Advertisement

கருப்பு...வெள்ளை : 'லட்சுமி' பிரியா

இருக்கும் பாத்திரத்தின் வடிவம் பெறும் நீரைப் போல, நடிக்கும் கதாபாத்திரத்தில் நிரம்பி வழியும் கலையழகு அலை... பந்தாடும் பார்வையில் நின்றாடும் விழிகள்; கத்தியின் கூர்மை! பேச்சில் பளிச்சிடும் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் உறவாடும் நேர்மை என, தமிழ் திரை உலகில் வெற்றி வலம் வருபவர்... மனைவியிடம் கணவன் கொண்டிருக்கும் அலட்சியம், அந்த மனைவிக்கும், அவளின் ரயில் தோழனுக்கும் இடையில் ஏற்படும் அசாதாரண நெருக்கம் என சர்ச்சை கிளப்பும் காட்சிகளுடன் சமீபத்தில் 'யூ டியூப்'பில் வெளியான 'லட்சுமி' குறும்படத்தில் நடித்த நடிகை லட்சுமி பிரியா மனம் திறக்கிறார்...
* வெள்ளி திரைக்கு முன்... நான் ஒரு சென்னை தமிழ் பொண்ணு, மனிதவள மேலாண்மை படித்துள்ளேன். நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின், தமிழில் 'முன் தினம் பார்த்தேனே' படத்தில் அறிமுகமானேன்.
* நீங்கள் கிரிக்கெட் பிளேயராமே.. ஆமா, இந்தியாவின் நேஷனல் கிரிக்கெட் டீமில் 6 ஆண்டுகளாக விளையாடினேன். கிரிக்கெட் மட்டும் இல்லை; ஜிம்னாஸ்டிக், அல்டிமேட் பிரிஸ்பி (தட்டு எறிதல்) விளையாட்டும் அத்துப்படி, மொத்தத்தில் நான் ஒரு விளையாட்டு வீராங்கனை.
* தீவிர கமல் ரசிகரா? அப்படி இல்லை. கமல் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு, அவரிடம் இருந்து நடிப்பு தவிர கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. அதனால தான், சில ஆண்டுக்கு முன் அவர் பிறந்தநாள் அன்று அவர் நடித்த கேரக்டர்கள் போல, நானும் மேக்கப் செய்து ஒரு போட்டோஷூட் எடுத்தேன். அது கமலுக்காக நான் கொடுத்த பரிசு.
* 'லட்சுமி' குறும்படம்? இயக்குனர் சர்ஜூன் மேல் இருந்த நம்பிக்கை தான் என்னை இந்த குறும்படத்தில் நடிக்க வைத்தது. படம் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கத் தான் செய்யும். ஒரு படம் அனைவருக்கும் 100 சதவீதம் பிடிக்கும் என்று சொல்ல முடியாதே...
* பேஸ்புக், டிவிட்டர் விமர்சகர்கள்? பலர் 'லட்சுமி' படத்தை புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்கிறார்கள். ஒரு மனைவி தன் கணவனுக்கு துரோகம் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கிறார்கள். முதலில் படத்தின் 'கருப்பு வெள்ளை' காட்சிகளை கவனித்து பார்த்தால் உண்மை புரியும். யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். அவர்களுக்கு உரிமை உண்டு. அதை கண்ணியமாக பதிவு செய்ய வேண்டும். தகாத வார்த்தை பயன்படுத்தக் கூடாது.
* லட்சுமி பிரியாவுக்காக தான் படத்தின் பெயர் 'லட்சுமி'யா... இல்லை, இந்த படத்தில் யார் நடித்து இருந்தாலும் தலைப்பு 'லட்சுமி' தான்... நான் நடித்ததற்காகவோ, என் பெயருக்காகவோ வைத்த தலைப்பு இல்லை.
* படத்தில் பாரதியார் பாட்டு வலியுறுத்துவது? இதற்கு இயக்குனர் தான் பதில் சொல்ல வேண்டும், இது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.
* உங்கள் கதை தேர்வு? படத்தில் எத்தனை கேரக்டர்கள் இருந்தாலும் என் கேரக்டரை சுற்றி கதை நகர வேண்டும். அந்த மாதிரி கதைகளை தான் நான் தேர்வு செய்து நடிக்கிறேன்.
* சினிமா - யூடியூப்? நான் 'யூடியூப்'பில் நிறைய குறும்படங்கள் நடித்து இருக்கிறேன். நான் ஒரு நடிகை, நடிக்க கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்.
* ஹீரோ முக்கியத்துவம்? 1980களில் வந்த படங்களில் ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் இருந்தது. ஆனால், இப்போது அது போன்ற படங்கள் குறைந்துள்ளது. என்னை பொருத்தவரை ஹீரோவுக்கு முக்கியத்துவம் தருவது தப்பு இல்லை.
* பெண்? ஒரு ஆண் இப்படி தான் இருக்க வேண்டும் என யாரும் சொல்றது இல்லை. அதே போல் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அப்படி இருக்க வேண்டும்...
* அடுத்த படங்கள்? பட்சி, ரெண்டாவது ஆட்டம், ரிச்சி படங்களில் நடிக்கிறேன். ரசிகர்கள் நல்ல நடிகை என யோசிக்கும் போது என் பெயர் ஞாபகம் வர வேண்டும் என்ற ஆர்வத்துடன் பார்த்து, பார்த்து நடித்து வருகிறேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • LAX - Trichy,இந்தியா

    சூப்பர்.. நச்சென்று பேசுகிறார்.. வாழ்த்துக்கள் லக்ஷ்மிப்ரியா..

  • LAX - Trichy,இந்தியா

    லட்சுமி படமும் சூப்பர்.. லக்ஷ்மிப்ரியாவும் (நடிப்பும்) சூப்பர்.. நச்சென்னரு பேசுகிறார்.. வாழ்த்துக்கள் லக்ஷ்மிப்ரியா..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement