Advertisement

பணியிடத்தில் மனநலம் பேணுதல் இன்று உலக மனநல தினம்

உலக சுகாதார நிறுவனம், தேசிய மனநல கூட்டமைப்பு இணைந்து ஒவ்வொரு ஆண்டும் மனநல தினத்தை முக்கிய குறிக்கோளோடு பிரகடனப்படுத்தி வருகிறது. இந்நாளில் மனநல துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு பொது மக்களிடையேயும், அரசு மற்றும் அரசுசாரா அமைப்பினரிடமும், தொழில் துறை
யினரிடமும் கிராமப்புற மற்றும் நகர்புற மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இந்த ஆண்டு உலக மனநல தினத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் எடுத்துக்கொண்ட தலைப்பு 'பணியிடத்தில் மனநலம் பேணுதல்'.

ஒரு கண்ணோட்டம்இந்திய மக்கள் தொகையில் 0.4 சதவீதம் மக்கள் தீவிர மன நோயாலும், 2.7 சதவீதம் மனச்சோர்வு நோயாலும் 4.6 சதவீதம் மது மற்றும் போதை பழக்க நோயாலும் 0.9 சதவீதம் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகின்றனர் என்று தேசிய மனநல ஆய்வு கூறுகிறது. இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மனநல மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர்கள் மற்றும் மனநல சமூகபணியளர்கள் மிகவும் குறைவான நிலையில் உள்ளனர். இச்சூழலில் மன நோயாளிகளின் தேவைகள் அதிகமாகவும் இவர்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறைவாகவும் உள்ளன. இதற்கு காரணம் நம்முடைய சமுக கலாசாரச் சூழல். மூடநம்பிக்கை, சிகிச்சை பற்றிய அறியாமை காரணமாகவும், பொருளாதார ஏற்றதாழ்வினாலும் இந்த மன நோயை ஆரம்பத்திலேயே கண்டறியாமல், முதிர்ச்சி அடைய செய்துவிட்டு மனநோயுற்றோரும் அவர்களது குடும்பத்தாரும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
மனநல பதிப்பு என்பது மற்ற உடல் சம்மந்தப்பட்ட நோய்களைப் போல ஒரு நோய் என்பதை நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள், அருகில் உள்ளவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புரியவைக்க போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சியை தொடர்ந்து வழங்கிட மத்திய மற்றும் மாநில அரசின் உதவியோடு தேசிய, மாநில மன நலதிட்டம் வழிவகை செய்கிறது. குறிப்பாக இவர்கள்மேல் அக்கறை கொண்டு சமீபத்தில் திருத்தி அமைக்கப்பட்ட மனநல சட்ட மசோதாவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்கும்வாய்ப்பினை இவர்களுக்கும் அளிக்கவேண்டும். அரசு, தனியார் நிறுவனங்கள் இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கி ஆதரவு அளிப்பதன்மூலம் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம்.

மாறிவரும் பணியிட கலாசாரம்படிப்புக்கேற்ற வேலை மற்றும் வேலைக்கேற்ற ஊதியம் - என்பது நம்மில் பலரிடையே சவாலாக இருக்கிறது. அதற்கு காரணம் இன்றைய இயந்திர வாழ்க்கையில் தனிமனிதன் எதிர்கொள்ளும் குடும்பம், பொருளாதாரம், வேலை, சுற்றுபுறச்சூழல் மற்றும் சமூக பொறுப்புகள் சார்ந்த பிரச்னைகள்.நம்மில் பலரும் கல்லுாரி படிப்பை முடித்தவுடன் தாம் கண்ட கனவுகளை செயல்படுத்துவதற்கு அதிக நேரம் செலவிடும் இடம் பணியிடமே. வேலை என்பது ஒரு தனிமனிதனுக்கு சமூக அங்கீகாரம் கொடுக்கிறது. தனிமனித அங்கீகாரம் மற்றும்பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு பெரும்பாலான நேரம் எதாவது ஒரு பணியில் ஈடுபடுத்திக்கொள்கிறோம். அவ்வாறு அப்பணியில் உள்ளபோது நமக்கு கிடைக்கும் நல்ல அனுபவம் தனிமனிதனுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது.
தொழிலதிபர்கள், பணியாளர்களின் நலனை மட்டும் கருதாது தொழில்துறையில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவேண்டும் என்ற நிலையில் உள்ளனர். இதனால் ஏற்படும் எதிர்மறையான பணியிடச்சூழலால் தனிமனிதன் சந்திக்கும் உடல் மற்றும் மனநலப்பிரச்னைகள், மது மற்றும் போதைபழக்கம், தொடர்ந்து பணிக்கு வராமல் இருப்பது, சக பணியாளர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளினால் ஒருவருக்குஒருவரிடையே சுமூகமான உறவு இன்மையால் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் பலர் மன அழுத்தம், மனப்
பதட்டத்திற்கு ஆளாகின்றனர்.

எவ்வாறு கண்டறியலாம்இன்றைய சூழலில் இந்த மனநல பாதிப்பு யாரையும் விட்டுவைப்பதில்லை. குறிப்பாக பள்ளி குழந்தைகள், கல்லுாரி மாணவர்கள், பணிபுரிபவர்கள், முதியவர்கள் அடங்குவர்.பள்ளி குழந்தைகளுக்கு எதிர்மறையான பள்ளிச்சூழல், மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆசிரியர்களின் அணுகுமுறை, பள்ளி பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, சகமாணவர்களின் தவறான உந்துதல்போன்றவை மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. அதேபோல் கல்லுாரியில் ஆண், பெண் பற்றிய உறவுகளால் ஏற்படும் குழப்பங்கள், குடிப் பழக்கம், மது மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.பணிபுரியும் ஆண்களுக்கு மேலதிகாரிகள் மூலம் சந்திக்கும் பிரச்னைகள், வேலைப்பளு அதிகரிப்பு, பணியிடத்தில் உள்ள பாகுபாடு, குடி - போதை பழக்கம் மற்றும் குடும்பச்சூழல் ஒருபுறம் இருக்க, கூடுதலாக பெண்களுக்கு பாலியல் பிரச்னையும்
முக்கிய பங்கு வகுக்கிறது.இந்த சூழ்நிலை காரணங்களினால் உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய், மூட்டுவலி, பசிஇன்மை, துாக்கமின்மை, செரிமான பாதிப்பு, உடல்வலி, மாதவிடாய் பிரச்னைகள் போன்ற உடல் சார்ந்த நோய்களுக்கும், போட்டி, பொறாமை, பயம், தன்னம்பிக்கையின்மை, மனபதட்டம், மனஅழுத்தம், ஞாபகத்திறன் குறைவு, மனச்சோர்வு மற்றும் எதிர்மறை எண்ணங்கள் போன்ற மனநல பிரச்னைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.

தீர்வு என்னமாறிவரும் கலாசார மற்றும் சமூகப் பொருளாதார சுழலில் ஆரோக்கியமான பணியிடச்சூழல் அமைவதற்கு கீழ்க்கண்ட
வழிகளைப் பின்பற்றலாம்.
1. நிறுவனங்களில் மனிதவள மேலாண்மைத்துறை ஏற்படுத்துவதோடு, உளவியல் ஆலோசகர்களை நியமித்தல்
2. திறமைக்கேற்ற மற்றும் வேலைப்பொறுப்புக்கேற்ற அங்கீகாரம் தொடர்ந்து கிடைக்க செய்தல்.
3. பணியிடத்தில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே சுமூகமான உறவு ஏற்படுத்துதல்.
4. சக பணியாளர்களிடையே அடிக்கடி கலந்துரையாடல்.
5. தொழில் திறமைக்கேற்ற வருடாந்திர ஊக்கத்தொகை வழங்குதல்.
6. பணியாளர்களின் குடும்பத்தினருடன், நிறுவன உரிமையாளர்கள் நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துதல், விழாக் கொண்டாட்டங்
களில் கலந்து கொள்ளச்செய்தல், இன்பச்சுற்றுலா செல்லுதல்
7. மருத்துவ காப்பீடு செய்தல்
8. நிறுவனங்கள் பணியாளர்களை சமூக சேவைகளில் ஈடுபடுத்துதல்.
9. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் விதமாக யோகா, தியானப்பயிற்சி, ஜிம் பயிற்சி, ஆன்மிக மற்றும் தன்னம்பிக்கை
சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் தொடர் மருத்துவ பரிசோதனை ஏற்படுத்துதல்.-கே.எஸ்.பி. ஜனார்தன்பாபுஇயக்குனர்எம். எஸ். செல்லமுத்து
அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை96299 11343

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement