இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவரின் கருத்து, அரசியல் களத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசுகையில், இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் அணிக்கு தான் கிடைக்கும். 92 சதவீதம் பொதுக்குழு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த பக்கம் தான் உள்ளனர். அதனால் தேர்தல் கமிஷனால் தீர்ப்பை மாற்றிச் சொல்ல முடியாது.
மோடியின் ஆதரவு இருப்பதால் இரட்டை இலை சின்னம் நமக்கு தான் கிடைக்க போகிறது. கட்சியும் நமக்கு தான். இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் உள்ளிட்டவைகள் நடக்கும். அதிமுக.,விற்கு ஆதரவான 40 எம்.எல்.ஏ.,க்கள் திமுக.,வில் உள்ளனர். நம்பிக்கை ஒட்டெடுப்பு நடத்தினால் தெரியும் யாரிடம் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என்று. நடிகர் கமலஹாசனுக்கு வழிகாட்டும் தன்மை கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.
எப்படியோ கூட்டு களவாணிங்கன்னு ஒத்துகிட்டா சரிதான்?