Advertisement

நான் ஜாலியான பையன் - கவுதம் கார்த்திக் 'கல கல'

சினிமா என்னும் 'கடலில்' குதித்தவர், கரையேற முடியாமல் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார். 'என்னமோ ஏதோ' வந்தோம், நடித்தோம் என்று இல்லாமல் தனக்கென ஒரு இடம் கிடைக்கும் என்று நடித்த இவருக்கு, 'வை ராஜா வை' கொஞ்சம் நம்பிக்கை வந்தது. தன் தந்தை போல் காமெடியாகவும், 'ப்ளே பாயாகவும்' நடிக்க முடியும் என்று ஹர ஹர மகாதேவகியில் அசத்தியவர் நடிகர் கவுதம் கார்த்திக். இந்தரஜித், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், மிஸ்டர் சவுந்திரமவுலி, இருட்டு அறையில் முரட்டு குத்து என இவருக்கு வரிசையாக படங்கள் காத்திருக்கின்றன. சண்டே ஸ்பெஷலுக்காக நம்முடன் கவுதம் கார்த்திக்...

* இந்தரஜித் படம் என்ன ஸ்பெஷல் ?அட்வெஞ்சர், காமெடி படம். ஒரு பொருள் இருக்கும், அதை தேடி ஒரு டீம் போவாங்க. அதை எதிர்த்து சிலர் போவாங்க. இப்படி சுவாரஸ்யம் நிறைய இருக்கு. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய சண்டை காட்சிகள் டூப் இல்லாம நான் தான் செய்திருக்கேன்.
* படத்தில் ரொம்ப சவாலான விஷயம் எது ?கேரளாவில் நிறைய கஷ்டமான இடங்களை தேடி பிடித்து படப்பிடிப்பு நடத்தினோம். அங்க எந்த தகவல் தொடர்பும் இல்லாம கஷ்டப்பட்டேன்.
* படத்தில் உங்க கேரக்டர் ?படத்தில் என் பேர் இந்தரஜித். ரொம்ப ஜாலியான பையன். இப்ப தான் வேலை தேடி போயிருக்கான். அந்த வேலை வந்து இந்த மாதிரி ஒரு பொருள் கண்டுபிடிக்குற ஒரு டீமில் போய் சேருகிறான். இவன் கொஞ்சம் புத்திசாலி. ஆனால் வெளியில அப்படி காட்டிக்கொள்ளாத பையன். கடைசியில் அந்த ஜாலியான பையன், அந்த பொருளை எப்படி கண்டுபிடிக்கிறான் என்பது கதை ஒன் லைன்.
* ஹரஹர மாஹதேவகி விமர்சனத்தை, இந்திரஜித் விமர்சனம் மாத்திடுமா ?ஒரு நடிகரா நான் எல்லாவிதமான கதைகளும் செய்ய நினைக்கிறேன். ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மாகாதேவகி போன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்கவே நான் விரும்புறேன். மக்களுக்கும் என் கதைகள் பிடிக்குது. இன்னும் வித்தியாசமான கதைகளில் தொடர்ந்து நடிப்பேன்.
* ஹரஹர மகாதேவகி பட வசனங்கள் ரொம்ப கேவலமா இருக்குனு படபிடிப்பில் கூட யாரும் உங்களுக்கு சொல்லவில்லையா ?அந்த படத்தை பொறுத்தவரை எனக்கு சரியான அர்த்தம் தெரியாம அந்த இயக்குனரை நம்பி அப்படியே பேசிட்டேன். இனி தெளிவா ஒன்னு ஒண்ணா கேட்டு பேசுவேன். * எந்த தைரியத்தில் அதே இயக்குனரின் அடுத்த படத்தில் 'இருட்டு அறையில் முரட்டு குத்துன்னு' படத்தில் நடிக்க போறீங்க?இந்த படத்தில் திகில், காமெடி இருக்கும். தலைப்பை பார்த்து நீங்க ஏதும் முடிவு பண்ணாதிங்க. மக்கள் இந்த படம் பார்த்து ஷாக் ஆவாங்க.
* விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவம் எப்படி ?அவர் கூட நடிக்கும்போது பல விஷயத்தை கவனித்தேன். ஒரு சீன் கூட வீணாக்க மாட்டார். எப்படி வித்தியாசமா பண்ணலாம், எதை சேர்த்து பேசலாம் என்று யோசிப்பார்.
* அப்பாவுடன் சேர்ந்து நடிக்கும் படம் பற்றி ?மிஸ்டர் சந்திரமவுலி என்ற படம். டிசம்பரில் இந்த படம் தொடங்கும். படத்தில் எனக்கு அப்பாவாக, அப்பா கார்த்திக் நடிக்க இருக்கார். குடும்பத்தோடு பார்க்கும் படமா இருக்கும். ஒரு அப்பா பையன் இப்படியும் இருப்பாங்களா என்ற உணர்வை தரும்.
* உங்களுக்கு ரசிகர்கள் இருக்காங்களா ?கொஞ்ச பேர் இருக்காங்கன்னு நினைக்கிறேன். இந்த ரசிகர்கள் எல்லாம் என் தாத்தா, அப்பா சம்பாதித்தது. நான் இனிமேல் தான் ரசிகர்களை சம்பாதிக்கணும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement