Advertisement

குஜராத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி

ஆமதாபாத்: குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (டிச.,18) எண்ணப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களிலும் பா.ஜ., அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. குஜராத்தில் தொடர்ந்து பா.ஜ., 6வது முறையும் இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ., ஆட்சிக்கட்டலில் அமர்கிறது.
ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரம்பா.ஜ., - காங், இடையே கடும் போட்டி நிலவியது. சற்று நேரம் பா.ஜ., பின்னடைவை சந்தித்தாலும், சிறிது நேரத்திலேயே மீண்டும் முன்னிலைக்கு திரும்பியது பா.ஜ.,
குஜராத்தில் மொத்தமுள்ள 182இடங்களில் பெரும்பான்மையை பெற 92 இடங்கள் தேவை. அந்த வகையில் பா.ஜ., 95 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் குஜராத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. குஜராத்தில் 1998 ம் ஆண்டு முதல் பா.ஜ.,வே ஆட்சி செய்து வருகிறது. இந்த வரலாற்று சாதனை மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6வது முறையாக குஜராத்தில் பா.ஜ., ஆட்சிஅமைக்கிறது.
இமாச்சல பிரதேசம்
இமாச்சலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில், பெரும்பான்மை பெற 35 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது பா.ஜ., 40 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளதால் பா.ஜ., ஆட்சி உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.


எடுபடாத சாதி கூட்டணி
இந்த தேர்தலில் பட்டேல் சமூகத்தினருடனான காங்கிரசின் கூட்டணி குஜராத்தில் எடுபடவில்லை.

பிரிவினைவாதம், தோற்கடிப்பு: அமித்ஷா
குஜராத் உள்ளிட்ட தேர்தல் குறித்து நிருபர்களிடம் பா.ஜ., அகில இந்திய தலைவர் அமித்ஷா கூறியதாவது: கடந்த1990 முதல் குஜராத்தில் பா.ஜ., வெற்றி பெற்று வருகிறது. தற்போது கிடைத்துள்ள ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. மோடியின் அரசியல் கொள்கைக்கு கிடைத்த வெற்றி ஆகும். சாதி, பிரிவினைவாத, வாரிசு அரசியல் அடிப்படையிலான கொள்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஓட்டு சதம் கூடியுள்ளது. குஜராத், இமாச்சல மக்களுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தது முதல் மாநில அரசுக்கே வெற்றி கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்புக்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இது போன்ற வெற்றி வரும் தேர்தலிலும் தொடரும். இரு மாநில முதல்வர்கள் யார் என்பதை பா.ஜ., பார்லி., குழு தேர்வு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றிகுஜராத்தில் கடந்த 2012 ல் நடந்த தேர்தல் முடிவில் பா.ஜ., 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றது .

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (368)

 • K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா

  சாதி மதம் இல்லாது ஆர் எஸ் எஸ், பி ஜெ பி கும்பலால் இருக்க முடியாது.

 • spr - chennai,இந்தியா

  "குஜராத்தில் கடந்த 2012 ல் நடந்த தேர்தல் முடிவில் பா.ஜ., 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றது ." பாஜக தலைவர்களுக்குத் தெரியும் இது இன்னமும் திரு மோடி சாதிப்பாரென்று நம்பும் குஜராத் மக்கள் தங்களுக்கு கொடுத்த மதிப்பான எச்சரிக்கையென்று பண மதிப்பிழப்பு GST மற்றும் வங்கிகள் நிர்வாக சீரமைப்பு ஆதார் செயலாக்கம் இவையெல்லாம் நெடுநாள் பயனளிக்கும் ஒன்று என்றாலும் அதிரடியாக தங்கள் மீது அவை திணிக்கப்படுவதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனையே இது காட்டுகிறது.

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  கான்கிராஸ் still alive ?

 • ஜெயா.ஆஸ்டின் -

  பாஜக குஜராத்தில் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம்.வெற்றியை போராடிதான் பெற்றுளார்கள்

 • Ram KV - Bangalore,இந்தியா

  I am just wondering of some people's pain. If a party is winning an election 6 times in a row which 27 years holding a state continuously it is to be appreciated.We can vote our rights while election is happening in our state as well as center. I am not understanding if a party has got majority it will be ruling the state for next 5 years in India and it does not matter on how many extra number of MLA or MP they have got.Only one state is ruled by one party more than 6 times is WB (CPI/M).If you are not CPI/M, as it is like military rule, and ruling a prosperous state it is very great thing. No government in the world has won the election after GST implementation in state /federal election due to the change/reform...As BJP has won these elections after GST as well as Demonitization as well, it is great thing...

Advertisement