Advertisement

2 ஜி ஊழல்: ராஜா, கனிமொழி விடுதலை

புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி உள்ளிட்ட 19 பேர் குற்றமற்றவர்கள் என சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து திமுக வட்டாரத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2007 ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் தொலைதொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் லைசென்ஸ் வழங்கியதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வரை நஷ்டமும், மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதுடன் தனியார் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடித்தது. இந்த ஊழல் நாட்டையே உலுக்கியது.

ராஜா மற்றும் இவரது உதவியாளர் , தொலை தொடர்பு அதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவன அதிபர்கள் , கனிமொழி எம்.பி., உள்பட 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கனிமொழி 6மாதம் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

என்ன பிரிவில் வழக்கு
இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் , 409 ( நம்பிக்கை மோசடி ) , 120 பி ( கிரிமினல் சதி ) ,420 ( ஏமாற்றுதல் ) , 468, 471 ( பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் ) , 12, 13(2) 13 ( 1 பி) ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்கு பதியப்பட்டது. சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.,சைனி சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரித்து வந்தார். ஸ்பெக்டரம் ஊழலில் ஆதாயம் பெற்ற டி.பி.,ரியாலிட்டி நிறுவனம் மூலம் எளிதாக ரூ. 214 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கு கைமாறியது. இதில் பங்குதாரரான கனிமொழியின் பங்கும் இருந்தது என்பது குற்றச்சாட்டு.
இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதை முன்னிட்டு ராஜா, கனிமொழி மற்றும் குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

வழக்கில் சேர்க்கப்பட்டவர்கள் :மாஜி அமைச்சர் ராஜா, அவரது உதவியாளர் சந்தோலியா, திமுக எம்.பி., கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் பல்வா, இயக்குனர் வினோத் சோயங்கா. யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொடர்புப் பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா ஆகியோரும் இன்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இன்றைய தீர்ப்பில் நீதிபதி ஓ.பி.சைனி கோர்ட்டில் வாசித்தார். இதன்படி ராஜா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்தார்.

இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதையொட்டி டில்லி கோர்ட் வளாகத்தில் திமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர். தீர்ப்பை கேட்டதும் திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஒரே வரியில் தீர்ப்பு :கோர்ட்டுக்கு வந்த நீதிபதி ஓ.பி.சைனி ஒரே வரியில் தீர்ப்பை வாசித்துவிட்டு முடித்தார். இந்த வழக்கில் பண பரிமாற்றம் தொடர்பான போதிய ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்படவில்லை என்றார்.

தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி; ஸ்டாலின்

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் பேசுகையில் ;

வரலாற்றுசிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எங்களை அழிக்க திட்டமிடப்பட்டு போட்ட வழக்கு. தற்போது தவறு நடக்கவில்லை என நிரூபணம் ஆகியுள்ளது. விடுதலை குறித்து ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் . தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

தீர்ப்புக்கு பின்னர் கோர்ட் வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய கனிமொழி இறுதியில் நீதி வென்றுள்ளது. துயரமான காலத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.
சுப்பிரமணியசுவாமி கருத்து : 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக போதிய ஆவணங்களுடன் ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டும்

தீர்ப்பு குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்; நாங்கள் எவ்வித தவறும் செய்யவில்லை, குற்றச்சாட்டில் உண்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கபில்சிபல் நிருபர்களிடம் கூறுகையில் நீதி வென்றுள்ளது என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (557)

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  ஊழல் என்ற சொல்லை பயன் படுத்தாதீர்கள் அவர்களை நிரபராதிகள் என்று சொன்ன நீதி துறையை அவமதிப்பதாக உள்ளது.

 • thamizh andaa - mooanoor,எகிப்து

  நாங்க thamizhandaa

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  எம்.ஜி.ஆர். செல்வி ஜெ. ஜெயலலிதா இந்த தீயசக்தியில் இருந்து தமிழ் நாட்டை காப்பற்ற பட்ட எல்லா கஷ்டங்களும் வீண் வீண் எல்லாம் வீண் தற்போது அண்ணாதிமுக இல்லை செல்வி ஜெ ஜெ அழித்துவிடுவேன் என்ற மு. கருணாநிதி குடும்பக்கட்சி வாழ்கிறது செல்வி ஜெ ஜெ இனி வாழவே முடியாது வாழ்ந்தாலும் பயனில்லை என்ற நிலையில் தொடர் ஆட்சி வந்தும் வாழமுடியாமல், ஆளமுடியாமல், அவசர கோலத்தில் - எம்.ஜி.ஆர் சமாதியில் ஒரு ஓரமாக ஒண்டிக்கொள்ள தான் முடிந்தது - எம்.ஜி.ஆர். சொன்ன தீயசக்தி மு. கருணாநிதி தான் வாழ்கிறது -

 • Drramasubbu Sethu - madurai,இந்தியா

  aap மந்திரி கல்வி தகுதியில் பொய் சொன்னால் சிறை ஸ்மிர்தி ராணி பொய் சொன்னால் ஒன்றும் இல்லை . இது புரிந்தால் அது புரியும்

 • Joseph Chandran - Atyrau,கஜகஸ்தான்

  2 G ஊழலாம் அது எப்படி 2 G ஊழல்? 2 G அலைக்கற்றை வழக்கு அது ஊழல் அல்ல

Advertisement