Advertisement

அன்பு பொழியும் பாடல் (இன்று, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்த தினம்)

தேனிலும் மதுரமாய், மலர்ந்து கிடக்கும் மலரின் குவியலாய், உலகின் களங்கமற்ற அன்பை தங்கள் கண்களில் சூட்டி பெரு நந்தவனமாய்ச் சிரிக்கும் மழலைகளை அனைவரும் விரும்புவோம். குழந்தைகள் என்போர் நம் வாழ்வும் இப்பூவுலகின் இளம் தளிர்கள். நம் வாழ்வை தம் வெண்மனச் சிரிப்பினால் மகத்துவம் ஆக்குபவர்கள்.குழந்தைகளின் உலகம் கதைகளாலும் பாடல்களாலும் ஆனது. பறவைகள், விலங்குகள், மரங்கள் எனப் படரும் அவர்களின் சுற்றம் உன்னதமான நீதிகளால் மலரும்.குழந்தையின் மனதோடு தன்னைப் பொருத்திக் கொண்டவர்களாலேயே இவ்வகையிலான குழந்தை இலக்கியங்களான பாடல்களும், கதைகளும் புனைய
இயலும். மழலையின் இயல்போடு தன்னை நிறுத்தி அத்தகைய இலக்கியங்களை படைத்தவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா. இவருடைய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டபாடல்கள் குழந்தைகட்கு இவ்வுலகின் ஆச்சரியங்களையும் அன்பையும், வரலாற்றின் இன்றியமையாத பக்கங்களையும் எளிமையான பாடல்கள், கதைகள் வழியே கண் முன் நிறுத்தியது.

பிறப்பும் படைப்புகளும்அழ.வள்ளியப்பா 1922 நவம்பர் 7ல் புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில் பிறந்தார். உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்த வள்ளியப்பா, 1940ல் சென்னை சக்தி இதழ் அலுவலகத்தில் பணியில்சேர்ந்தார். அதன் ஆசிரியராக இருந்த தி.ஜானகிராமன் ஊக்கத்தால் தனது எழுத்துப்பணியை துவக்கினார். தொடர்ந்து வங்கியில் பணியாற்றியவாறு கவிதைகளும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கிய அழவள்ளியப்பா பணி ஓய்வு பெறும் வரை எழுதினார்.கவிஞராகவும், குழந்தை எழுத்தாளராகவும் கணக்கிலடங்காப் பாடல்களை எழுதினார். வள்ளியப்பா எழுதிய 23 பாடல்களுடனான முதல் கவிதை தொகுதி 'மலரும் உள்ளம்' 1944 ல் வெளிவந்தது. தொடர்ந்து 'சிரிக்கும் பூக்கள்' தொகுதியை வெளியிட்ட பிறகே 'குழந்தை கவிஞர்' என்ற அடைமொழியுடன் அனைவரும் அழைக்கும் பெருமை பெற்றார்.

கவிஞரின்படைப்பு மொழிஅழ. வள்ளியப்பாவின் பாடல்கள் மனித நேயத்தையும், இயற்கை யின் மீதான பற்றுதலையும் துாண்டுபவை. 'இனிக்கும் பாடல்கள்', 'பாலர் பாடல்கள்', 'பாட்டுப்பாடுவோம்', 'சிரிக்கும் பூக்கள்', உள்ளிட்ட பாடல்களில் இயல்பான நன்னெறியும், உயிர்களிடத்து கருணையும் வழியும் தருணங்கள் அதிகம். 'இனிக்கும் பாடல்' தொகுப்பிலான பால்களின் சில வரிகள்...
தங்கமும், சிங்கமும் என்னும் பாடலில்...
'' எங்கள் வீட்டுப் பூனை அம்மா
இரண்டு பிள்ளை பெற்றாள்
இரண்டு பிள்ளை பெற்றாள் - அவள்
என்ன பேரு வைத்தாள்?
தங்கம் என்றோர் பிள்ளை பெயராம்
தவிட்டு நிறத்துப் பிள்ளை பெயராம்
தவிட்டு நிறத்துப்பிள்ளை - அது
தப்பே செய்வதில்லை.
சிங்கம் என்றோர் பிள்ளை பெயராம்
தீரம் உடைய பிள்ளை - அது
தீங்கே செய்வதில்லை.
தங்கம், சிங்கம் இரண்டும் அந்த
தாய்க்கு நல்ல பிள்ளை
தாய்க்கு நல்ல பிள்ளை - இதில்
சற்றும் ஐயம் இல்லை.
அன்பு பொழியும் பாடல்
'வா மழையே வா' என்னும் பாடலில்
'சின்னச் செடியை நட்டு வைத்தேன்'
செப்புக் குடத்தை எடுத்து வைத்தேன்
வா மழையே வா.
போன்ற எளிய வரிகள் வாயிலாக உயரிய கருத்துக்களை குழந்தைகள் மனதில் கொடியாகப் படர விட்டவர் குழந்தைக் கவிஞர்.ஒவ்வொரு உயிர்களிடத்திலும், அன்பும், பரிவும் காட்டும் பாடல்கள், அதன் எளிமையான சொற்கள் கட்டும் உலகத்தில் சிற்றோடையாய் பாய்ந்து இளம் தளிர்களான குழந்தைகளைப் பசும் நினைவுகளை ஊட்டிப் பரவசம் கொள்ள வைக்கின்றன. அணில், நாய்க்குட்டி, சுண்டெலி, பூனையார், சிட்டுக்குருவி, சின்ன பொம்மை, கன்றுக்குட்டி எங்கள் பாட்டி போன்ற பாடல்கள் வழியாகச் சிறு குழந்தை
களிடம் நன்றியுணர்வையும், நீதியையும், வளர்த்தன வள்ளியப்பாவின் பாடல்கள்.செல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை இவரைப் பற்றி குறிப்பிடுகையில் 'உயர்ந்த உண்மைகளை
பிள்ளையுள்ளத்திற்கேற்பப் படிப்படியாக உணர்த்துகிறார். அன்பு பெருகுமாயின் அருள் பிறக்கும் அரும் பிறக்குமாயின் அர்த்தமில்லாத இன்ப நிலை வந்தெய்தும்' என்று ஆன்றோர் அருளிய அரிய உண்மையை பிள்ளைகள் நிலைக்கேற்பப் பேசுகின்றார் கவிஞர், என்று குறிக்கிறார்.

சிந்தனைக் களஞ்சியம்வள்ளியப்பாவின் 'பாடும் பலனும் ' என்னும் பாடலில்உலையில் அரிசி வெந்து தான்உண்டு பசியை போக்கலாம் துணியைத் தைத்த பிறகுதான்சொக்காய் போட்டு மகிழலாம்,எழுத்தை கற்ற பிறகுதான்
ஏட்டைப் பிடித்து அறியலாம்
பாடுபட்ட பிறகுதான்
பலனைக் கண்டு மகிழலாம்!
சிந்தனையைத் துாண்டும்
வகையிலான இல்வகையிலான பல பாடல்கள் சிறுவர், சிறுமியருக்கு மட்டும் அல்ல பெரியோர்களும் படித்து இன்புறலாம்.தாத்தா, பாட்டி, மாமா அத்தை போன்ற உறவு நிலையோடு கூடிய பாடல்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் மனதில் விருப்பையும்,ஆனந்தத்தையும் வரவைப்பவை, உறவுகளின் மீது பற்றினை ஏற்படுத்தும் பாலமாக இப்பாடல்கள் அமைந்திருந்தன.'சுதந்திரம் பிறந்த கதை'
என்னும் கதைப்பாடல் தொகுதி, எளிமையாய் சுதந்திர வரலாற்றை நம் கண் முன் நிறுத்துகிறது. ரோஜாசெடி, சோனாவின் பயணம், நீலா மாலா, திரும்பி வந்த மான்குட்டி போன்ற தொகுதிகள் நம் குழந்தை கட்கு படிக்க கொடுக்க வேண்டிய புத்தகங்கள். எண்கள் மற்றும் அறிவியல்
கருத்துகளை பாடல்களிலும், கதைகளிலும் இயல்பாக கூறும் கவிஞரின் எண்ணம் வியப்பூட்டும்.

பரிசுகளும் பெருமையும்இன்றுள்ள தலைமுறைக் குழந்தைகளும் விரும்பும்வகையில், ஓசையும், சந்த சுவையும் ததும்பும் பாடல்களை புனைந்த கவி மேதை அழ.வள்ளியப்பா.
தென்னாட்டு ஆறுகள் பற்றிய 'நம் நதிகள்' எனும் நுாலை தேசிய புத்தக டிரஸ்ட் 14 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது.'பிள்ளைக் கவியரசு', 'மழலைக் கவிச் செம்மல்' போன்ற சிறப்பு பட்டங்களால் பாராட்டப்பட்டவர்.1982ல் மதுரை காமராஜ் பல்கலையால் தமிழ் பேரவை செம்மல் விருது வழங்கப்பட்டு பாராட்டப்பட்டார். கவிஞரின் 2 நுால்களுக்கு மத்திய அரசின் பரிசும், 6 நுால்
களுக்கு தமிழக அரசின் பரிசும் கிடைத்துள்ளன. இவரது பாடல்கள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளிலும் பிரசித்தி பெற்றவை.'குழந்தைகள் இன்பமே எனது இன்பம்' என்று கூறும் கவிஞர் வள்ளியப்பா குழந்தை இலக்கியம் என்னும் வகையில், முன்னோடி படைப்பாளியாக தனது பாடல்களால் தமிழில் தனி இடம் பெற்றவர். பாடல்கள் மட்டுமல்லாது, புதினங்களும், கட்டுரை நுாலும் எழுதியுள்ளார்.

நினைவுகளில்மதுரை பல்கலையில் 'குழந்தை இலக்கியத்தை ஓர் பாடமாக வைக்க வேண்டும் எனும் தீர்மானம் சார்பாக பேசிக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்த வள்ளியப்பா தனது 66வது வயதில் 1989ல் மறைந்தார்.ஏடு துாக்கிப் பள்ளியில்இன்று பயிலும் சிறுவரேநாடு காக்கும் தலைவராய்நாளை விளங்கப் போகிறார்என்னும் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் வார்த்தைகள் பகிரும் செய்தியே, அவரது பிறந்த நாளில் நாம் செல்ல வேண்டிய பாதையை காட்டும்.-கவிஞர் அ.ரோஸ்லின்ஆசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி, வாடிப்பட்டிkaviroselina 997gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement