Advertisement

1,511 ஓட்டுகள் போனது எங்கே? தீவிரமாய் தேடுது தமிழக பா.ஜ.,

கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசலும், களத்தில் முன்கூட்டியே இறங்கி வேலை செய்யாததாலும், ஆர்.கே.நகரில், பா.ஜ., தலைகுனியும் அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த முறை கிடைத்ததில், 1,511 ஓட்டுகள், இந்த முறை எங்கே போயின என்பது தெரியாமல், அக்கட்சியினர், தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.


தமிழகத்தில், அரசியல் மேடைகளில், 'கோட்டையில் தாமரை மலரும்' என, பா.ஜ., தலைவர்கள் முழங்கி வருகின்றனர். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வெறும், 1,417 ஓட்டுகளை மட்டுமே பெற்றிருப்பது, கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 2016 தேர்தலில், அங்கு பா.ஜ., 2,928 ஓட்டுகளை பெற்றிருந்தது. ஆனால், இம்முறை, 'நோட்டா'வை விட குறைவாக பெற்றுள்ளது. இது, தொண்டர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி உள்ளது.


இது குறித்து, தமிழக பா.ஜ.,வினர் கூறியதாவது: சென்னை, ஆர்.கே.நகரில், 'டிபாசிட்' கிடைப்பது கடினம் என, எங்களுக்கு முன்பே தெரியும். ஆனால், கடந்த முறையை விட, அதிக ஓட்டுக்கள் பெற முடியும் என, நினைத்தோம். ஆனால், 1,511 ஓட்டுகள் குறைந்துள்ளன; அந்த ஓட்டுகள் எங்கே போயின? இடைப்பட்ட ஓராண்டு காலத்தில், கட்சி வளர்ந்திருக்க வேண்டும்; மாறாக, ஓட்டு வங்கி தேய்ந்துள்ளது.தொகுதியில் கணிசமாக உள்ள, வடமாநிலத்தவர்களும், பா.ஜ.,வை தவிர்த்துள்ளனர். இதற்கான காரணங்களை, ஆராய்வது அவசியம்.


கட்சி ரீதியாக, தோல்விக்கு கோஷ்டிப் பூசல் முக்கிய காரணம். மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், ஒரு முறை தான் பிரசாரத்திற்கு வந்தார். தமிழிசை மட்டும், தனி ஆளாக வலம் வந்தார்.இது, ஒரு புறம் இருக்க, தேர்தல் வரப்போகிறது என தெரிந்தும், களப் பணியை முன்கூட்டியே, பா.ஜ., தலைமை துவக்கவில்லை. 'பூத்' அளவில் கட்சியை வளர்க்க, கமிட்டிகள் போடப்பட்டிருப்பதாக கூறினாலும், யாரையும் அங்கு காண முடியவில்லை.


தேர்தல் வரும் என தெரிந்தும், மெத்தனமாக இருந்து விட்டனர். மத்திய திட்டங்களை, மக்களிடம் எடுத்துக் கூற தவறிவிட்டனர். மொத்தம் உள்ள, 258, 'பூத்'களில், தலா, 10 ஓட்டுகள் கூட கிடைக்கவில்லை. அதனால், 'கோட்டையை பிடிப்போம்' என்ற பேச்சை, மூட்டை கட்டி வைப்பதே சரி. இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (262)

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஆச்சி , இருந்திச்சி ,தமிழு வந்துச்சா , பிளாயிட்டானுங்க , போயிட்டானுங்க .

 • S PANDIYAN - PARIS,பிரான்ஸ்

  258 பூத்துகளில் ஒரு பூத்துக்கு 6 ஓட்டு கூட கிடைக்க வில்லை. இவர்கள் கோட்டையும் பிடிக்க முடியாது கொட்டையும் பிடிக்க முடியாது. அடுத்து ஒருவர் வருகிறார் ரசினி இவர் எந்த கோட்டையை பிடிக்க போகிறாரரோ பொருத்து இருந்து பார்ப்போம்

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  உங்கள் கட்சி ஆட்கள் அந்தத் தொகுதியில் இத்தனை பேர் தான் இருக்கிறார்களோ , இல்லை உங்களுக்குள்ளேயே ஸ்லீப்பர் செல் உள்ளதோ என்னவோ ? பொதுத் தேர்தலில் மூன்று, இரண்டு இலக்கங்களுக்கு மாறினாலும் வியப்பில்லை. உங்க ,பெரியவர்'. ஆட்டிவைக்கும் ஆட்டங்களின் பாதிப்புதான் , பண மதிப்பிழப்பு, ஜி Es ti

 • PERIYASAMYMANIMARANVK MANIMARANVK - keeranur,இந்தியா

  ஒரு நபருக்கு பணம் 15000 கொடுத்திருந்தால் ஜெயிக்கலாம்.

 • sankar - Nellai,இந்தியா

  வெற்றி பெறுபவர்களை நோக்கியே வாக்காளர்களின் பார்வை இருக்கும் - ஆகவே இதில் கவலை கொள்ள ஏதும் இல்லை

 • Ram Babu - Trivandrum,இந்தியா

  அந்த காணாமல் போன ஓட்டுகள் கங்கை அமரனுக்காக போடப்பட்ட ஓட்டுகள் . கட்சிக்காக அல்ல .

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  மோடியின் பொருளாதார துறை பங்களிப்பு அதுல வீழ்ந்துபின் இப்படி திருப்பி நடித்துள்ளார்கள் வாக்காளர்கள் . வடக்கு மாதிரி படிக்காத கூட்டம் இல்லை . வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்திட முடியலை .

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இந்த ஓட்டு வீழ்ச்சிக்கு காரணம், அமித்ஷா, டுமிழிசை, மற்றும் பிஜேபி செம்புகள்.

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  எல்லாம் பணப் புயலில் மாட்டிக்கொண்டது. திமுகவின் 35000 வாக்குகள் உட்பட.

 • Ln Ilango Roche - Madurai,இந்தியா

  ஆமாமா பொன்னரும் தமிழும் சேர்ந்து பிரசாரம் செய்தால் 500 கூட தேறாது...... இவிங்க முன்னாடியே அப்பிடியே வேலை பாத்துட்டாலும்

 • Arivu - Salem,இந்தியா

  கழுதை தேய்ந்து கட்டெறும்பானது

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  மத்திய திட்டங்களை, மக்களிடம் எடுத்துக் கூற தவறிவிட்டனர். - எடுத்து சொல்லியிருந்தால் விழுந்த ஓட்டும் கிடைத்திருக்காது., முதுகில் தான் மொத்து விழுந்திருக்கும்..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  வருமானவரித்துறை வச்சி 1800 ஆபிஸர்வாள், 200-300 கார்கள் என்னத்தை தேடுனீங்க. இப்போ அவாளோட சீ.ப்பி.ஐ ஆபிசர்சை அனுப்பி தேட சொல்லுங்க..அந்த ஓட்டு எங்கே போச்சின்னு தெரியாமே திங்கக்கூடாது, தூங்கக்கூடாது.

 • R chandar - chennai,இந்தியா

  For this defeat no research required BJP did not do anything for tamilnadu examples they introduce Neet Exam, Cauvery management board not formed, no financial support from central government on vardha cyclone, and drought affected period, no support for farmers ,no popular schemes reached common people , no income tax relief for common people introduced. unpopular schemes are forcibly introduced with out making survey with common people, oil exploration programme are being introduced though the agitation from public , frequent price rise of petrol ,lpg , and others more tax on peoples frequent use of articles.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  செயின்ட் கோபின் கம்பனியில் சொல்லி சிறப்பு ஆர்டர் ஆக பெரிய லென்ஸ் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கி வைத்து கொள்ளவும் அதை வைத்து வைத்து தேடலாம் இனி வரும் தேர்தல்களிலும் உபயோகப்படலாம்

 • SathyarajKarthikeyan -

  H Raja va thookunga katchi urupadum...

 • Adhithyan - chennai,இந்தியா

  பிஜேபி தமிழகத்திற்கு காவேரி விவகாரத்தில் செய்த துரோகம் மறக்க முடியுமா? அது மட்டுமா? தமிழகத்தின் வளங்களை அழிக்கும் திட்டங்களை கொண்டுவந்து விவசாய்களுக்கு செய்த துரோகம் மறக்க முடியுமா? நாட்டின் பொருளாதாரத்தை பண மதிப்பு இழப்பு மூலம் அழித்து ஏழைகளை தவிக்க விட்டதை மறக்க முடியுமா ? பிஜேபி ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த ஒரு புதிய வளர்ச்சி திட்டத்தையும் செயல் படுத்த வில்லை. மாறாக மக்களை வாட்டியது மட்டும்தான் கிடைத்த பலன்

 • TamilMark -

  காமராஜரையே வெளியேற்றிய மண் இது வெறும் காசுக்கும் நடிப்புக்கும் வாக்களித்து மண்ணாகும் மக்கள்

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  இரண்டு கண்கள் இருந்தும் மூடர்களான ஆர்கே நகர் மக்களை திட்டி லாபம் இல்லை

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  RK நகர் ஆட்டத்திலே நீங்க இல்லையே பின்னர் எதுக்கு தேடறீங்க.ஆப்போசிட்ல வந்த வைகோ வ பாத்து கும்புடாதீங்கன்னு சொன்னா கேட்டீங்களா

 • TamilReader - Dindigul,இந்தியா

  தமிழிசை அம்மா வீட்டிலே போய் தேடவும்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இதெவிட யாரயும் கேவலப்படுத்தமுடியாது.... என்னாலவே முடியல...

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  டெபாசிட் இழந்தவர் கைக்குட்டையில் ஒளிந்துள்ள ஒன்பது பேருக்கும் பின்னால் நடுங்கி ஒடுங்கி போய் உதறல் எடுத்து கசங்கி போய் உள்ள காங்கிரஸ் என்று ஒன்று உண்டு அது இருக்கிறதா... இல்லை இறந்து விட்டதா என்று போய்த் தேடி பாருங்கள்... மூச்சு ஓடிக் கொண்டிருந்தால் அப்பல்லோவில் சேர்த்து ஐ.ஸி.யூனிட்டின் வெளியே காத்து கிடங்க......

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  பிஜேபி தோற்றது இருக்கட்டும் ஜெயித்தது ஆம் ஜெயித்தது ஆர் கே நகரில் உண்மையான மதசார்பின்மை கொள்கைகளும் மதசகிப்பு தன்மையும் தான்.தோல்வி ஆம் .தோல்வி என்பது போலி மதசார்பின்மை வாதத்திற்கு தான் .இதை தெளிவாக விளக்குகிறேன் .மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் :பா.ஜ., வெற்றி குறித்து ஸ்டாலின் பேட்டி dinamalar டிசம்பர் 18,2017 ஆம் சொன்னபடியே மதசார்பின்மை கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் ,சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சிகள் ,தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்கள் அனைத்தும் பௌத்த மடங்களை இடித்து கட்டியவை என்று சொன்ன சாதீய கட்சியின் குருமா ,வைகோ என்னும் ஆமை (ஆமை புகுந்த வீடும் வைகோ புகுந்த கூட்டணியும் விளங்காது ), ஹிந்து தெய்வங்களை இழிவு செய்து உயிர் /உடம்பு வளர்க்கும் திக திராவிட வீரமணி மற்றும் மதசார்பின்மை முஸ்லீம் மற்றும் கிருஸ்துவ கட்சிகள் என்ற மெகா கூட்டணி கண்டார் .ஆம் மதசார்பின்மை கூட்டணி கொண்டு ஆர் .கே நகர் தேர்தல் களம் நின்றார் ஸ்டாலின் .ஆனால் படு கேவலமாக தோற்றார் .பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து கருணாநிதி அவர்களின் தலைமை வரையில் சென்னை என்றுமே திமுகவின் அசைக்க முடியாத கோட்டை தான். ஆம் எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா காலத்தில் கூட சென்னை தொகுதிகளில் டெபாசிட் வாங்கமுடியாத அளவிற்கு தோல்வியை திமுக கட்சி சந்தித்தது இல்லை .ஆனால் இன்று திமுக கட்சி தோன்றிய நாள் 1949 ,செப்டம்பர் மாதம் 18-ம் தேதி - அன்றிலிருந்து இன்றுவரை சென்னை தொகுதிகளில் டெபாசிட் பறிகொடுத்தது இல்லை .ஆனால் முதன்முறையாக ஆர் கே நகரில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் அந்த மோசமான /கேவலமான /அவமானகரமான /மானக்கேடான /சுயமரியாதையில்லாத /பகுத்தறிவுஇல்லாத வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.யோசித்து பாருங்கள் தமிழக வாக்காள பெருமக்களே இந்த தேர்தலில் ஒருவேளை திமுக ஜெயித்திருந்தால் ஸ்டாலின் அறிக்கை என்னவாயிருக்கும் இது திமுகவின் மதசார்பின்மை கொள்கைகளுக்கு கிடைத்த மெகா வெற்றி ஆம் இது திமுகவின் மதசார்பின்மை கொள்கைகளுக்கு கிடைத்த மெகா வெற்றி என்று தான் ஸ்டாலின் சொல்லியிருப்பார் .மேலும் ஹிந்து தெய்வங்களை இழிவு செய்து உயிர் வளர்க்கும் /உடம்பு வளர்க்கும் கருப்பு தாலிபான் திக திராவிட கூட்டங்கள் ,சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சிகள் ,சைக்கோ ,குருமா ,கான் கிராஸ் காங்கிரஸ் கட்சியினரும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றியை கொண்டாடி ஆர் கே நகர் சட்டமன்ற தேர்தலில் மதவாதத்திற்கு மக்கள் சாவு மணி ஆம் சாவு மணி அடித்து விட்டனர் .மதவாதத்திற்கு சவுக்கடி கொடுத்து விட்டனர் .மதவாதத்திற்கு கல்லறை கட்டிவிட்டனர் .மதவாதத்திற்கு சமாதி கட்டி விட்டனர் மதவாதத்திற்கு மக்கள் பெரிய முற்று புள்ளி வைத்து விட்டனர் .மதவாதம் ஒழிந்தது .மதவாதம் தோற்றது .மதவாதம் வீழ்ந்தது .மதச்சார்பின்மைக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தனர் .இது மதச்சார்பின்மைக்கு கிடைத்த மாபெரும் மெகா /ஜிகா /டெரா வெற்றி என மகிழ்ச்சி பொங்க பெருமிதத்துடன் இந்த போலிமதச்சார்பின்மை புல்லுருவிகள் கருத்துக்கள் சொல்லியிருப்பார்கள்.இதை இல்லையென்று யாராவது மறுக்க முடியுமா ? அவ்வளவு ஏன் ஒருவேளை அதிமுகவின் மதுசூதனன் ஜெயித்திருந்தால் கூட அந்த வெற்றியை கூட மோடிஜியின் மெகா மோசடி என்று போலி மதசார்பின்மை கூட்டங்கள் திரள் திரளாக பதிவுகள் நிரப்பியிருப்பார்கள்.திக திராவிட கூட்டங்கள் அதிமுகவின் வெற்றி மதவாதத்தின் வெற்றி இது RSS சதி ஆரியர் சதி காவிகள் சதி சுண்ணாம்புகள் சதி டிஸ்டம்பர் சதி என வழக்கம் போல அயோத்தி ராமர் கொடும்பாவிகள் எரித்திருப்பார்கள் .மதுசூதனின் வெற்றிக்கு டெல்லி பிஜேபி தான் காரணம் EVM MACHINE இல் எந்த சின்னத்தை அமுக்கினாலும் இரட்டை இலை விழும் படி தேர்தல் கமிஷன் மூலம் சதி செய்து விட்டார்கள் என்று சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிக்கைகள் விட்டிருக்கும் .ஆனால் நடந்ததோ வேறு உண்மையை பாருங்கள் 1,511 ஓட்டுகள் போனது எங்கே? தீவிரமாய் தேடுது தமிழக பா.ஜ.,என்ற செய்திக்கு பதிவுகள் தட்டியவர்கள் இதை கூர் நோக்குங்கள் -ஜெயலலிதா அவர்கள் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது திமுக வேட்பாளர் சிம்லா முத்து சோழன் அவர்கள் பெற்ற வாக்குகள் 57,673 ஆனால் தற்போது மருது கணேஷ் பெற்ற வாக்குகள் 24,651 .பிஜேபியை பொறுத்தவரை போன தேர்தல் 2,928 தற்போது 1,417 ஆதலால் யாருடைய வோட்டு வங்கி சேதாரம் என்பதை உணருங்கள் ஆர் .கே நகர் தேர்தல் முடிவு என்பது .போலி மதச்சார்பின்மைக்கு கிடைத்த மரண அடிதான்.இதனால் பிஜேபிக்கு எந்த இழப்பும் இல்லை .நஷ்டமும் இல்லை .அதன் கொள்கைகளுக்கும் பங்கம் இல்லை தொய்வு இல்லை .யோசித்து பாருங்கள் -தமிழ் நாட்டில் கருணாநிதி ,சசிகலா இவர்களின் குடும்பத்தினரின் சொத்து மதிப்புகள் 1980 ம் ஆண்டு எவ்வளவு ? இன்றைய மதிப்பு எவ்வளவு ? அசுர வளர்ச்சியில் அவர்கள் குவித்த சொத்துக்கள் எல்லாம் தமிழகத்தை சுரண்டியது தான் .இன்று பெரும்பாலான கல்லூரிகள் ,வியாபார நிறுவனங்கள் யாவும் அதிமுக ,திமுக அமைச்சர்கள் ஊழல் பணத்தில் ஆரம்பித்தது தான் . மோடிஜி டீ கடைக்காரராக பிறந்து டீ கடைக்காரராகவே இன்று வலம் வரவில்லை .பிரதமராக உயர்ந்துள்ளார் .அவர் குடும்பத்தினர் இன்றும் சாதாரண நிலையில் தான் உள்ளனர் .அவர் நான்கு முறை முதலமைச்சராக இருந்தும் அவர் குடும்பம் ஒரு சொத்துக்களை கூட மக்களிடம் அடித்து பிடுங்கிய வரலாறு இல்லை .பெட்ரோல் பங்கிலும் ,பலசரக்கு கடையிலும் தான் மோடிஜியின் குடும்பம் தற்போதும் உள்ளது அந்த கடும் உழைப்பை போற்றுவோம் .திருட்டு ரயில் ஏறி திருவாரூரில் இருந்து வந்து தற்போது ஆசிய பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றவர் அளவுக்கு - ஊழலில் தமிழகத்தை சுரண்டிய தென் இந்திய திராவிட தலைவன் அளவுக்கு, மற்றும் 500 க்கும் மேற்பட்ட வருமான வரி துறையினர் சோதனை போடும் அளவிற்கு மிக குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் ஊழல் மூலம் சொத்து சேர்த்த மன்னார்குடியை சேர்ந்த தென் தமிழக திராவிட தலைவியை விடவும் மோடிஜி மிக நல்லவர் என்பதை தமிழக மக்கள் உணரவேண்டும்.தமிழ் நாட்டில் பல வருடங்களாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியை பிடிக்கின்றன - பின்பு ஊழலால் தூக்கியடிக்கப்படுகின்றன - தினகரனும் அதிமுக தான் -ஆனால் திராவிட மாயையால் மக்கள் எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்ற நிலையில் தான் உள்ளனர் .இந்த நிலை மாறும் .தமிழகத்தில் ஊழல் உதயசூரியனும் ,ஊழல் இரட்டைஇலையும் மறைந்து தாமரை மலரும் மலரும் காலம் வரும் .ஆம் தமிழகத்தில்தாமரை மலரும் மலரும் காலம் வரும் இது உறுதி இது உறுதி இது உறுதி

 • INDIAN - Mamallpuram ,இந்தியா

  தோற்று விடுவோம் என்று தெரிந்ததினால் யாரும் பிரச்சாரம் செய்ய முக்கியத்துவம் கொடுக்க வில்லை .மோடியின் கவர்ச்சியான தில்லுமுல்லுக்கு பேச்சு தமிழகத்தில் எடுபடவில்லை . காரணம் தமிழர்கள் புத்திசாலிகள் .வாயால் கெட்டதாம் கவுதாரி. இது தான் பிஜேபி யின் நிலை .

 • S.Palanivelu - Chennai,இந்தியா

  சிபிஐ வைத்து ஒரு விசாரணை கமிஷன் அமைத்து தீவிர விசாரணை நடத்தவும் .

 • Gopalvenkatesh Sai - Chennai,இந்தியா

  சுபராமணி சாமீ பிரசாரம் சையது இருந்தால் பிஜேபி ஒரு லட்சம் வோட்டை பெற்றிடும் நாம கேட்ட நேரம் அவர் டெல்லியில் இருந்து அறிக்கை விடுவதோடு சரி இப்பொது ஒரு சத்தமும் அவரிடம் இருந்து வரவில்லை

 • Prabaharan - nagercoil,இந்தியா

  திருட்டு போய் இருக்கலாம்.புகார் பண்ண வேண்டும்.

 • raja - Kanchipuram,இந்தியா

  மத்திய அரசின் திட்டங்கள் தெரிந்ததால் தான் புறக்கணித்தனர். மேலும் பாஜக தமிழர் விரோத போக்கையே கடை பிடித்து வருகிறது காவேரி உள்பட

 • Sukumar Talpady - Mangalore ,இந்தியா

  தமிழ் நாடு மற்றும் கேரளா மாநில மக்களை அவ்வளவு சீக்கிரத்தில் மாற்ற முடியாது .கேரளாவில் பா ஜ க கொஞ்சம் வளர்ந்து கொண்டு வருவது போல் தெரிகிறது .ஆனால் தமிழ் நாட்டில் ஏமாற்றம் தான் . ஆகையால் பா ஜ க மனம் தளர வேண்டாம் . ஆனானப்பட்ட காங்கிரஸ் கட்சினாலேயே முடியவில்லை . பா ஜ க வினால் முடியாது . தமிழக மக்கள் 50 வருடங்களுக்கும் மேலாக திராவிட கட்சிகளின் மாயையில் விழுந்திருக்கிறார்கள் . அவர்களுக்கும் வேறு கட்சி ஆட்சிக்கு வராதா என்கிற ஏக்கம் உண்டு . இது திராவிட கட்சிகளுக்கும் தெரியும் . ஆனால் தேர்தல் வரும் பொழுது பணத்தாசை காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள் .மக்களும் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்கிற மன நிலைக்கு வந்து பணம் கொடுத்த கட்சிக்கே வாக்கு அளிக்கிறார்கள் . காங்கிரஸ் திராவிட கட்சிகளின் அடிமை ஆகி விட்டது . திரு விஜயகாந்த் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை கொஞ்சம் வந்தது .ஆனால் அதை நன்றாக உபயோகித்து கொள்ள அவர் தவறி விட்டார் . திரு T. ராஜேந்தர் முயற்சி செய்துப்பார்த்தார் . அவருக்கும் தோல்வி . திருமதி தமிழிசை மீது தவறேதுமில்லை . தி மு க மற்றும் ஏழு கட்சிகளின் கூட்டணி டெபாசிட் இழந்துள்ளது . அதிமுக தோல்வி அடைந்துள்ளது . பின் பா ஜ க எம்மாத்திரம் ? தமிழக வாக்காளர்களின் மீது தான் தவறு . அவர்களுக்கு ஊழல் கட்சி தான் வேண்டும் போலிருக்கிறது.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  என்னமோ வெற்றி வாய்ப்பை 1511 ஓட்டில் தவறவிட்டது போல நெனப்பு....

 • Gopi - Chennai,இந்தியா

  ஐயா ஒரே கேள்வி நீங்கள் ஏதாவது ஒரு சமூக சேவை செய்திருந்தால் குறைந்தது 10000 ஓட்டுகளையாவது பெற்றுரிப்பீர். இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும் (தினகரனை தவிர்த்து - ஏனெனில் தவறாக வழிநடத்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் அவர் டோக்கனை நம்பியே ஜெயித்தார் ). என்ன அப்படி பட்ட சமூக சேவை. 1 . மரம் நடுதல் 2 கால்வாய் (காவாய் ) தினமும் சுத்தம் செய்தல் 3 . பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்திருத்தல் 4 பொதுமக்கள் கூடும் இடங்களில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்தல் 5 தன்னார்வலர்கள் கொண்டு இலவச மருத்துவ முகாம், அதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு "crowd sourcing " மூலம் உதவுதல் 6 மழைநீர் வடிகால்களை சரிசெய்தல் 7 மக்கள் தொகைக்கு எத்தாற்போல பொது கழிப்பிடம் கட்டிக்கொடுத்தல் 8 NGO மூலம் போக்குவரத்தில் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களை முறைப்படுத்துதல், GPS மூலம் ஆப் கொண்டு அந்த பகுதி மக்களுக்கு உதவி செய்தல் 9 தொலைத்தொடர்பு , மின்சாரம், மற்றும் இதர கம்பி வடங்களை தெரு விளக்குகளை அந்தந்த துறை பொறியாளர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து சரி செய்ய ஆவணம் செய்தல் 10 கல்வி, கலை மேம்பாட்டிற்கு வழிவகை செய்தல் இவை அனைத்து அந்த பகுதி மக்கள் (4 -5 லட்சம் பேர் இருக்கக்கூடும் ) அனைவரும் பயன்பெறும் அளவு அங்கு முகாமிட்டிருந்த கட்சிகள் செய்திருந்தால் இன்று பேருக்காவது ஓட்டுக்கள் கிடைத்திருக்கும். தேவை தேர்தல் சீர்திருத்தம் : 1 . காலை முதல் மாலை 3 மணிவரை எந்த பிரச்சாரம் இருக்க கூடாது (பள்ளி, வேலைக்கு செல்வோருக்கு சிரமம் குறையும் ) 2 . தேர்தல் தேதி அறிவித்த 10 நாட்களுக்குள் தேர்தலை முடிக்கவேண்டும் 3 பிரச்சாரம் செய்ய எண்ணி 10 க்கு மேல் வேட்பாளர் கூட்டி செல்லக்கூடாது. 4 3 மணிக்கு பிராதான மைதானத்தில் முக்கிய நபர் மூலம் பொதுக்கூட்டம் நடத்தவேண்டும் (6 மணியோடு முடித்து விடவேண்டும் ), 5 பகுதிவாரியான தெருமுனை கூட்டம் மேடை கூட்டம் 5 மணிமுதல் 7 மணிக்குள் நடத்தவேண்டும் 6 திறந்த வெளி கார் ஜீப் மூலம் வேட்பாளர் ஆதரவு கூறலாமே தவிர ஒருக்காலும் கீழே இறங்கி வாக்கு சேகரிப்பது கூடாது (கோவில் சர்ச் மசூதி வந்தாலும் இறங்க கூடாது ). அப்படியே பொதுமக்களை கும்பிட்ட வாறே செல்லவேண்டும் அதுவும் 10 நபார்மேல் அவருடன் 3 வாகனத்திற்கு மேல் பயணிக்க கூடாது 7 கண்டிப்பாக இறுதி வாய்ப்பாக அனைத்து கட்சி வேட்பாளர்களும் (தற்போது தொலைக்காட்சிகளில் மேக்கப் போட்டு கொண்டு காரசார விவாதங்களில் ஈடுபடுவது போல ) ஒரே மேடையில் பகுதிக்கான திட்டங்கள் என்ன பிரச்சனைகளை எதிர்கொள்வது, எவ்வளவு சீக்கிரத்தில் சரி செய்வது போன்ற விஷயங்களை பரிமாறாவேண்டும். பழைய புராணம், குற்றச்சாட்டுகளுக்கும் அனுமதி கட்டாயம் இல்லை. இதை தேர்தல் ஆணையம் பதிவு செய்யவேண்டும் ) 8 ஜெயித்த பின்ன நிரந்தர வீடு எடுத்து வேட்பாளர் அந்த தொகுதியில் தங்க வேண்டும். அரசியல் பணி , சட்டசபை மக்களவை இயங்கும் காலம் தவிர்த்து மற்றைய நாட்களில் எளிதில் அணுகும் நபராய் , தொழில் நுட்பம் மூலம் பிரச்சனைகளை சீக்கிரம் சரி செய்பவராய் இருத்தல் மிக அவசியம் ) 9 வாரம் ஒருமுறை குறைதீர்ப்பு மன்றம், மாதம் ஒருமுறை முக்கிய திட்டங்கள் கண்காணிப்பு மேற்பார்வை, மூன்று மாதத்திற்கு ஒருமுறை பணிகளின் முன்னேற்றம் இவற்றை மக்களுடன் இருந்து முனைப்புடன் செயல்படுத்தவேண்டும் இதையெல்லாம் செய்தால் மேற்கொண்டு MLA MP ஆக தொடரலாம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நபரை திரும்ப அழைக்கும் சட்டத்தை பயன்படுத்தி முந்தைய பதிவுகளை வைத்து நீக்கலாம்

 • IndiraBthane -

  என்ன தான் மத்திய அரசின் திட்டங்களை எடுத்து சொன்னாலும் தமிழ் மக்களுக்கு புரிவதில்லை.அவர்களைபொறுத்த வரை பி ஜெ பி பார்ப்பனர் ஆட்சி,மதவாத ஆட்சி.போதாதற்குஅவர்களுக்குபணம் கிடைத்தால் போதும்,அதற்காக என்ன ஊழல் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.ஒருவருக்கு 20000 கொடுத்தால் அவர் அதை ஈடு செய்ய எவ்வளவு சம்பாதிப்பான் என்ற அறிவு கூட இல்லாதவர்களா ? இனி என்ன! தினகரன் நிரந்தர முதல்வர்.நாளை ஒருகுடும்பத்தை சேர்ந்த 150 பேர் தமிழ் நாட்டை சூறையாட ஆர் .கேநகர் மக்களே காரணம் .

 • Nagarajansaptharishi -

  DMK & ADMK are the true branches. They are believed by innocents.

 • Nagrajansaptharishi -

  Dont worry about TN.

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  திமுக காங்கிரஸ் தேர்தல் டெபாசிட் போனது குறித்து தனி‌தனியாக ஆய்வு கூட்டம் நடத்துகிறார்களாம்.. முதலில் ஒன்பது கட்சிகளும் இணைந்து கிடைத்த 24651 வாக்குகளில் யார் யாருக்கு எவ்வளவு வாக்குகள் என்று ஆராய்ந்து சொன்னால் நன்றாக இருக்கும்..... எனது கணிப்பின்படி திமுக 24000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது காங்கிரஸ் 401 வாக்குகள் பெற்று டெபாசிட்டுக்குள் டெபாசிட் இழக்கிறது.. மீதமுள்ள ஏழு கட்சிகளும் 250 வாக்குகள் பெற்று டெபாசிட்டுக்குள் டெபாசிட் இழக்கிறது.... திமுக வை தவிர அனைத்து கட்சிகளும் நோட்டா வை விட குறைந்துள்ளது.....

 • krishnan - Chennai,இந்தியா

  மக்களை ஓட்டுக்கு காசு வாங்கும் நிலைக்கு தள்ளியது யார் ? BJP கொண்டுவந்த திட்டங்கள் மக்களை சுயமாக வாழவைக்கும் திட்டங்களா . அது நாடக திட்டங்கள் தானே.

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  1511 ஒட்டு கருப்பு பணத்தை ஒழிச்ச பெட்டியில இருக்குமோ

 • Hallaluah,Mumbai -

  BJP need not worry much about Tamilnadu,just need to spend money during election they will win,150 crores per constituency,BJP will form next government,Easy to fool these ppl

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  1511 ஒட்டு மோடியின் குடைச்சல் ஹ.ராஜா , தமிழிழை வாயால் கெட்டது

 • PONNUDURAI VISUWASAM - virudhunagar,இந்தியா

  இதை விட கிண்டலாக , நக்கலாக , எந்த ஒரு பத்திரிகையும்/தொலைக்காட்சியும் BJP -யின் வாக்கு வங்கி பற்றி செய்தி வெளியிட்டிருக்க முடியாது சிரித்து,சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  தேர்தல் ஓட்டப்பந்தயம்... எல்லாரும் தனி தனியாக பந்தய தூரத்தை கடக்கும் போது இவர்கள் ஒன்பது பேர் சேர்ந்து பந்தய தூரத்தை பங்கு போட்டுக் கொண்டு ஓடியும் தோல்வி அடைந்தார்கள்.... இவர்கள் தனி ஒருவனாக ஓடி தோற்றவரை பார்த்து பல் இளிப்பது வெட்கக்கேடு.....

 • K.Palanivelu - Toronto,கனடா

  ஓட்டுக்கு யார் அதிகப்பணம் கொடுப்பார்கள் என்ற உந்துதலின் அடிப்படையில் பணம் பிரதான அங்கம் வகித்திருக்கும்போது மற்ற எந்த அடிப்படையிலும் வாக்காளர்களின் மனம் எந்த சீராய்விலும் ஈடுபடவில்லை எனலாம்.

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  மத்தியில் திமுக காங்கிரஸ் ஆட்சி... கர்நாடகவில் காங்கிரஸ் ஆட்சி.. தமிழகத்தில் திமுக ஆட்சி... காவிரி நீர் பங்கீடு செய்வதில் ஏன் குழப்பம்.. திமுக காங்கிரஸ் தமிழர்களை ஏமாளிகள் முட்டாள்கள் என்று நினைத்தது எத்தனை காலம் ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியும்...இந்த லட்சணத்தில் இரு கட்சிகளும் தேர்தலில் டெபாசிட் போனது குறித்து ஆய்வு நடத்துகிறார்களாம்.....

 • Snake Babu - Salem,இந்தியா

  அய்யா பிஜேபி நண்பர்களே இப்படியே பேசிக்கொண்டிருங்கள். மிகவும் நன்றாக இருக்கும். தமிழர்களை கேவலமாக பேசுவது, தமிழ நாட்டுக்கு எந்த நலனும் செய்வதில்லை ஆனால் ஓட்டுமட்டும் வேணும் இது என்ன போங்கு, உடனே திருப்பி கேட்காதீங்க நாங்க என் உங்களுக்கு செய்யணும் என்று............ எங்களுடைய வரி அதை பார்த்தல் தெரியும் நீங்கள் எவ்வளவு அடாவடியை செய்கிறீர்கள் என்று. நன்றி வாழ்க வளமுடன்

 • Rajkumar NS - Theni,இந்தியா

  முதலில் தமிழகத்தின் பிரச்சனையை ஆராய்ந்து அதற்கு செய்ய வேண்டியதை முறையாக செய்தல் மட்டுமே தாமரை மொட்டு விட முடியும் இல்லை என்றல் தாமரை என்றுமே மலராது ..........

 • Krish - Madurai,இந்தியா

  பணமதிப்பிழப்பு,ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் பாஜகவின் ஓட்டு வேறு ஒருவருக்கு சென்றிருக்கலாம். தற்போதுள்ள சூழ்நிலையில் சமூக வலைதளங்களில் பாஜகவை கிண்டலடித்து பதிவு போட்டால் லைக்ஸ் அள்ளுகிறது. திரைப்படங்களில் நடிகர் ஜஎஸ்டியைப் பற்றி பேசினால் கைதட்டல் அள்ளுகிறது. மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்றது போல தமிழகத்தில் அவ்வளவு எளிதாக பாஜகவால் வெற்றி பெற முடியாது. பாஜகவிற்கு உண்மையிலேயே தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்வது நலம்.

 • karthi - MADURAI,இந்தியா

  ஒரு வேலை வெளிநாட்டு சதியா இருக்குமோ?.

 • Murugan - Puducherry,இந்தியா

  பொதுவாக அரசியல் விமர்சர்கள் பி ஜே பி ஓட்டுகள் ஜெயலலிதாவுக்காக admk வுக்கு விழுகின்றன என்று சொல்வார்கள், இப்போது ஜெயலலிதா இல்லை அவர் இருந்தபோது வாங்கிய ஓட்டை விட குறைவாக வாங்கி இருக்கிறது, பி ஜே பி ஓட்டு குறைததற்கு மிக முக்கிய கரணம் அவர்களது ஆணவம், திமிர், தமிழக மக்களுக்கு எதுவும் செய்யாவிட்டாலும் தமிழக மக்களை தரக்குறைவாக விமர்சிக்காமல் இருந்திருந்தாலே இன்று நோட்டாவிடம் தோற்கும் நிலை வந்திருக்காது, இன்னொன்று தமிழிசையை மாற்றுவதால் எந்த பயனும் வரப்போவதில்லை, இல.கணேசன் சொல்வது போல தமிழக மக்கள் பி ஜே பி யை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பதே உண்மை, அவர் யதார்த்தத்தை உணர்ந்துகொண்டது மட்டுமன்றி அதை பொதுவெளியில் ஒப்புகொண்டுமுள்ளார், எனவே தமிழக மக்கள் ஒரு பொருட்டாகவே நினைக்காத ஒரு கட்சிக்கு தலைமையை மாற்றுவதால் எந்த பயனும் விளைய போவதுமில்லை,

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  Gopalan p.s. chennai./// இது டிமானிடேஷனுக்கு கிடைத்த அடி ஓ.கே.. அப்படி என்றால் திமுக தானே வெற்றி பெற்று இருக்க வேண்டும்... ஸ்டாலின் ஐவிட தினகரன் திறமையானவர் என்று கூறுகிறேர்களா... டெபாசிட் பெற்ற இரு தலைவர்களுக்கு பின்னால் டெபாசிட் போன தலைவர்கள் அத்தனை பேரும் அணி சேர வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஒ.கே...ஒ.கே.....

 • Nanthakumar.V - chennai,இந்தியா

  Nota kuda thattu thadumari Nadakka arambichachi...... Him

 • Muthuselvakumar Palani - CHENNAI,இந்தியா

  தயவு செய்து நோட்டோ வை வீழ்த்த வியூகம் செய்யுங்கள் .......அதோடு தமிழ் நாட்டு அரசியலில் யாரையும் விமர்ச்சிக்க சற்று யோசிக்குங்கள் ...இல்லை என்றால் கிடைக்கும் என்பார் கிடைக்காது ...வேறு என்ன வோட்டுதான்......நாவடக்கம் நன்மைதரும் .

 • jayaraman - attayampatti,இந்தியா

  இங்கே திமுகவின் 30000 வோட்டுக்களே காணோம் என்ற நிலையில் 1500 வோட்டு அடுத்த தேர்தலில் கிடைக்கும் பாஜகவிற்கு

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  குக்கருக்குள் ஒளிந்து இருக்கும்

 • காசிமணி டஸ்கர் - BJP Sembu Block, Oothikichi town,சிங்கப்பூர்

  இவர்களின் புலம்பலை படித்தால்,,நானும் ரவுடிதான்,, நானும் ரவுடி தான் என்ற வடிவேலுவின் காமடி தான் நினைவில் வருகிறது.

 • காசிமணி டஸ்கர் - BJP Sembu Block, Oothikichi town,சிங்கப்பூர்

  எங்கே தேடுவேன்...1511 வோட்டை எங்கே தேடுவேன்?

 • Gopalan PS - Chennai,இந்தியா

  இது demonetization கு கொடுத்த பரிசு. சின்ன சின்ன வியாபாரிகளின் வயிற்றில் அடித்ததால் வந்த வினை.

 • Raj Pu - mumbai,இந்தியா

  இவர்களை தேடுவது முக்கியம் காணாமல் போன மீனவனும் அவன் குடும்பமும் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு கவலை இல்லை ஒரு சராசரி கட்சி விட கேவலமான கட்சி இவர்களது இதில் வளர்ச்சி கூப்பாடு ஆனால் யார் வளர்ச்சி , வாரம் ஒரு முறை விமானநிலையத்தில் பேட்டி

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  வாக்கு பதிவு இயந்திர கோளாறா இருக்குமோ? உபி, குஜராத்தில் பிஜேபி நினைத்தபடி நன்றாகதானே வேலை செய்தது?

 • POPCORN - Chennai ,இந்தியா

  3 நாட்களாக புலம்பல் கேட்டு அலுத்துவிட்டது

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  மூன்று தேசியக் கட்சி + ஆறு திராவிட கட்சி ஒரு சுயேட்சையிடம் டெபாசிட் இழந்து துண்டைக் காணோம் இடுப்பு துணியை காணோம் என்று ஓடியதை ஆர்கே நகர் மக்கள் வெடி வெடித்து நன்றாகவே கொண்டாடினார்கள்....ஆர்கே நகர் மக்களுக்கு வாழ்த்துக்கள்....

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  பாஜக வுக்கு ஒரு டெபாசிட் போயிட்டு.... ஒரு டெபாசிட்டுக்குள் ஒன்பது கட்சி போனது உலகிலேயே நடந்த அதிசயம்...

 • S.v.Ramaswamy -

  முதலில் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திப்பது என்கிற நிலைப்பாட்டை மாற்றுங்கள்.முத்ரா திட்டத்தில் அதிக அளவு சிறு தொழில் செய்வோருக்கு கடன் பெற்றுத்தர முயற்சியுங்கள். முக்கியமாக மதஅரசியலை மறந்துவிடுங்கள்.|

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  முட்டாள்களே... நீங்கள் பாஜக வாக்குகளை தேடி கொண்டே இருங்க..... பக்கத்து மாநிலமான ஆந்திரா தெலுங்கானா இரண்டும் மத்தியில் ஆளும் பாஜக வோட இணக்கமாக இருந்து தொழில்நுட்பம்,சுற்றுச்சூழல், நகர் மேம்பாட்டு, ,போக்குவரத்து, கல்வி மேம்பாடு,சுகாதாரம், காவல் நல மேம்பாடு போன்ற துறைகளில் முன்னேறி வருகிறது.... நீங்கள் திராவிட கட்சிகள் என்று சொல்லி கொண்டு ஸ்டாலின், ஒபிஎஸ்,இபிஎஸ், தினகரன்,தீபா,வைகோ திருமா, அன்புமணி, சீமான், வீரமணி,வி.காந்த், கிருஷ்ணசாமி என்று அடித்துக் கொண்டு தமிழ் நாட்டை‌ மாவட்ட வாரியாக கூறு போட்டு சீரழித்து விடாதீர்கள்... தேசிய கட்சி காங்கிரஸ் , பாஜக வும் தமிழக கட்சி திமுக , அதிமுக வும் போதும்.... தமிழ்நாடு தன்னிகரில்லா மாநிலமாக ஜொலிக்கும்... முடிவெடுக்க வேண்டிய திமுகவும் அதிமுகவும் நல்ல முடிவெடுத்து தமிழகத்தை காக்க வேண்டும்....

 • ganapati sb - coimbatore,இந்தியா

  ஜோக்தான்எனக்கென்னவோ சுப்பிரமணியம் சாமி பேச்சை கேட்டு பாஜக ஆதரவு ஓட்டுக்கள் தினகரனுக்கு சென்று விட்டனவோ என தோன்றுகிறது வளர்ச்சிக்கு பதில் வீழ்ச்சியை காட்டியதால் பாஜக மாநில தலைமை மாற்றம் செய்ய சரியான நேரம் இதுதான் ரஜினி சொல்வது போல தமிழிசையிடம் வீரம் உள்ளது வியூகம் இல்லை கங்கை அமரன் நின்றிருந்தால் கூட பத்தாயிரமாவது பெற்றிருப்பார் கரு நாகராஜனுக்கு செல்லவேண்டிய சில சமுதாய வாக்குகள் கூட கலைக்கோட்டுக்கு பிரிந்து சென்றிருக்கலாம்

 • Gopal.V. - bangalore,இந்தியா

  ஆர்.கே.நகர். மட்டுமல்ல இனி தமிழ் நாட்டில் ஏன் இந்தியா முழுவதுமே பா.ஜ.க. வரவே வராது. காரணம் ஒரு பழ மொழியில் கூறிவிடலாம்...அதாவது அற்பனுக்கு அதிர்ஷ்ட்டம் அடித்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். இந்தியாவுக்கு இப்பொழுது தேவை புல்லட் ரயில் அல்ல.. அன்றாட வேலை..அதற்குண்டான கூலி..

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  1,511 ஓட்டுகள் போனது எங்கே என்று தேடுவதைவிட, சற்றும் எதிர்பாராது கிடைத்த 1400 ஓட்டுக்கள் எப்படி கிடைத்தன என்பதை கண்டுபிடிக்கலாம்

 • syedabthayar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஒரு பூத்துக்கு 5 1/2 வாக்கு அருமை அருமை. பிஜேபி யின் சாதனையை சொல்லியிருந்த 500 வாக்கு கூட கிடைத்திருக்காது. அடுதவாட்டி நல்லா விளக்கி சொல்லுங்க ....

 • karthikeyan -

  ஏழைகளின் வங்கி டெபாசிட் புடுங்கவர்க்கு எதுக்கு டெபாசிட் ?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  திருட்டுக்கு கும்பல்களுக்கு எதிராகத்தான், அவர்களின் மேல் நம்பிக்கை இல்லாமல் பலர் இன்று நோட்டா விற்கு ஓட்டைப் போட்டார்கள்.. பாஜக வினர் உத்தமர்கள் என்று முழங்கிவரும் நேரத்தில் நோட்டா ஓட்டுகள் கூட அவர்களுக்கு விழாதது, அவர்களையும் அரசியல் திருட்டுக் கும்பலுடன்தான் சேர்த்து பார்க்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.. இவைகளும் காவி பூசிய புலிகளே அன்றி, இவைகளும் பசுக்கள் அல்ல..

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  பாஜக மீது மக்களுக்கு வெறுப்பு வர காரணம் தேவையில்லாமல் தமிழக அரசு செயல்பாட்டில் மூக்கை நுழைத்ததுதான். இவர்களும் பதவியை காப்பாற்றிக்கொள்ள வேறு வழியில்லாமல் திணறினர். மக்கள் வோட்டு போட்டது அம்மாவுக்குதான். அவர்கள் இறந்த பிறகு நியாயப்படி மறு தேர்தல் நடத்துவதுதான் ஜனநாயகம். பாஜவின் கொல்லைப்புற நுழைவு மற்றும் சின்னம்மா குடும்பம் தலைதூக்கியது நடந்திருக்காது. இந்தியாவிலேயே ஏன் வேர்ல்டுலயே தேர்தல் கமிஷன் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அது தமிழகமாகத்தான் இருக்க முடியும். ஆர்கே நகர் மக்கள் பிச்சை எடுத்ததும் அதில் அடங்கும்

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  பல ஆயிரம் வாக்கை இழந்து நிற்கும் அதிமுக , வைப்புத்தொகை இழந்து நிற்கும் திமுகவை விட, 1500 ஓட்டை இழந்து இருக்கும் பாஜக மேல். மேலும் பாஜக தமிழகத்தில் தன் நிலை உணர்ந்து மார்தட்டுவதை நிறுத்தவேண்டும்.ஏனைய காட்சிகள் போல் இல்லாமல், ஊழல் இல்லாத உண்மையான வளர்ச்சி நோக்கி அரசியல் நடத்த வேண்டும். இந்தியாவின் பிற பகுதியில் பெற்ற வெற்றியெல்லாம் இங்கு ஒரு பொருட்டே அல்ல. தமிழகம் என்றுமே தனித்த குணம் பாரம்பரியம் கொண்டது. ops - eps க்கு முட்டுக்கொடுத்து தினகரன் - சசியை தலையெடுக்காமல் பார்த்துக்கொண்டதை தமிழக மக்கள் விரும்பவில்லை. நிலைமையை உணர்ந்த்துக்கொண்டு பாஜக செயல்படவேண்டும்

 • தேவி தாசன் - chennai,இந்தியா

  தங்க தலைவி டுமிழிசை தலைமையில் வீடு வீட போயி தேடுங்கள். கூடவே சிபிஐ கிரைம் பிரஞ்சுபோலீஸ் போர் விமானங்கள் வைத்து தேடுங்கள். கண்டிப்பாக கண்டு பிடிக்க முடியும்

 • shanmuga - Chennai,இந்தியா

  ஒட்டுமொத்த தமிழகத்திலும் தேர்தல் நடந்தாலும் பிஜேபி யால் நோட்டாவை முந்த முடியது என்பது தான் நிதர்சனம். பிஜேபி தலைவர்கள் தமிழக மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிக்காமல் ஒட்டு மட்டும் வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும். பிஜேபி மாநில தலைவர்கள் உடனடியாக மாற்ற பட வேண்டும். தவறினால் இன்னும் மோசமான நிலைமையை சந்திக்க நேரிடும்.

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  வோட்டை எங்கே தேடுவேன் தினகரன் பிடுங்கிக்கொண்டானோ இல்லை ADMK பிடுங்கிக்கொண்டானோ இல்லை நோட்டவா மாறிவிட்டதோ எங்கே தேடுவேன் வோட்டை எங்கே தேடுவேன் என்று பாடி கொண்டே செல்ல வேண்டியதுதான் " பாலா இருந்தால் பொங்கும் பச்சை தண்ணி எப்படி பொங்கும் வேண்டுமானால் சல சல வென சவுண்ட் வேண்டுமானால் வரும் பாவம் தமிழ் இம்சை நொந்து ரூட்லே ஆகிவிட்டார் அமித்ஷா சென்னை வருவது சந்தேகமே ஊடகங்களில் வரும் நாராயணன் உலகத்திலேயே புத்திசாலி அடாவடி ராகவன் இவங்க எல்லாம் வெளியே வந்து மேடையில் பேசணும் எ/சி ரூம் இல் உட்காந்து பேசினால் கட்சி வளராது கள பணி ஆற்றனும்

 • Mariappa T - INDORE,இந்தியா

  வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி கருத்து எழுகிறீர்கள்.

 • Vasu - Coimbatore,இந்தியா

  ஓட்டுகள் போனது எங்கே?- பணம் எங்கிருந்து வந்ததோ அங்கேதான் ஓட்டுகளும் போனது.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  தேடுங்கள் தேடிக்கொண்டே இருங்கள்.... மொத்த தமிழத்தில் நோட்டாவை வெல்ல முடியாது.. நோட்டாவிடம் தோற்ற தேசிய கட்சிக்கு ஒரு சில நூறு பேர்களுக்கு தமிழகத்தில் நிறைய பாஜக தலைவர்கள்... செம காமெடி ..இந்த தேசிய கட்சியின் பரிதாப நிலை தமிழகத்தில்

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  காங்கிரஸ் ஆட்சியின் கடைசி கால கட்டத்தில் வாசகர்கள் பெரும்பாலும் இப்படித்தான் கழுவி ஊத்துனாங்க ..இப்ப பிஜேபி .

 • rama - johor,மலேஷியா

  சன் டிவி பார்த்தால் மட்டும் போதாது எல்லா டிவியையும் பார்கக வேண்டும் அபபோதுதான் உண்மை தெறியும். தினகரன் நல்ல தலைவர் வென்றுவிட்டார் தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் பிறந்து விட்டது. அம்மாவின் RK மக்களுக்கு வாழ்த்துகள்

 • Visu Iyer - chennai,இந்தியா

  அப்போ அடுத்த தேர்தலில் ... எல்லா ஓட்டு சாவடியிலும்.. எந்த சட்டை பட்டனை தட்டினாலும்....என்று சொல்ல வாரீர்களா?

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  இங்கே பாஜக வை பற்றி பஜனை செய்யும் கூட்டங்களே.... அந்த கட்சி கூட இதை பற்றி ஆராயவில்லை... நீங்கள் நல்லா ஆராய்கிறீர்கள்.... வாங்கிய வாக்குகளை விட இக்காட்சியை பற்றி கவலைப்படுகிறவர்கள் ஏராளாம்... டெபாசிட் இழந்தவர் கைக்குட்டையில் ஒளிந்துள்ள ஒன்பது பேருக்கும் பின்னால் ஒடுங்கி நடுங்கி போய் உதறல் எடுத்து கசங்கி போய் உள்ள காங்கிரஸ் என்று ஒன்று உண்டு அது இருக்கிறதா... இல்லை இறந்துவிட்டதா .போய் தேடி பாருங்கள்...

 • Karikalan Govind - Chennai,இந்தியா

  1511 தவறு, 1417 என்று படிக்கவும்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  3000 ஓட்டில் 1500 ஐ காணவில்லை...RK நகர் மக்கள் கொடுத்த ஊமைக்குத்தில் வலிக்காதது போலவே அழுவது காதில் கேட்கிறதே....

 • makkal neethi - sel,இந்தியா

  கடந்த முறையை விட, அதிக ஓட்டுக்கள் பெற முடியும் என, நினைத்தோம். ஆனால், 1,511 ஓட்டுகள் குறைந்துள்ளன...yedho 1511 ottulatthan aatchiyei pari koduttha maathiri buildappu .....adapponkayya neenkalum unka puravali aidiyaavum

 • Karikalan Govind - Chennai,இந்தியா

  காணாமல் போனவற்றை தினகரன் கோட்டுப்பையில் தேடவும். அதை விட இநத 1511 பேரை தேடிப்பிபிடித்து போற்றுங்கள்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  GST க்கு அப்புறம் , நோட்டு முடக்கத்துக்கு அப்புறம் 2000 ரூபாய் மதிப்பு 1000 ஆகி குறைந்து விட்டது... 20000 சம்பளம் வாங்கினவன் 10000 தான் வாங்குறான்.... தினக்கூலிகள் வருமானம் பாதியாக குறைந்துவிட்டது.... ஆதலால் பாஜகவின் ஒட்டு வங்கியும் பாதியாக குறைந்து விட்டதோ என்னவோ... ? வாயால் சுடும் வடை எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்று பார்த்தீர்களா?

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  கடலில் தேடுங்கள் மாயமானவர்களுக்கு உதவியாக இருக்கும்.

 • Mal - Madurai,இந்தியா

  What was the work bjp did.... Without hard work, how can one hope to attain success... It's a wise decision that they contested in RK to know their real power.... Yet this can't be taken as the decision of the whole Tamil nadu... Most of the people there were uneducated... And went behind money and false propaganda...

 • Ram Babu - Trivandrum,இந்தியா

  பணம் வாங்கிகொண்டு வோட்டு போடும் பன்னாடைகள் இருக்கும் வரை நல்லவர்கள் தேர்தலில் ஜெயிக்க முடியாது . பெரும் கோடீஸ்வரர்கள் தான் ஜெயிக்க முடியும். இது தான் தமிழத்தின் சாபக்கேடு .

 • siriyaar - avinashi,இந்தியா

  Not much difference between BJP and DMK ( BJP supports RAMA for money , DMK anty RAMA for money ).

 • A.Navarajan - Coimbatore ,இந்தியா

  மறக்க மாட்டோம் நாங்கள்.

 • hussain - cuddlore,இந்தியா

  நீங்க என்ன தலைகீழா நின்றாலும் தமிழகத்துக்கு நீங்கள் செய்த தூரோகத்தை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள் தமிழகத்தில் எப்பவுமே தாமரை மலராது நீங் போய் முதலில் ராகுல் ஜியை சமாலிக்கும் வலியை பாருங்கள்

 • Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா

  நாளைய பொழுது இன்றைய பொழுதைக்காட்டிலும் நன்றாக இருக்கத்தான் நாம் விரும்புவோம். சமூக விரோதிகள் கையிலே அரசாங்கம் அமைந்ததென்றால் இப்போதிருக்கும் அமைதி இழந்து,ஆணவமும் பயங்கரவாதமும் தலைவிரித்தாடும். குற்றவாளிகள் தங்கள் வேலைகளை கச்சிதமாக நிறைவேற்ற, மக்களே காரணமாகிவிட்டாரகள்.

 • Pootta Case - Chennai,இந்தியா

  Only money talks. If someone can give me @ 10000 Rs per eligible voter in RK Nsgar, I will show that I can win and I will make people dance in the streets. Any body willing to take the challenge?

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  பிஜேபி களத்தில் இறங்கி வேலை செய்யவில்லை. ஆர் எஸ் எஸ் தலைமை இதில் தலையிட்டு நிலைமையை சரி செய்ய வேண்டும். இதே தினமலர் இரு நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. தமிழக கிராமங்களில் கூட பிஜேபி அறிந்து வைத்திருக்கிறார்கள்..மோடியின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். .ஆனால் கட்சி தலைவர்கள் தான் அதை சரியான முறையில் பயன்படுத்தாமல் கோட்டை விடுகிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்திருந்தது. அது தான் ஆர் கே தொகுதியிலும் நடந்திருக்கிறது. நமக்கு வறண்ட தொகுதி என்று நினைக்காமல் தொகுதியில் நம்பிக்கை ஊட்டும் முறையில் வேலைசெய்திருந்தால், நிச்சயமாக ஒரு கணிசமான வாக்குகளை பெற்றிருக்க முடியும்.

 • rama - johor,மலேஷியா

  செயவதெலாம் துரோகம், தமிழ் நாட்டு மீனவர்களை கூட காப்பற்ற வக்கிலலை கேட்டால் இலங்கை நட்பு நாடு, பின் வழியில் தமிழ்நாட்டை ஆட்சி செய்வது தமிழிசை தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் போல் பேசுகிறார், தமிழிசை சொல்வதெல்லாம் தேரதல் ஆனையம், நீதிமன்றம் செய்கிறது.அம்மா சொல்லி சென்றது இன்று நிருபனம் ஆகிறது இனிமேலாவது மோடி தன் நரி வேலை செய்யக்கூடாது தமிழ்நாட்டு மக்கள் தெளிவடைந்து விட்டனர்

 • MohanaSundaram - Erode,இந்தியா

  ரூ. 1000, 500 செல்லாது என சொன்னதும், GST வரியும் தான் காரணம்.

 • Sampath Kumar - chennai,இந்தியா

  அடுத்து வரும் தேர்தல் பிரச்சாரத்துக்கு வேஷ ஊசி மற்றும் வேஷ நாசங்களை அனுப்பி வைங்க

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  1,511 ஓட்டுகள் போனது எங்கே? தீவிரமாய் தேடும் பணியை சி பி ஐ இடம் ஒப்படைக்கலாம். இரண்டு ஜி குற்றவாளிகளை பிடித்தது போல கண்டுபிடித்து கொடுத்துவிடும்

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  மத்திய திட்டங்களை, மக்களிடம் எடுத்துக் கூற தவறிவிட்டனர்

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  missed கால் மிஸ் ஆகி கொடுத்திருப்பான் அதையெல்லாம் நம் தொண்டர்கள் என்று பிஜேபி நினைத்துடுத்து அதனால் வந்த கண்டா பலன்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This one is "Ulaingai Nelli Kani Pole" every one knew it. Due to policy of Hinduism and Hindi enforcement either directly or indirectly in our state party lost the 1511 votes which they got in last election in R.K.Nagar.

 • skandh - chennai,இந்தியா

  There is single reason for this debacle ,sorry , wiping out of BJP. Modi government miscalculated Tamil people.Its first failure was its deprndance on OPS .OPS cannot get deposit in Bodi itself,if he contests now or in future. AIADMK grassroot workers are strongly with Sasikala and family.They already accepted her as their leader and political heir of Amma..

 • aravind - chennai,இந்தியா

  உண்மையாக தமிழகத்தில் பாஜக வலு பெற வேண்டுமென்றால், முக்கியமான இரண்டு பிரச்னை. காவேரி பிரச்சனை, இலங்கை கடற்படையினரால் மீனவர் சிறை படுகின்ற பிரச்சனைகளை நீங்கள் கையில் எடுத்து உங்கள் தேசிய தலைவர்களிடம் பேச வேண்டும், அப்படி செய்து அதில் தீர்வு தந்தால், மக்களுக்கும் நல்லது, உங்கள் கட்சிக்கும் நல்லது, அதை செய்யாமல், தொலைக்காட்சி விவாதத்திலும் தொலைக்காட்சியிலும் பேசி கொண்டே இருந்தால் ஒரு பிரயோஜனமும் கிடையாது...

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  நோட்டா வுக்கு கூட போடாம நாட்டைவிட்டே போய்ட்டாங்களா???

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அறிவே இல்லாத கூமுட்டைங்க.. தகுதியே இல்லாத வேட்பாளர் என்பதற்கும் (நோட்டா) கீழே வச்சிருக்காங்க. ஏன்னு யோசிக்கிறதை விட்டுட்டு..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அது கிடைச்சா ஜெயிச்சிடுவாங்களா, இல்லை டெபாசிட் தான் கிடைச்சிடுமா?

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  நேரடியாக செய்ய முடியாத கேவலங்களை, அதிமுக வில் உள்ள அழுக்கு மூட்டைகளை வைத்து செய்ய துணிந்தது, டு ஜி கொள்ளையரனைவரையும் வெளியில் விட்டது, என சொல்லிக்கொண்டே போகலாம்...ஆட்சி வேண்டும் அதிகாரம் வேண்டுமென்றால் நேரடியாக கலத்தில் இறங்கி மக்களுக்கு நாலு நன்மையை செய்துவிட்டு அதை வைத்து ஒட்டு கேளுங்கள், இல்லையெண்டால் இன்னும் ஓட ஓட விரட்டியடிப்பார்கள் மக்கள்

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  தோல்விக்கு கோஷ்டிப் பூசல் முக்கிய காரணமாம்.. இல்லாத கட்சியில் கோஷ்டி பூசலா?

 • Pandianpillai Pandi - chennai,இந்தியா

  தமிழ்நாட்டுல இருந்துகிட்டு பாரத் மாதகி ஜெய் ன்னு தானே சொல்லுறீங்க.. பாரத தாய் வாழ்க ன்ன சொல்லுறீங்க?? உங்களுக்கு தமிழ் நாட்டு மக்கள் ஒட்டு வேணுமா??? உங்களால தமிழர்களுக்காக கோஷத்தையே மாற்ற முடியல அப்புறம் என்ன கிழிக்க போறீங்க.. இனியாவது தமிழர்களுக்காக தமிழ் மாநில நலனுக்காக பாடுபடுங்கள்..

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பி ஜெ பி திராவிடர்களை திட்டுவதை நிறுத்த வேண்டும். காமராஜர் முதல் தமிழிசை வரை திராவிடர்கள். வேட்பாளர் கரு. நாகராஜ் கூட திராவிடர் தானே. ஆர் கே நகரில் நாடார் ஜாஸ்தி என்று பிஜேபி தேடி தேடி ஒரு நாடாரை நிறுத்தினார்கள். ஆனால் நாடாரும் திராவிட இனம் என்று மறந்துவிட்டார்கள். திராவிட நாட்டில் திராவிடரை திட்டிகிட்டே அரசியல் பண்ண முடியாது. ஆரியர் ஹெச் ராஜா முதலில் வன்முறைப் பேச்சை நிறுத்த வேண்டும். சொன்னால், உடனே, தீப்பொறி ஆறுமுகம் இதை விட மோசமா பேசுவார் என்று பிஜேபி ஆட்கள் சொல்லுவார்கள். பணம் கொடுக்கப்பட்டது என்று புலம்புவதை நிறுத்துங்கள். பணம் கொடுக்கப்பட்டாலும் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியவில்லை அல்லவா அப்போ அது பத்தி பேசிக் கூடாது. நிரூபணம் ஆகாத வரை சட்டத்தின் பார்வையில் தப்புகள் இல்லை. தமிழிசை சொல்றத கட்சியில் யாரும் கேட்பாதில்லை. சு சாமி டிவீட்டரில் டிடிவி க்கு வாக்களிக்க சொல்றார். எந்த பிஜேபி தலைமையும் அவரை கண்டிக்கவில்லை. இதுவே மணிசங்கர் அய்யர் ஏதாச்சும் சொன்னால் குதிக்கிறது பிஜேபி. காங் நடவடிக்கையும் எடுக்கிறது. ஆனால் பிஜேபி?

 • balakrishnan - coimbatore,இந்தியா

  காணாமல் போன வாக்குகளை தேடுவதை விட, கிடைத்த வாக்குகள் எப்படி கிடைத்தன என்பதை ஆராய்ச்சி செய்தால் நன்று,

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  அது 15110000 ஆக மாறி போச்சு

 • Sivakumar - Chennai,இந்தியா

  Bharathiya Joker Party

 • Harinathan Krishnanandam - Chennai,இந்தியா

  பண சுனாமி அடித்துக் கொண்டு போய்விட்டது

 • kadhiravan - thiruvaroor,இந்தியா

  >>>>>கட்சி ரீதியாக, தோல்விக்கு கோஷ்டிப் பூசல் முக்கிய காரணம்<<<<< இருக்கறது நாலு பேரு.., இதுலயும் கோஷ்டிபூசலா..,கொடும ராசா.., கொடும..,

 • kadhiravan - thiruvaroor,இந்தியா

  .<<<<<<தொகுதியில் கணிசமாக உள்ள, வடமாநிலத்தவர்களும், பா.ஜ.,வை தவிர்த்துள்ளனர். >>>>> வடமாநிலத்தவன் ஊருக்கு போன் போட்டு பேசியிருப்பான்.., ஊருலே இவங்க ஆட்சி சரியில்லைன்னு சொல்லியிருப்பாங்க.., அதான் மாத்திபோட்டுட்டாங்க..,

 • kadhiravan - thiruvaroor,இந்தியா

  .....>>>>> ஆனால், இம்முறை, 'நோட்டா'வை விட குறைவாக பெற்றுள்ளது. இது, தொண்டர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி உள்ளது.<<<<<எதிர்பார்ப்புகள் அதிகமானால் ஏமாற்றம் மிகுதியாக இருக்கும்.., தமிழ்நாட்டில் உங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறுத்தி கொள்ளுங்கள்..,

 • kadhiravan - thiruvaroor,இந்தியா

  ///// ஆர்.கே.நகரில், பா.ஜ., தலைகுனியும் அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த முறை கிடைத்ததில், 1,511 ஓட்டுகள், இந்த முறை எங்கே போயின என்பது தெரியாமல், அக்கட்சியினர், தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். //////காரணம் 1.இந்த 1511 நபர்களும் குஜராத்தில் கள்ள ஓட்டு போட சென்றவர்கள்.., இனியும் அங்கிருந்து திரும்பவில்லை.2. இந்த 1511 நபர்களும் மீண்டும் தவறு செய்திட கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

 • muttam Chinnapathas - Chennai,இந்தியா

  தமிழசை தன் சரியாக பணியை செய்தார்... ஏன் ஒரு கவரவுமான ஓட்டு வாங்கமுடியல்லை... காவிரிக்கு தண்ணீர் பகிர நிர்ணயம் சூப்ரிம் கோர்ட் சொல்லுது ... பிஜேபி கர்நாடகத்துக்கு ஆதரவாக முடியாதுனு சொல்றிங்க... இந்தியாவில் ஒரு சதவிதம் கூட இல்லாத ஒரு குறிப்பிட்ட மக்களை மகழ்விக்க... ஜல்லிக்கட்டு மற்றும் நீட்தேர்வு விலக்கு போன்றவற்றில் தமிழக பெரும்பாண்மை மக்கள் எதிராக முடிவு எடுக்கீறிங்க...ஊழல் எதிர்ப்புனு சொல்லிட்டு... ரெய்டு தமிழக அமைச்சர் வீட்டில் நடத்திறீங்க...ஊழல் சொல்றிங்க... அப்பறம் அதே ஆட்சி தொடர எல்லா காரியத்தையும் செய்றிங்க ... அப்பறமும் எங்க கட்சி வளரும்

 • mindum vasantham - madurai,இந்தியா

  Admk voters both dinakaran and panneer are actually bjp supporters,but here Tamil Hindus only support admk it can't be removed as a political entity

 • Murugan - Mumbai

  தோசை நேசரே உங்கள் தேசிய கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களை விட தமிழ்நாடு நன்றாகத்தான் உள்ளது தமிழ்நாடு மக்கள் மானமுள்ளவர்கள் அதனால் தான் சரியாக ஆப்பு அடித்து உள்ளனர்

 • Mani J - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  andha 5 second video..??

 • Larson - Nagercoil,இந்தியா

  இதற்கு பதிலடியாக மோடி அரசாங்கம் தமிழ்நாட்டு மக்களை எப்படி பழி வாங்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

 • MRAM - PKM,இந்தியா

  And also verdict for making 2g scam into ZERO....Arise awake

 • AK - Chennai

  BJP need to find good leader in TN. Not from cine industry.

 • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

  முதலில் வாயால் வடை சுடுவதை விட்டு விட்டு களப்பணியில் இறங்கவேண்டும் ,அதைவிட தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை கைவிடவேண்டும் .

 • MRAM - PKM,இந்தியா

  THIS IS THE VERDICT AGAINST A) RULING AIADMK, (FOR CHEATING PEOPLE) AND 2) FOR BJP AGAINST DUAL SUPPORT FOR DMK AND ADMK

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  மக்களின் கோபத்தால் அழிந்து போயிருக்க வேண்டிய சசிகலா தினகரன் கோஷ்டிக்கு அனாவசியமாக டார்ச்சர் கொடுத்து அனுதாபம் பெற வைத்ததும் எடுபிடிகளான ஈபிஎஸ் ஓபிஎஸ்ஸை அரசு நடத்த வைத்து மக்களின் ஏகோபித்த எதிர்ப்பை வாரி கட்டிக் கொண்டதுமே ஓட்டுகள் காணாமல் போக காரணம். திமுக எனும் எதிரிக்கு வாய்ப்பு கிடைத்தால் தான் தாங்களும் வளர முடியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் பாஜகவினர்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  தோசையை நேசிப்பவர், சரியான கட்சி என்பதில் சந்தேகம் இருப்பது உண்மை தான், ஆனால் தமிழனுக்கு, அவனின் வாழ்வாதாரம் கெடு வதற்கு காரணமான வர்களை அடையாளம் கண்டு கொண்டு இருக்கிறான், ஆதலால் தான் NOTO விற்கு கீழே தாமரையை தள்ளினான், வாங்கிய வாக்குகளும் கூட வட இந்திய sait வாக்கு களாக இருக்கும் , நாகராஜனின் உறவுகள் கூட வாக்களி திருக்க மாட்டார்கள்.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  தமிழக்கவும் ராஜாவும் வாயை திறக்காமலிருந்தாலே வரும் காலங்களில் பிஜேபி வரலாறு காணாத வளர்ச்சியை (அதாவது கூடுதலாக 500 , 600 ஓட்டுகள்.. ) பெறும்....... அப்புறம் இங்கே பக்தர்களும் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்.... இவர்களின் அலப்பறை தாங்காமல் நடுநிலையாளர்கள் ஓட்டுகள் கூட பிஜேபி பக்கம் வருவதில்லை....

 • krishnan - Chennai,இந்தியா

  கட்சியை கலைச்சுட்டு வேற தொழிலை பாருங்க அத விட்டுவிட்டு அத தேடறானு

 • Indian🇮🇳🇮🇳🇮🇳 -

  தகுதியான இல.கணேசன் அவர்களை தமிழ்நாடு Bjp leader ஆக்கினால் தான் ஓரளவுக்கு ஓட்டுகள் கிடைக்கும்.

 • Siva - Aruvankadu,இந்தியா

  தொகுதிக்கு 1.00.000 ஓட்டு×10.000=100கோடி. 234×100 கோடி= ¿?????????????????????

 • Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா

  BJP யின் தமிழக அணுகுமுறை, ராஜாவின் வரைமுறை இல்லாத பேச்சு இன்னும் சில வகையறாக்களை சரிசெய்யத்தவரை நீங்கள் தேட வேண்டியது தான். இதை சரி செய்ய தாமதமானால் பின்பு நீங்கள் தேடினாலும் கிடைக்காது.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  பொன்னார் happy அண்ணாச்சி, தமிழிசை காலி இல்லை , so பொன் னார் ஜாலி அண்ணாச்சி.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  என்னங்க இதற்க்கு போய் காரணம் தேடிகிட்டு, திமுக வே தேட வேண்டிய நிலையில் இருக்கு, நாங்க பரவாயில்ல அப்படின்னு சொல் லூ வார் பாருங்க நம்ம தோசையை நேசிப்பவர்.

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  அவன் அவன் கட்சியை வளர்க்க என்னென்னமோ பாடு படுறான்...இவங்களுக்கு என்னமோ லட்ச கணக்கில் ஆதரவு இருப்பது போலவும் இந்த தேர்தலில் மட்டும் டெபாசிட் போன மாதிரியும் கத விடுறாங்க .மோடி அலை வேலை செய்யலையா தமிழ் நாட்டில் .யாருக்கு ஒட்டு போடணும் என்பதில் தமிழன் குழம்புவான் ஆனால் யாருக்கு மட்டும் போட கூடாது என்பதில் மட்டும் தெளிவா இருப்பான் .சவுண்டு சரோஜா சும்மாச்சுக்கும் பத்திரிக்கையாளர்கள் முன்பு மட்டும் கட்சி இருப்பது போல் சவுண்டு விடும் .

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இங்குள்ள தமிழர்கள் யார் சரியனவர் எது சரியான கட்சி என்பதை நினைத்து வாக்களிப்பதில்லை யார் பணம் கொடுக்கிறார் யார் வெற்றிவாய்ப்பு அதிகமுள்ளவர் எனப் பார்த்தே வாக்களிக்கின்றனர் காசுக்கு விலைபோகும்மானம்கெட்ட இனத்தாரிடம் தேர்தல் அரசியல் பண்ணுவது வீண் தேசீயக் கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்து முன்னேறமுடியுமென நினைப்பது அறிவிலித்தனம்

 • ராஜாராம்களனி -

  result ￰வந்தவுடன் அக்கா சொல்றாங்க இனி இந்த மக்கள் அனைத்து தேவைகளும் பெறுவது மிக கடினம் என்று ராஜா அண்ணன் ஒரு படி மேல சென்று அனைவரையும் கலவரப்படுத்துகிறார். உங்களது இந்த திமிரான வார்த்தைகள்தான் உங்களது மகா தோல்விக்கு ஒரு காரணம். நீங்கள் எல்லாம் நல்லவர்கள் மாதிரி பேசும் போது ......

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  அவர்கள் வீடுகளில் போய்ப்பாருங்க, புத்தம் புது குக்கர் வீற்றிருக்கும்.

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  மக்களின் மனநிலை மாறாதவரை தமிழகத்தில் பிஜேபி இன் தாமரை முகிலும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஒன்று திராவிட கட்சிகளை போன்று ரவுடிகளை வைத்து பொய் பேசி ஊழல் செய்து அதில் ஒரு பகுதியை ஓட்டுக்கு கொடுத்து ஜெயிக்க முடியுமே தவிர இங்கு ஒரு பருப்பும் வேகாது. நாங்கல்லாம் யாரு மானஸ்த தமிழர்கள். காலையில் கண்விழித்ததும் குவார்ட்டரும், பிரியாணியும், செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்தால் போதும் அடிமையாய் கண்டவன் காலடியிலும் வீழ்ந்து கிடப்போம். வாழ்க தமிழர்கள், வாழ்க தமிழ்மண் வாழ்க தமிழ் நாமம்.

 • Mohan Ramachandran - chennai,இந்தியா

  வலை வீசி தேடுகின்றனரா ?

 • POPCORN - Chennai ,இந்தியா

  அப்படியே உள்ளாட்சி நடந்தால் மொத்தமாக தேடலாம்..நிலமையை பார்த்தா பொன்னார் அண்ணாச்சி கூட தேறுவது கஷ்டம்..பாத்துடே

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  "பணமே(ஓட்டுக்கு) மனிதர்களுக்கு மயில் வாகனம், ...." - (என பாட தோணுது பாருங்கோ). வேற என்னத்ததான் சொல்றதாம். நாட்டில் இப்போது எல்லோரும், 1945-ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளா என்ன?.

 • POPCORN - Chennai ,இந்தியா

  பிஜபிக்கு வரவேண்டிய 80000 ஓட்டுகள் பணம் கொடுத்து வாங்க பட்டன..ஓகே வா..

 • Power Punch - nagarkoil,இந்தியா

  இங்க என்னவோ வோட்டு இருந்தா மாதிரியே பில்ட் அப் கொடுக்கராணுங்க...போய் குஜராத்தில் தேடுங்க ..2019 இல் இந்தியா முழுவதும் தேடுவீர்கள்..

 • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

  எங்கேயும் போகவில்லை தினகரனுக்குத்தான் சென்றது என்பதைக்கூட அறியாதவர்களா இவர்கள்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement