Advertisement

எனக்கு நானே ராணி - அசத்தும் மசூதா தாஜ்

விண்மீன்கள் கொண்டு கண்களை வடிவமைத்தானோ, தேன் கலந்த ரோஜாவால் செவ்விதழ் படைத்தானோ, கார்குழல் முதல் காலடி வரை தேவதையின் நிழலா இவள் என இளசுகள் கிறங்க, புதிய புயலாய் மாடலிங் மூலம் சினிமாவிற்குள் வந்துள்ள நடிகை மசூதா தாஜ், தினமலர்
சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்த நிமிடங்கள் இதோ...


* மாடலிங்கில் ஆர்வம் வந்தது எப்படி
சென்னை எனக்கு சொந்த ஊர். பி.காம்., எம்.பி.ஏ., முடித்துள்ளேன். கல்லுாரி காலங்களில் இருந்து மாடலிங் மீது அதிக ஈடுபாடு. அது இன்று வரை தொடர்கிறது.

* வீட்டில எப்படி நீங்க...
அப்பா பிஸினஸ்மேன். வீட்டில் அம்மா தான் எல்லாம். வீட்டில் மூத்த பெண் என்பதால் செல்லம் அதிகம்.

* படப்பிடிப்பு இல்லாத நாட்களில்...
சமையலும், அலைபேசியும் தான் பொழுதுபோக்கு. சூட்டிங் இல்லாத நேரத்தில் வீட்டின் சமையல் என்னோடது தான். நல்லா இருந்தாலும், இல்லாவிட்டாலும் சாப்பிட்டே ஆகணும். அதுக்காக ரொம்ப மோசமா சமைக்க மாட்டேங்க.

*குடும்பத்தில் அதிக கட்டுப்பாடாமே
ஆமாம். மாடலிங் துறையில் நுழைய முதலில் ஏகப்பட்ட கட்டுப்பாடு. வேண்டவே வேண்டாம் என எதிர்ப்பு. அதையும் மீறி மாடலிங்கில் ஆரம்பித்து, ஆல்பம், குறும்படம் என கால்பதித்து, இன்று சீரியல் மற்றும் சினிமாவிற்குள் நுழைந்துள்ளேன்.

* வாங்கிய விருதுகள்...
சென்னையில் நடந்த மாடலிங்கில் பெஸ்ட் மாடல் விருது, போட் டிராபிக் ஷோ விருது என பல விருதுகள் வாங்கியுள்ளேன். மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பைனல் வரை வந்தேன். சில காரணங்களால் வாய்ப்பு கைநழுவியது.

* சினிமா வாய்ப்பு...
ஏமாளி படத்தில் சைடு ரோல் பண்றேன். அதைத்தவிர தெலுங்கில் பெயரிடப்படாத இரு படங்கள் பண்றேன்.

* கவர்ந்த இயக்குனர்...
கவுதம் மேனன், அட்லி. இருவரும் நடிகைகள் திறமையை வெளிப்படுத்துபவர்கள்.

* ஐஸ்வர்யராயை பார்த்து ரொம்ப பொறாமைப்படுவீங்களாமே

தெரிஞ்சு போச்சா(சிரிக்கிறார்). அவர் ஈடு இணை இல்லாத அழகு. எந்த உடை அணிந்தாலும் அவங்களுக்கு சூப்பரா இருக்கும். அதுதான் என்னை கவர்ந்தது.

* நடிக்க ஆசைப்படும் ஹீரோ..
சிவகார்த்திகேயன், விக்ரம். இருவரது நடிப்பிலும் ஸ்டைல் இருக்கும்.
* உங்க பிளஸ், மைனஸ்...
நான் எல்லார்கிட்டேயும் எளிதில் பழகிடுவேன். இதுதான் என்னோட பிளஸ். தப்புன்னு தெரிஞ்சா உடனே கேட்டுருவேன் இது என்னோட மைனஸ். என் மனதிற்கு பிடித்ததை மட்டுமே செய்வதால் எனக்கு நானே ராணி.

* கிளாமர்-உங்கள் எல்லை என்ன
மாடலிங்னாலும், சினிமானாலும் எல்லை தாண்டாத வரை கிளாமர் அழகு தான். உடையை பொறுத்து தான் கிளாமர் அதிகமா, கம்மியான்னு முடிவு பண்றாங்க. சேலையில் கூட கிளாமரா பெர்பாமன்ஸ் பண்ணலாம்.

* ஏதாவது ஆசை...
சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கணும், ஆதரவற்றோருக்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்து வருகிறேன். இது வாழ்நாள் முழுக்க நீடிக்கணும்.
இவரை வாழ்த்த masudha1991gmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement