Advertisement

நவ., 8ஐ கறுப்பு தினமாக அனுசரிக்க 18 கட்சிகள் திட்டம்

புதுடில்லி, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஓராண்டு முடிவதையடுத்து, நவ., 8ம் தேதியை, கறுப்பு தினமாக அறிவித்து, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த, 18 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் நரேந்திர மோடி, 2016 நவ., 8ல் வெளியிட்டார். இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், நவ., 8ல் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி, ஓராண்டு நிறைவடைகிறது. அதையொட்டி, அந்நாளை கறுப்பு தினமாக அறிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட, 18 எதிர்க்கட்சிகளின் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, போராட்டங்கள் நடத்துவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கு வழங்கப்பட்டது.

இதற்காக, ஏழு பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான, குலாம் நபி ஆசாத், டில்லியில் நேற்று கூறியதாவது:
இந்த நுாற்றாண்டின் மிகப்பெரிய மோசடியாக, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு உள்ளது. அரசின் ஒரு திட்டத்தால், மக்கள் உயிரிழந்த சம்பவம், இந்த திட்டத்தால்
ஏற்பட்டது. சரியாக திட்டமிடாமல், அவசரமாக, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தால், மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

ஆனால், எங்களை கறுப்பு பண பதுக்கல்காரர்கள் என, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு குற்றஞ்சாட்டியது.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், பிரச்னைகளை உணர்த்தும் வகையில், அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஓராண்டை நிறைவு செய்யும், நவ., 8ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம்.
நாடு முழுவதும், அந்தந்த மாநிலங்களில், எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (236)

 • Aarkay - Pondy,இந்தியா

  நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அனுசரியுங்கள் நாங்கள் பெரும்பான்மை மக்கள், எங்கள் மோடி பக்கமே

 • உஷாதேவன் -

  நவம்பர் 8 கறுப்பு தினமாக அனுஷ்டிக்க முடிவா அனுபவிக்க முடிவா?

 • krishnan - Chennai,இந்தியா

  சேகர் ரெட்டி வைத்திருந்த 33 கோடி நாட்டுக்கு RBI கணக்கு இல்லியாம். இதுமாதிரி எத்தனை லட்சம் கோடி அடுச்சு பிஜேபி ஆட்சி பதுக்கினார்களோ.

 • ArunagiriSundharamurthy -

  கறுப்பு பணத்தை இழந்த காரணத்திற்காக நவம்பர் 8 கருப்பு தினமா

 • Karnan -

  தினமும் ஒரு கருப்பு தினம் வந்துக்கிட்டுத்தான் இருக்க பாஸ்

 • ganesha - tamilnadu,இந்தியா

  தினமலரே நான் எழுதிய கருத்தை போடுங்க. உங்களுக்கே தெரியவேண்டாமா துப்புக்கெட்ட அரசியல் வாதிகள் நம் தமிழன்கள் இப்பொழுது போராட்டம் செய்வது அர்த்தமுள்ள செயலா?

 • rajan. - kerala,இந்தியா

  இது இந்த வேலையில்லா எதிர்க்கட்சிகளின் நல்ல திட்டம் தான். நம் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் தீவிரவாதத்தை நம் நாட்டு ரூபாய் நாடுகளால் தூண்டும் பாகிஸ்தானின் இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு ஒழிப்பு தினமும் அன்று தான் என்பதை நினைவில் கொள்ளவும். அடுத்து பல கோடி ஊழல் 2G தீர்ப்பு எதிர்கட்சிகளின் ஊழல் சாம்ராஜ்யத்துக்கு அடுத்து ஒரு சம்மட்டி அடியாக அமைய வாழ்த்துக்கள்.

 • ganesha - tamilnadu,இந்தியா

  இது மிக மிக அவசியமான போராட்டம். இந்த போராட்டம் வெற்றிபெற ஒரே சிறந்த வழி தான் உள்ளது.......

 • RGOPALchicagoUS -

  Karuppu pana dinamaga kondadalaam

 • Bava Husain - riyad,சவுதி அரேபியா

  பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், எதிர்பார்த்த பலனை அடைய முடியவில்லை என்பதே உண்மை....

 • ganesha - tamilnadu,இந்தியா

  கருப்பு துணி கூட வாண்டாமே, நம் அண்ணன் சொக்கத்தங்கம் வீரத்தமிழர் அய்யாக்கண்ணு தலைமையில் அதே மாதிரி அவர் ஸ்டைலில் ஆர்பாட்டம் பண்ணலாமே.

 • bal - chennai,இந்தியா

  இந்த ஆளோட பொறந்த நாளை கருப்பு தினமா கொண்டாடணும். ஏன்னா இவர் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  கறுப்புப்பணம் மீட்கப்பட்டதாம்... ஆனால் எல்லா பயலும் இப்போது 2000 ரூபாய் நோட்டு கருப்புப்பணமா வச்சிக்கினு திரியுறான் ... இதுல பீத்தல் வேற சொம்புகளுக்கு

 • krishnan - Chennai,இந்தியா

  மத்திய அரசு இதிலிருந்து சில ஆயிரம் பெறலாம் அவ்வளதான் மற்றபடி இது ஒரு வேஸ்ட் திட்டம்

 • Vijay - Chennai,இந்தியா

  கருப்பு பணம் வைத்திருந்தவர்களுக்கு நவம்பர் 8 உண்மையிலேயே கருப்பு தினம் தான். அவர்கள் எக்கச்சக்கம் நஷ்டம் அடைந்திருப்பார்கள்.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  இந்த கறுப்பு நாள் அனுசரிப்பதால் மக்களுக்கோ அல்லது நாட்டிற்கோ ஏதாவது பிரயோஜனமுண்டுமா தலைவர்களே? பொன்னான நேரத்தை இப்படி வீணாக்காமல் உருப்படியா ஏதாவது செய்யப்பாருங்கள். மக்களுக்கு அல்லது நாட்டிற்கு நல்லதை செய்தால் வருங்காலத்தி மக்கள் மதிப்பையும் பாராட்டுகளையும் பெறலாம். இந்த குழந்தை விளையாட்டால் பலனில்லை.

 • Bharatha Dhasan - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

  கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் மோடியின் கரத்தை வலுப்படுத்தும் அனைவரும் வெள்ளை ஆடை அணியுங்கள்..

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  அர்த்தமுள்ள போராட்டம் .

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  உண்டியல் குலுக்கி கட்சி நடத்துவது கேவலம் அல்ல. அதானிக்கும் அம்பானிக்கும் அடிவருடியாய் இருப்பதே கேவலம்.

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  எதிர்கட்சிகள் இணைந்து செயல் படவேண்டிய நேரம். வாழ்த்துக்கள்.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  புது நோட்டை நாங்க பயன்படுத்த மாட்டோமுன்னு சொல்லி போராடலாமுல்ல இவங்க.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  அதுக்குத்தான் வச்சாச்சில்ல ஆப்பு. நவம்பர் 7ஆம் தேதி 2G ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வெளியாகுதுல்ல. எட்டாம் தேதி இந்தியா மட்டுமல்ல உலகமே இந்த உலகமெகா ஊழல் பற்றியாய் பேச்சாத்தான் இருக்கும். ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம்கோடி ஆட்டயப்போட்டா உட்டுடுவாய்ங்களா.

 • Tamilnesan - Muscat,ஓமன்

  போச்சே.....போச்சே........பல ஆயிரம் கோடி ரூபாய்கள் போச்சே.....இந்த பணமதிப்பிழப்பு விவகாரத்தில் .........இப்படி எண்ணுவார்கள் மேற்படி அரசியல்வியாதிகள். இன்னும் எவ்வளவு யுகங்கள் உண்டியல் குலுக்க வேண்டுமோ என்று எண்ணுவார்கள் கம்யூனிஸ்ட் கட்சி.

 • அசோக் வளன் - Chuan Chou,சீனா

  இந்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இதனால் மக்கள் என்ன பலனை அடைந்தார்கள் என்று கூற வேண்டும்.... ஏழைகளின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதா? உங்கள் வருமானம் எவ்வளவு உயர்ந்துள்ளது? விலை வாசி குறைந்துள்ளதா? என்ன என்ன பொருட்கள் விலை குறைந்துள்ளது? எந்த இடங்களில் வேலை வாய்ப்பு கூடியுள்ளது? லஞ்ச லாவண்யம் குறைந்துள்ளதா? ஆம் என்றால் எந்த அரசு அலுவலகத்தில்? குறைந்த பட்சம் கருப்பு பண முதலைகள் யாராவது தங்கள் வருமானத்தை இழந்துள்ளார்களா? மாறாக பண முதலைகளின் வருமானம் 16000 மடங்கு உயர்ந்துள்ளது...." ஒருவனின் வருமானம் இன்னொருவனின் செலவு " இதுதான் பொருளாதார கோட்பாடு... இப்போ சொல்லுங்க யாரு செலவு செய்த பணம் இவர்களிடம் 16000 மடங்காக சேர்ந்துள்ளது ...... ஏழைகளிடம் அடித்து புடிங்கிய பணம் தானே ......

 • Saai sundaramurthy. A.V.K - chennai,இந்தியா

  வேடிக்கையாக உள்ளது ரூபாய் நோட்டு வாபசுக்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை பாஜகவுக்கு வழங்கியதை உத்தரபிரதேசம், அசாம் மற்றும் பல மாநிலங்களில் நடந்தேறிய தேர்தல்களில் பார்த்தது எதிர்க்கட்சிகளுக்கு நினைவில்லை போலும். எதிர்க்கட்சிகளுக்கு கையில் இப்போது காசு சேரவில்லை போலும் வரும் வழிகள், வந்த வழிகள் எல்லாம் அடைபட்டு விட்டன என்ன செய்வது ஈ அடித்து கொண்டிருப்பதற்கு பதிலாக இப்படியாவது "நகைச்சுவை செய்து பார்க்கலாம்" என்று முடிவெடுத்து விட்டார்கள் போலும் ஒருவேளை, கந்து வட்டிக்காரர்கள் தொல்லை தாங்க முடியாமல், விரக்தியில் எதாவது ஏடாகூடமாக செய்து கொண்டால் என்ன செய்வது? போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அதற்கும் பாஜக தான் காரணம் என்று கூறி விடுவார்கள்

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  பிஜேபி மற்றும் அதன் அங்கங்கள் மட்டுமே முன் கூட்டியே பணம் மாற்றி வைத்து கொண்டார்கள், ஏனைய கட்சிகள், மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் அடைந்த இன்னல்கள், துயரங்கள், ஏராளம், சிறு தொழில்கள், கூலி, விவசாயிகள், அன்றாடக்காட்சிகள் என அனைவரும் பணம் இல்லாமல் பாதிக்கப்பட்டார்கள். ஆகவே அந்த இருண்ட நாள்களை நினைவு படுத்துவது மிகவும் அவசியம். இது வரவேற்க வேண்டியது.

 • D.RAMIAH - RAIPUR,இந்தியா

  நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது நடந்தால் காங்கிரஸுக்கு பிடிக்கவே பிடிக்காது காங்கிரஸுக்கு கோவிந்தா போடும் நாள் வந்துவிட்டது

 • sankar - Nellai,இந்தியா

  ரொம்ப நல்லது - மக்களுக்கு நன்மை விளைந்த நாள் - நினைவு படுத்த படுவது - பிஜேபி கட்சி ஆட்சிக்கு இவர்களே மார்க்கெட்டிங் செய்கிறார்கள்- சபாஷ்

 • Kkarthikeyan Kkarthik - Chennai,இந்தியா

  அன்றைய தினம் கருப்பு சட்ட போட்டவன்லாம் கருப்பு பணம் வச்சிருந்தவன்னு சுலபமா கண்டு பிடிச்சிடலாம்-அனைத்து கட்சிக்கும் கோடான கோடி நன்றிகள்.

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  சும்மா கூப்பாடு போடாதீங்க. எல்லோருக்கும் நல்லாவே தெரியும், பாதிக்கபட்டது கருப்பு பண முதலைகளும், நாசமா போன பயங்கரவாதிகளும் , .

 • vasanth - Bangalore,இந்தியா

  ஒரு மிகப்பெரிய மக்களை அதிகம் பாதிக்கக்கூடிய முடிவு ஒன்றை எடுத்தார். நாட்டிற்கு நல்லது நினைக்கும் என்று மக்கள் எல்லோரும் மிகவும் சிரமப்பட்டு ஏற்று கொண்ட திட்டம், சொன்ன பலன் அளித்ததா என்றால் பூஜ்ஜியம் தான். ஆனால் மிக சொற்ப பலனாக சிறிது கிடைத்தது. ஆனால் மக்கள் கொடுத்த விலை மிகப்பெரிது. ஆனால் பெரிய கருப்பு பண முதலைகள் பாதிக்கப்படவில்லை என்பது மட்டுமில்லாமல் அவர்களுக்கு வெள்ளையாக மாற்ற வாய்ப்பு வேறு கிடைத்தது. அதாவது இப்போது அவை வங்கி கணக்கில் உள்ளது. மோடி சொன்ன வெளிநாட்டு கருப்பு பணம் ஒரு சல்லி கூட திரும்பவில்லை. பிறகு என்ன செய்ய. என் பக்கத்து வீட்டு கிழவிக்கு 2 ஆயிரம் இழப்பு. அவள் ஆண்டு ஆண்டு காலமாக சிறிது சிறிதாக சேர்த்த பணத்திற்கு (வீட்டுவேலை) செய்து சேர்த்த பணத்திற்கு கணக்கு கேட்கிறார்கள். 3 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்த போது. (அவள் எந்த காலத்திலும் வருமான வரி வரம்புக்குள் இல்லை) இந்த மூன்று லட்சம் அவள் 20 வருட உழைப்பு. சேர்த்த பணத்திற்கு கணக்கு எப்படி கொடுப்பது. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 13 லட்சம் சம்பாதித்த பணத்தை அவர் குடும்பத்தில் நபர்களின் பெயர்களின் நான்கு வங்கிக்கணக்குகளில் சரியாக பிரித்து போட்டு குறைந்த வருமான வரியுடன் வெள்ளை ஆக்கிவிட்டார். அவர்களும் இது ஆண்டு கணக்கில் சேர்த்த பணம் என்று புழுகிவிட்டனர். இப்போது யார் அதிகம் பாதிக்கப்பட்டார் பொதுமக்களில். இது அரசியல்வாதிகளின் கருப்பு தினமா இல்லை பொதுமக்களுக்கான கருப்பு தினமா

 • பிரவீண் - கோவை,இந்தியா

  வரி கட்டுவோரை மேலும் மேலும் வரி கட்டச் சொல்கிறார்கள். வரி கட்டாதவர், வரி கட்டாமலே இருக்கிறார். இதுவும் நமது நாட்டில் நிலவும் இன்னொரு வினோதம்.

 • பிரவீண் - சென்னை,இந்தியா

  பிரகாஷ், நீங்கள் சொல்வது ரொம்ப சரி. ஒரே மாதிரி வருவாய் உள்ளவர்களில் ஒரு சாராருக்கு வரி போடுவதும், ஒரு சாராருக்கு வரியே இல்லாமல் இருப்பதும், இந்தியாவில் மட்டுமே நடக்கும்.

 • பிரகாஷ் - Madurai,இந்தியா

  நம் நாட்டில் ஒரு புரோட்டா கடைக்காரரோ சிறு வியாபாரியோ சாதாரணமாக மாதம் 50 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்கிறார்கள். இவர்கள் எந்த வரியும் செலுத்துவதில்லை. ஆனால் இதே அளவு மாத சம்பளம் வாங்கும் ஒருவரிடம் சம்பளத்தில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதால், அவர் தானாகவே வரியின் கீழ் வந்து விடுகிறார். வருமானம் ஒரே மாதிரி இருந்தாலும், ஒரு சாராருக்கு வரி விதிக்கப்படுகிறது, ஒரு சாராருக்கு வரி இல்லை. இது என்ன வினோதம்.

 • பிரகாஷ் - Madurai,இந்தியா

  நாட்டின் முதல் பாஜ பிரதமரான வாஜ்பாய், இரண்டு முறை பிரதமராக இருந்தார். ஒரு முறை கூட அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்பதை மறந்து விட்டீர்களா?

 • பிரகாஷ் - Madurai,இந்தியா

  நம் நாட்டில் பல மாநில முதல்வர்கள் மீது ஊழல் குறறச்சாட்டுகள் உள்ளன. ஏன், நேரு முதல் நரசிம்மராவ் வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பிரதமர்கள் மீது கூட ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. அவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் மீதாவது குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால் 4 முறை குஜராத் முதல்வராக இருந்த மோடி மீது வேறு என்ன குறைகளை சொன்னாலும், ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. இன்னொன்று, அவரது தாயாரோ, சகோதரரோ, இப்போதும் கூட ஆட்டோவில் பயணம் செய்வதை நாம் பார்க்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு தாசில்தாரின் குடும்பத்தினர் கூட, அரசு வாகனத்தில் பயணம் செய்வது சர்வசாதாரணம். இப்படி ஒரு தேசியப்பற்றுள்ள தலைவரை நம் காலத்தில் பார்த்ததில்லை.

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  மிகப்பெரிய பிஜேபி யின் கருப்பு பணம் ரைடில் ஒரு காங்கிரஸ் காரன் கூட பிடிபடவில்லை என்பது மோடிக்கு கிடைத்து தோல்வி மாறாக பல பிஜேபி அடிவருடிகள் கத்தை கத்தையாக பிடிபட்டார்கள் இதிலிருந்தே இவர்களின் உத்தமம் என்ன என்று உலகுக்கு தெரியும்

 • Kalai Mahal - Madurai,இந்தியா

  அனைத்து ஊழல்வாதிகளும் எதிர் வரிசையில் தாங்கள் குவித்த பணம் வீணாக போனதற்காக திதி கொடுக்க போகிறார்கள். அதனால் கருப்பு தினம். இந்தியர்கள் எல்லா கறுப்பாடுகளையும் இனம் கண்டு கொள்ளலாம். கொண்டாடுங்கள். எல்லோரும் பார்க்கின்றனர். திருடனுக்கு திருடன் ஆதரவு இதுகள் ஒழிஞ்சா தான் இந்த நாடு உருப்படும் .....

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  வேலைக்கு போவது கிடைப்பதில் ஒரு பகுதியை சேமிப்பது நிம்மதியாக வாழ்க்கை நடத்துவது. இதுதான் பெரும்பாலான இந்தியர்களின் வாழ்க்கை முறை, இவர்களிடம் இருந்துதான் இப்போது கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. பெரும் வணிகர்கள், அரசியல்வாதிகள் தொழில் அதிபர்களை இவர்களை இந்த GST எந்த வகையிலும் பாதித்ததாக தெரியவில்லை. கருப்பு பணத்தை மீட்க போகிறேன் என்றார், இதுவரை மீட்கவில்லை, வருமானவரி துறை கருப்பு பணத்தை மீட்பதை விட்டுவிட்டு மற்ற கட்சியினரையும் பிஜேபியை எதிர்ப்போரையும் மிரட்டுவதற்காகவே செயல்படுகிறது. GST மூலம் மாதம் 92 ஆயிரம் கோடி கிடைத்ததாக சொல்கிறார்கள், இந்த பணம் எங்கே செலவிடப்படும், எப்படி வரி செலுத்திய சாதாரண மக்களுக்கு திரும்ப கிடைக்கும் இல்லை கிடைத்த பணத்தை அபப்டியே அம்பானி அதானி மல்லையாவுக்கு கொடுத்துவிடுவீர்களா.....? மோடியின் ஆட்சியில் இந்தியர்களுக்கு இருந்த காலம்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இந்த மெகா மோசடி திட்டத்தை எந்தவித முன்னேற்ப்படும் இன்றி தன்னிச்சையாக நடத்தியது, அதோடு இதனால் எந்த பயனும் இல்லை என்று இப்போது நிரூபணம் ஆகியது, ஐம்பது நாட்கள் கொடுங்கள், நிலைமை சீரடையாவிடில், எந்த தண்டனையையும் ஏற்க தயார் என்று கூறியவர் நமது பிரதமர், மக்களின் எதிர்ப்பை இப்படித்தான் காண்பிக்க வேண்டும்

 • Ram - Birmingham / Bangalore,இந்தியா

  நல்ல முடிவுதான், திரு குலாம் நபி ஆசாத் அவர்களே. ஒரு வருடத்திற்கு பின் உங்களுக்கு இப்போதுதான் இது புரிந்திருக்கிறது போலும். இந்த நாள் உங்கள் அனைவருக்கும் ஒரு இருண்ட கரி நாள்தான். பிரதமர் எடுத்த துணிவான முடிவை கண்டு அலறினாலும், அதன் உண்மையான எதிரொலி உங்களுக்கு உத்தரபிரதேச தேர்தல் முடிவுக்கு பின்னே தெரிய வந்தது. நமது நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல தவறி, ஊழல் மற்றும் மதவாத அரசியல் செய்த அணைத்து எதிர் கட்சிகளுக்கும் இந்த நாள் கண்டிப்பாக கருப்பு தினம்தான்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  அன்னியவளுக்கு அரிதாரம் பூசி இந்தியனாக்கி அவளுக்கு அடிமைகளாக ஆகி அடிபணிந்து வெண்சாமரம் வீசும் கொள்ளைக்கார கூட்டம் இந்தியாவை புரட்டி போட்டு சுத்தப்படுத்திய ஒரு உலக நடவடிக்கைக்கு எதிராக கருப்பு தினமாக கொண்டாடுகிறார்களாம். பேமானிகள். உலகமே ஆச்சரியத்தோடும் வியப்போடும் பார்த்த ஒரு உலக நிகழ்ச்சி அது. அந்த நடவடிக்கை மூலம் ஏழைகளின் வீட்டு அடுப்பங்கரை கொள்ளைக்காரர்கள் மற்றும் பெருச்சாளிகளின் சந்து பொந்துகளில் இருந்த அத்தனை பணமும் வங்கிக்கு வந்து விட்டது. பணத்தை கணக்கின்றி பதுக்கியவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். வரிகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. 70ஆண்டுகால பிளக்கப்பட்ட இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் வருமான வரி செலுத்துபவர்கள் அற்பமான ஒரு லக்ஷமாக இருந்தது. தற்போது அது 1.20 கோடி என்று மாறியிருக்கிறது. அதாவது 120 லக்ஷம் மக்கள் வருமானவரி வட்டத்திற்குள் வந்திருக்கிறார்கள். சுமார் 10 சதவீத மக்கள் தொகை. இவர்கள் தங்களின் வருமானத்திற்கு தகுந்த வருமானத்திற்கான வரியை செலுத்த துவங்கியிருக்கிறார்கள். இந்த சாதனை உலகத்தில் எங்கும் எந்த நேரத்திலும் நடைபெறாத நிகழ்ச்சி. வசதி படைத்தவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கை மூலம் அரசிற்கு வரும் வருவாய் மூலம் நாட்டை புனரமைக்க, ஏழைகளுக்கு அதிக அளவிற்கு திட்டங்களை செயல்படுத்த முடியும். உலக வங்கிகளிடமிருந்து கடன்களை பெறுவது குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும்(இந்த அரசு வந்தது முதல் கடன்வாங்குவது குறைக்கப்பட்டு உள்ளது). இந்த சாதனை படைத்ததை எப்படி கொள்ளைக்காரர்கள் ஒப்புக்கொள்ள முடியும்? ஏனென்றால் அரசின் கஜானாவிற்கு வந்திருப்பது பெரும்பாலும் அவர்களின் பணமல்லவா? அவர்களின் அடிவயிறு பற்றி பிடிக்க தான் செய்யும்.

 • R.BALAMURUGESAN - Muscat,ஓமன்

  ...மிக நன்று, செல்லாத ரூபாய் நோட்டுக்கள் என்று அறிவித்து, மக்களுக்கு சொல்ல முடியாத துயரத்தை தந்த (நவம்பர் 8...) தினத்தை செல்லாத தினமாக அறிவிப்பது நியாயம்தான்...

 • Hari Raj - Kuala Lumpur,மலேஷியா

  இன்னும் எதிர் கட்சிகள் இந்தியாவில் அங்கும் இங்கும் கொஞ்சம் இருக்கிறோம் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக எடுத்த முயற்சி தான் இந்த கருப்பு தின நாடகம் .

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இப்பொழுது ஆண்டுவரும் மத்திய அரசில் ஏற்கனவே மக்கள் கறுப்பு ஆக ஆகிவிட்டார்கள். இதில் நீங்கள் வேறு கறுப்பு தினம் கொண்டாடபோகிறீர்களா... ? அவர்கள் தம்மை திருத்தி கொள்ளப்போவதில்லை...

 • GovindarajanThenkondar -

  பணத்தை மாற்ற முடியாமல் பாதிக்கப்பட்ட கூட்டம் யாரென்று இப்போது தெரிகிறதா!

 • RamMylapore -

  யார் யார் மாட்டியிருக்கிறார்கள் எவ்வளவு கள்ளப்பணம் பிடிபட்டுள்ளது? Obsolute nothing? Zero...நான் பட்ட அவதிகள் நாட்டு நலனுக்கா அல்ல கள்ளப்பணக்காரர்களுக்காக என்று அறியும்போது????

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  மக்களே சிந்தியுங்கள். இவர்கள் எல்லோரும் ஏன் எதிர்க்கிறார்கள். கம்யூனிஸ்ட் தவிர மற்ற எல்லா கட்சிகளும் ஏதோ ஒரு விதத்தில் இதனால் நஷ்டமடைந்திருக்கிறார்கள் ஆகவே ஒன்று கூடி (இவர்களின் பின்னணியை பார்த்தால் லஞ்சம், ஊழல், வெளி நாட்டில் கணக்குகள் எல்லாம் மனத்திரையில் ஓடும்). இவர்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், நெல்லும் கோதுமையும், மற்ற உணவு பொருட்கள் அறுவடை ஆகிறதோ இல்லையோ, லஞ்சம் ஊழலுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். உணவு தானியங்களுக்கு பருவங்கள் உண்டு விளைச்சலுக்கு, மற்றவர்களுக்கு வருடத்தில் 365 நாட்களும் நல்ல விளைச்சல் தான். மக்களே இவர்கள் சொல்வதை கேளுங்கள், கேட்டுவிட்டு சிந்தியுங்கள். வெளி நாட்டு முதலீடு நம் நாட்டில் இருக்கவேண்டும், நம் நாட்டு முதலீடு வெளி நாடுகளில்(பொருளாதாரத்தில் பின்னடைந்த நாடுகளுக்கு செல்கிறதா?) அது நமக்கு பின்னடைவு. இது வங்கி டெபாசிட் போல் தான். முதலீடு இங்கேயே இருக்கும், வேலை வாய்ப்புகளும் கூட, டெபாசிட் வட்டி போல் லாபத்தில் ஒரு பகுதி வெளியில் போகலாம் அதுவும் மீண்டும் இங்கேயே மறு முதலீடு செய்யப்படலாம். ஆட்சியில் உள்ளோர் கவனமாக இருந்தால், மறுபடியும் ஒரு ஈஸ்ட் இந்திய கம்பெனி (கிழக்கு இந்திய கம்பெனி) உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

 • Ram,Mylapore -

  RBI அறிக்கையின் படி பார்த்தால், அனைத்து கள்ளப்பணைத்தையும் நல்லதாக மாற்றத்தான்இந்த திட்டம் உதவியயாகத்தெறிகிது. பொது மக்களுக்கு புறங்கை மட்டுந்தான் மிச்சம்???

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இவர்கள்தான் மோடியின் B டீம்... வாழ்க...

 • Hari Krishnan - Coimbatore,இந்தியா

  கருப்பு பண முதலாளிகளுக்கும் அவங்க நடத்துற கட்சிகளுக்கும் கண்டிப்பா நவம்பர் 8 கருப்புதினம் தான்.. போராடுவதில் தப்பில்லை..

 • m.viswanathan - chennai,இந்தியா

  வருமான வரி துறை, இது வரை எத்தனையோ இடங்களில் ரெய்டு செய்ததாக, ஆவணங்கள் சிக்கியதாக செய்திகள் கடந்த ஓர் ஆண்டில் நிறைய வெளி வந்தது , இது வரை அதற்கான நடவடிக்கை என்ன, எத்துணை பேர் தண்டிக்க பட்டார்கள்? எத்துணை பேர் சொத்து முடக்க பட்டது, எத்துணை பேர் சிறையில் அடைக்க பட்டார்கள். அரசை எதிர்த்து பேசுபவனை, மிரட்டி பணிய வைக்க மட்டுமே ரெய்டு நடப்பதுபோல் உள்ளது ,

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  முடிந்தவரை கடினமாக உழைத்து இந்திய அமைப்பில் பல தடைகள் இருந்தபோதிலும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல தனது முயற்சியை மேற்கொண்டு வருகிறார் மோடி. அவரது சாதனைகள் மற்றும் வேலை சரியான கண்ணோட்டத்தில் காணப்பட வேண்டும்.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  அடடடா நேர்மையானவன் வரங்கடா சொம்பை எடுத்து உள்ளேவைன்னாப்பல இருக்கே இன்னம் எவ்ளோக்கட்டுகள் மாற்றாமல் வச்சுருக்கீங்க நோ உஸ் எல்லாம் வேஸ்ட் பபேர்தான் இனி , 65VARUSAM நெருலேந்து சோனியவரை தலைமை அடுத்தவரது தலைமைக்கு இளவரசன் வசந்தன் ராவுளு பாராஃபராக் என்றுதான் கூவலே

 • குமார்நடராஜன் -

  இழந்தவா்கள் (கறுப்பு பணம்)துக்கம் அனுசரப்பது நியாம்தானே

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  நோட்டு வாபஸ் பெறப்பட்டதால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது அல்லது இல்லாமல் போய்விட்டது? காஷ்மீரில் கல்லெறிதல் நின்றுவிட்டதா ? பாக்கியிடம் கள்ளநோட்டை வாங்கி, கல் வீசுவதாக அறிக்கை மேல் அறிக்கை விட்டார்கள், குறைந்ததா? எத்தனைப்பேரு செல்லாத நோட்டை ஆற்றில் கொட்டினார்கள்? எல்லா பணமும் வங்கிக்கே திரும்ப போய்விட்டது ., வரிஏய்ப்பவர்கள் மாட்டிக்கொண்டார்களா? காங்கிரஸ் முக்கிய பிரமுகர் மாட்டிக்கொண்டார்களா? அவர்களிடம் தான் அதிகமாக கருப்பு பணம் இருப்பதாக விளம்பரம் படுத்திக்கொண்டார்கள். மக்கள் எதிர்பார்த்தது விலைவாசி குறையும் என்று மாறாக சுமையை தான் மத்திய அரசு கொடுத்துக்கொண்டிருக்கு., பிஜேபியின் மக்கள் விரோதப்போக்கை மக்களே தண்டிப்பார்கள்.

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  அனைத்து ஊழல்வாதிகளும் எதிர் வரிசையில் தாங்கள் குவித்த பணம் வீணாக போனதற்காக திதி கொடுக்க போகிறார்கள். அதனால் கருப்பு தினம். இந்தியர்கள் எல்லா கறுப்பாடுகளையும் இனம் கண்டு கொள்ளலாம். கொண்டாடுங்கள். எல்லோரும் பார்க்கின்றனர்.

 • mohankumar - Trichy,இந்தியா

  1000 ,500 ரூபாயை செல்லாது என்று மோடி கூறியதும் வங்கிகளில் சென்று பணத்தை மாற்றி புது ரூபாய் நோட்டுக்கள் கொடுத்தது அன்றி அரசு உங்கள் பணத்தை எடுத்தது கொண்டதா ? இதனால் உங்களுக்கு சிறிது நேரம் வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . சினிமா theatre , அல்லது இலவசங்களுக்கு ,ரயில் reservation க்கு நிற்பீர்கள் . நம் நாட்டுக்காக சிறிது நேரம் நின்றீர்கள் .மற்றபடி உங்கள் பணம் அரசு எடுத்து கொண்டதா பதிலுக்கு வேறு புது ரூபாய் நோட்டுக்கள் வாங்கி கொண்டு வந்து விட்டீர்கள் . இதில் யாரும் உங்களை ஏமாற்றவில்லையேஅவன் வந்தானா இவன் வரிசையில் வந்தானா என்று கேட்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம் .நீங்கள் குறிப்பிடும் நபர்கள் எந்த முகத்தை வைத்து கொண்டு வரிசையில் வருவார்கள் .நமக்கு மடியில் கனமில்லை வரிசையில் நின்று பணத்தை கொடுத்து புது ரூபாய் நோட்டுக்கள் வாங்கி செல்கிறீர்கள் .இதில் உங்களுக்கு எந்த பண நாட்டமும் வரவில்லையே . பின் எப்பெடி இந்நாள் கருப்பு தினம் ஆகும் நமக்கு . அவர்களுக்கு தான் கருப்பு தினம் . எல்ல்லா பணமுமும் வங்கிக்கு வந்து விட்டது பின் எங்கே கருப்பு பணம் என்று கேட்கிறார்கள் ஆமாம் கள்ள நோட்டுக்கள் எரிக்கப்பட்டன . கருப்பு பணம் அளவுக்கு அதிகம் வைத்த்ருந்தவன் பாங்கில் சேர்த்து விட்டான் அவனுக்கெள்ளாம் தான் நோட்டீஸ் அனுப்பபட்டுக்கொண்டிருக்கிறது . அந்த பணத்திற்கெல்லாம் வரிக்கு மேல் வரி செலுத்த வேண்டும் தப்ப முடியாது ஆதார் எல்லாம் காட்டி கொடுத்து விடும் பான் கார்டு கட்டி கொடுத்து விடும் . கள்ளநோட்டுக்கள் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் தான் வசமாக மாட்டி கொண்டு விட்டார்கள்

 • Prasath, Madurai - Madurai,இந்தியா

  கடந்த 65 ஆண்டுகளில் பிரதமர் நேரு குடும்பம் உட்பட காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலத்தின் முதல்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் ஊழல் செய்தனர். மோடி, நான்குமுறை குஜராத்தின் முதல்வராக இருந்தார். அவர் மீது எந்தவொரு சிறு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இதற்காகவாவது நாம் அவரை ஆதரிக்க வேண்டும்.

 • Prasath, Madurai - Madurai,இந்தியா

  நல்ல நோக்கத்தில் தான் நோட்டு வாபஸ் திட்டத்தை மோடி கொண்டு வந்தார். ஆனால், இந்தியர்களாகிய நாம் நேர்மை இல்லாமல் இருக்கிறோம் அல்லது சுயநலமாக இருக்கிறோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எத்தனையோ வங்கிகளின் அதிகாரிகள் கறுப்பு பணத்தை வெவ்வேறு கணக்குகளில் போட்டும், கூட்டுறவு வங்கி கணக்குகளில் செலுத்தியும் அரசை ஏமாற்றுகிறார்கள். பல அரசியல்வாதிகள் தங்கள் தொகுதி மக்களின் கணக்குகளில் பணத்தை போட்டனர். சிலர் பழைய நோட்டுகளை கொடுத்து மற்றவர்களின் அடகுநகைகளை மீட்டனர்.

 • Prasath, Madurai - Madurai,இந்தியா

  ஒரு புரோட்டா கடையின் லாபத்தின் அளவிற்கு மாத சம்பளம் வாங்கும் ஒருவர் வரி செலுத்த வேண்டியுள்ளது. நமது நாட்டில் சில சமுதாயத்தை சேர்ந்த வர்த்தகர்கள் ஒரு காசு கூட வரி செலுத்துவதில்லை

 • Prasath, Madurai - Madurai,இந்தியா

  நாடு முழுவதும் 100 சதவீதம் ரொக்கமாக பரிவர்த்தனை செய்பவர்கள் தான் கத்துகிறார்கள். நமது நாட்டில் அனைத்து நகரங்களிலும் உள்ளவர்களில் 95 சதவீதம் பேர் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதாக கணக்கு காட்டுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 2 மேஜைகள் போட்டிருக்கும் சாதாரண புரோட்டா கடையில் கூட ஒருநாளைக்கு ரூ. 10 ஆயிரத்திற்கு விற்பனை நடைபெறுகிறது. அப்படியென்றால், மாத விற்பனை ரூ. 3 லட்சம். ஆண்டு விற்பனை ரூ. 36 லட்சம். எல்லா செலவுகளும் போக கணக்கு பார்த்தாலும் மாதம் ரூ.50 ஆயிரம் வருவாய் கிடைக்கும். இந்த வருவாய்க்கு ஆண்டுக்கு ரூ. 1லட்சமாவது வரி கட்ட வேண்டும். ஆனால், எந்த புரோட்டா கடையோ, பிரியாணி கடையோ வருமான வரி கட்டுவதில்லை, இதுதான் நிதர்சனமான உண்மை.

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  அடிமட்ட எல்லா இந்தியர்களுக்கும் தெரியும் , பாதிக்கபட்டது கருப்பு பண முதலைகளும் , பயங்கரவாதிகளும் , நக்ஸாலிட்டுகளும் . உங்களது கூச்சல் எடுபடாது .

 • Prasath, Madurai - Madurai,இந்தியா

  இந்தியாவில் வெறும் 6 சதவீதம் பேர் வருமான வரி கட்டுகின்றனர். இதிலும் 1 சதவீதம் அல்லது 2 சதவீதம் பேர் ஜீரோ கணக்கு காட்டி வரி செலுத்துவதில்லை. 4 சதவீதம் அல்லது 5 சதவீதம் பேர் தான் வருமான வரி கட்டுகின்றனர்.. மாத சம்பளம் வாங்குபவர்கள் வேறு வழியில்லாமல் வருமான வரி கட்டுகிறார்கள். நவம்பர் 8- ஐ கறுப்பு தினமாக அனுஷ்டிப்பவர்கள் அரசை ஏமாறறாமால் தங்களின் முழு வருமானத்தை காட்டி வரி செலுத்த தயாரா? கடந்த 10 ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை அனைத்து அரசியல்வாதிகளும் காட்டுவார்களா? அதற்கு அவர்களுக்கு தைரியம் உண்டா? சோனியாவும், ராகுலும், சிதம்பரமும் என்றைக்காவது கணக்கு காட்டுவார்களா?

 • Thirumalai kumar - TVNR,இந்தியா

  நிச்சயமாக உங்கள் எல்லாருக்கும் அது கருப்பு தினம் தான் எத்தனை கருப்பு பண முதலைகளின் தூக்கம் போச்சு

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  சரியான முடிவு. இருக்கும் கருப்பு பணத்தையும் இழந்து, மேற்கொண்டு கொள்ளை அடிக்க முடியாமல் செய்த மோடி அரசுக்கு எதிராக கயவர்கள் அனைவரும் அனுஷ்டிக்க வேண்டிய நாள்..

 • mukundan - chennai,இந்தியா

  காங்கிரஸின் 60 ஆண்டு காலா ஆட்சி தான் கருப்பு தினங்கள். கருப்பு ஆடுகள் கருப்பு தினத்தை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது.

 • udanpirappu3 - chennai ,இந்தியா

  கேலியும் கிண்டலுமாக கருத்துக்கள் உள்ளதே தவிர , மோடி சொன்னது என்ன ? அதன் விளைவு என்ன ? பணமதிப்பிழப்பால் எத்தனை மனிதனின் வாழ்வாதாரம் பாதிப்பு ? எவ்வளவு வேலையிழப்பு ? இதைப்பற்றி இங்குள்ள அறிவு ஜீவிகள் கருத்துக்களை பதியவேண்டும் . இல்லையென்றால் , இதுவும் ஒரு பொழுதுபோக்கே. என்னுடைய பாக்கெட்டிலும் கைவைத்த பிரதமரை , என்னால் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளமுடியாது . நீங்கள் சொல்வதை எல்லாம் நான் கேட்டு நடக்கவேண்டும் , எதிர் கருத்து எதையும் பதியவைக்க கூடாது என்பது ஜனநாயகமா ? சர்வாதிகாரமா? எனக்கு தெரிந்த வரை , பதிலே சொல்லாமல் இருக்கும் ஒரு பிரதமரை ஆதரித்து பேசும் இவர்கள் அனைவரும் மூடர்களே. எனக்குத் தெரிந்தவரை மோடி பதவி ஏற்றநாள் முதலே கருப்பு நாள் தான். ஏதாவது ஒன்றை சொல்லி இவர்களுக்கு அல்லது யாருக்காவது நல்லது செய்தோம் என்பதை இவர்களால் சொல்லமுடியுமா ??? ஏதாவது சொன்னால் உடனே ஊழல் ஊழல். காங்கிரஸ் காரன் மீது சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு அவர்களின் ஆட்சியிலே வழக்குகள் போடப்பட்டது . இந்த யோக்யரின் ஆட்சியில் , இன்று என்ன நிலை ?

 • Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்

  இப்படித்தான் இங்கிலாந்தில் மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்தபோது பல அதிரடி திட்டங்களை எடுத்தார் அப்பொழுது அனைவரும் குறை கூறினார் .ஆனால் தற்போது ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியில் இங்கிலாந்து மூழ்கமால் நிலையை சமாளித்தார்க்கு தாட்சரின் அன்றய திட்டமே என ஐரோப்பாவில் அனைத்து மீடியாக்களும், பொருளாதார வல்லுனர்களும் கூறினார்கள் .அதுபோல் மோடியின் திட்டம் எதிர்கால இந்தியாவுக்கு பயனுள்ளதாக இருக்கும்.எதிர்க்கட்சிகளுக்கு வேலை இல்லாததால் இதை எல்லாம் செய்து கொண்டி இருக்கிறார்கள் .

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  வாஸ்தவம். இதனால் நிறைய கருப்பு இழந்தது கான்-கிரேஸ், திமுக காட்சிகள் தானே ராகுல்ஜீக்கு சொல்லி வைங்கப்பா கலர் தெரியாமல் வெள்ளை சட்டை போட்டு வந்துவிடப்போகிறார். சரியான ஜோக்கர்

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  வரவேற்கிறேன். கருப்பு பணம் வைத்திருந்தோர் எவ்வளவு கஷ்டப் பட்டு அதை மீட்டிருக்கிறார்கள். சங்கடமோ சங்கடம். ஆகையால் கருப்பை வைத்திருந்தோர் கருப்பு அணிந்து அன்று துக்கம் அனுஷ்டிப்பது சரியான ஒன்றுதான். குளம் அங்கிள் நீங்களும் கருப்பு அணிய போகிறீர்களா? உங்களுடன் யாரெல்லாம் அணிய போகிறார்கள்?

 • kulandhaiKannan -

  Note ban did not affect poor and middle class. Those with black money were severely affected as they had to pay 30 percent commission to brokers to convert black money into white. Actually poor are eagerly awaiting next round of demonetization to make some fast bucks in the form of commission

 • Rathna Kumar - Coimbatore,இந்தியா

  அப்போ 2ஜி, ஹெலிகாப்டர், போபோர்ஸ், நிலக்கரி ஊழல்கள் நடந்த காலத்தை நினைவு கூற என்ன செய்யலாம்?

 • Bharatha Dhasan - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

  ரொம்ப சரி. கருப்பு பண ஒழிப்புக்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த மோடியை எதிர்ப்பவர்கள் கருப்பு துணி அணியலாம். மோடியின் இந்த நடவடிக்கையை ஆதரிப்பவர்கள் வெள்ளை துணி அணியலாம். யாருக்கு ஆதரவு அதிகம் என அனைவருக்கும் தெரிய வரும்..

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  நாமும் அணிவோம் கருப்பு சட்டை ...காரணம் 1 கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி தான் நோட்டை முடக்கினார்கள் ...ஆனால் 2000 ரூபாயாக இப்போது கறுப்புப்பணம் கும்மியடிக்கிறது...2 .காஷ்மீரில் தீவிரவாதம் அழியும் என்றார்கள் ...மாறாக வளர்ந்துள்ளது . 3 . ஐம்பது நாளில் அதிசயம் என்றார்கள் ...350 நாளாகிவிட்டது ..அதிசயத்துக்கு பதில் அதிருப்தி தான் வந்துள்ளது. 4 . வேலை இழப்பு , சிறு குறு தொழில் நசிவு தான் நோட்டு முடக்கத்தின் பலன்...ஆக நானும் கருப்பு சட்டை அன்று அணிய இருக்கிறேன்.

 • Gopal.V. - bangalore,இந்தியா

  இப்போ இருக்கிற இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அநேகமாக இன்னும் ஒரு வருடத்திலோ இரண்டு வருடத்திலோ காணாமல் போக போகிறது.. அதுவும் திடு திப்பு என்று அறிவிக்கப்படும்.. மறுபடியும் அதற்க்கு ஒரு கருப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டிவரும்...எல்லாவற்றிற்கும் தயாராக இருப்போம்..

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  அடேய் ...மக்கள் எல்லாம் அதை முழு மனதோடு வரவேற்று ஒத்துழைப்பு நல்கி அதை வெற்றி பெறவும் செய்தனர் ...மோடிஜி யையும் மத்திய அரசையும் இந்த விஷயத்தில் வெறுக்கறவனுங்க யாருன்னு ஒஅர்ஹஸ்ல் ஒரு உண்மை புரியும்..சட்ட விரோத வருமானம்,கொள்ளையடிக்கறவன்,நாட்டிற்கு இழப்பு ஏற்படுத்தி தன் பாக்கீட்டிற்கு வருமானத்தை பெருக்கினவன்,முறைகேடு செய்ய முடியாமல் தவிக்கிறவன்,கருப்பு பணத்தை பதுக்கினவன்,பினாமி வச்சிக்கிட்டவன்,சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு அதன் மூலம் தன் வயிற்றை பெறுக்கிக்கிட்டவன் இவனுங்க தான் அரசின் மேலேயும் மோடிஜி மேலயும் மரண காண்டுல இருக்கறானுங்க ..போதா குறைக்கு NGO மூலமா நிதி வாங்கி அதை இங்கு மத மாற்றத்திற்கு பயன்படுத்தும் சாக்கில் பணத்தை ஆட்டையை போட்டு ருசி கண்டவன் எல்லாம் ஒன்னு சேர்ந்துட்டானுங்க..ஏன்னா எல்லாம் போச்சி ...

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  ஒரு ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சிக்கு இந்த மாதிரி முடிவெடுக்கும் சுதந்திரம் உண்டு. அதை கருப்பு தினமாக எதிர்கட்சிகள் அனுசரிப்பது என்று முடிவெடுத்தால் அது தப்பு. ஏன் காங்கிரஸ் கட்சி தப்பே செய்யவில்லையா? நூறுநாள் வேலைத்திட்டம் என்று கொண்டுவந்தது எதற்க்காக, காங்கிரஸ் கட்சியில் ஊழல் ஊரெல்லாம் தெரியவர அதை அமுக்கும் ஒரே நோக்கத்துடன் கொண்டுவந்த திட்டம் அது. தற்போது விவசாயத்திற்கு கூலிவேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இந்த திட்டத்தாலேயே விவசாயம் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டது. அந்த திட்டத்தால் வேலை ஏதாவது நடக்கிறதா என்றால் ஒன்னும் இல்லை. வயதுவரம்பு கிடையாது என்பதால், நடக்கமுடியாத கிழவிகள் பெயரில்கூட சம்பளம் பட்டுவாடா பண்ணப்படுகிறது. இந்த ஊழலில் பலனில் பாதி மக்களுக்கு, மீதி பஞ்சாயத்து ஆட்களுக்கு. இப்போது சொல்லுங்கள் திருவாளர் பானா சீனா பட்ஜெட் தாக்கல் செய்த தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கலாமா? மத்திய அரசின் எந்த திட்டமும் பலனளிக்க கொஞ்சம் நாட்கள் ஆகும். அதுவரை பொறுமை வேண்டாம்? அவசரநிலை கொண்டுவந்த தினத்தை நீங்கள் கருப்புதினமாக அறிவித்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

 • RamachandranKrishnamurthy -

  It is really a black day for corrupt congress people. All the black money they hoarded came back to the system and they paid the penalty for evadind tax. BSP fellows deposited their black money in the name of innocent poor people and withdrew it after giving hefty commission to them. In Tamilnadu and Maharashtra polititians deposited heavily in cooperative banks they control. It is reported that one polititian d Rs 124 crores and paid 64 percent tax on it. Income tax department has given notice to more than one lack assessies who have deposited more than ten lakhs old currency. More skelletens will tumble once the tax authorities pounce on them in course of time. One way this is a black day for them

 • FIRDOUS - chennai,இந்தியா

  சபாஷ் சரியான முடிவு.குஜராத் தேர்தல் மையமா வச்சி காங்கிரஸ் எடுக்கிற முடிவு

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  மனதில் நினைத்தது" என்னிடம் இருந்த ரூ.500 /1000 கட்டுக்கள் எல்லாம் வீண் என்று சொன்ன தினத்தை நான் கருப்பு தினமாகத்தானே கொண்டாட முடியும்".

 • balakrishnan - Mangaf,குவைத்

  திருடர்கள் அன்றய தினத்தை கருப்பு தினமாக கொண்டாடலாம் .

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  சரியான முடிவுதான். பாதிக்கப்பட்டவர்கள் அதை இழவுதினமாக கொண்டாடுவது பொருத்தம்தான். ஒட்டுமொத்த பணமும் அல்லவா போய்விட்டது.

 • krishnan - Chennai,இந்தியா

  கருப்பு பண்ணாம ஒழியும் , பயங்கரவாதம் அழியும் , டிஜிட்டல் மயம் ஆகும் , நாடே செழிப்புறும் . இதெல்லாம் நடந்துச்சா மக்களாய் ?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இவனுங்க ஆட்சி செய்யற ஒவ்வொரு நாளும் "கருப்பு நாளு"தான்..... அதுல "பயங்கர கருப்பு" நாளுதான் Nov எட்டாந்தேதி....

 • appaavi - aandipatti,இந்தியா

  மக்கள் கருப்புச்சட்டை அணிந்தால் நியாயம்.... நீங்க எதுக்கு அணியப்போறீங்க... என்னமோ Bank ல, ATM ல கால்கடுக்க நின்ற மாதிரி ரொம்பதான்....

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  ரொம்ப தப்பு பண்ணுறீங்க குலாம் ஜி 2014 மே முதல் 2019 இல் மோடி ஆட்சி முடியும் வரை எங்களுக்கு ஒவ்வொரு நாளும் கருப்பு தினம்தான். எப்போ இந்த ஆட்சி முடியுதோ அப்போதான் நமக்குஎல்லாம் சுந்திரத்தினம்

 • MURUGAN - Mumbai

  மத்திய அரசாங்கத்தின் முட்டாள் தனமான முடிவினால் எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டனர் பணம் செல்லாது என்று பிரதமர் அறிவித்த அன்றைய ஒரளவு என்னுடைய பாக்கெட்டில் பத்து ரூபாய் தான் இருந்தது அதன்பிறகு அன்றாட செலவுக்குத் தேவையான பணம் எடுக்க முடியாமல் ஒரு வாரம் அலைந்தது வாழக்கையில் மறக்க முடியாது கோவாவில் உள்ள தன் அன்னையின் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்குகூட பணம் கட்டமுடியாமல் தவித்த என் நண்பரரின் நிலையோ அந்தோ பரிதாபம் தான் ஆனால் இதில் எந்த அரசியல்வாதியும் பாதிக்கப்படவில்லை பணமுதலைகளும் பாதிக்கப்படவில்லை

 • Anand - chennai,இந்தியா

  ஆஹா, ரொம்ப அடி வாங்கியிருப்பார்கள் போல தெரிகிறது, அதெப்படி இவ்வளவு அடி வாங்கியும் இத்தனை நாட்களாக வலிக்காத மாதிரியே இருந்தீர்கள்?

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  இன்னும் ஓரிரு ஆண்டுகள் காத்திருந்து விட்டு அதன் பின்னரும் எந்த மாற்றமும் வரவில்லை என்றால் போராட்டம் பன்னலாம்... இ‌ல்லை எ‌ன்றா‌ல் நாம் வேறு யாரையாவது பிரதமாராக தேர்ந்தெடுக்ககலாம்...

 • vnatarajan - chennai,இந்தியா

  உண்மையிலேயே தாங்கள் மறைத்துவைத்த கருப்புப்பணம் கையைவிட்டு போன வருத்தத்தில் இந்த எதிர் காட்சிகள் நவம்பர் 8 ல் தெருவிற்கு வந்து ஒப்பாரி வைக்க போகிறார்கள். காங்கிரஸிற்கு கருப்பு பணத்தை ஒழிக்க அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்திட துணிவில்லை . ஆனால் பிஜேபி அதை துணிச்சலுடன் செய்ததை இந்த காக்காய் நரி கூட்டங்களுக்கு பொறுக்கவில்லை. உடலில் எந்த சர்ஜெரி செய்தாலும் பிறகு சிறுது வலியும் அது ஆறுவதற்கு சில நாட்களும் பிடிக்கும். அதுபோலத்தான் நவம்பர் 8 சர்ஜெரிக்கு பிறகு மக்கள் கொஞ்சம் வேதனைப்பட்டார்கள் இதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் தற்போது அந்த நாளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். ஆனால் இது பொறுக்கமுடியாமல் எதிர் காட்சிகள் தங்கள் லாபத்திற்காக நவம்பர் 8 யை மீண்டும் நினைவுப்படுத்துகிறார்கள் இதுதான் உண்மை.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய வைத்த, ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு எடுத்து கொண்ட இந்த கருப்பு தின முறை சிறப்பானது. இது மக்களிடம் சென்றடைய வேண்டும்.

 • S.Govindarajan. - chennai ,இந்தியா

  எதிர் கட்சிகள் கருப்பு பண தினம் கொண்டாடினால் பொருத்தமாக இருக்கும்.ஆடி கழிஞ்சா அஞ்சாவது நாள் கோழி அடிச்சு கும்பிட்ட கதை இது.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆமாம் நிழல் உலகில் நடந்து கொண்டு இருந்த கருப்பு சமுதாயத்துக்கு அது ஒரு கருப்பு நாளாக தான் கருத வேண்டும்

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  இந்தியாவை துக்ளக் என்ற மன்னன் ஆண்டான் .. மிக நீண்டநாட்களாக அவனுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது... கடந்த வருடம் நவம்பர் 8 ம் தேதி அது நிறைவேறிற்று... தற்போது துக்ளக் ஆத்துமா சாந்தி அடைந்தது..

 • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

  நவம்பர் 8 we will call as November Fool.Fools are ruining our country.

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  உண்மை...சரியான முடிவு...ஒட்டு மொத இந்திய மக்களும் அனைத்து துறையை சார்ந்தவர்களும் பாதிக்க பட்டிருக்கிறார்கள்..சிறுக சிறுக 20 -30 வருடமாக வீட்டிலே ரத்தம் சிந்தி சேமித்த பணத்தை எல்லாம் இழந்தவர்கள் ஏராளம்.. குறிப்பாக கல்யாணம் காட்சி , மருத்துவ செலவு, பிள்ளைகளின் படிப்புக்காக வைத்திருந்த பணமெல்லாம் கோவிந்தா ஆகிய தினம் நவ 8 .. வங்கியில் வரிசையில் காத்திருந்து 200 பேர் மாண்டார்கள்...அது கருப்பு தினம் மட்டுமல்ல..சிவப்பு தினமும் அதுதான்...

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  உண்மையான கருப்பு தினம் என்றால் அது சோனியாவின் கைப்பாவையாக மன்மோகன் பிரதமர் பதவி ஏற்ற நாளே. அந்த நாளை துக்கத்தினமாக கொண்டாடுவோம்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  கையில் இருந்த கருப்பு பணமெல்லாம், ஒரே நாளில் செல்லாததாகி , அந்த பணத்தை மாற்றி செல்ல வைப்பதற்குள் பெரும் பாடு ஆகிவிட்டது. அதனால் காங்கிரசுக்கு அந்த நாள் ஒரு கருப்பு தினமே.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  கொள்ளையடித்த பணமெல்லாம் போச்சே , கருப்பு தினம் இல்லாமல் வெள்ளை தினமா காங்கிரசுக்கு. அழுது புலம்புங்கள்.

 • hariharan -

  பதுக்கிய கருப்பு பணமெல்லாம் காணாமல் போன ஒரு வருட துக்கத்தை காங்கிரஸ் துக்க நாளாக அனுஷ்டிக்கிறது. எத்தனை கொள்ளையடித்தார்கள் மக்களை ஏமாற்றி அத்தனைக்கும் ஆப்பு வச்ச தினம். சாபாஷ் மோதிஜி

 • SINGAM - chennai,இந்தியா

  போடா திருட்டு எதிர் கட்சிகள மொத்த கறுப்பு பணமும் போயிடுச்சு அதான் அல்லரிங்க

 • Sivasubramanian - chennai,இந்தியா

  காங்கிரஸ் கட்சி ஊழலின் இருப்பிடம். நேர்மையான நடவடிக்கைகளை அவர்கள் எதிக்கவே செய்வார்கள்.

 • ArivuKkarasu -

  let this beggars go beg for money on their black day

 • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  கருப்பு தினத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாளை மக்கள் அனைவரும் எதிர்நோக்கியுள்ளார். ஏனெனில் அனைத்து விதமான மக்களையும் வெகுவாக பாதித்த விஷயம் ஆகும். இந்த துயர சம்பவதிலிருந்து இன்று வரை மக்கள் மீண்டு வர முடியவில்லை. WELCOME BLACK DAY

 • veee -

  rompa adivanki irupano

 • TamilArasan - Nellai,இந்தியா

  தலை கீழ நின்னாவது தண்ணி குடிச்சு மறுபடியும் ஆட்சி வர துடிக்கிறார்கள் காங்கிரஸ் காரர்கள் - என்ன செய்ய 70 ஆண்டாய் பதவி மற்றும் அதிகார சுவையை அனுபவித்த காங்கிரஸ்காரர்கள் அது இல்லை என்றால் நீரை விட்டு வெளி வந்த மீன் போல் அல்லவா வாடி விடுவார்கள்.... GST முன்பு எனது வீட்டு கடனுக்கான மாத வாங்கி தவணை சுமார் 40000 ரூபாய் இருந்தது ஆனால் வங்கிகளில் அதிக படியான பண டெபாசிட் காரணமாய் வட்டி விதம் குறைக்கப்பட்டு இன்று எனது மாத தவணை சுமார் 35500 ஆக குறைந்துள்ளது, மாதம் 4500 மிச்சம் என்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியே... நானும் எனது மனைவியும் மாதம் மாதம் உழைத்து கடின பட்டு இன்ஸடால்மெண்ட் கெட்டியபோது திடீர் என்று ரூபாய் 4500 குறைந்தது - எங்களிடம் இருந்த பழைய 1000 ரூபாய் நோட்டுக்குகளை மாற்ற இரண்டு நாட்கள் வங்கி வாசலில் நின்றது ஒன்றும் பெரிய கஷ்டமாகப்படவில்லை...

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  அதற்கு பதிலாக மதுவை அனுமதிக்க அரசு முடிவு செய்த தினத்தை அனுஷ்டிக்கலாம். மதுவிற்கு எதிராக மிக தீவிரமாக போராடுங்கள். வேண்டுமானால் பாராளுமன்றத்தை முடக்குங்கள். நிச்சயம் ஆதரவு பெருகும். அனைவரும் ஆதரிப்பிப்பார்கள் அதை வைத்து தான் ஆட்சியை பிடிக்க முடியும். வேறெந்த சாஸ்திரங்களும் உதவாது. மற்ற அனைத்து அஸ்திரங்களையும் எல்லாவற்றையும் தேச பற்று என்ற ஒரே அஸ்திரத்தில் வீழ்த்திவிடுவார்கள். தேவை பட்டால் காஸ்மீர், டோக்லாம் என்று எத்துணையோ இருக்கிறது அவர்களுக்கு பெரிதாக்கி தேர்தலில் வெற்றி பெற.

 • Young Prince - Bangalore,இந்தியா

  திவசம் கொடுங்க...

 • ArivuKkarasu -

  Yes let they do because all this anti national parties lost their huge amount of black monkey and all this parties are anti national parties.

 • rajan. - kerala,இந்தியா

  கூடவே பாகிஸ்தான் கள்ள நோட்டு அச்சடிப்பு ஒழிப்பு தினத்தையும் சேர்த்தே கொண்டாட வேண்டியது தானே மார்கபந்துவே. நீங்க ஏன் பாகிஸ்தான் குடிஉரிமை வாங்கி அங்கு பிரதமராக கூடாது.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  காலம் கடந்த ஞானோதயம்.

 • RVK - Chennai,இந்தியா

  ஒவ்வொரு அரசியல் தலைகளும் முதலில் அவர்களுடைய கொள்கைகளை தெரிய படுத்த வேண்டும். திரு குலாம் நபி ஆசாத் அவருடைய பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் பற்றிய நிலை , காஷமீர் பண்டிட்களின் நிலை , 55000 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டது பற்றிய கருத்து , மும்முறை தலாக் , மத மாற்றம் பற்றி சொல்லிவிட்டு , அதற்கு கருப்பு தினம் ஏன் வேண்டாம் என்று காரணம் சொல்லிவிட்டு ரூபாய் பற்றி பேசவேண்டும். ஒரு ஒட்டுண்ணியாக இருந்து பேசுவது வேடிக்கை .

 • karthikeyan -

  கருப்பு பணம் தினமாக அனுசரியுங்கள்

 • santha kumar - ruwi,ஓமன்

  சுர்ஜிக்கல் strike நடந்த சமயத்தில் இவர்கள் இவர்களை பெருமையாக பேசினார்கள். அது மக்களிடம் பலமாக எடுபட்டது. பாகிஸ்தானை அடிக்க இவர்களால் மட்டுமே முடியும் என மக்கள் நினைக்கும் அளவிற்கு இவர்கள் இவர்களை விளம்பரபடுத்தினர். அதே போல் இந்த demonitization உம் நடந்தால் ஊழலுக்கு எதிராக உள்ள பெரிய இமேஜ் ஐ மக்களிடம் கொண்டு வரலாம் என நினைத்தே இதை கொண்டு வந்தனர். அதற்கு என்னவெல்லாம் கச்சிதமாக நாடகம் ஆட முடியுமோ அந்த அளவிற்கு ஆடினார். பெரும்பான்மையான மக்களும் இவர்களை ரொம்ப நல்லவர்கள் என நம்பினார். அதனால் தான் அந்த சமயத்தில் மக்கள் கஷ்டத்தை பெரிதாக எடுக்கவில்லை. இவர்கள் சாயம் சிறுது சிறிதாக வெளுக்க ஆரம்பித்தது. எனது இந்த கருத்தை பல பேர் இங்கு விரும்பமாட்டீர்கள். நாள் இது தான் உண்மை. நன்றி.

 • DESANESAN -

  அம்ஸம் ..   காங்கிரஸ் UPA  ஊழல் கறுப்புப்பணத்திற்கு திதி திவசம் அனுசரிக்கட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள். ரொம்ம்ம்ப மெர்சலாட்டங்க

 • Veeran - Kanyakumari,இந்தியா

  இனி வரலாறு சொல்லும் நவம்பர் 8. முட்டாள் தினம் ஏப்ரல் 1. மாதிரி பிஜேபி முட்டாள் பண்ணிய நாள் நவம்பர் 8.

 • Hariharan Iyer - Nagpur,இந்தியா

  ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த பின் நாட்டில் எல்லா வங்கிகளை மூடி விட்டார்கள். எதிர்கட்சிகள் பாவம். கையில் பைசா இல்லாமல் பிச்சை எடுக்கிறார்கள். அரசாங்கம் புது நோட்டுக்கள் வெளியிடவில்லை. பழைய நூற்றுக் செல்லாது என்று ஆகிவிட்ட பிறகு மக்கள் கையில் இப்போதும் ஒரு பைசா கூட இல்லாமல் பட்டினியாக அலைகிறார்கள். நாடே ஸ்தம்பித்து போய் எல்லோரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். ஆகையால் நாமும் 8 தேதி வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருப்போம். ஏனென்றால் ரூபாய் செல்லாது ஆகையால் நாமும் அன்று பட்டினியாக முடங்கி கருப்பு தினமாக கொண்டாடுவோம்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஆமாம் ஊழல் கறுப்புப்பணம் வைத்திருந்தவர்களுக்கு அது நிஜமான கடுப்புதினம் தான். ஒன்றா இரண்டா? ஸ்பெக்ட்ரம் 17600000000000 நிலக்கரி 200000000000000. ப்ளஸ் வெஸ்ட்லான்ட் .காமன்வெல்த் etc

 • Veeran - Kanyakumari,இந்தியா

  Very good Decision. Actually we should celebrate Foolish Day on Nov.8. பிஜேபி எடுத்த முட்டாள் தனமான செயல் எவளோ மக்கள் கஷ்டப்பட்டார்கள் இறந்து கூட போனார்கள் நம்மள கொண்டு போய் எவளோ நாள் பேங்க் வாசல்ல காத்து கிடக்க வைத்தார்கள்

 • Hariharan Iyer - Nagpur,இந்தியா

  ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னதால் நாட்டில் இப்போது எல்லோரும் பிச்சை எடுக்கிறார்கள். எல்லா கடைகளும் ஒரு வருஷமாக அடைக்கப்பட்டு விட்டது. எதிர்க்கட்சி தலைவர்கள் பாவம் முக்கால்வாசி பேர் இறந்துபோய் விட்டார்கள். தீவிரவாதிகளுக்கு கொண்டாட்டம். ரூபாய் செல்லாது என்று சொன்னதால் அவர்கள் கையில் பணம் ஆயிரக்கணக்கில் புரளுகிறது.என் ஜீ ஓ அமைப்புகளிடம் பணம் கோடி கோடியாக வெளி நட்டு பணம் வருகிறது. ஆகையால் நோட்டு செல்லாது என்று அறிவித்ததிற்கு கருப்பு தினமாக கொண்டாட வேண்டியது அவசியம். வாழ்க எதிர்கட்சிகள்.

 • krishnan - Chennai,இந்தியா

  அற்புதமான யோசனை. தனி மனிதனை முட்டாள்தனம், பதவி வெறி, தன்னம்பிக்கை இன்மை, மந்திரத்தால் மாங்காய் வரும் என்று நினைக்கும் மக்களின் முட்டாள்தனம் , ஜால்ரா போடும் கூட்டம் ஆகிவற்றை குறிப்பதற்கான தினம்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரை பறித்தவர்களுக்கு கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி ஏற்பட கண்டன எதிர்ப்பை காட்ட வேண்டியது அவசியம். எதிர்க்கட்சிகளுக்கு இந்த பொறுப்புணர்வாவது இருப்பதை நினைத்து பாராட்டலாம்

 • P.ஜனா,அறந்தாங்கி. -

  சபாஷ், அருமையான முடிவு.

 • Srinivas -

  Very good decision

 • Srinivas -

  Very good decision

 • Indhuindian - Chennai,இந்தியா

  அவர்களுடைய கருப்பு பணமெல்லாம் கோவிந்தா ஆகிவிட்டது. அதனுடைய ஓராண்டு முடிவு அவர்களுக்கு கருப்பு தினம்தானே

 • Appu - Madurai,இந்தியா

  எதிர்கட்சிகள் மட்டும் அல்ல பாஜக மற்றும் அதன் ஆட்டலுக்கு அடிபணிந்த சில மாநில கட்சிகள் மற்றும் அதன் மாண்புமிகு செம்புகளை தவிர மற்ற அனைத்து மக்களும் கண்டிப்பாக வரவேற்று ஆதரவளிப்பார்கள்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement