprits for swling public money to politicians against this honest beggers who beg for food.so the anti corruption is start from the corruption team leader office i.e collectors office.I am mentioned the begger as example .because he is poorest of poor level who contribute our tac tem but we pay moretax deping of purchase powet are sping power varies from 100 to 500 rupees per day so normal person contribute 25 to 150 rs per day as tax in varous way to pay this corrupt tem have direct contact or approach level lead by collectors.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  எனக்கு என்ன ஒரு ஆசைனா, தமிழகம் என்னிக்குமே ஒவ்வொருத்தனுக்கும், ஒவ்வொரு பிரச்சினைக்கும் உலகமே வியந்து பார்க்கும் படி ஒரு படிப்பினையை கற்று கொடுக்கும். உலகமே தமிழகத்தை எட்டி பார்க்கும். அதே மாறி, இது போல புல்லுருவிகளாய் உள்ளே பூந்து நம்மை ஏமாற்றும் கமலஹாசன், ரஜினிகாந்த, இன்னும் வரிசையில் காத்து இருக்கும் மார்க்கெட் போன ஆட்டக்களுக்கு என்ன மாதிரியான படிப்பினையை கற்று கொடுக்க போகிறார்கள் என்று உலகமே எதிர் பார்த்து காத்து கொண்டு இருப்பது போல நானும் காத்து கொண்டு இருக்கிறேன். தமிழகம் இது போன்ற ஆட்களுக்கு கொடுக்கும் தண்டனை இந்திய அரசியலையே மாற்றும் அளவுக்கு சக்தி மிகுந்ததாக இருக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அட பாவி, சும்மா சுத்திகிட்டு சிவனேனு இருந்த பல குடும்பங்கள் வாழ்க்கை இனி பாழாகும். அவன் அவன் இனி நான் கட்சிக்கு உழைக்க போறேன், எங்க தலைவனுக்கு உசிரை கூட கொடுப்பேன்னு வீட்டை கூட கவனிக்காமல் நாசமா போவானுகள். அது ஒன்னு தான் மிச்சம்.

 • Jayaraj -

  வாழ்த்துக்கள்

 • suresh - chennai,இந்தியா

  அக்காலத்தில் போரில் வெற்றி பெற்ற மன்னன், தோல்வியடைந்த நாட்டின் கஜானாவை முதலில் கொள்ளையடிப்பான். ஆனால் இன்று சொந்த நாட்டையே கொள்ளையடிக்கும் இன்றைய மன்னர்கள் என இன்றைய ஆட்சியாளர்களை சாடியது சரியான சவுக்கடி. ஒட்டு போட்ட மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து, அவர்களின் வரி பணத்தை, வட்டம் மாவட்டம் ஒன்றியம் என கொள்ளையடிக்கும் இன்றைய அனைத்து கட்சிகளுக்கும் நிச்சயம் மாற்றாக ரஜினி இருப்பார்.( மன்றங்களின் தலையீடுகளை ரஜினி உன்னிப்பாக கவனிக்க வேண்டும்)

 • mindum vasantham - madurai,இந்தியா

  Ennamo rajiniyai ethirkkum anaivarum matrum sillarai katchikalum tamilar valvu alithathu polavum rajini etho kudiyai keduthavar polavum arasiyal seikindranar ,rajini thanipatta nalla manithar,ennai kettaal rajiniyum kamalum sernthe tem a matrattum , tamilakathil nadakkum kodurangalai mayrattum vijaykanth kooda sethukkonga ,food king sarath babu palaya ias officer ru nalla team uruvakattum ,rajini tamilara vachu thaana katchi nadatha poraru

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இது போன்ற ஏமாற்று பேர்வழிகளை தமிழகம் அடித்து துரத்தும் அந்த ஒரே ஒரு பாடத்தில் உங்களையெல்லாம் காப்பாத்த வரேன்னு சொல்லிக்கிட்டு வரும் எவனும் யோசிக்க வேண்டும். ஒரு நல்ல தலைவன் என்பவன் தானாகவே உருவாகுவான். தமிழன் ஒரு இளிச்ச வாயன் என்ற சொல் மாறுவது எப்போது? இன்னும் எவ்வளவு பேர் இது போல லைனில் காத்து இருக்கிறார்கள்?

 • S.v.Ramaswamy -

  வாழ்த்துக்கள்.|

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  ஒரு குறுகிய மண்டபத்தில்...ஆயிரம் விசிலடிச்சான்களின் ஆரவாரத்திற்கும்... மீடியாக்களின் அளப்பாறைகளுக்கும் தனது 68 வது வயதில் அரசியலுக்கு வந்துள்ளீர்கள்... ஏதோ உங்களின் இந்த பாடல் நினைவுக்கு வருகிறது .. உங்களின் ஒரு பாடலில் எட்டாம் எட்டுக்கு மேல இருந்தால் நிம்மதியில்லை... எட்டு எட்டாக மனுஷ வாழ்க்கையை பிரிச்சிக்கோ...இப்போ நீங்க எந்த எட்டில் உள்ளீர்கள்? ஆரம்பத்தில் இதே மீடியாக்கள்/ரசிகர்கள் விஜயகாந்தை இப்படி தான் விளம்பரப்படுத்தின... கடைசியில் அவரை ஒரு குடிகாரராக ஒரு அரசியல் கோமாளியாக சித்தரித்தன இவரின் பெயரில் பல வலை தள பக்கங்களை தொடங்கி கலாய்த்தன... நிஜம் வேறு நிழல் வேறு... நடிகர்களில் எம்ஜியார் ஜெயலலிதாவை தவிர யாரும் அரசியலில் பிரகாசிக்கவில்லை ...மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு. அரசியல் வெற்றிடத்தை நிரப்ப யாருமில்லை... அவர் இருந்த போதும் எதிர்த்து கிளம்பிய பலர்...அவர் காலத்தில் வளர்ந்தாலும்... அவரின் கடைசி காலத்தில் மக்களாலேயே தூக்கியெறியப்பட்டனர்... நிறைய பேர் மாற்றம் வேணும் என்கிறார்கள்.. அன்புமணி, சீமான், விஷால், சரத்குமார், கமலஹாசன், இப்போ ரஜினி, எல்லோரும் பதவி ஆசை இல்லை என்கிறீர்கள்....ஏன் உங்களின் பிரபலத்தை உபயோகப்படுத்தி ஒரு நல்ல படித்தவரை சகாயம் மற்றும்.ரூபா, போன்றவர்களை தேர்ந்தெடுத்து... முன்னிறுத்தி... ஒரு மாற்றத்தை உருவாக்க கூடாது? ஏன் அனைவரும் தனித்தனியாய் ஒரு ஒற்றுமை இல்லாமல் ஓட்டுக்களை பிரித்தால் அதே கொள்ளை கழகங்கள் தானே வெற்றி பெறும்... இதனால் யாருக்கு லாபம்? என் தனிப்பட்ட கருத்து உங்களிடம் ஒரு ஸ்திரத்தன்மை இல்லை... உண்மையிலே நீங்கள் தமிழகத்திற்கு நல்லது செய்யணும் என நினைத்தால் உங்களின் பிரபலத்தை உபயோகப்படுத்தி. ஒரு படித்தவரை பண்பாளரை..நல்லவரை தேடி கண்டுபிடித்து... முன்னிறுத்தி செயல்படுங்கள்...

 • கைப்புள்ள - nj,இந்தியா

  என்றைக்கு இது போன்றவர்களை சாணி அடி அடித்து நைய புடைத்து ஓட ஓட விரட்டி அடிக்கிறார்களோ அன்றைக்கு மட்டுமே தமிழகம் முன்னேறும் வாய்ப்பு உருவாகும்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  எனக்கு தெரிந்தவரை புரிந்த வரை இவருக்கு பின்னால் பாஜக இருக்கு என நினைக்கிறேன்...உங்களின் கருத்துக்கள் என்ன வாசக சகோதரர்களே? இருக்கா? இல்லையா ?

 • M P Moorty - Karur,இந்தியா

  234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். ".... NOTA வோடு போட்டி இடுவார்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அங்க குஜராத்ல ஒரு பைய்யன் 24 வயசில உள்ள பூந்து சூறாவளி மாறி சுத்தி அடிச்சு எம்.எல்.ஏ ஆகி சட்டமன்றத்துக்கே போய்ட்டான். இதெல்லாம் காலு கை ஓஞ்சு போயி ஒரு ஓரமா உக்கார வேண்டிய வயசில இங்க வந்து உங்களையெல்லாம் காப்பாத்தறேன் ன்னு சொல்லிக்கிட்டு. என்ன கொடுமை சரவணன்.

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  மக்களின் அணி தலைவர், ஒருங்கிணைப்பாளர்,,, தம்பி தனுஷ் தானே ரஜினி?? அப்போ விளங்கிடும்...சீக்கிரம் கட்சி துவங்குங்கள்...

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  அந்த ஆண்டவனே வந்தாலும் .....காப்பாத்த முடியாது.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  தமிழகத்தை இனி அந்த ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாதுன்னு தலைவரு அன்னிக்கு சொன்னது இன்னிக்கு நிஜம் ஆகிடுச்சு.

 • பாப்கார்ன் - ,

  ஏன் no MP election?.. இவர் 2019 மத்திய தேர்தல் முடிவை வைத்து தமிழக தேர்தலை எதிர்கொள்வார்... காங் வந்தால் எடுபிடி அரசு கலையும்.. இவர் go to இமயம்.. 2019 பிஜபி ஏன்றால் இவர் பிஜபி முகமாக இறங்குவார்

 • suresh - chennai,இந்தியா

  இவரால் நல்லாட்சி மலரும் எனில் , அவர் தமிழரா என அவர் பூர்வீகத்தை ஆராயாமல் , அவரால் நன்மையா என அவர் வாழ்ந்து வந்த வாழ்க்கையை ஆராய வேண்டும். ரஜினி வெளிநாட்டவர் அல்ல, அவர் ஒரு இந்தியன். இத்தாலியில் பிறந்த Constanzo Beschi என்பவர் யார் என கேட்டால் இங்கு யாருக்காவது விடை தெரியுமா ? இத்தாலியில் பிறந்து மத போதகராக இந்தியா வந்த அவர் தமிழை கற்க, பின்னர் அதன் பெருமையுணர்ந்து தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்து, தமிழ் எழுத்துக்களில் உள்ள சில சிரமங்களை உணர்ந்து, தமிழ் எழுத்துக்களையே மாற்றியமைக்கும் சர்வவல்லமை படைத்தார், மெய்யெழுத்துகளில் கோடிட்டு வந்த வழக்கத்தை மாற்றி ஆ ஏ ஓ எனும் நெடில் எழுத்துக்களை கொண்டு வந்தார், தமிழின் பெருமைகளை பறைசாற்றும் எண்ணற்ற தமிழ் நூல்களை பல ஐரோப்பிய மொழிகளுக்கு பொழிபெயர்த்தார், 16 ம் நூற்றாண்டு இறுதி காலகட்டத்தில் தமிழன் தமிழுக்கு செய்யாத பல சாதனைகளை படைத்தார், தைரியநாத சாமி என தன் பெயரை மாற்றி பின்னர் அதில் சமஸ்க்ரிதம் கலந்துள்ளது என தூய தமிழில் வீரமாமுனிவர் என மாற்றி கொண்டார், அவர் வெளிநாட்டவராக இருந்தாலும் நாம் அவரை தமிழராக ஏற்று கொள்ளவில்லையா ? அவரின் படைப்புகளை இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வரவில்லையா ? இந்தியரான சிவாஜி ராய் கைக்கவாட் எனும் ரஜினி காந்த அவர்களால் தமிழுக்கும் தமிழக அரசியலுக்கும் ஓர் புதிய வெளிச்சம் எனில் அவரை ஆதரிப்பத்தில் என்ன தவறு உள்ளது ?

 • A.G. Murali - Chennai,இந்தியா

  Mr. Rajikanth should announce Mr. Nallakannu as Chief Minister and Mr. Sahayam as Dy. Chief Minister when he start his party. Then only he is a good man

 • Bava Husain - riyad,சவுதி அரேபியா

  மெரினாவில், நடிகர்களின் சிறிய "கட்டவுட்" களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வார்களே, அப்படித்தான் இருந்தது ரஜினி தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது... ஒரு பொம்மை போல் நிற்கிறார்... ஆத்மார்த்தமாக இல்லாமல்,ஏதோ கடமைக்கு செய்வதுபோல் ஒரு நிகழ்ச்சி... ரசிகர்கள் தன் தலைவனை ??? பார்த்த சந்தோஷத்தில் கை குலுக்க கையை நீட்ட..., அவர் கைகூப்புகிறார் அல்லது கையை கட்டிக்கொண்டு பொம்மை போல் நிற்கிறார்... உணர்ச்சி வேகத்தில் ஒரு செலஃபீ எடுக்க எத்தனித்த ஒருவரை, ஒரு நாலு பேர் வந்து குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்துகிறார்கள்... போட்டோ எடுத்து முடிந்ததும், போ,போ என்று பிடரியில் கைவைத்து தள்ளுகிறார்கள்.... ஒரு உணர்வுபூர்வமான விஷயத்தை எதிர்பார்த்த நமக்கு, ஒரு நாடகம் மட்டுமே காண கிடைத்தது.... ரசிகன் என்பதை விடுங்கள், ஒரு சக மனிதனிடம் கை கொடுக்கக்கூட மனமில்லாத ஒருவர் எப்படி..., தன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்த தமிழுக்கும்,தமிழர்க்கும் உடல்,பொருள்,ஆவியெலாம் கொடுப்பார் ??? பேச்சில் நல்லவராக இருந்து என்ன பிரயோஜனம்? செயலில் நல்லவராக இருக்க வேண்டும்........ எனக்கென்னவோ, இந்தியாவில் எங்கு இயற்கை சீற்றம் நடந்தாலும், சினிமாவிலிருந்து நீளும் முதல் உதவிக்கரத்திற்கு சொந்தக்காரர் விஜயகாந்த்..... தன் சம்பாத்தியத்தில் ஒரு பகுதி, மக்களுக்காக செலவிட்ட மனிதர், அடித்தாலும் அரவணைக்கும் வெள்ளந்தி, அவருடன் ஒப்பிட்டால், ரஜினி என்பவர் ஒன்றுமே அல்ல என தோன்றுகிறது....

 • Muga Kannadi - chennai,இந்தியா

  ஓகே வந்துட்டே. இருபது ரூபா நோட்டு வெச்சிருக்கியா?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எப்பா, ரசிகருங்களா...... ஒங்களோட அரனாகவுறு கோவணம் இதுங்கெல்லாம் பத்ரமா பாத்துக்கோங்க.... தன்னோட பாக்கெட்லேந்து ஒத்தெ ரூவாயக்கூட வெளியெ எடுக்கமாட்டாரு ஒங்களோட தல.... ராகவேந்திரா dollar தான் ஒங்க எல்லாருக்கும்.....

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  தானா சேர்ந்த கூட்டங்களின் தலைவர் திரு.ரஜினி அவர்களே உங்கள் வரவு தமிழகத்தின் வசந்த கால வரவாக அமைய வாழ்த்துக்கள்....

 • மு.வேலாயுதசாமி.காேயமுத்தூர். -

  இங்கு அரசியல் அறிவாளிகளிடம் என்ன இல்லாத புது பார்முலா. அவ்வளவும் பத்தோடு பதினானெ்றாக இல்லாமல் இருக்க இமயவரம்பனை பிரார்த்திப்போமாக.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  அரசியல் மற்றம் வரவேண்டும் என்று சொல்கின்றார், மாற்றம் என்பது மட்டுமே என்றென்றும் மாறாது. இப்போது குறிப்பிட்டதுபோல் அடிமனதிலிருந்து வந்தால் நல்லது. திரு ரஜினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 • Ramakrishnan, Chennai - ,

  great hope has been ushered in by Rajnikanth to the people of TN.... should practice what is preached..... what will be his take on Cauvery water issue???? Mullaiperiar issue???....he should congregate intellectuals from all sections of the society & tell people that they will govern TN with zero tolerance to corruption & work towards upliftment of society...... hope he does that.. best wishes to him

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  இங்கே வந்திருக்கும் கருத்துக்களை பார்த்தாலே தெரிந்துவிடும்... ரஜினியின் ஆதரவு 15 % வாக்குகளை அதிகபட்சம் வாங்கலாம்.. ரஜினி மட்டும் ஒரு தொகுதியில் ஜெயிக்கலாம்... விஜயகாந்த் போல ... ரஜினி வந்தால் பாஜகவுக்கு லாபம்... ரஜினி ஓட்டை தனது ஒட்டாக காண்பித்துக் கொள்ளும்... ஆனால் ரஜினிக்கு பைசா பிரயோசனம் இல்லை.... ஒருவேளை பிற்காலத்தில் தனுஷ் அல்லது சவுந்தர்யா க்கு அரசியல் பண்ண உதவும் ..அம்புட்டுதேன்.... [ கொடுமைடா சாமி... தனுஷ் எல்லாம் அரசியலில் ஒரு புள்ளியாக வருவது ...என்னே தமிழா உனது நிலைமை ? ]

 • Power Punch - nagarkoil,இந்தியா

  " வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். ".... NOTA வோடு போட்டி இடுவார் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்...

 • Gopal.V. - bangalore,இந்தியா

  ரஜனிக்கு அரசியல் புரிதல் இன்னும் போதாது. அவரின் நிலைமையை பார்க்கும் பொழுது யாரோ ஒருவரின் நிர்பந்தத்தால் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் என்பது தெளிவாகிறது. பழத்தை தின்று கொட்டையை போட்டு அடுத்த பழத்துக்காக காத்திருக்கும் இந்த அரசியல் விளையாட்டில் ரஜனி தேறுவது என்பது மிக மிக கடினம்.. அம்பது ஆண்டுகாலமாக லஞ்சத்தில் ஊறிப்போயிருக்கும் அரசாங்க அதிகாரிகள், ஊழியர்கள்,அரசியல்வாதிகள் மற்றும் இலவசத்தையே நம்பியிருக்கும் தமிழக மக்கள் இவர்களுக்கு இடையே ரஜனி தேறுவாரா என்பது சந்தேகமே..

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  வைகோ அவர்கள், வெகுவிரைவில் ரஜினிக்கு ஆதரவளிக்குமாறு வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்கிறோம்... இன்னொரு விஜயகாந்த் உருவாகிறார் ...

 • manasaatchi - hyderabad,இந்தியா

  neenga vaanga nalladhu seinga nambikai irukku. dummy piece ellarukkum happy new year

 • murugan - chennai,இந்தியா

  ஊழல் மற்றும் நதிநீர் இணைப்பு இரண்டும் நிறைவேற்றினால் நீங்கள் தான் நீங்கள் இருக்கும் வரை முதல்வர். பிஜேபி போல் வாக்குறுதியோடு நின்று விட்டால் மக்கள் அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்வார்கள். பிஜேபி மற்றும் ADMK அமைச்சர்கள் பேசுவது போல் தேவையில்லா கருத்துகளும் தரம்குறைவான கருத்துகளும் உங்களை சார்ந்தவர்கள் பேசாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 • AishwaryanTamilwriter -

  வருக வருக... வாழ்த்துக்கள். தமிழர்களே...தயவு செய்து நடிகன்... கன்னடியன் என்றெல்லாம் எள்ளலாக பார்க்காமல் ... இந்தியரான ரஜனியை வரவேற்போம். ரஜனியே... அரசியலில் நுழையுமுன் குடும்பத்தாரை நெறிப்படுத்துங்கள். செக் மோசடி... மாநகராட்சி வாடகை வழக்குகளிலிருந்து விலக வையுங்கள். உங்கள் நல்ல மனசை நம்பி வாழ்த்துகிறோம். ஐஷ்வர்யன்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  காலம் போன வயதில் அரசியல் என்ன வேண்டிக்கிடக்கிறது.... 60 வயதுவரை சினிமாவில் கூத்தடிப்பார்களாம் ...அப்புறம் அரசியலுக்கு வருவார்களாம்... ரஜினி கமல் இருவருமே அரசியலுக்கு லாயக்கற்றவர்கள்... இருவருமே தமிழன் கிடையாது... [ கமல் சமீபத்தில் தன்னை கேரளத்து பாலக்காட்டு காரன் என்று சொல்லியுள்ளார் .. பூர்வீகம் கேரளாமாம்]... இது MGR காலம் அல்ல... மராட்டியன் தமிழனை ஆள... தமிழக மக்களுக்காக குரல் கொடுக்காதவர் ரஜினி... வேண்டா வெறுப்பா, தனது படம் ஓடவேண்டும் என்பதற்காக காவேரி பிரச்சினைகளில் வந்து குந்தியிருப்பார் .... சுயநலம் பிடித்த ரஜினி கமலின் ரிஷி மூலத்தை நோண்டினால் நாறிவிடும்... முன்பு இவர்கள் தனிப்பட்ட வாழக்கையில் எப்படியெல்லாம் அட்டூழியம் பண்ணியிருந்தார்கள் என்று அந்த கால பத்திரிகைகளை புரட்டினால் வெட்டவெளிச்சமாகிவிடும்.... இன்று ஒருவர் பக்தி முத்தி நல்லவர் வேஷம் போடுகிறார் ...இன்னொருவர் TV சேனலில் வந்து நல்லவர் வேஷம் போடுகிறார் ... இருவருமே அரசியலுக்கு லாயக்கற்றவர்கள் .....

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  நடிகரே, பூச்சாண்டி போதும். உடனே கட்சியின் பெயரை அறிவிக்கவும். நீங்கள் எல்லோரும் நடிகராவதற்கு முன் எத்தனை பேரின் கால்களில் வீழ்ந்து வணங்கியிருப்பீர்கள். எல்லாவற்றையும் மறந்துவிட்டீர்களா? 500 ரூபாய் தான் முதல் படத்தின் சம்பளம். ஞாபகம் இருக்கிறதா? தமிழக அரசியலில் அனுபவம் இருக்கின்றதா? எத்தனை இரசிகர்களின் மண் குடிசைகள் ஓட்டு வீடுகளாக மாற்றி அமைத்தீர்கள்? ஒருவரது கால்களில் விழுவது என்பது அவரவர் சொந்த விருப்பம். ஒருவரது அறியாமையை மூலதனமாக வைத்து, அரசியலுக்கு வரவேண்டாம். "நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்" (கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்).

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  பலனை எதிர்பார்காமல் தமிழக மக்களின் நலன் ஒன்றையே தனது கடமையாக கருதி களம் இறங்கும் உங்களுக்கு கர்மவீரர் காமராஜர் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்..வெற்றி வீரனே வருக வருக என வரவேற்கும் தன்மான தமிழன்....

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  என்ன ஒரு தீர்க்கமான முடிவு . 68 வயசுல கிடைத்த அனுபவத்தை வைத்துக்கொண்டு பிரதமர் ஆகிடலாம் . தேசம் திறந்துகிடக்குது போய் பிரதமராக்கிடாமல் இளிச்சவாயன் தமிழனை குறிவைப்பது அதுவும் காவிகள் பிரதிநிதியாக வருகிறார் . பாவம் தமிழர்கள் . திராவிட கட்சிகள் காமராஜர் எல்லோரும் சேர்ந்து வளர்த்த தமிழகத்தை மீண்டும் MGR , ஜெயா மாதிரி கூழ் ஊத்த இந்த வடநாட்டார் வரார் . விஜயகாந்த் மாதிரி இப்பொது ரஜினிகாந்த் .இன்னொரு காவிக்கட்சி தமிழகத்துக்கும் நுழைகிறது . RK நகர் மாதிரி நோட்டாவுடன் போட்டிபோட இன்னொருவர். 234 தொகுதியில் நிற்பாராம் . அதுயேன் எல்லா பாராளுமன்ற தொகுதியிலும் நோட்டாவுக்கு போட்டிபோட வேண்டியதுதுதானே

 • Abdul kareem - Nagercoil,இந்தியா

  நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதி இல்லே

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  EPS OPS ஐ வைத்து நடத்திய நாடகம் முடியும் தருவாயில், அவர்களை IMPOTENT LEADERS என்று கேவலமாக விமர்சித்து, ரஜினிக்கு, தூபம் காட்டி அர்ச்சனை போட்டுள்ளது ஒரு கூட்டம்... இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஊழல் உள்ளது ...எதோ தமிழகத்தில் மட்டும் தான் ஊழல் என்று , முத்திரை குத்தப்படுவது சமூகநீதிக்கு விதிக்கப்பட்ட சவால்.. ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் பாஜக, லோக் பாலை கொண்டுவர வேண்டியது தானே ...அதுக்கு துப்பில்லை ...சசி ஊழலுக்கு எதிரா OPS EPS இருப்பார்கள் என்ற கருத்து போனியாகாததால், தினகரனை வீழ்த்த ரஜினியை களம் இறக்கியுள்ளார்கள்... ஊழலை எதிர்க்க , பாஜக ரஜினியை வைத்து போதனை பண்ணவேண்டாம்... தமிழர்களுக்கு ஒரு வடமாநிலத்தவன் தான் போதிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை... தமிழர்களுக்கு மத்திய ,அரசாட்சியில் உரிய பிரதிநித்துவம் கொடுத்து, லோக் பாலை கொண்டு வாருங்கள்... பாஜக ஊழலுக்கு எதிரான கட்சி அல்ல... தனது எதிராளிகளை மட்டும் ஊழலில் மாட்டிவிடும் மகாமட்டமான கட்சி.... தமிழனை தமிழன் தான் ஆளவேண்டும்...ஊழலை ஒழிக்க பாஜக முடிந்தால் லோக் பாலை கொண்டுவரட்டும்.... பாஜகவின் ஏஜென்ட் தான் ரஜினி என்பது வெட்டவெளிச்சம்... [ என்னதான் உடம்பை மறைத்தாலும், கொண்டையை மறைக்கமுடியவில்லையே ... தாமரையில் இருந்து பாபா முத்திரை , ரஜினியின் பின்புலத்தில் தெரிவதை மக்கள் பார்க்காமலா இருக்கிறார்கள் ?....பாபா தோல்வி போல ரஜினி அரசியலில் படுதோல்வி அடைவார் ]

 • Pandiyan - Chennai,இந்தியா

  இவ்வளவு நாட்கள் பாதுகாத்த அரசியல் ஆசையயை வெளிப்படுத்தியுள்ளார் ..திரு ரஜினிகாந்த்.. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ..ஆனால் திரு ரஜினி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம்...தமிழ்நாட்டில் ஊழல் மட்டும் பிரச்சனை அல்ல ..சுகாதாரம்..விவசாய தண்ணி பிரச்சனை ..மது பிரச்சனை .. குடிதண்ணீர் பிரச்சனை ...நெடுவாசல் பிரச்சனை இப்படி ஏராளமாக அடுக்கிக்கொண்டு போகலாம் ..தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்காக மக்களோடு நின்று களம் கண்டால் மட்டும் அரசியல் களத்தில் வெற்றிபெற முடியும் .அனால் திரு ரஜினி அவர்களின் கடந்தகால அணுகுமுறை பார்க்கும் பொழுது ..இவரும் பூட்டிய அறையில் இருந்து ஒரு பிம்ப அரசியலை தந்தால்.. ஆந்திராவில் திரு சிரஞ்சிவி அரசியல் களத்தை விட்டு ஒதுங்கியது போல திரு ரஜினியும் வருங்காலத்தில் ஒதுங்க வாய்ப்புள்ளது .

 • Bala Krishnan - Indore,இந்தியா

  அரசியல் ஒரு சாக்கடை. அரசியல் என்பது அயோக்கியர்களின் முதல் புகலிடம். என்பது காலம் காலமாக இருந்துவரும் ஒரு கூற்று. அரசியலில் இவர் யார் என்பது வருங்காலம் தான் முடிவு செய்யும். யாருடனும் கூட்டு சேராமல் தனியாக களம் இறங்கினால் தான் இவர் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். இல்லையேல் விஜயகாந்த் நிலைமை தான்.

 • தாயு.பாலன் -

  நீயெல்லாம் எங்களை ஆள நினைக்கிறாயே, இதுவரை என்ன செய்துள்ளாய்? இப்போதும் ஒன்றும் செய்ய மாட்டாய். ஆனால், தேர்தல் நேரத்தில் கட்சி ஆரம்பித்து தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க மட்டும் ஆசை. இப்பேர்ப்பட்ட பேராசைக்காரனான நீ, முதல்வராகி மக்களுக்கு கிழித்துவிடப் போகிறாய்! உன்னைப் போன்ற ஒருவன் தமிழகத்தின் முதல்வரானால் தமிழனின் இழிநிலையை நினைத்து உலகமே சிரிக்குமே. அதுமட்டும் பரவாயில்லையா உனக்கு? போராட வேறு ஆட்கள் இருக்கிறார்கள் என்று பேசுகிறாய்.என்ன ஒரு இழிபார்வை? உன்னை ஒன்றுமில்லாமல் ஒழிப்பதே மானத்தமிழனின் முதல்வேலை! வா, வந்துபார், உன் வருகையே தமிழினம் ஒன்றுபடும் புள்ளியாக இருக்கும்!

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  தமிழக மக்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்த தலைவர் களம் இறங்கி விட்டார்.... இந்த நல்லவர் தீர்க்கதரிசி. நேர்மை உண்மை ஆன்மீகம் கொண்டவரை தவறவிட்டால் வேறு எவராலும் தற்போது உள்ள தீயசக்திகளை அழிக்க முடியாது... தில்லுமுல்லு தீயசக்திகளை அகற்ற வந்த திருஉருவமே நீங்கள் வெற்றி பெறவேண்டும்....அதுவே தமிழக மக்களின் ஏகோபித்த வேண்டுதல்.

 • balakrishnan - Mangaf,குவைத்

  அரசியலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜி .

 • Ananth - Seychelles,செசேல்ஸ்

  ஒரு புதிய நபரை வரவேற்கிறோம். அரசியல் களத்திலே ரஜினிகாந்தின் செயல்பாட்டை பொறுத்து, வாழ்த்தவும், ஆதரிக்கவும் இயலும். இதுவரை ரஜினிகாந்தின் செயல்பாடு பெரியதாக ஒன்றும் இல்லை. பார்க்கலாம்.

 • suresh - chennai,இந்தியா

  அரசியல் வியாதிகள் பந்தாடிய சகாயம் போன்ற நல்ல அதிகாரிகளை கொண்டு ஓர் அரசு இயந்திரத்தை ரஜினி அவர்கள் உருவாக்க வேண்டும், வார்டு வட்டம் மாவட்டம் ஒன்றியம் என சீரழிந்த அரசியல் குறுக்கீடு இல்லாத அரசு இயந்திரம் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும், இன்று அறிவிப்பு தான் என்றாலும், வரும் தேர்தலில் வெல்வார் என நம்புகிறேன். இரு கரம் கூப்பி வணங்கி வரவேற்கிறேன்,

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  இந்திய ஆன்மீக மண் அவரை வரவேற்கையில், அந்நிய மத கூஜாக்கள் எதிர்ப்பது இயல்பே

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  ரஜினி காந்த் அவர்களே தங்களின் அரசியல் பிரவேசத்திற்கு கோடி கோடி வாழ்த்துக்கள் . தமிழகத்திற்கு ஒரு நல்லாட்சி மலரட்டும் .கடவுள் அதனை ரஜினிக்கு அருளட்டும் .ரஜினி நிச்சயம் வெல்வார் இது ஊழின் விருப்பம் .அவரை தேர்வு செய்தது காலத்தின் கட்டாயம் . பெருவிழைவு கொண்ட மனிதன் ஆற்றும் செயல்கள் யாவுமே எல்லாம் வல்ல இறைவனுக்கு அவன் விடுக்கும் அறைகூவல் தான் . ஆனால் அதை காணும் சாதாரண மானிடர்கள் அதில் தங்களின் சுய வெறுப்பு விருப்புகளால் பொருளும் பொருளின்மையும் கலந்த எண்ண திரள்களால் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் . இங்கு ரஜினி காந்த் அவர்களுக்கு - நிகழ்ந்தது நிகழ்ந்து கொண்டிருப்பது நிகழப்போவது இது தான் நெறிகளில் முழுமையாக நிற்பவர்கள் நிகர்செய்ய ஒரு பிறழ்வை மறுதட்டில் கொண்டிருப்பார்கள் என்பது தலை சிறந்த தமிழ் அறிஞர் கூற்று.அதனால் தான் என்னவோ சினிமா கலைஞனுக்கு திரையில் கொடுக்கப்படும் மதிப்பும் மரியாதையும் நிஜத்தில் அரசியலில் கிடைப்பதில்லை .அதனையும் மீறி நடிப்புலகிலும் ,அரசியல் உலகிலும் சூரியனாக எழும்பி பிரகாசித்தவர்கள் தமிழகத்தில் பாரத ரத்னா எம்ஜியார் , புரட்சி தலைவி ஜெயலலிதா மற்றும் ஆந்திராவில் என்டிஆர் .captain விஜயகாந்த் (அவர் துவக்கிய கட்சி தேமுதிக) அவர்கள் பாதிக்கிணறு தாண்டினார் . மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் திராவிட கலிபுருஷன் அவதாரத்தால் வஞ்சிக்கப்பட்டார் .இல்லையேல் ஜொலித்திருப்பார் .சரத் குமார்(சமத்துவ மக்கள் கட்சி -அவர் துவக்கிய புது கட்சி) .டி ராஜேந்தர் ( அவர் துவக்கிய புது கட்சி - லட்சிய திமுக கட்சி),நடிகர் கார்த்திக் ( அவர் துவக்கிய புது கட்சி - அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி) ஆகியோர் பரவாயில்லை என்ற ரகம் தான் .ஆனால் திரையுலக அறிமுகம் இருந்தும் சூரியனாக ஜொலிக்காமலே நட்சத்திரமாக உதிந்தவர்கள் இருவர் .அதில் ஒருவர் செவாலியே சிவாஜி கணேசன் .தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சி நடிகர் சிவாஜி கணேசனால் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி. 1989ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்சி அவ்வாண்டே கலைக்கப்பட்டு விட்டது. சிவாஜி கணேசன் 1960 களிலிருந்து இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். கர்ம வீரர் காமராஜரின் செல்லப்பிள்ளை அவர் .தமிழக காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார் .1989 சட்டமன்ற தேர்தலில் சிவாஜி ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக (ஜா) அணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தமிழக முன்னேற்ற முன்னணி தோல்வியைத் தழுவியது. சிவாஜி கணேசன் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் முடிந்து சிறிது காலத்திற்குள் கட்சியைக் கலைத்து விட்டு ஜனதா தளம் கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் இணைந்து விட்டார்.அவ்வளவு தான் .அது போல இரண்டாமவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் - நடிகர் சிரஞ்சீவி 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரஜா ராஜ்யம் என்ற பெரில் கட்சியை தொடங்கி நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார்.22 OCTOBER 2011 அன்று தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் அதிகாரபூர்வமாக இணைந்தது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி முன்னிலையில் தனது கட்சியை சிரஞ்சீவி காங்கிரசில் இணைத்தார்.அது போன்ற நிகழ்வுகளை ரஜினி பொருத்தி பார்த்து தனி வழி சென்றால் ஜெயம் தான் .ரஜினி அவர்களே இருள் மனதில் வாழும் தெய்வங்களுக்கு படையல்கள் யாவும் வலியவர் காணிக்கையென அளிக்கும் மெலியவரே .அரசியலில் இது சாதாரணம். அரசியல் ஒரு சூதாட்டம் .அங்கு மெலியவரே வெட்டி வீழ்த்தப்படும் நால்வகை படைகள் என கொள்க .இதை உணர்ந்து செயலாற்றவும் .வாழ்த்துக்கள் ரஜினி சார் .ஒரு ரசிகனாக .ஒரு தமிழனாக .

 • mrsethuraman - Bangalore,இந்தியா

  ஏய் நான் வந்துட்டேன்னு சொல்லு

 • Eswaran - TRICHY,இந்தியா

  திரு வைகோ அவர்களுடன் கூட்டணி வைத்தால் "வெற்றி நிச்சயம்".. மறந்துடாதீங்க

 • bal - chennai,இந்தியா

  காலா படம் வெளிவரும் சமயம் அல்லவா... அதற்கான அச்சாரம் விளம்பரம் தான் இது. இன்னும் 3 வருடம் கழித்து போட்டியிடுவாராம்... ஏன் உள்ளாட்சி இல்லை, ஏன் வரும் பாராளுமன்ற தேர்தல் இல்லை, ஏன் கட்சி பெயர் இல்லை, இது வெறும் விளம்பரம்... ஊரை ஏமாற்றும் வேலை...எல்லோரும் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார்கள். இவரும் புலி வருது என்று ஏமாற்றி கொண்டு இருக்கிறார்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கொள்கெ பரப்பும் செயலாளரு - சுப்பு (கடவுளே...., கடவுளே...., கடவுளே.....)

 • KrishnanSrinivasan -

  Your thoughts are good. Wish you good luck!!! I am only concerned that whether the people of TN will support you. Because the TN people are corrupt. Thanks to Dravidian parties. a classic example is RK Nagar election where people voted taking money. I am sure GOD will be with you. Good Luck!!!

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பாண்டியென் - பரட்டை முன்னேத்த கலகம் - கச்சியோட பேரு....

 • verdad - Vellore,இந்தியா

  வருவது சுலபம் , வெளிய போவதும் கஷ்டம். உள்ளே போவது நிச்சயம்.

 • Karnan s - Sivagangai,இந்தியா

  Next cm super star rajini kanth

 • prem - Madurai ,இந்தியா

  கூத்தாடிகள் இந்த தேசத்தை நாசப்படுத்தி விடுவார்கள் என்னுயிர் சகோதர சகோதரிகளே. கூத்தாடிகள் ரஜினி, கமல், சீமான், கருணாஸ், விஷால், விஜய் உள்ளிட்டவர்களை புறக்கணிப்பீர். இந்தியாவுக்கென , இந்தியனுக்கென இதயம் நெகிழும் புதிய அரசியல் காண வித்திடுங்கள். படித்த இளைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது வாக்கின் வலிமையை உணர்த்தி தேசத்தின் மானம் காக்க உறுதி கொள்ளுங்கள் அன்பர்களே. ,தோள் வலிமை கொண்ட இளைஞர்களே... பாரத தேசத்தின் மானம் காக்க இன்று சபதம் எடுத்து கொள்ளுங்கள். கண்ணின் மணி போன்றவர்களே உன்னதமான நோக்கங்களுக்காக உங்களை அர்ப்பணித்து கொள்ளுங்கள். உங்களை பெற்றவர்களும் உங்களின் பிறந்தவர்களும் உங்களை அடைந்தவரும், உங்களால் பிறந்தவரும் பிறக்கப் போகின்றவரும் ஆகிய மக்களின் ஒளியாக செயல்படுங்கள் இளைஞர்களே.... சிந்திப்பீர் என் உயிரின் உயிரே...உயிரினும் மேலான உன்னதமே... உங்களையல்லால் வேறு யார் ? இந்நாட்டை ஆளும் தகுதி படைத்தோர் ....... rajethsivapa@yahoo.com

 • DeviGayathri -

  வாருங்கள் வரவேற்கிறோம்.

 • Karnan s - Sivagangai,இந்தியா

  Next cm super star

 • மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா

  -வருகிறேன் - வந்துகொண்டே இருக்கிறேன் -எப்ப வருவேன்னு தெரியல -எப்படி வருவேன்னும் தெரியல -வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துருவேன் -நான் வருவது ஆண்டவன் கையில் இருக்கு -சிஸ்டம் சரியில்ல -போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் -அறிவிக்கப் போறேன் -வருவதற்கு காலம் ரொம்ப முக்கியம் -இதோ அறிவிக்கப் போறேன் -இதோ அறிவிச்சுட்டேன் -வருவது உறுதி -காலம் ரொம்ப குறைவா இருக்கறதால உள்ளாட்சியில் போட்டியிடல -234 தொகுதியிலும் நிற்கலாம். இவ்வளவு சொல்லியும் நான் வரலேன்னா சாகிற வரைக்கும் குற்ற உணர்ச்சியோடவே செத்துப் போயிருவேன். (இனி அடுத்து தள்ளிக் கொடுக்கும் சரியான சொல்லை கண்டுபிடிக்கும் வரை என் அரசியல் பிரவேசம் பற்றி எதுவும் பேசக்கூடாது: ரஜினி மைண்ட் வாய்ஸ்) குற்ற உணர்ச்சியோடு சாகப்போறத ரஜினி ஏன் சுற்றி வளைத்து சுற்றி வளைத்து பேசணும்னுதான் ஒன்னும் புரியே இல்லை.

 • karthikeyan -

  கோவிந்தா கோவிந்தா

 • Rafi Böšš - Hawally,குவைத்

  தலைவா வெல்கம் :) வெற்றி நிச்சயம் :)

 • Power Punch - nagarkoil,இந்தியா

  " ஜனநாயக போரில் நம்ம படையும் இனி இருக்கும்.".... இவ்வாறு ரஜினி பேசினார்... அப்போ 234 தொகுதியிலும் ரசிகர்களை அவர் சொல்லும் கட்சிக்கு வோட்டு போட சொல்லி ஜனநாய போரில் கலந்து கொள்ள செய்வாரோ ..கட்சி ஆரம்பிப்பது என்ற பேச்செல்லாம் சும்மா....உளா உளா காட்டிக்கு தான்... பிஜேபி நம்பணும் இல்ல... அதுக்குதான் கட்சி ஆரம்பிக்க போவதா பிலிம் காண்பிக்கிறார்...

 • தேவி தாசன் - chennai,இந்தியா

  வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு குழப்பமான அறிவிப்பு.. காவியுடன் கூட்டு சேர்வதை தவிர்த்தால் விஜயகாந்த் நிலைமைக்கு போகாமல் தப்பிக்கலாம்

 • sankar - trichy,இந்தியா

  வாழ்த்துக்கள்

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  வேற வழி....பிஜேபி யோடு சென்ற NOV 8 க்கு முன்னாடி போட்ட டீல் அப்படி...வரலேன்னா பிஜேபி யால் ரெய்டு தான்...தொல்லை தான்...

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  அடுத்த குடும்பம் உருவாகிவிட்டது, ஏற்கனவே பள்ளி என்ற பெயரில் முக்கிய பிரமுகர்களின் வாரிசுகளை வைத்து பல லட்சம் கோடி , திரைப்படத்தின் மூலம்... இனி கேட்கவே வேண்டாம், சொல்வது ஒன்று செய்வது ஒன்றுதான் இன்றய நாகரீகம், நல்வாழ்த்துக்கள், வந்தே மாதரம்

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  வருக ...வருக.....

 • karutthu - nainital,இந்தியா

  /// சபாஷ் சரியான போட்டி தினகரனுக்கு ///

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  கொல்லைபுற காவி... இவரும் ஒரு காவி கைக்கூலி

 • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

  234 தொகுதியிலும் டெபாசிட் நிச்சயம் கிடைக்காது ... கூத்தாடிகளுக்கு சினிமா ஓகே , ஜஸ்ட் ஓவர் என்டேர்டைன்மெண்ட் ,சினிமாவில் காட்டப்படும் கூட்டம் ஒரு கிராபிக் , அது நிஜத்தில் அப்படி இருக்கும் என கர்நாடக ரஜினி போடுவது தப்பு கணக்கு

 • சாந்தநாதன் -

  தமிழ் நாட்டின் தலைவிதியை பக்கத்து மாநிலத்திலிருந்து வருபவா்கள் கையில்தான் அடகு வைப்போம் என்று சொல்பவா்களை .... தவறில்லை.

 • Nathan - Bengaluru,இந்தியா

  ஏன் சிறந்த நிர்வாக திறமை, பணியில் நேர்மை, தெளிவான தொலைநோக்கு சிந்தனை உடைய ஓய்வு பெற்ற கலெக்டர்கள் மற்ற துறை அதிகாரிகள் அல்லது நிறுவனங்களை நிர்வகித்த தலைவர்கள் தமிழக அரசியலுக்கு வர தயங்குகிறார்கள். இதற்கு நாம்தான் காரணம். சினிமா மோகத்தில் நம் முன்னோர்கள் காமராஜரையே தொலைத்தார்கள். கடந்த 50 வருடமாக தமிழகத்தை திரை துறையை சார்ந்தவர்களே ஆள நாமும் துணை நின்றோம். இதனால் முதல்வர் கனவுகளோடு அரசியலுக்கு வர எந்த நடிகர்களுக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும். அரசியலில் காமராஜர்கள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் எண்ணங்கள் உயர்வடையும் பொழுதுதான் அது நடக்கும்..

 • SivaIndia.com - chennai,இந்தியா

  அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது . வாழ்த்துக்கள் விரைவில் உங்கள் கொள்கையை அறிவியுங்கள் .

 • spr - chennai,இந்தியா

  ஆட்சியில் இல்லாத அடிமட்ட ஆன்மீகத்தலைவர் கூட இந்த நாட்டின் பிரதமரை அழைத்து தங்கள் சுயநல விளம்பரத்திற்கு கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக்க முடிகிறது அப்படியிருக்க அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்பதொரு பைத்தியக்காரத்தனமான சிந்தனை. இவர் உண்மையிலேயே தொண்டர்களால் போற்றப்படும் தலைவராக இருந்தால், குடிப்பதனை நிறுத்த, தூய்மை இந்தியா உருவாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க முடியாதா? திரு காமராஜர், திரு கக்கனைப் போன்றோரை பார்த்த நமக்கு இன்னொரு சுயநலமில்லா தலைவர் உருவாக முடியுமென்று நம்ப இயலவில்லை திரு ரஜினி அரசியல் சாக்கடைக்குள் வராமல் இருப்பது அவருக்கு நல்லது சிபிஐ கூட பல விசாரணைகளை முறையாக நடத்தாமல் பல குற்றவாளிகளை தப்ப வைக்கிறது அந்த அதிகாரிகளை ஆனானப்பட்ட அரசியல் வித்தகர் மோடியாலேயே மாற்ற முடியவில்லை. அரசியலில் ஆனா ஆவன்னா தெரியாத இவர் காணாமற் போய்விடுவார் திரு எம்ஜியார் கூட சில அதிகாரிகளைக் கண்டுக்காமல் இருந்திருக்கிகிறார் பல ஊழல்களை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார் அவரது இமேஜ் காரணமாக அவர் செய்த பல தவறுகளை மக்கள் கண்டு கொள்ளவில்லை என்பதே உண்மை

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  பத்தோடு பதினொன்றாக அரசியலில் காணாமல் போயி விடுவார்..ரசிகர்களை நம்பி கட்சி ஆரம்பித்து எம் ஜி ஆர் அவர்களால் ஆட்சியே பிடிக்க முடிந்த காலம் அல்ல இப்போ..ஆகையால் இவர் தனிக்கட்சி ஆரம்பிப்பதே வேஸ்ட்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இது தாண்ட தமிழன் , கர்நாடக காரன் தமிழனை அடித்து நொறுக்கினாலும், தண்ணிர் தர மறுத்தாலும், தமிழகம் மின்சாரம் முதல் கொடுத்து கர்நாடக காரனை தலைமேல் வைத்து கொண்டாடும் . ஒரு தமிழன் கர்நாடகாவில் இப்படி வர முடியுமா ?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  காவேரி வாரிய விசயத்தில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன ?

 • deepak - chennai,இந்தியா

  சீமான், கமல் ஹசான் போன்ற மூர்க்கர்களை காட்டிலும் இவர் தேவலாம்

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  அவரது செயல்பாடுகளை பார்க்காமலேயே அவரை விமர்சிப்பது கேடு கெட்ட செயல்.. ரஜினி அவர்கள் ஒரு சிறந்த நாணயஸ்தர்... எளிமையானவர்...தான் என்கிற தலைக்கனத்தை ஏற்றி கொள்ளாதவர்... தவறு என்று தெரிந்தால் அதை யார் சுட்டிக்காட்டினாலும் அதற்க்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பவர்... தன் புகைப்பழக்க தோஷத்தால் பலர் பாதிப்புக்குள்ளானவர்கள் என்பதை தெரிந்து அதற்க்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டவர்.. யாரும் புகைக்க கூடாது என்று வேண்டுகோளும் விடுத்தவர்... செய்த உதவிகள் ஏராளம்... ஆனால் எதுவும் வெளியில் தெரியாது.. தன்னடக்கமும் தன்மானமும் உண்டு.. ஆனால் அதையே தம்பட்டம் அடித்து கொண்டது கிடையாது.. தன் வாழ்க்கையின் பிற்பகுதியில் அரசியலில் நுழைகிறார்... அதனால் அவரால் நேர்மையாக செயல்பட முடியும்... சொத்து சேர்க்க வேண்டும் என்கிற குறிக்கோளோ ஆர்வமோ இருந்திருந்தால் எப்போதோ வந்த வாய்ப்பை விடாமல் பிடித்து இந்நேரம் அவரும் ஒரு மிகப்பெரிய கொள்ளைக்காரராக மாறி இருப்பார்... என்று நாம் நல்லவர்களையும் நாணயமானவர்களையும் அரசியலுக்கு வரவேற்கிறோமோ அன்று தான் நல்ல மாற்றம் நிகழும்... திறந்த உள்ளத்தோடு வரவேற்போம்.. அவரால் முடிந்ததை செய்து காட்ட வழி காட்டுவோம்... தமிழன் ,கன்னடன் என பாகுபாடு காட்டி இனியும் நல்லவர்களை இழக்க வேண்டாம்... சைமன் என்கிற சீமான் தான் தமிழன் என கூறி அடிக்கிற கூத்து தினமும் வெளி வந்து கொண்டு இருக்கிறது...

 • G Mahalingam - Delhi,இந்தியா

  ரஜினி வரவால் letter pad கட்சிகள் ஒழியும்.

 • sankar - Nellai,இந்தியா

  தமிழகத்தின் மோடி அவர்களே - வருக வாழ்க

 • Ramachandran Madambakkam - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

 • Saravana Doreswamy - chennai,இந்தியா

  ரஜினி சார் ஒரு அற்புதமாக தன் எண்ணத்தை தெளிவுபடுத்தியுள்ளார். கண்டிப்பாக இவர் ஒரு ஈடுஇணைற்ற தலைவர் அவர் என்பது அவரின் பேச்சில் தெரிகிறது. வாழ்க தமிழக மக்கள்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அரசியலுக்கு வர்ற எல்லார்கிட்டயும் குறை கண்டுபிடிக்குறோம் .... சரி .... யோக்கியன் அரசியலுக்கு வந்தா மக்கள் ஆதரவு கொடுப்பார்களா ?

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  தலைவா நீ நடந்தால் போதும் நாங்கள் ஓட்டுபோடுவோம் என்று சொல்லும் மக்கள் இருக்கும்போது கட்சி துவக்கலாம்.,

 • victor paul.s - kolar thanga vayal,இந்தியா

  சூப்பர் ஜி

 • PrasannaKrishnan -

  First prove in one area. let it be poes garden. After all you are a professional. No doubt in that. But you cant be MGR. mind it.

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  விஜயகாந்த் எவ்வழியோ அதே வழி தான் ரஜினிக்கும் , சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் வெற்றியாளர்களாக தங்களை நினைத்து கொள்வது ஏன் என்று தெரிவதில்லை , ஏழைகளின் அறியாமையினால் ஏற்படும் அன்பு இவர்களை இந்த அளவுக்கு உந்து தள்ளுகிறது மேலும் பல அரசியல் தலைகள் மக்களின் நண்பனாக செயல் படாததும் தூரத்தில் இருப்பதும் வேறு தேடல்களை நோக்கியும் மக்களை நகர்த்துகிறது

 • kavikaavya - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Useless old man

 • RVRAMESH -

  இனிய பயணம் தொடரட்டும்! நல்வாழ்த்துக்கள்!

 • VOICE - CHENNAI,இந்தியா

  பிஜேபி சொல்படி ஒருவர் தர்மயுத்தம் நடத்தினர் மற்றோர் இப்பொழுது அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறிவிட்டார். வரமாட்டேன்னு சொன்னால் ரசிகர்கள் மதிக்கமாட்டார்கள், இரண்டு படம் ரிலீஸ் ஆகாது. அடுத்து வருமானத்துறை ரெய்டு நடக்கும், இதுயெல்லாம் இப்போ தேவையா என்று யோசிச்சிருப்பாங்க. 5 பைசா எவனுக்கும் செலவு செய்வது கிடையாது ஆனால் நடிக்கும் சினிமாவில் மட்டும் அள்ளி கொடுப்பார். இவர் பின்னல் பிஜேபி இருக்கும் தைரியத்தில் தான் இது போன்ற ஸ்டேட்மென்ட் விடுகிறார். இதுதான் இனி நடக்கும். BJP எதிர்த்து இந்த வந்தேறி பிரச்சாரம் செய்வர் பிஜேபி இவரை திட்டுவார்கள் தமிழக மக்களை ஏமாற்ற இது இரண்டும் கூடியவிரைவில் நடக்கும். தமிழ்நாடு எட்டப்பன் தர்மயுத்தம் பிஜேபி காங்கிரஸ் வந்தேறிக்கு மறைமுக ஆதரவு குடுக்கும். தமிழகத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் தமிழக முதல்வராக ஆட்சி செய்யக்கூடாது என்று பிஜேபி காங்கிரஸ் சேர்ந்து பலகாலமாக சதி செய்கிறது இனியும் செய்யும் இதுபோன்ற வந்தேறி பின் நின்று.

 • mindum vasantham - madurai,இந்தியா

  Rajini nambikkayana aalu ellarayum aravanaichu povaru vetri pera valthukkal,dubakoor attam pothum thamilakathil

 • Saravanan Kumar - madurai,இந்தியா

  ஆல் தி பெஸ்ட் ரஜினி சார்

 • rama - johor,மலேஷியா

  ஒருமுறை உங்கள் பேச்சால் அம்மா ஆட்சி தடுக்க பட்டது, பாதிக்கப்பட்டது தமிழ் நாட்டு மககள் , அரசியல் முதிர்ச்சி இல்லாத நீங்கள் அரசியல் வர தகுதியில்லை. தமிழிசை சொல்வதை பார்த்தால் பஜகா ஆதரவாளர் போல் தெறிகிரது

 • Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ

  It is not good decision at this point. He may think it is like a cinema, directed and edited and all nice movie produced. Just like he said we will resign at 3 years. It is all both impossible and unethical to do. Honest and brutal fact is he is 68 years old he with many hygiene diseases, with all these he can only run active enough another 5 years. And then what? Is that what he wants to leave after another 10 years. I wish, he change his mind and compete for CM post in DMK ( most favorably or ADMK at the worst case). That's the right and good decision he can do.

 • MALAI ARASAN - TUTICORIN,இந்தியா

  தலைவா , வாழ்த்துக்கள் ...... வெற்றி நிச்சயம் ... ஆண்டவனே நம்மபக்கம் ....

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  வரவேற்கிறோம் .... ஆனால் பிறர் உங்களை இயக்குபவர்களாய் அல்லாமல் சுயமாய் சிந்தித்து முடிவு எடுக்குபவராய் இருங்கள் .... வாழ்த்துக்கள் .....

 • Viswanathan - karaikudi,இந்தியா

  சினிமாக்காரன் அரசியலுக்கு வரலாமா என கூறுவார்கள் . ஆனால் எந்த சினிமா காரனின் முகத்தை வைத்து ஓட்டு கேட்டதோ, எந்த சினிமா வசனகர்த்தாக்களின் மூலம் தமிழ்நாடு கெட்டதோ , அந்த சினிமாக்காரனால் மட்டுமே இந்த திராவிட இயக்கங்களை ஒழிக்க முடியும் . இப்போதே சிலருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கும் . என்னடா நம்ம அரசியல் வாழ்வு இவ்வளவு தானா என்று பொறுத்து தான் பார்க்கவேண்டும் நடக்கப்போகும் நிகழ்வுகளை , தமிழகத்தின் தலை எழுத்தை .

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  திமுக -வின் எதிர் வாக்குகளை பிரித்து திமுக -வுக்கு உதவ விலை போனவர் ரஜினி ,.... அதாவது லதா ரஜினிகாந்த் கார்ப்பரேஷன் இடத்துக்கு வாடகை கொடுக்கவேண்டாமா ? பணத்துக்கு ஏழை எங்கே போவார் ?

 • தமிழ்தேசியம் - MULLIPALAYAM,இந்தியா

  தமிழனுக்கு வந்த சாபக்கேடு நம் நாட்டை கடைசிவரை MGR , ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினி, சீமான், கமல், விஜயகாந்த், சரத்குமார், கருணாஸ், விஷால், விஜய், போன்ற சினிமாக்காரர்கள்தான் ஆளவேண்டும் போல

 • Tamil - Coimbatore,இந்தியா

  தமிழ் நாட்ட தமிழந்தன் ஆழனும் கர்னடாக காரன் அல்ல...

 • tsk - nagercoil,இந்தியா

  he is planning for his upcoming movies

 • MARIAPPAN - Madurai,இந்தியா

  ரஜினி சார் , அரசியலுக்கு வர தகுதியானவர் . '' தலைவா உன் வருகைக்காக தமிழகம் காத்திருக்கிறது இருபது ஆண்டுகளாக ....வரலாம் வரலாம் வா...தலைவா ...தைரியமாக வரலாம் வா ...மக்கள் நலனே எண்ணம் கொண்டு அதுவே நம் தொண்டு என்று அரசியலுக்குள் வரலாம் வா ...காத்திருக்கு தமிழகம் உன் கடமைக்காக வரலாம் வரலாம்வா ...உன் எண்ணம் ஒன்றே அது நன்மை என்றே கொண்டு வரலாம் வா அரசியலுக்கு வா ...

 • muttam Chinnapathas - Chennai,இந்தியா

  கர்நாடக, ஆந்திர, கேரளா, மகராஸ்ட்ரா, மத்திய பிரதேசம் என்று தமிழனை ஆள எல்லா ஊரிலும் இருந்து வாங்கடா... உலக ஆண்டை தமிழனை இன்றைக்கு போறவன் வரவன் எல்லாம் ஆள ஆசைபடரான்...இந்தியாவின் எந்த மாநிலத்திலாவது அந்த மாநிலத்தை சேராத ஒருத்தர் ஒரு அமைச்சராவது முடியுமா...

 • Larson - Nagercoil,இந்தியா

  என்னால் என்ன செய்ய முடியும், செய்ய முடியாது என்பதை தேர்தல் களத்திலேயே சொல்லி விடுவேன், சொன்னதை செய்யா விட்டால் 3 வருடத்தில் பதவியை ராஜினாமா செய்திடுவேன் என்கிற இந்த உண்மையான தைரியத்திற்கு பாராட்டுக்கள். வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 • தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி - சோழர்கள் நாடு ,இந்தியா

  நேற்று முளைத்த காளான்கள் வரும்போது இவர் வருவது ஒன்றும் புதிதல்ல

 • சிவகுமாரன் -

  அதனால் திரையரங்குகளில் தவறாமல் 2.0 , காலா பாருங்கள்! நான் இமயமலை அமெரிக்கா போய் வந்து பாட்ஷா 2 ஆரம்பிக்கிறேன்.(நம்ம தொழில் நடிப்பு :ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதுதான். விடமாட்டேங்கறாங்களே?!. ஒருதடவ வாய்ஸ் குடுத்து இப்ப நூறு தடவ சொல்லவேண்டியதா போச்சே!) -ரஜனி நல்ல மனிதர் விட்டு விடுங்கள். நாம் மாறமாட்டோம்.நமக்கு விஜய்தான் சரிப்படுவார்

 • varadharajan - Thirupporur,இந்தியா

  வரவேற்ப்போம் வாய்ப்பளிப்போம்...

 • பிஜேபி தகவல் தொழி்ல்நுட்ப பிரிவு - இ்ரா.கி.பேட்டை ஒன்றிய பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டம்,இந்தியா

  நமது நாட்டில் ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்குவர உரிமையுண்டு ஆகவே திரு.ரஜினி அவர்கள் ஜனநாயக முறைப்படி கட்சி தொடங்க விரும்புகிறார்

 • POPCORN - Chennai ,இந்தியா

  மத்தி மாநிலத்தை கலைக்கும்..6 மாததில் தேர்தல்...அப்புறம் இமய மலை

 • shanmuga - Chennai,இந்தியா

  Sani peyarchi sirapaga Velai seigirathu

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  திராவிடக் கட்சிகளுக்கு உருப்படியான மாற்று வேண்டும் ..... பாஜக -வில் சிக்காமல் போக்கு காட்டி, தனிக்கட்சி துவக்குவேன் என்று சொன்னதை பாராட்டலாம் .... ஆனால் ரஜினி நம்பத்தகுந்த ஆளல்ல ....

 • venkata - chennai ,இந்தியா

  வருக வருக எங்கள் ஓட்டு உங்களுக்கே வீர சிவாஜி வருக ரஜினி அவர்களே வருக

 • Rengan -

  Vazthukal thalaivaa... Waiting to see you in election..😍😍😍😍

 • Babu Ganesh - New Delhi,இந்தியா

  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களின் அரசியல் பயணம் ஒரு புதிய இந்தியா பிறக்க வழி வகுக்க வேண்டும் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லா நிலை வேண்டும்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  Karnatakaanu solravangalaam inga kannadan periyaar kolkayai vaithu than polappu oduthu ,rajini nambakamana aalu arasiyalukku varalaam varaverkkirom ,avar ponna ellam thamilarukku than katti koduthirukkirar,katchi poruppu anaivarum thamilarkale..

 • பிரபாகரன் -

  மகிழ்ச்சி

 • மோகன் -

  போடா போடா போக்கத்தவனே.

 • தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி - சோழர்கள் நாடு ,இந்தியா

  நம்நாட்டில் மக்கள் திராவிட மாயையில் சிக்கியுள்ளார் அதிலிருந்து அவர்களை மீட்கப்படவேண்டும் என்ற காரணத்தால் உங்கள் ஏற்கிறோம்

 • Devaraj Ranganathan - Chennai,இந்தியா

  very excellent speech by Rajinj Ganth, his speech spells his maturity welcome to politics, but careful in avoiding old politicians who will spoil your dream.

 • MARIAPPAN - Madurai,இந்தியா

  சூப்பர் தலைவா... இந்த முடிவு மிகவும் நன்று. இவரை போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். தமிழகம் மாற்றத்தை சந்திக்க விரும்புகிறது. மாற்றம் வேண்டும். மக்களின் ஆதரவு என்றும் ரஜினி சாருக்குள்ளது.

 • PME - CHENNAI,இந்தியா

  வாழ்த்துக்கள் , ஆனால் பின்வாங்காதீர்கள். இது காலத்தின் கட்டாயம். நல்லது நடக்காத என மக்கள் ஏக்கம். உங்கள் முடிவுக்கு நன்றி.

 • தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி - சோழர்கள் நாடு ,இந்தியா

  தமிழ்நாட்டில் இரு திராவிடக்கட்சிகளை பின்னுக்குத்தள்ளி முன்னேறுவது கடினம்

 • தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி - சோழர்கள் நாடு ,இந்தியா

  கமல்போல் வாழ்க்கையில் சுத்தம் இல்லாதவர் வரும்போது இவர் வருவதற்கு என்ன குறை

 • தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி - சோழர்கள் நாடு ,இந்தியா

  வரவேற்கிறோம்

 • Thiyagarajan - Bangalore,இந்தியா

  Heartiest welcome to Rajinikant to enter to politics,

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கடவுளே...., கடவுளே...., கடவுளே.....

 • POPCORN - Chennai ,இந்தியா

  //நிறைவேற்றாவிட்டால் 3 ஆண்டுகளில் நாமே பதவியை ராஜினாமா செய்து விட்டு போவோம்.//..100 நாளில் இந்தியாவ மாத்துவோம் என மோசடி கூறியது

 • MalaiArasan -

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..... தலைவா, வெற்றி நமதே..... உற்சாகத்துடன் செயல் படுவோம்.... உம் தலைமையின்கீழ்.....ஆண்டவணே நம்ம பக்கம்......

 • Kannan Iyer - Bangalore,இந்தியா

  நாளைய நம்பிக்கை நட்சத்திரம் இவரைப் போன்றே நாணயஸ்தர்களை தேட வேண்டும். தேர்தலுக்கு முன் ஒரு நிழல் மந்திரி சபை அமைத்து ஜெயித்தபின் யார் எந்த பொறுப்பு ஏற்பார்கள் என்பதையும் அறிவிக்க வேண்டும். தனிமரம் தோப்பாகாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.அதே சமயம் கட்சிமாறிகளை ஒதுக்க வேண்டும்.

 • G. Madeswaran - MA,யூ.எஸ்.ஏ

  தலைவா.. இனி வரும் காலங்கள் தமிழ்நாட்டிற்கு ரஜினி நல் யுகம், கடவுளின் வரம், வாழ்த்துக்கள் மன்றத்தில் இல்லாத வெளியில் உள்ள உங்கள் அதி தீவிர காவலர்கள் கோடி, கோடி ரஜினி அவர்களின் நல்லாட்சி கொடி நிச்சயம் இந்த பாரத தமிழ் மண்ணில் சேரன், சோழன், பாண்டியன் போன்று பேருடன் பறக்க வேண்டும். சிங்கம் ஒன்று புறப்பட்டதே....

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ரூ 50,000 வாடகை போகும் ஒரு கடைக்கு மாநகராட்சிக்கு 20,000 வாடகை தர மறுத்து வழக்கு போடும் பணப்பிசாசு. பள்ளிக்கூடத்தில் கொள்ளை கட்டணம் வாங்கினாலும், அந்த பள்ளி நடக்கும் இடத்துக்கு வாடகை தர மறுத்து வழக்கு போட்டு அங்கேயும் அடுத்தவன் பணத்துக்கு பின்னால் அலையும் குடும்பம். இப்படி அரசு பணத்துக்கும், அடுத்தவன் பணத்துக்கும் ஆசைப்படும் போலி ஆன்மீகவாதி, பணப்பேய்கள் அரசியலுக்கு வரும் முன்பே இப்படி. நீயெல்லாம் அரசியலுக்கு வந்து விட்டால்.. யப்பா.. ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம்.

 • KrishnaMurthy -

  சாரி நான் என் ஓட்டு நோட்டாவுக்கு தான்

 • mindum vasantham - madurai,இந்தியா

  Varalaam varalaam paa bairavaa, Karnataka Anna vana periyar kolkayai than thravidam ru solli kolkindranar tamilakathil

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அரசியலுக்கு வந்து தான் ...என்று இல்லை.

 • cganesh - coimbatore,இந்தியா

  அரசியலுக்கு வருவது உறுதி :அதனால அதிமுக மற்றும் திமுக ஒழிவது உறுதி

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அண்ணன் வயசுக்கு வந்துட்டாராம். அரசியலுக்கு வந்துடுவாராம்..

 • The Putin - Chennai,இந்தியா

  2.0 கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க..

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  valthukal , tamilagathi vala viyungal, valthukal,

 • The Putin - Chennai,இந்தியா

  2.0 க்காகவா... கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க ரஜினி

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  திரு.ரஜினிகாந்த் நிச்சயம் ஒரு நேர்மையான, ஊழலில்லாத அரசை கொடுக்க முடியும். ஆனால் அவருக்கு பிறகு? காமராஜர் ஆட்சியைதான் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக கூற முடியும். ஆனால் அவருக்கு பிறகு அப்படிப்பட்ட ஒரு ஆட்சியை நாம் அடைய முடியவில்லை. அது போல என்னதான் ரஜினி தனி மனிதராக நல்லவராக இருந்தாலும், நேர்மையாக நடந்துகொண்டாலும் அவருக்கு பிறகு இது தொடர்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவே. மேலும் அவர் நல்லாட்சியே வழங்கினாலும், அது சில வருடங்களில் மறக்கப்பட்டுவிடும். 'இந்த சிஸ்டம் கெட்டு போய் விட்டது . இதனை முழுமையாக மாற்ற வேண்டும்' என்று சொன்னவர் எல்லாரையும் போல இன்னொரு கட்சியை தொடங்குவது சிஸ்டத்தை மாற்றுவதாகாது. கட்சிகளில்லாமல் அரசியல் செய்வதற்கான சிஸ்டத்தை அவர் ஆதரித்திருக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். அவர் சூழ்நிலை என்னவோ..

 • vns - Delhi,இந்தியா

  திரு ரஜினி அரசியலுக்கு வருவதை மிக மிக எதிர்ப்பார்ப்புடன் வரவேற்கிறேன்.. ஒரு ஹிந்து ஆன்மிகவாதி தமிழகத்திற்கு இப்போது மிகவும் தேவை. ஆனால் தமிழர்கள் ஊழலில் வாழ்பவர்கள்.. தலைவர் காமராஜரையே தோற்கடித்தவர்கள்.. ஒரு வாக்கிற்கு ரூ பத்தயிரம் கொடுக்காவிட்டால் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள். திரு ரஜினி பணம் கொடுப்பாரா ?

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  "பத்திரிக்கையாளர்கள் சோ இருந்திருந்தால் எனக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கும். " வந்து கெஞ்சினரே? அப்ப வந்திருக்கலாமில்ல? அவரு செத்தாவுட்டு இப்ப வர்றியே

 • Balaji - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  nice commodity, anyhow wish you good luck Mr rajini

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  தல, நீ வா தல...இந்திய, இந்து விரோத சக்(க)திகளை ஒழிக்க, கழிசடை கழகங்களை ஒழிக்க நீ வா தல. முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

 • baski - Chennai,இந்தியா

  கள்ளசாராயம் காச்சிரவன், ஜாதி கட்சுகாரன், ரவுடிஷம் பண்ரவன், மணல் கொள்ளை அடிக்கிரவனெல்லாம் அரசியலுக்கு வற்ரப்ப ஏன் ரஜினி வரக்கூடாது...விருப்பம்னா ஓட்டு போடலாம் இல்லேனா போட தேவயில்ல....

 • tamildesa nesan - kabadapuram

  வருக வருக.... நோட்டாவிற்கும் கீழ் பஜகாவிற்கும் உங்களுக்கும் நிச்சயம் இடம் உண்டு.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  வருக வருக திருட்டு திராவிட கழகங்கள், சந்தர்ப்பவாத கான்க்ராஸ், லெட்டர்பாட், அப்பாமகன் கட்சிகளை ஒழித்து கட்டுங்கள். தமிழக அரசியல் சாக்கடையை சுத்திகரியுங்கள்.

 • aravind - chennai,இந்தியா

  வரவேண்டும் நல்லது செய்ய வேண்டும், என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

 • Raghav -

  Tamilnada neeyavathu kaapathu thalaivaa..

 • venkatesh -

  Super stariku valthukal

 • Jesudass Sathiyan - Doha,கத்தார்

  பாஸ் இது ரொம்ப பழைய வசனம்...புதுசா எதாவது சொல்லுங்கோ...

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  NOTA , பரட்டை (& BJP) - (மூனுதுக்கும்) கடுமையான போட்டி.... அவ்வ்வ்வ்வ்வ்..

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  உண்மை, உழைப்பு உயர்வு. நடத்துங்க ரஜினி சார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு மாதிரி ஆக்கிப்பிடாதீய

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  வெளிப்படையா ஆன்மிகம் ன்னு , சொல்லுறாரு. அதுக்காகவே இவரை ஆதரிக்கலாம். கமல் மாதிரி யாம் எம் ன்னு எல்லாம் சொல்லி கொழப்பவில்லை. அந்தாளு நாத்திகத்தை முன் வெச்சு வராரு. ஆனாலும் இந்தாளு ரொம்ப அப்பாவியா நல்ல ஆளா இருக்காரு. இவரை பொம்மையா முன்னால வெச்சு பின்னாடி ஆட்டுவிக்காம இருக்கணும்.

 • Raj - Chennai ,இந்தியா

  படம் ஓடிய பிறகு பார்ப்போம்?

 • Subramani -

  Welcome Thaliva

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  70 வது வயசுல சூனியம் வெச்சிக்கபோறேனு சொல்றியே பரட்டை.... அவ்வ்வ்வ்வ்வ்...

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  கடந்த ஒரு மாதமாக கமலின் அமைதி நீங்கள் அரசியலுக்கு வருவதை நீங்கள் சொல்லாமலேயே உறுதிப்படுத்தியது. கமல் அடக்கப்பட்டார், ரஜினி அதே சக்தியால் உசுப்பி விடப்பப்படுகிறார். தமிழனின் ரத்தத்தை உறிஞ்ச இன்னொரு காட்டேரி தயாராக்கப்படுகிறது.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  ரஜினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..

 • Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ

  வாழ்த்துக்கள் தலைவா. தாங்களும் கமலும் சேர்ந்து, இந்த தமிழக்தை திருட்டு கும்பலிடம் இருந்து மீட்க வாழ்த்துகிறேன்

 • கஜேந்திரன் - Muttam,இந்தியா

  \ வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன்\\சம்பாரிச்ச காச செலவழிக்க நல்ல வழிய ரஜினி தேர்தெடுத்திருக்கார்.வாழ்த்துக்கள் ரஜினி சார்.தமிழகத்துல பாஜக போல உங்களுக்கு ஒரு தொகுதி கிடைச்சுட்டாளே பெரிய விஷயம் தான்.அதுவும் நீங்க நிக்கிற தொகுதியா இருக்கலாம்.சீமானுக்கு எதிராக நின்று ஜெயித்தால் கண்டிப்பாக பாராட்டலாம்.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  ஐயோ, அப்படினா முந்திரி ராஜேந்திர பாலாஜி மறுபடியும் பசை வாளியை தூக்கி கொண்டு தெரு தெருவாய் போய் சினிமா போஸ்டர் ஓட்ட வேண்டியதுதானா? அண்ணன் சொல்லுறார் கழிவறைக்கு சென்றவர் இன்னும் வெளியே வரவில்லையாமே? தங்க தலைவி டீப்பாவிற்கும், தலைவன் மாதவனுக்கு ரஜினி தனது மந்திரி சபையில் இடம் கொடுப்பாரா?

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  "ஆன்மீக அரசியல் கொண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கம்." - இன்றைய காலகட்டத்தில் இப்படி வெளிப்படையாக சொல்ல கூடிய ஒரே ஆம்பிளை ரஜினி மட்டும்தான். ஜனகர் போல ஒரு ராஜ யோகியாக அரசியலில் ஜெயிக்க வாழ்த்துக்கள்...

 • Dr. Vaithya Nathan - torando,கனடா

  நல்லதை எதிர்பார்போம்

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  வாழ்த்துக்கள். பழனிக்கும் தினகரனுக்கும் இந்நேரம் வயிற்றை கலக்கி இருக்கும்.

 • Kasiraj123@yahoo.co.in -

  We are waiting for you...

 • Kasi -

  Thalaiva.... Nee vaa...

 • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

  வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement