Advertisement

அறிமுகத்தில் பெருமை - 'உலகம் சுற்றிய' நினைவுகளில் லதா

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் இணைந்து நடித்தது மட்டுமன்றி அவரது அரசியல் வாரிசாக கருதப்பட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு அடுத்தபடியாக 13 படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்து அரசியலிலும் இறங்கியவர் நடிகை லதா. விழியே கதை எழுது...
கண்ணீரில் எழுதாதே... மஞ்சள் வானம்... போன்ற பாடல்களை இன்றைய இளையதலைமுறை கூட முணுமுணுக்கத் தவறுவதில்லை. மதுரையில் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் கொண்டாடிய நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்த லதா, தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மலரும் நினைவுகளில் மூழ்கினார். அவருடன் பேசியதிலிருந்து இனி....
* நடிகையாவோமா என நினைத்ததுண்டாஉண்மையில் எதிர்பாராதது தான்.
* பிறகு எப்படிசென்னை ஹோலிகிராஸ் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம். சிறிய வயதில் டான்ஸ், பள்ளி டிராமாக்களில் நடிப்பதில் ஆர்வம். ஒரு நாடகத்தில் நடித்த போட்டோக்களை நடிகர் ஆர்.எஸ்.மனோகர் எம்.ஜி.ஆருக்கு காட்டி கொண்டிருந்த போது என் போட்டோவை சுட்டி காட்டி நடிக்க விருப்பம் இருக்கிறதா என எம்.ஜி.ஆர்., விசாரிக்க கூறியுள்ளார். அதன்படி ஆர்.எஸ்.மனோகர் என் குடும்பத்தினரிடம் பேசியபோது மறுத்து விட்டனர். நான் மன்னர் பரம்பரை என தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., என் குடும்பத்திற்கு எந்த கெட்ட பெயரும் வராமல் பார்த்து கொள்வதாக உறுதியளித்து உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்க வைத்தார்.
* நடிக்கவும் கற்று கொடுத்தாராமேபுலியூர் சரோஜாவிடம் நடனம் கற்கவும், சண்முகநாதனிடம் வசனம் பேசவும் பயிற்சிக்கு எம்.ஜி.ஆரே ஏற்பாடு செய்தது உண்மை.

* அவருடன் நடித்த படங்களில் பிடித்தது?உரிமைக்குரல் பிடிக்கும். நான் செல்லுமிடங்களில் ரசிகர்கள் அந்த படத்தை பற்றி குறிப்பிட தவறுவதில்லை. அந்தளவுக்கு இயக்குனர் ஸ்ரீதர், இசையமைப்பாளர் எம்.எஸ்.,விஸ்வநாதன், எம்.ஜி.ஆர்., கூட்டணியில் வெளியான வெற்றி படம்.

* மறக்க முடியாத நிகழ்வுண்டாமைசூருவில் சினிமா சூட்டிங். பட இயக்குனரிடம் மறுநாளுடன் சூட்டிங் முடிவதால் மாலை சாமுண்டிஸ்வரி கோயிலுக்கு அழைத்து செல்லும்படி கேட்டேன். ஆனால் அவரோ சூட்டிங் முடியும் நாள் என்பதால் அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் எனக்கூறிவிட்டார். நானும் அவரிடம் கோபித்து கொண்டு அறைக்கு சென்று விட்டேன். அன்று மாலை சூட்டிங் முடித்ததும் எம்.ஜி.ஆர்., அழைத்து அவரது காரில் ஏறும்படி கூறினார். நானும் தயக்கத்துடன் அவரது காரில் ஏறினேன். கார் நேராக சாமுண்டீஸ்வரி கோயில் சென்றது. நான் இயக்குனரிடம் கேட்டது இவருக்கு எப்படி தெரியும் எனவியப்பு ஏற்பட்டது. நான் இயக்குனரிடம் கேட்டதை கார் டிரைவர் மூலம் அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., கோயிலுக்கு அழைத்து சென்றதை மறக்க முடியாது. மேலும் தான் வந்தால் கூட்டம் கூடி விடும் எனக்கூறி காரில்அமர்ந்து கொள்ள, நான் மட்டும் கோயிலுக்கு சென்று வந்தேன்.

* எம்.ஜி.ஆரே., வியந்து பாராட்டியிருக்கிறாராமே?ஆம். வட்டத்துக்குள் சதுரம் என்ற படத்திற்காக எனக்கு பிலிம்பேர்விருது கிடைத்தது. அந்தாண்டே மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகை விருதும் கிடைத்தது. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அதில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., ''இந்த பெண்ணை அறிமுகப்படுத்தியதற்காக பெருமைப்படுகிறேன்,'' என பேசியதை மறக்க முடியாது.
* பிடித்த நடிகை?பத்மினியின் நடிப்பு பிடிக்கும். தற்போதைய நடிகைகளில் நயன்தாரா பிடிக்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement