Advertisement

வெற்றிக்கு வேண்டும் நினைவாற்றல்

வாழ்க்கையில் வெற்றி பெற நினைவாற்றல் மிகவும் முக்கியம். அதை பயிற்சி மூலம் வளர்க்கலாம். அறிதல், நினைவில் நிறுத்துதல், மீண்டும் கூறிப்பார்த்தல் என்ற 3 நிலைகளில் நினைவாற்றல் பயிற்சிகளை செய்து பார்க்கலாம்.பொருள் விளங்காத ஒரு வாசகத்தை மனப்பாடம் செய்ய முயன்றால், அது நம் நினைவில் நிற்காது. ஒரு வாசகத்தை படித்து புரிந்துக்கொண்டு, அதை உரக்க மீண்டும் சொல்லிப்பார்க்கவேண்டும். அதன்மூலமாக கேள்விப்புலனும், செயல் பதிவும் நன்றாக வலுப்பெறும்.நமது வேத, உபநிஷதங்கள் யாவும் செவி வழியாக கேட்டு மனதில் இருத்தி, திரும்ப திரும்ப பாராயணம் செய்யப்பட்டே பாதுகாக்கப்பட்டன. எனவேதான், அவற்றிக்கு சுருதி(காதால் கேட்கப் பட்டது), ஸ்மிருதி(நினைவில் வைக்கப்பட்டது) என்ற பெயர் வந்தது. உலகிலேயே மிகப்பழமையான மறைநுாலான ரிக் வேதம் இப்படிதான் நமது மூதாதையாரால் பாதுகாக்கப்பட்டது.

நினைவாற்றலின் முதல்படிநாம் எதை நினைவில் வைக்க விரும்புகிறோமோ அதில் நமக்கு முதற்கண் ஆர்வம் இருத்தல் வேண்டும். அதிகளவு மருந்துகளைநினைவில் வைத்துக்கொள்ளும் டாக்டர், தன் கடையில் உள்ள அனைத்து பொருட்களின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ளும் வியாபாரி, எல்லா சட்ட நுணுக்கங்களையும் நினைவில் கொள்ளும் வழக்கறிஞர், குறிப்பு எதுவுமின்றி மணிக்கணக்கில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்... இவர்கள் எல்லாமே நினைவாற்றலை வளர்த்துக் கொண்டவர்கள்தான்.

அடிமனமும், நினைவாற்றலும்புலன்கள் வழியாக பெறப்படும் பதிவுகள் யாவும் அடிமனதில்அழியாமல் பதிந்து விடுகின்றன. அடிமனத்திற்கு ஓய்வே கிடையாது. அது இரவும், பகலும் ஓயாது செயல்புரிந்து கொண்டே இருக்கிறது. துாக்கத்தில் அது செயல்புரிகையில்தான் கனவுகள் எழுகின்றன.கனவற்ற உறக்கத்திலும், அது நாம் உணராத வகையில் செயல்பட்டு கொண்டேதான் இருக்கிறது. அடிமனத்தை வேலை வாங்க தெரிந்தால் போதும். அதிகாலை 4:00 மணிக்கு நாம் எழவேண்டுமெனில், இரவு படுக்கச்செல்கையில் கண்களை மூடிக்கொண்டு 'ஏ மனமே! நாளை அதிகாலை 4:00 மணிக்கு சரியாக என்னை எழுப்பிவிடு' என்று கேட்டுக்கொண்டால் போதும். அலாரம் அடிப்பதற்கு முன்பாக நமது மனமே நம்மை எழுப்பிவிட்டுவிடும். சிக்கலானபிரச்னைக்கு இம்முறையில் விடை காணலாம்.ஆர்வமின்மை, முயற்சியின்மை, சோம்பல், பயம், மனக்குழப்பம், அதிர்ச்சி, தாழ்வு மனப்பான்மை... இவையே மறதிக்கான காரணங்கள். இவற்றை வென்றால் மறதியை வெல்லலாம்.

நினைவாற்றல் என்றால் என்னநினைவாற்றலை இப்படிசொல்லலாம். மனவலிமை அல்லது மனோதிடம் அல்லது தடயங்களை தக்க வைத்து அதை மீள உயிரூட்டுவதுடன், முந்தைய அனுபவங்களை மீள வரவழைக்கும்செயல்தான் நினைவாற்றலாகும். ஒருவித பொது அறிவின் அடிப்படையில் அமைவதுதான் ஞாபக சக்தியென வெகு சுலபமாக சொல்லிவிடுவது உண்டு. மாணவனை பொருத்தமட்டில், ஞாபகசக்தி என்பது அதிமுக்கிய மான ஒன்றாகும். பாடங்கள், பாடல்கள், செய்யுள், இலக்கணம், வரலாற்று சம்பவங்கள் உள்ளிட்ட பலவற்றையும் அவன் மனப்பாடம் செய்துகொண்டு நினைவில்வைத்தாக வேண்டும்.நினைவாற்றல் பின்வரும்கட்டங்களில் அமைந்திருக்கும்.1. கற்றல் 2. தக்க வைத்தல் 3. நினைவுபடுத்துதல் 4. திரும்ப வரவழைத்தல்.நினைவாற்றலுக்கு தேவை ஒருமுகச் சிந்தனையே. கவனம் சிதறடிக்காமல், ஒருங்கே அமையப்பட்டால் நினைவுகளும் சிதறாமல் தங்கிவிடும்.ஒரு பாடகர் நன்றாகவே பாடமுடியும். ஏனெனில் இசையின்மீது அவர் கொண்டிருக்கும் நாட்டம் அளவு கடந்தது. ஒரு மருத்துவர், நோயாளியை வெகு எளிதில்
குணப்படுத்த முடியுமென்றால், தனது தொழிலை அவர் நேசிப்பது மட்டுமல்ல, அத்தொழிலின்மீது அவர் கொண்டிருக்கும் பற்றும் பக்தியும் அலாதியானது.சில நேரங்களில் நீங்கள் விளைவுகள் மற்றும் புள்ளிவிபரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்றால், அவற்றிக்கென சில புதிய யுக்திகளையும் நீங்கள் கையாள வேண்டும். அதிர்ஷ்ட
வசமாக நமது மூளை நிரம்பத் தாங்கிக்கொள்ளும் அபாரஆற்றல் கொண்டதாகும். அதே போல் நமக்கு மனசும் உண்டு அல்லவா? எனவே நம் மனதின் கண்களும் எதையும் பார்க்கவும் நினைவில் கொள்ளவும் திறன் படைத்தாகும்.அவரவர் விருப்பதிற்கு ஏற்பவும், கையாளும் திறனுக்கேற்பவும் நாட்குறிப்பு வரைதலை செம்மையாக்கி கொள்ளலாம். நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால், அது விடுபடாமல் தொடர்ந்து பராமரிப்பதில் அக்கறை காட்ட வேண்டும்.

நாட்குறிப்புநாட்குறிப்பு எழுதுவதென்பது, நல்ல ஆரோக்கியமான பழக்கம். சீனாவில் ஒரு பழமொழி உண்டு. 'நான் கேட்டேன் என்றால் நான் மறந்து போனேன்; நான் பார்த்தேன் என்றால் நான் நினைவில் வைத்திருப்பேன்; அதையே நான் எழுதினேன் என்றால் நான் அதில் இருந்து கற்றறிவேன்'.மூளையின் கொள்ளளவு, அதாவது தாங்கும் திறனும் தாங்கும் சக்தியும் எல்லையற்றது. எவருமே எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம். அதை அப்படியே மூளையில் சேமிக்க முடியும். ஒரு வயது வந்த மனிதனின் மூளையில் 10 லட்சம் உயிரணுக்கள் அல்லது நியுரான்ஸ் அடங்கியுள்ளன. இந்த நியூரானின் மையப்பகுதியில் உயிரணுப்பகுதி உள்ளது. இங்கிருந்துதான்
டென்டகிள்ஸ் உற்பத்தியாகி, பின் அதுவே பல கிளைகளாக தோன்றி அவைகள் தானாகவே சென்றடைந்து உற்பத்தியை செய்து வருகின்றன. இவற்றோடுதான் நியூரான்கள் இணைக்கப்படுகின்றன. மூளையின் பல்வேறு இடங்களில் இந்த (ஞாபகங்கள்) நினைவுகள் பதிவு செய்யப்படுகின்றன எனவும் சொல்லப்படுகிறது.பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, தொடுவது, படிப்பது, கற்பனை செய்வது, யோசிப்பது என எவற்றை நாம் செய்தாலும் அவற்றை நினைவுத்திறன் நன்றாகவே பாதுகாப்பு செய்யும். மொத்தத்தில் நமது இயக்கத்தை செயல்படுத்திட நாம் காட்டும் திறன் எல்லாமே இவற்றில் பதிவாகிவிடும்.

மாணவர் வாழ்க்கையில் ஞாபகத்தன்மைமாணவர்கள் தங்களது பள்ளிப்பருவத்திலே துல்லியமான ஞாபக சக்தியை வைத்திருக்க வேண்டும். மற்றவர்களிடத்தும் இந்த நினைவாற்றல் மிகத்துல்லியமாக இளமை காலத்திலேயே அமைந்திருக்கும். ஆனால் அவர்கள் வளர்ந்து பெரியவர்களான போது அந்த நினைவாற்றலின் பெரும்பகுதி காணாமலும் போகலாம். குறைவாகவும் ஆகலாம். எனவே இந்த காலக்கட்டத்தில் மாணவர்களை சரிக்கட்டும் பொறுப்பு ஆசிரியர்
களையே சாரும். இந்த ஞாபக குறைபாடுகளுக்கான சில காரணங்கள்.1. குடும்ப சூழ்நிலை
2. முறையற்ற மருத்துவ கவனிப்பு 3. ஊட்டச்சத்து குறைவுபடிப்பதை வேகப்படுத்தவும்,
புரிதலை சீக்கிரமாக்கிடவும் நான்கு வழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.அவை:
1. கவனம், 2. அக்கறை, 3. குறிப்புகள் 4. படங்கள்.மனதை ஒருமுகப்படுத்தினால் கவனத்தை உருவாக்கிடலாம். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நேரத்தில் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். சில சமயம் ஏதாவது சத்தம் அல்லது வெளிப்புறச் சத்தத்தால் அமைதி குறையலாம். இதை நமது திடமான மற்றும் பொறுப்புடன் அக்கறை காட்டும் மனத்தால்
மட்டுமே இந்த இடர்பாடுகளை அப்படியே புறந்தள்ளிவிடலாம். தனிமையில்கூட தன்னை ஒருமுகப்படுத்து வதற்கு பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். படிப்பதை பகுதிகளாக்கி முழுவதையும் படித்துக் கொண்டு, நினைவில் தங்கும்படி செய்ய வேண்டும்.

பொதுவான ஆலோசனைகள்1. கவலைகளை அறவே விட்டொழிக்கவும்; நமது பிரச்னைகளுக்கு கவலைகள் தீர்வு அளிப்பதில்லை.
2. என்றும் மகிழ்ச்சியோடுஇருக்கவும்
3. வளமான எதிர்காலம் என்ற நம்பிக்கையை தழுவுக.
4. அதிகமான சாப்பாட்டைதவிர்க்கவும்
5. பயிற்சி மேற்கொள்க. நல்ல மனசுக்கும் ஞாபகத்திற்கும் யோகா பயன் அளிக்கும்.
6. சுயமரியாதையை இழக்க வேண்டாம்.
7. தாழ்வு மனப்பான்மையை கைவிடவும், நினைவாற்றலை அது தடை செய்யும்.
8. கடமையை கண்ணெனபோற்றுக.
9. கலகலப்பாக இருக்கவும். சோர்வை சுமக்க வேண்டாம்.
10. பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபட வேண்டும்.

வழக்கத்திற்கு மாறாக செய்தல்ஒரு காரியத்தை இதற்கு முன் இல்லாத விதமாய் செய்கிறபோது, அது உங்கள் நினைவில் நிற்கும். அதேபோல், உரிய இடத்தில் பொருளை வைக்கிற பழக்கம் இருந்தால் வைத்த இடம் மறந்து போகாது. இல்லாவிட்டால் என்னாகும் தெரியுமா?பேராசிரியர் ஒருவர் ரயிலில் பயணித்தார். பயணச்சீட்டு பரிசோதகர் டிக்கெட் கேட்க, பேராசிரியர் தேட தொடங்கினார். எங்குமே கிடைக்கவில்லை.
'நான் உங்களை நம்புகிறேன். சீட்டை தேடுவதை விட்டுவிடுங்கள்'என்றார் பரிசோதகர். 'தேடித்தான் ஆக வேண்டும்' என்றார் பேராசிரியர். ஏனென்றால் அதில்தான் அவர் போக வேண்டிய ஊர்ப்பெயர் இருக்கிறதாம்.இந்த நிலை தேவையா?முனைவர் இளசை சுந்தரம்எழுத்தாளர், மதுரை98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அனைவருக்கும் நினைவாற்றல் வளர ஒரு எளிய பயிற்சி கந்தர் அனுபூதியில் வரும் பதினைந்தாவதுபாடலான முருகன் குமரன் குகனென்று மொழிந்து உருவும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய் பொருவும் கவரும் புவியும் பரவும் புரூணுமுக புங்கவ என்குண பஞ்சரனே இதை நினைவுகளையேந்தல் திரு கோவில்பட்டி ராமையா அவர்கள் பல பெட்டிகளில் கூறியுள்ளார் மெஸிலும் குமார குருபரர் எழுதிய சகலகலாவல்லி மாலை தினமும் மனப்பாடமாக சொன்னால் நினைவாற்றல் வளரும்

  • mohan - Hyderabad ,இந்தியா

    அருமையான விளக்கம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement