Advertisement

வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை: தமிழிசை

சென்னை: ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை, வெளிநாட்டில் கறுப்பு பணம் ஒவ்வொருவருக்கும் 15லட்சம் போடும் அளவிற்கு பதுக்கப்பட்டுள்ளது என்று தான் கூறியதாக தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.


திமுக செயற்தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார். அதில் பிரதமர் மோடி ஒவ்வொரு வங்கிகணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி கூறியதாக பேசி வந்தார்.


இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பா.ஜ. தலைவர் தமிழசை தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பேசிய வீடியோவை குறிப்பிடப்பட்டு, வெளிநாட்டில் கறுப்பு பணம் ஒவ்வொருவருக்கும் 15லட்சம் போடும் அளவிற்கு பதுக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு வருவோம் என்று தான் பிரதமர் மோடி கூறினார்.


இந்த உரையை திரித்துக்கூறி உங்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் 15 லட்சம்போடுவதாக மோடி சொன்னாரே என 2ஜி ஊழல் விஞ்ஞானிகள் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட வீடியோவை ஸ்டாலின், அவரின் இந்தி படித்த குழந்தைகளிடம் கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (189)

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  கொள்ளைக்கூத்தின் ப்ரான்ச் லே தானே இருக்கே நீயும் . பங்கு வாங்காமல் பேசுவிய நீ.

 • unmaiyai solren - chennai,இந்தியா

  அப்ப 10 கோடியா ?

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  அடேங்கப்பா அண்டப்புளுகர்களுக்கு ஏற்ற ஆகாச புளுகி இந்த அம்மிணி மானஸ்தர் பேசியது இதுதான் : ஹமாரா பாய்க்கோ பேகன்கோ ( என் சகோதர சகோதரிகளே ) முஜே பத்தாவ் ( நீங்க சொல்லுங்க ) ஏ சோறிக்கே பைசா ஆனா ச்சையே நா ஆனா ச்சையே ( கள்ளப்பணம் திரும்ப கொண்டுவரணுமா வேணாமா ) அரே ஏக் பார் ( அட ஒரு வேளை ) ஏ சோர்லுக் தேரே பைசே விதேசி பேங்க் மே மே ஜமைகேனா ( இந்த கள்ளபணத்தை வெளிநாட்டு வங்கியில் இருந்து நான் மீட்டு வந்தால் ) உத்தனிக்கி ரூபி மே லே ஆய்நா ( நான் கொண்டு வரும் அத்தனை ரூபாயும் ) ஹிந்துஸ்தான் கா ஏக் ஏக் கிரிப் ஆத்மீ க சாத் பந்த்ரா ஓர் பீஸ் லாக் ரூபியா மில்ஜாயிங்கே ( இந்திய ஏழை மக்கள் அனைவரின் இடத்திலும் 15 இல் இருந்து 30 லட்சம் ரூபாய் பணம் இருக்கும் ) /////எனக்கு இந்தி அவ்வளவாக புரியாது அதனால் இந்த வீடியோவை என் சக பணியாளர் எக்ஸ் சர்வீஸ் மேன் திரு. அசோக்குமார் பகவதி பிள்ளையிடம் காட்டி அர்த்தம் கேட்க அவர் மொழி பெயர்த்து தந்தது இது , அம்புட்டு தாங்கோ அண்ணனின் பேச்சு அது இப்போ சொம்புகளை பொறுத்தவரை தேர்தல் பேச்சோடு போச்சு .................முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு ?????

 • TamilReader - Dindigul,இந்தியா

  டாக்டர் அம்மா, சும்மா பேசுவதை நிறுத்தி விட்டு, தமிழ் நாட்டுக்கு ஏதாவது உருப்படியா செய்ய பாரும்மா இந்த மூன்று ஆண்டில் நீயும், உங்கள் பிஜேபி-உம் தமிழ் நாட்டிற்க்காக நல்லதாக எதுவும் செய்ய வில்லை .. கூவத்தூர் குடிகாரர்களுக்கு ஜால்ரா போட்டுகொண்டு, ஊழல் மந்திரிகளுக்கு உதவு வதை நிறுத்திவிட்டு தமிழ் நாட்டுக்கு ஏதாவது உருப்படியா செய்ய பாருங்க

 • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

  மோடி இந்தியாவின் பிரதமரே இல்லை அவர் எப்போதாவது ஒரு வாரம் சேர்ந்த மாதிரி இந்தியாவில் தங்கினாரா ..அப்புறம் எப்படி இந்தியாவின் பிரதமர் என்று சொல்கிறார்கள் என்று டுமீலிசை கேட்டாலும் கேட்ப்பார் .

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  பொய்யை உண்மையாக கூறக்கூடிய, அதையும் உள்ளது போல சித்தரிக்கக்கூடிய அதில்லாமல் பேச்சில் ஏழைகளை ஈர்த்து தான் சொன்ன பொய்யை உண்மையாக பிரபலப்படுத்திய ஒரே பிரதமர் நமது பாரதபிரதமர் மோடிஜி என்பதில் வியப்பில்லை . பிஜேபி கட்சிக்காரர்கள் கூட வியக்குமளவுக்கு பொய்யை உண்மை என்று எப்படி சொல்கிறார் என்று அவர்களே மற்றவர்களுக்கும் சொல்கிறார்கள் .. ஆனால் ஒன்று நிச்சயம் கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள்தான் என்பது உண்மையாகும் நாள் விரைவில் வரும் இந்தியமக்கள் காண்பார்கள் என்பது உறுதி

 • Marshal Thampi - Nagercoil,இந்தியா

  அவர் சொன்னாரோ- சொல்லவில்லையோ இதை மறுப்பதற்கு மூன்று ஆண்டு காலம் தேவையா....ரூம் போட்டு யோசித்து இருப்பிர்களோ இதனை கலாமும்.... இன்னி என்ன-என்ன மறுக்க போகிறீர்களா.....?

 • anvar - paramakudi,இந்தியா

  எல்லாம் அம்மா இட்லி சாப்பிட்டாங்க மாதிரி தான்

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சொன்னார் சரி எங்கே அயல்நாட்டில் பாதிக்கப்பட்ட பணம் சரி எங்கே அயல்நாட்டில் பாதிக்கப்பட்ட பணம் சரி எங்கே அயல்நாட்டில் பாதிக்கப்பட்ட பணம் சரி எங்கே அயல்நாட்டில் பாதிக்கப்பட்ட பணம் சரி எங்கே அயல்நாட்டில் பாதிக்கப்பட்ட பணம் சரி எங்கே அயல்நாட்டில் பாதிக்கப்பட்ட பணம் சரி எங்கே அயல்நாட்டில் பாதிக்கப்பட்ட பணம் சரி எங்கே அயல்நாட்டில் பாதிக்கப்பட்ட பணம் அன்று அத்வானி சொன்னார் பாஜாக எல்லா சரி தான் ஆட்சிக்கு வருவதற்கு நாங்கள் எல்லா பயன்படுத்துவோம் ஆட்சிக்கு வந்த பின்பு காங்கிரஸ் கம்பெனி வழி தான் என்று சொன்னார்

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  போச்சா பதினைந்து லட்சம் போச்சா ஆதார் எடுத்து அதையும் பாண் கார்டையும் இணைத்து KYC எல்லாவற்றையும் அப்டேட் வேறு செய்து வைத்து கொண்டிருக்கிறேன் பதினைந்து லட்சம் கிடைக்கும் என்று. கிடைக்காதா? ஐந்தும் ஐந்தும் பத்து விரல் ரேகைகள், இரு கருவிழிகள், மொத்த முகமும் போட்டோவெல்லாம் பிடித்தார்களே அனைத்தையும் பொறுமையாக செய்து வைத்தது எல்லாம் வீண்தானா? எதோ கொஞ்சம் குறைத்து கொண்டு ஒரு பத்து லட்சமாவது தரலாமே? உள்நாட்டில் கூட நேற்று ஒரு சாதாரண நோஞ்சான் அதிகாரி வீட்டில் ஆந்திராவில் ஐந்நூறு கோடி ரூபாய்க்கு பிடித்தார்களே? அந்த பணத்தில் இருந்து கூட கொஞ்சம் தர மாட்டார்களா? பிறகு எதற்கு அதை தாருங்கள் இதை இணையுங்கள் ஏன்னு கேட்டார்கள்? அரசியலில் நொண்டி ஆட்டம் ஆட கூடாது. இந்த் வருடம் ஐந்து லட்சம் அடுத்தவருடம் ஐந்து லட்சம் மீதத்தை தேர்தலின் போது தரவேண்டும், இல்லாவிட்டால் இந்த சித்தி பதவி விலகவேண்டும். க்கும்.

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  அட அத விடுங்க...ரூபாய் நோட்டு செல்லாது என்று சொல்லும்போது பெரும் நடிகைகள் உட்பட எல்லா கருப்புப்பண முதலைகளையும் மிரட்டி வசூல் செய்தீர்களே ..அதிலிருந்து மக்களுக்கு கொஞ்சம் கொடுங்களேன்....

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ஓட்டுக்கு காசு வாங்கி பழக்கப்பட்ட வாக்காளர்களிடம் , மோடி, அதானி அம்பானி போட்டுக்கொடுத்த தேர்தல் பிரசார மேடையில் ஏறி நின்னுகிட்டு காங்கிரஸுக்கு 60 ஆண்டுகள் கொடுத்தீர்கள் எனக்கு ஆறு மாதம் கொடுங்கள் இந்தியாவை ஊழல் இல்லா நாடாக, பாலும் தேனும் ஓடும் தேசமாக மாத்துறேன் என்று , கையை உயர்த்தி , ஒரு விரலைக்காட்டி வாயை பிளந்து அடித்தொண்டையில் கத்தினார் ,கொஞ்சம் மூச்சுவாங்கிப்புட்டு ஹிந்தியில் மீண்டும் இந்தியாவின் பணம் எல்லாம் சுவிஸில் குவிந்து கிடக்கு அதை எடுத்துவந்து ஆறுமாத காலத்தில் ஒவொவொரு இந்தியன் வங்கி கணக்கில் டெபாசிட் பண்ணியபிறகுதான் மறுவேலை என்று கத்தினார் . நம்பாளுங்க இதை நம்பி தாமரையில் குத்திவிட்டார்கள் . அப்புறம் ஓட்டுபோட்டவர்களை வங்கி வாசலில் தான் சொந்த பணத்தை எடுக்க நிற்கவைத்தபோதுதான் இந்தியர்களுக்கு விவரம் புரிந்தது , மோடி நம்ப பணத்தை நாம் எடுத்துக்கொள்ள படுத்தியப்பாடு மோடிக்கு ஓட்டுபோட்டதிற்கான தண்டனை என்று . இதை சரி செய்திட இப்போதெல்லாம் மோடி அண்ட் பிஜேபி வாக்காளர்களை நம்புவதில்லை , ஓட்டுப்போடும் இயந்திரத்தைத்தான் நம்புறார்கள் . தெரிந்த கம்பெனிக்கு ஓட்டுப்போடும் இயந்திரத்தை வாடகைக்கு வாங்கி அதை தாமரைக்கு ஓட்டுப்போட செட்டப் செய்து பிஜேபி தேர்தல் வெற்றிக்கு புது யூகம் மோடி அமைத்துள்ளார் . ஆக இனி தேர்தல் மூலம் கூட பிஜேபி ஐயை அகற்ற முடியாது .

 • Ramalingam chennai - chennai,இந்தியா

  அப்படியே கருப்பு வந்தாலும் ஒவ்வொருவர் அக்கவுண்டிலும் எப்படி 15 லட்சம் போடுவாங்க , யோசிக்க வேண்டாமா அறிவு கெட்ட மக்களே , வெளி நாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வந்தால் ஏழைகள் ஒவ்வொவருக்கும் 15 லட்சம் தரலாம் அந்த அளவுக்கு கருப்பு பணம் இருக்குன்னுதான் அவர் சொன்னார் , இப்படி முட்டாளுங்களா நீங்க இருந்ததால் தான் திராவிட கட்சிகள் இரண்டும் உங்களை முட்டாள்கள் ஆக்கி பல லட்சம் கோடி அடிச்சிகிட்டாங்க , பிஜேபி எதிர்க்காம சப்போர்ட் பண்ணுங்க , தமிழ் நாட்டுக்கு நல்லது பிஜேபி தான்

 • Ramalingam chennai - chennai,இந்தியா

  இங்கே கருத்தை அனைவரையும் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது , தமிழிசை மேடம் சொல்வது உண்மைதான் , மோடி ஜி அந்த மாதிரி , அவர் சொன்னதை தவறாக திரித்து மக்கள் கிட்ட கெட்ட பெயர் வாங்க வைக்க , இந்த காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் மோடி க்கு எதிராக இருக்கும் எதிர் கட்சிகள் மக்களிடம் தவறான கருத்தை சொல்கிறார்கள் ,

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  நன்றி அக்கா, உரையை திரித்துக்கூறி உங்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடுவதாக மோடி சொன்னாரே என 2ஜி ஊழல் விஞ்ஞானிகள் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட வீடியோவை ஸ்டாலின், அவரின் இந்தி படித்த குழந்தைகளிடம் கேட்க வேண்டும்

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  கூமுட்டைங்க... ஹிந்தியும் படிக்கமாட்டாங்க... ஹிந்தில சொன்னதை எவனோ திரிச்சு சொன்னதை வெச்சு குதிப்பாங்க ... ஸ்டாலின்... திருட்டு வழித்தோன்றல்... நீதி துறை ஒழுங்கா வேல செஞ்சிருந்தா இன்னிக்கு அந்த குடும்பமே மொத்தமா கம்பி எண்ண வேண்டியது... தமிழ்நாட்டுல இவங்க உருவாக்கி வெச்சிருப்பதெல்லாம் திருடனையும், கொலைகாரங்களையும்... இந்த திருட்டு கூட்டத்தை ஆதரிக்கிற பசங்களுக்கு என்ன சொன்னாலும் காதுல விழாது... எல்லாம் ஒரு நாள் உள்ள போய்தான் ஆகணும்...

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  ஆண்டவா..................................

 • Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா

  மோடி வித்தை செய்பவர் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடுவதாக கூறி கூட்டத்தை சேர்ப்பார். ஆனால் கடைசிவரை சண்டைக்கு விடமாட்டார். காசு வசூல் செய்து விட்டு நடையை கட்டிவிடுவார். நம்ம மோடி விஷயத்திலும் அதே தான் நடக்கிறது. நான் நன்றாக ஹிந்தி தெரிந்தவன் தான். மோடி கூறியது " கருப்பு பணத்தை ஒழித்து உங்களிடம் சேர்ப்பேன் இது உறுதி " . சொல்லி நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டது. பல்லாயிரம் கோடிகளை வீணடித்து உலகம் சுற்றியது தான் மிச்சம். ஒருவேளை தனது உலகம் சுற்றும் சொந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். யார் வீட்டு அப்பன் காசில். திரும்ப வர முடியாது என்று மோடிக்கு நன்றாகவே தெரியும்.

 • Loganaths Sivakadatcham - Dammam,சவுதி அரேபியா

  15 லக்ஷம் போடாதிருப்பது இருக்கட்டும், அதற்கு பதில் நம்மை போல உள்ளவர்களின் பணத்தை எடுத்து அம்பானி, அதானி, மல்லய்யாவிற்கு கொடுக்கிறாரே அதற்கு என்ன சொல்ல?

 • g.s,rajan - chennai ,இந்தியா

  "Sultan Mohammed bin Thuklaq".

 • sagar saritha - Chennai,இந்தியா

  எப்படி தான் சொன்னாலும், டக்குனு ஒரு பாமரனுக்கு, அப்பாடி 15 லட்சம் போடுவார்கள் என்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்தியதும் உண்மையே. நாம இங்கே வார்த்தைக்கு வார்த்தை இப்படி சொன்னாரா அப்படி சொன்னாரா ன்னு சொல்லி என்ன ஆக போகுது? சுவிஸ் வங்கியில் உள்ள அத்தனை பேர் கணக்குகளும் வெளியிட 3வருஷமா ஆகும் ? இந்தியாவோட மொத்த மக்கள் தொகையுமா சுவிஸ் அக்கௌன்ட் ல பணம் போட்ருக்காங்க? சொல்லிட்டே இருக்கறது பூனைங்களை உஷார்ப்படுத்தறது . அப்புறம் எல்லாரும் பணத்தை அங்கேர்ந்து எடுத்தப்புறம் லிஸ்ட் வெளியிட வேண்டியது. ஏன் சுவிஸ் அக்கௌன்ட் ல மட்டும் தான் வச்சிருக்காங்களா என்ன? Mauritius , Cyprus போன்ற நாடுகளில் தான் இப்பொழுது அதிகம் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல். ஏன் அங்கே எல்லாம் பணத்தை எடுக்கலாமே. உண்மை என்னென்னா எலெக்ஷன்க்கு ஓவ்வொரு கட்சிக்கும் தொகை போகிறதே இந்த கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்களால் தான் . இதை நம்பி தான் அரசியல் வண்டி ஓடுகிறது. அதை போய் இவங்க இழப்பாங்களா?

 • Rajagopal P - coimbatore,இந்தியா

  திரு. கருணாநிதி கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் அவரது ஆட்சியில் நிறைவேற்றி விட்டாரா என்பதை திரு. ஸ்டாலின் முதலில் உறுதி செய்து விட்டு மோடி அரசு மீது குற்றம் சொல்லலாம். நமக்கு நாமே திட்ட சுற்று பயணத்தின் பொது வாங்கிய லட்ச கணக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற இதுவரை திரு. ஸ்டாலின் என்ன செய்துள்ளார்?

 • raja - chennai,இந்தியா

  அந்த அம்மா எதோ புதுசா பேசி பழகுறாங்க அடுத்த தடவை மத்தியில் மந்திரியாக .. விடுங்க மக்களே..

 • baski - Chennai,இந்தியா

  ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை - தமிழிசை.. ஆமா 15 கிலோ மண் அள்ளிதான் தலைல போடுறோம்னுதான் சொன்னாரு...பணத்த பத்தி பேசவே இல்ல...

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  சொன்னது உண்மை எத்தனை சப்பை கட்டு கட்டுனாலும் சரி... ஆனால் ஒன்று... அது தேர்தல் பேச்சு .... ஒருத்தன் தேனாரு ஓடும் என்பான் ,,, ஒருத்தன் பாலாறு ஓடும் என்பான்.... எல்லா கட்சியும் செய்யும் வேலைதான் இது... யாரையும் குறை சொல்ல முடியாது.... தேர்தல் இன்றைக்கு ஒரு வியாபாரம் (எதற்கு ஒரு மேடை அமைத்து ஒரு பிரச்சாரம்.... தன் கட்சியை பற்றி ஒரு விளம்பர வியாபாரம்).... கடைவீதியில் , ஏன் 6 மாடி கட்டடத்தில் விற்பவுனும் அப்படிதான் விற்பான்... உனக்கு எங்கே போச்சு புத்தி????

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  TAMILISAI BETTER STOP TALKING LIES... MODI N BJP ALWAYS TALK LIES... PEOPLE REALIZE IT NOW...

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  அண்டப்புளுகனுக்கு ஆகாசப்புளுகன் சப்போர்ட் ....

 • Gnanam - Nagercoil,இந்தியா

  இப்படித்தான் மோடி அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் மக்களை சிலர் திசைதிருப்ப பார்ப்பார்கள். ராகுல் இதற்கு பெயர்போனவர். இருப்பினும், இந்த விளக்கத்தை நீங்கள் அன்றே சொல்லி தொலைத்திருக்கலாம்.

 • MANI DELHI - Delhi,இந்தியா

  இங்கு விமர்சனம் செய்யும் அனைவரும் ஒருமுறை யூடியூபில் அவரது பேச்சை கேட்டு புரிந்து கொண்டு கருத்து சொன்னால் நன்றாக இருக்கும். அனுமான விளக்கங்களை கொண்டு கருத்து எழுதும்போது பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் என்ற சொல்லுக்கு ஏற்றார் போல் தான் இருக்கும். ஹிந்தி தெரியும் அனைத்து நண்பர்களும் அவரது வார்த்தை வார்த்தையாக பொருள் கொண்டு பின்னர் விமர்சனம் செய்யுங்கள். வடஇந்தியாவில் யாரும் இப்படி கருத்து சொல்வது இல்லை. உழைக்கும் காசே இன்றைய நிலையில் நிற்காத போது ஓசி காசுக்கு என் நாம் விவாதிக்க வேண்டும்

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஓசியில் பணம் கிடைக்கும் என்று நொல்லாந்திருந்த கேணையர்களுக்கு இது ஒரு அதிர்ச்சி செய்தி, தமிழர்கள் நாம் புத்திசாலிகள். அன்றும் சரி இன்றும் சரி , பி ஜெ பியை நம்புவதே இல்லை ,அவர்களுக்கு ஓட்டளிக்கவும் இல்லை. ஆதலால் நமக்கு இது பற்றிய பிரச்சனை இல்லை. நல்லாட்சி செய்வார்கள் என்று நம்பி ஓட்டளித்த அதிமுக , திமுக கட்சிகளை இதுவரை நாம் கேள்வி கேட்கவும் இல்லை. அதெற்கெல்லாம் நமக்கு நேரமோ என்னமோ இல்லை. வாழ்க தமிழகம்.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  அங்கு வளர்மதி.....இங்கு தமிழிசை.....வித்தியாசம் ஏதுமில்லே...

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  Tamilisai should see the video and speech of Mod'si before the Election promises before the election.Anyhow why Tamilisai is so much praising Modi nowadays. Possibly Tamilisai is following the footsteps of Venkiah for her personnel gains from Modi. Venkiah after blowing the trumpets of Modi praising throughout India is now crowned as Vice-president of India. Tamilisai we request you to do something useful for Tmilnadu and its people and not pleasing Modi day and day out. As per you Modi is the mother of all citizens of our Country. Our Country is in shambles and let us do something useful for the people instead of blaming and praising one another.

 • V.Rajeswaran - chennai,இந்தியா

  இவர் சொல்வது உண்மையே மோடி அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பதினைந்து லட்சம் பணம் தருவதாக சொல்லவில்லையே அது சரி யாரோ ஆட்சிக்கு வந்தால் அனைவர்க்கும் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார்கள் யாருக்காவது இரண்டு ஏக்கர் நிலம் கிடைத்ததா

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  மக்களுக்கு ஆளுக்கு 15 லட்சம் கொடுத்து நல்லது செய்யிறதுக்கு அவரு என்ன லூசா.. எப்படியெல்லாம் பிடுங்கலாமுன்னு ராப்பகலா வேண்டுமானாலும் உழைப்பார். எப்படி வெளிநாட்டு பாங்கில் இருக்குன்னு சொன்னோம், கொண்டு வருவோமுன்னு சொன்னோம், வந்தா கொடுப்போம்ன்னு சொன்னோம்.. ஆனா கொண்டு வந்தோமா, லிஸ்ட்டை கூட காட்டாம, பணம் பதுக்கினவன் பணத்தை திருப்பி எடுக்கும் வரை அவங்களை விட்டு வச்சி காப்பாத்தினோமே.. எங்க நல்ல மனசை ஏன் புரிஞ்சிக்கவே மாட்டேங்குறீங்க..

 • தேவி தாசன் - chennai,இந்தியா

  நாங்க எலெக்ஷன்ல நிக்கவே இல்லை. ஜனாதிபதிதான் எங்களை ஆட்சி அமைக்க கூப்பிட்டார். மக்கள் தப்ப புரிஞ்சுக்கிட்ட நாங்க பொறுப்பல்ல

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  சுடலினுக்கும் கோண்டி தெரியாததனால் யாரோ ஒருவர் சொன்னதை கேட்டு இன்று பல்பு வாங்கிவிட்டார். அதற்கு முன் ஹிந்தி தெரிந்தவர்களை கேட்டு விஷயம் தெரிந்து தவிர்த்திருக்கலாம். பரவாயில்லை விடுங்கள் அன்று சர்க்காரியா கமிஷன் முதல் இன்று 2G வரை இவர் பார்க்காத அசிங்கமா ? அதெல்லாம் பார்த்தால் கட்சி நடத்த முடியுமா ?

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இந்த திராவிட ஆட்சியினால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட அசிங்கத்தை பார்த்தீர்களா? ஒருபுறம் ஹிந்தி தெரியாது, எந்த செய்தியையும் படித்து அதில் உள்ள உண்மை புரியாது , எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று பாடிய திருவள்ளுவர் பிறந்த மண்ணில் மூடர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒருவர் சொன்னதை இன்னொருவன் வேண்டுமென்றே திரித்து கூறினால் உடனே அதுதான் உண்மை என்று நம்பி பிச்சை எடுக்க தயாராகிவிட்ட கூட்டம். எவ்வளவு பெரிய மகான்கள் பிறந்த பூமி, இப்படி திராவிட கட்சிகளால் சீரழிந்துவிட்டதே? தன்மானமும் இழந்து பொது தளத்தில் கூட பிச்சை எடுக்கும் அளவுக்கு வந்து விட்டார்களே.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நீங்க ரொம்ப பேசினீங்கன்னா 100 ரூபாய் நோட் செல்லாதுன்னு அறிவிச்சு உங்களை பேங்க் வாசலில் தவம் கிடைக்க வச்சிருவோம் ஆமாம் ஞாபகம் வச்சுக்கோங்க

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  சரிதாயி....இந்த பதவி நிரந்தம் இல்லே...அடுத்தமுறை ஓட்டு கேட்க வருவீங்களே அப்போ இப்படி பேசுங்கோ.....

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பெட்ரோல்வ விலையை என் குறைக்கவில்லை என்ற கேள்விக்கு, வட இந்தியாவில் ஒரு பிஜேபி எம் பி சொல்லுர்கிறார் ...பெட்ரோல் விலையை குறைக்காமல் கிடைக்கும் லாபத்தை சேர்த்த வைத்து, கொடுப்பதாக கூறிய 15 லட்சத்தை 2019 தேர்தலுக்கு முன் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்..

 • Pats - Coimbatore,இந்தியா

  திருமதி தமிழிசை அவர்களே: பேசாமல் தமிழர்களுடன் இரு டீல் போட்டுக் கொள்ளுங்கள். தமிழர்கள் 4000-5000 ரூபாய்க்கு தங்களது வாக்குரிமையை விற்கும் கூட்டம். நீங்கள் ஓட்டுக்கு 1 லட்சம் கொடுக்கிறேன் என்று சொல்லி ஆளுக்கு 25000 அட்வான்ஸ் மட்டும் கொடுங்கள். தமிழர்கள் தமிழ்நாட்டையே உங்களிடம் விற்று விடுவார்கள். ரொம்ப ஈஸி. இவர்கள் "கையில காசு - வாயில தோசை" என்ற கூட்டத்தை சேர்ந்தவர்கள். கண்ணுல காசை காமித்தால் போதும்.

 • Venkat - Chennai,இந்தியா

  முன்பே ஒரு விவாதத்தில் இப்படித்தான் ஒரு குதர்க்க அறிவாளி மோடி 15 லட்சம் போடுகிறேன் என்றாரே, போட்டாரா என்றான். அதற்கு நெறியாளர் ரங்கராஜ் பாண்டே, "மோடி அப்படி எல்லாம் சொன்னதாக நினைவில்லை. வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தின் அளவு இந்தியர் ஒவ்வொருவர் அக்கௌன்ட்டிலும் 15 லட்சம் போடும் அளவிற்கு இருக்கும் என்று தான் சொன்னார்" என்று குறுக்கிட்டு சொன்னார். ஓசியில் ஏதும் கிடைக்காதா என்று ஏங்குபவர்களும், நேர்மையாளர் மோடியை குறை சொல்லவேண்டும் என்று துடிக்கும் போலி மதச்சார்பின்னை வாதிகளும் வேண்டும் என்றே திரும்ப திரும்ப ஒரு பொய்யான தகவலையே சொல்லி தமிழர்களின் மூளையை சலவை செய்ய முயற்சிக்கிறார்கள். கருணா ஒவ்வொரு ஏழைக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கிறேன் என்கிறார். யாருக்கு இதுவரை கொடுத்துள்ளார் என்று ஸ்டாலின் சொல்லுவாரா? இல்லையென்றால் அப்படி பெற்றவர்கள் யாராவது சொல்லுங்களேன். தமிழிசைதான் ஹிந்தி வீடியோ பதிவை ஹிந்தி தெரிந்தவரிடம் காட்டுங்கள் என்று சொல்லுகிறாரே? காட்ட வேண்டியது தானே? சொன்ன பதிவு இருந்தால் இங்கு கருத்து எழுதுபவர்கள் காட்ட வேண்டியது தானே? முன்பு ஒருமுறை பேட்டியில், ஒரு நாய் குட்டி என் காரில் அடிப்பட்டாலே வருந்துபவன் நான், மனிதர்கள் பாதிக்க படுவதை பார்த்து கொண்டிருப்பேனா, என்பதை திரித்து " ஆ .. மோடி மக்களை நாய் என்கிறார் " என்று தூண்டி விட்டார்கள். அதுவும் பலிக்கவில்லை. இந்த கூப்பாடும் பலிக்க போவதில்லை. மக்களுக்கு தெரிகிறது யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் ஊர் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள், யார் குடும்ப அரசியல் பண்ணுபவர்கள் என்று......

 • அசோக் வளன் - Chuan Chou,சீனா

  15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை - உள்ள 15 பைசா கூட தொடைச்சி எடுத்துருவோம்னு தான் சொன்னாரு .... அத தான் இப்போ செய்துகிட்டு இருக்காரு ......

 • Veeran - Kanyakumari,இந்தியா

  மத்திய பிஜேபி அரசு கையில் தானே சுவிஸ் வங்கி குடுத்த பேர்கள் உள்ளது அதை வெளியிட என்ன பயம் அதில் அம்பானி அதானி பேர்கள் உள்ளதால் லா Supreme கோர்ட் சொல்லியும் அதை வெளியிட தயக்கம் ஏன் மோடி க்கு இதுக்கு பதில் சொல்லுங்க மோடி Bakthas

 • Veeran - Kanyakumari,இந்தியா

  இங்கே பிஜேபி அரசுக்கு ஆதரவு சொல்லி இருக்கும் அறிவு கொழுந்துகளை அறிய மோடி 15 லட்சம் வைத்து தரலாம் னு சொன்னது சாட்சி ஆக வீடியோ பதிவு YOUTUBE இல் கிடக்குறது சொன்னவன் அதை தர வேண்டாம் அதை கொண்டு வர என்ன நடவடிக்கை எடுத்தார்கள்

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  அதெல்லாம் விடுங்க .... கருப்பு பணத்தை ஒழிப்போம்... ஒழிப்போம் என்று சொன்னால் பத்தாது.... சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய 3 பேர் பெயரை மட்டுமே வெளிப்படுத்தி இருக்கார்கள்... மற்ற பெயர்களையும் வெளிப்படுத்த உச்ச நீதிமன்றம் கூறியும் இன்னும் ஏன் வெளி இடவில்லை... அட ஒரு பேச்சு மூச்சு கூட காணோம்....

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  இந்த 15 லட்ச ரூபாய் பிரச்னை இருக்கட்டும். வருடம் 1 கோடி வேலைகள் ஏற்படுத்தப்படும் என்று சொன்னதும் இந்த பிஜேபி தான். மூன்று வருடத்தில் 3 கோடி வேலைகள் என்னவாயிற்று? தமிழ் நாட்டுக்கு ஒரு தனி பொறுப்புடைய கவர்னரில்லை

 • Pats - Coimbatore,இந்தியா

  "ஒவ்வொருவரின் அக்கவுண்டிலும் 15 லக்ஷம் போடும் அளவிற்கு வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவர பதவி ஏற்று 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்" இதுதான் மோடி சொன்னது. அதுபோலவே எஸ்.ஐ.டி. எனப்படும் "ஸ்பெஷல் இன்வெஸ்டிகஷன் டீம்" 2014-ம் ஆண்டே உருவாக்கப்பட்டுள்ளது. அதன் நடவடிக்கையால்தான் (குறிப்பாக) சுவிஸ் வங்கி 2018-ம் ஆண்டுமுதல் தங்களிடம் அனைத்து இந்திய வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் உள்ள பண விவரங்களை படிப்படியாக இந்தியாவிற்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இது ஒருபுறம் இருக்கட்டும். "பப்பு" அடிக்கடி வெளிநாடு செல்வதைப்பற்றி யாராவது யோசித்தீர்களா? ஸ்டாலின் அடிக்கடி லண்டன் சென்று வருவது ஏன் என்று ஏதாவது விளக்கம் உண்டா? எல்லாவற்றிக்கும் மேலாக மோடியின் இந்த வாக்குறுதியை ஏற்று தமிழகத்தில் ஒருவரும் வாக்களிக்கவில்லை. அம்மா "சும்மா" காட்டிய படத்தை பார்த்து ஓட்டுப்போட்டு இன்று தமிழர்கள் ஓட்டாண்டியாக போய்விட்டார்கள். மோடிக்கு ஓட்டுப்போட்ட மற்ற மாநில மக்கள் இந்த "எங்கே 15 லட்சம்" கேள்வியை கேட்டாலாவது அர்த்தம் உண்டு. பி.ஜே.பி.க்கு ஓட்டே போடாத தமிழர்களுக்கு கேள்வி கேட்க எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஒருவேளை ஓசியிலேயே அரசிடம் பிச்சையெடுத்து வாழப்பழகிவிட்டதால், மத்திய அரசிடம் இருந்து ஓசியில் இன்னும் 15 லட்ஷம் கிடைக்கும் என்ற நப்பாசையில் ஒப்பாரி வைக்கிறார்களோ என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  சரியான தகவலை தமிழிசை கொடுத்துள்ளார்.....தனக்காவும் தெரியாது, கேட்டும் தெரிஞ்சிக்க மாட்டாங்க... அரை வேக்காடுகள்....

 • G Mahalingam - Delhi,இந்தியா

  கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பெயர்கள் உச்ச நீதிமன்றத்தில் BJP அரசால் கொடுக்க பட்டுள்ளது. நீதி மன்றம்தான் முடிவு செய்யும்.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இதுக்கு பேர் பதிலடியா ?? 15 லட்சம் போடும் அளவிற்கு கருப்பு பணம் இருக்கு என்றும் அதை மீட்போம் என்றும் சொன்னாராம் ஆனால் மக்களுக்கு குடுப்பேன் என்று சொல்லலையாம் .. என்ன ஒரு அறிவு .. சரி அப்போ மீட்டு அரசு கஜானால சேர்த்தாச்சா ?? இதுவரை எதனை கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டது வெளிநாடுகளில் இருந்து ?? பிறகு ஏதோ தானை தலைவர் மோடி இதை மட்டும் தான் செய்யவில்லை என்பது போலும் மற்றது எல்லாம் அப்பிடியே செஞ்சு தள்ளி நாட்டை வளர்ந்துட்டா மாறியும் சீரியஸ் ஆக பேசுறீங்களே எப்புடி ?? வேலைவாய்ப்புகள் பறிபோனதையும் , எக்ஸைஸ் வரி போட்டு பெட்ரோலில் கொள்ளை அடிப்பதையும் , ஜிஎஸ்டி போட்டு தொழில்களை நசுக்கியதும் தான் தலைவர் செய்த சாதனைகள் .. பொருளாதாரம் படு குழியில் வேகமா பயணிக்குது .. தடுத்து நிறுத்த சொல்லுமா .. இன்னும் கம்பு சுத்திட்டு இருக்கீங்க ???

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  உலகத்துலயே பெஸ்ட் ஊழல் இதுவாதான் இருக்கும்......அந்த பணம் இப்போ எங்க?.......

 • Nawashkhan - Dammam,சவுதி அரேபியா

  டமிழிசைக்கு இந்தி தெரியாது போல மோடி அப்போது கொடுத்த போலி வாக்குறுதி 15 லட்சம் ஒவ்வொரு இந்தியர்களின் வங்கிக்கணக்கில் போடப்படும் என்று இந்தியில் பேசிய காணொளி இன்னும் யூடியூப் ல் உலாவிக்கொண்டுதான் இருக்கிறது

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  இதை மக்கள் மறந்து நாளாகி விட்டது நல்ல வேளை இந்த அம்மா ஞாபகப்படுத்தி விட்டது இதே கோபத்தில் மக்களை வைத்து இருங்கள்

 • spr - chennai,இந்தியா

  கருப்பு பணத்தை மீட்போம் என்று சொல்லும் அரசியல்வியாதியும் மணலைக் கயிறாகத் திரிப்போம் என்று சொல்லும் ஏமாற்றுவாதியும் சொல்வதனை நம்பும் மக்கள் இருக்கும்வரை இது போல வாதப்பிரதிவாதங்கள் தொடரும் கறுப்புப்பணம் அரசியல்வியாதிகளால்தான் உருவாகிறது வளருகிறது அவர்களுக்கு ஆதாயம் அளிக்கிறது இல்லையேல் சீண்டுவாரில்லாமல் இருந்த பாஜக, ஆளும் கட்சியான பின்னரே ஏறக்குறைய 1000 கோடிக்கும் மேல் நன்கொடை பெற்றது திரு மோடியின் முன்யோசனையின்றி அதிரடியாக செய்யப்பட்ட ரொக்கமில்லாப் பண பரிவர்த்தனை மூலம் பல கோடி கள்ளப்பணம் மற்றும் கறுப்புப் பணம் வெள்ளைப் பணமாகியது இதனையெல்லாம் சொல்ல எதிர்க்கட்சியினருக்கு அறிவில்லை மனமும் இல்லை ஏனெனில் அவர்களும் இதனால் ஆதாயம் அடைந்தவர்கள்தாமே ஏதோ பேச வேண்டுமென்று உளறுகின்றார்கள்

 • ganapati sb - coimbatore,இந்தியா

  தமிழிசை சொல்வது சரியே முந்தைய அரசின் ஊழலால் உருவான கருப்பு பணத்தின் வீச்சை நாம் புரிந்துகொள்ளும் உதாரணமாகத்தான் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் அளவிற்க்கான பணம் பதுக்கப்பட்டுள்ளது என கூறினார் இது தமிழக படஜெட் பற்றாக்குறை 5 லட்சம் கோடி தமிழகத்தில் ஏழரை கோடி பேர் உள்ளனர் என்றால் ஒவ்வொருவருக்கும் சுமார் எழுபதாயிரம் கடன் உள்ளது என கூறுவது போன்றதே இது மோடி சொன்னபோது பலருக்கு வங்கி கணக்கே இல்லை அவர் வந்தபின் தான் 20 கோடி கூடுதல் கணக்குகள் ஜந்தன் மூலம் ஏற்படுத்தப் பட்டுள்ளன. பலகோடி கழிப்பறைகள் பல லட்சம் குளங்கள் பல்லாயிரம் வீடுகளுக்கு மின்வசதி பல நுறு கல்லூரிகள் என இந்த ஆட்சி காலத்தில் ஏழை மக்களின் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்டுள்ள திட்டங்களின் மதிப்பை பார்த்தால் ஒவ்வொரு ஏழைக்கும் 15 லட்சம் கூடுதலாகவே வளர்ச்சிக்கான திட்ட செலவுகள் ஆகியிருக்கும்

 • chails ahamad - doha,கத்தார்

  அந்த அம்மா தமிழிசை (இம்சை) அவர்கள் தனது அரசியல் பிழைப்புக்கு டுவிட்டரில் ஏதாவது எழுதப் போய் , அதற்கு வாசக நண்பர்களில் மிகுவானவர்கள் எதிர்ப்பு கருத்தை பதிவு செய்துள்ளார்கள், இதை கவனத்தில் கொள்ளும் பா ஜ வினர் இன்னும் சிலரை ( கட்சியில் இருப்பதும் சிலரே) சம்பளத்துக்கு பணியில் அமர்த்தி எதிர் கருத்தை பதிவு செய்ய வைப்பார்கள், நாளை முதல் புதிய, புதிய பெயர்களில் கருத்தாளர்களை காண்போம், அம்மா தமிழிசை அவர்களே நீங்கள் என்ன குட்டி கரணம் போட்டாலும் தமிழர்களுக்கு சுய உணர்வுகள் மிகுதி என்பதை உணர்ந்து டுவிட்டரில் பதிவு செய்துங்கள், டுவிட்டர் தானே தங்களது தளம் , வேறு என்னா பொதுக்கூட்டம் போட்டாலும் செவியுற நாதிகள் வருவதில்லையே .

 • Arul - thanjavur,இந்தியா

  ஊழலற்ற நேர்மையான பாதுகாப்பான இந்தியாவாக.....கருப்பட்டி சுப்பையா... புளுகுறதுல மோடியவே மிஞ்சிட்ட போ அப்படி ஒரு இந்தியா எங்க இருக்கு சார்?

 • KrishnaMurthy -

  அப்போ நாங்க Bjpக்கு ஓட்டு போடமாட்டோம்

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  15லட்சம் போடும் அளவிற்கு பதுக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு வருவோம் என்று தான் பிரதமர் மோடி கூறினார் என்று சொல்லி தமிழிசை, மோடி அரசுக்கு அதை கொண்டு வர கையாலாகவில்லை என்றும், அவர் சொன்னது ஒரு தேர்தல் நேர வெத்து வெட்டு என்றும் சாடியிருக்கிறார். பாவம்.. என்ன மனவருத்தமோ?

 • Prabaharan - nagercoil,இந்தியா

  அவர் இந்தியில் சொன்னதை இவர் தமிழில் (இப்பொழுது) இப்படி தான் என சொல்கிறார். மோடிக்கு தமிழ் தெரியாதே? பொய்யை மூலதனமாக வைத்து ஆட்சிக்கு வந்தனர். காங்கிரசின் ஊழல் தான் இவர்கள் ஆட்சிக்கு வர காரணம்

 • Sundar - Puducherry,இந்தியா

  இன்னைக்காவது தலை சீவ கூடாதா. என்னமா இப்படி பண்றீங்களேம்மா ?

 • Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) - KUALA LUMPUR,மலேஷியா

  சரி மக்களுக்கு வேண்டாம். அந்த (15 லட்சம் ஒவ்வொருவர் கணக்கிலும் போடுமளவுக்கான ) பணத்தை மீட்டு வந்து அரசு கஜாவாவில் சேர்க்கப்பட்டதா, சொல்லுங்கள் பார்க்கலாம்..

 • Indhuindian - Chennai,இந்தியா

  She is absolutely right. NaMo never said he would deposit 15 lacs in every account. The popular perception has been d by illiterate political leaders like R B and others. The black money was accumulated with the blessings of Congress which was in power for over sixty years since indepence. Congress never bothered since their leaders and their cohorts are also part of this black money accumulation. Appreciate the efforts to tackle this menace. At the least give credit for the fact nobody whispers about corruption in NDA.

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  செய்தியின் ஒரு பக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு திரித்துக் கூறுவதில் நம்ம ஊர் ஆட்கள் வல்லவர்கள் . குற்றம் செய்தவர் புனிதராகி விடுவார். கான் +க்ராஸ் காலத்தில் ஏகப்பட்ட கள்ளப்பணம் கருப்பு பணம் புழங்கியது. நெடுவாசல் கதிராமங்கலம் பெறோ மண்டலம் அனுமதி வழங்கியதே திமுக காங் கூட்டணி தான். திமுக தலைமை நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி உண்டு. ஆக செய்யும் தவறுகள் எல்லாம் இவர்கள் செய்வார்கள். பழி வேறு ஒருவர் மீது. இது கிடக்கட்டும். இப்போ மைய அரசுக்கு கேள்விகள் () பெறோ மண்டலத்தை நிறுத்துவீர்களா () பெட்ரோல் விலையை /வரியைக் குறைப்பீர்களா () காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பீர்களா ()தென்னக நதி நீர் இணைப்பீர்களா . உங்க டுட்டர் மூலமாவே பதில் சொல்லிடுங்க

 • vigneshwaran - madurai,இந்தியா

  அது சரி நீங்க அந்த கருப்பு பணத்தை மீட்டு வர நடவடிக்கையையாவது எடுங்க. ஏன்னா 100 நாட்களில் வெளி நாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்போம்னு உங்க பாரத பிரதமர் சொன்னாருன்னு நினைக்கிறேன்

 • Murugan - Mumbai

  நுணலும் தன் வாயால் கெடும்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  15 லட்சம் போடறேன்னு சொல்லலை அப்படீன்னு நீங்க சொல்றதை ஒரு பேச்சுக்கு நம்புவோம். பெட்ரோல் விலையை கொள்ளை அடிப்போம்ன்னு சொல்லலை. ஆதார் கார்டு கட்டாயமாக்குவோம்ன்னு சொல்லலை. வெளிநாடு பயணம் அடிக்கடி போவோம்ன்னு சொல்லலை. படேல் சிலையை சைனாவுக்கு ஆர்டர் கொடுப்போம்ன்னு சொல்லலை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம்ன்னு சொல்லலை. மீனவர் பிரச்சினையை தீர்ப்போம்ன்னு சொல்லலை.

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  வெளிநாடுகளிலும் இந்தியாவிற்கும் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியாருக்கும் 15 லட்ஷம் ரூபாய் கொடுப்போம் என்று சொன்னது உண்மைதானே?

 • தமிழன்,தமிழ்நாடு -

  தமிழ்நாடு முழுவதும் தோல்வி உங்களுக்கு காத்திருக்கிறது. உங்களுக்கு ஜால்ரா அடிக்கும் அனைவருக்கும் அப்போதுதான் இது புரியும்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  அந்த ஒவ்வொரு 15 லட்சத்தையும் வாரி சுருட்டி உங்கள் பினாமி கணக்கில் போட்டுக்குவீங்க சரிதானே?

 • உஷாதேவன் -

  plan பண்ணும் போதே எப்படி வேண்டுமானாலும் Twist பண்ணி மாற்றி பேச முடியும் என்பது அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை.

 • Original Indian - Chennai,இந்தியா

  பொய் பிஜேபியின் முதல் கொள்கை, வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடுவதை, அமித்ஷாவே இது தேர்தலில் வெற்றிக்காக சொன்னது என்று சொல்லி இருக்காரே முதலில் இந்த அக்கா இந்தி படித்த குழந்தைகளிடம் கேட்க வேண்டும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை.. கறுப்புப்பணம் பதுக்கியவர் லிஸ்டை மறைப்போம்ன்னு சொன்னாரா? அவர்களிடம் மிரட்டி கட்சி நிதின்னு லஞ்சம் பெறுவோம்ன்னு சொன்னாரா? வெளிநாட்டு அரசாங்கம் லிஸ்ட் கொடுத்து ரெண்டு வருஷம் காத்திருந்து, திருடர்கள் பணத்தை வழித்தெடுத்த பிறகு அக்கவுண்டில் பணம் எல்லாம் காணோம்ன்னு சொன்னாரா? இதையெல்லாம் எங்களுக்கு சொல்லலை..உங்களிடம் சொல்லியிருப்பார், கட்சி செயற்குழு மீட்டிங்கில்.

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  சொல்லாததை எல்லாம் செய்றாரு .... சொன்னதை மட்டும் செய்வதே இல்லை

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ஓகே , அப்போ அம்புட்டு கறுப்புப்பணம் இருந்தது என்பது உண்மையா? பொய்யா? உண்மைன்னா எடுத்து கொடுக்க துப்பில்லை மோடி அரசுக்கு என்று தமிழிம்ஸை விளாசுகிறாரா? இல்லை மோசடி கறுப்புப்பணம் இருந்தது என்று சொன்னது பொய்யென்று போட்டு தாக்குகிறாரா?

 • Tamilselvan - Chennai,இந்தியா

  ஸ்பெக்ட்ரம் செல்வந்தர்களால் முடியும்

 • Mydeen Abdul - madurai,இந்தியா

  முதல்ல உன்னைய ....

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  அதை விடுங்கள் ஓர் அளவுக்கு ஊழல் இல்லாத அரசாக நடத்துகிறாரே அதை பாராட்டி தானே ஆகவேண்டும்

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  கண்டிப்பாக சொர்ண அக்கா கூறுவது சரிதான் நமக்கு தான் செலெக்ட்டிவ் அம்னீஷியா அவர் சொன்னது தினம் தினம் பெட்ரோல் விலை ஏற்றம் மாதா மாதம் காஸ் விலை ஏற்றம் என்ற வழியில் நாங்கள் வந்து போவதற்குள் உங்களிடம் இருந்து 15 லக்ஷ்ம் கறந்து விடுவேன் என்று சொன்னாராக்கும் நாங்கள் தான் தவறா புரிந்து கொண்டோம் அனால் 2019 இல் கரெக்ட்டாக புரிந்து கொண்டு வேலை காட்டுவோம். சரி காவேரி மேலாண்மை அமைக்க சூப்பர்மே கோர்ட் உத்தரவிட்டதே அது என்ன ஆயிற்று இல்லை அதுவும் அப்படி கூறவில்லை என்பீர்களா இல்லை கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் செய்வீர்களா இதுதான் உங்கள் நேர்மை எளிமை எல்லாமே, பங்காரு லக்ஷ்மன் பணம் வாங்கும்போது கையும் களவும் ஆகா பிடிபட்டார் அவர் பிஜேபி தானே வியாபம் ஊழல் மறந்து விட்டதா.இங்கே எவனும் ஓசியில் 15 லக்ஷம் கேட்கவில்லை ஒரு வாக்குறுதி கொடுத்து பின்னர் அதை சமாளிக்க என்ன வெல்லாம் போடவேண்டியது. ADMK ஊழல் பின்னர் ஏன் அவர்களை தாங்கு தாங்கு என்று தாங்குகிறீர்கள் உங்களுக்கு ஒரு பேஸ் கிடைக்க தானே முதலில் சுயம்புவாக வளர கற்றுக்கொள்ளுங்கள் காங்கிரஸ் காரன் போல் அடுத்தவன் தோள்மேல ஏறி சவாரி செயும் தொழிலை மாற்றுங்கள்

 • m.viswanathan - chennai,இந்தியா

  இந்த அம்மா எதிர் கட்சியில் இருந்தால் , மன் கி பாத் ஐ பற்றி வேறு விதமாக கூறுவார்கள் . அட , ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லச்சம் எல்லாம் போட வேண்டாம் , ஹோட்டல் சாப்பிடும் சாதாரண மனிதர்களை , வரி கொடுத்து சாப்பிட வைத்த பாவம் உங்களை சும்மா விடாது , அனைவருமே 5 ஸ்டார் ஹோட்டலிலும் , சரவண பவனில் சாப்பிடுபவன் அல்லவே உங்களை பற்றி மக்களுக்கு இன்னும் நன்றாக புரியவில்லை , இந்த திராவிட கட்சிகளின் பேச்சில் மயங்கி , கிறுக்குத்தனமாக வாழ்க்கையை பறி கொடுத்த தமிழனை போல அனைத்து இந்தியர்களை முட்டாளாக அல்லவா ஆக்கி விட்டிர்கள் , இங்கே திராவிட காட்சிகளை அகற்ற வழி தெரியாமல் தவிப்பது போல , இன்னும் ஓர் 50 ஆண்டுகாலம் உங்களோடு போராட வேண்டும் போல , ஆக பேச்சில் மயங்கினால் பிச்சை தான் எடுக்க வேண்டும்

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  நீங்கள் போடவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் இருக்கும் கொஞ்ச நஞ்சத்தை அடித்து வரியென்ற பெயரில் புடுங்க வேண்டாம்.....எங்களுக்கு கோவணமாவது மிஞ்சட்டும்.....

 • Meenu - Chennai,இந்தியா

  வார்த்தை ஜாலம் எல்லாம் பலிக்காது மக்களிடம். தேர்தலில் தக்க பாடம் கற்பிக்கப்படும். அ.இ.அ.தி.மு.க இந்த BJP யோடு கூட்டு வைத்தால் வரும் தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க கண்டிப்பாக டெபாசிட்டை இழக்கும்.

 • Parthasarathy - Chennai,இந்தியா

  நாங்களும் இனிமே உங்களுக்கு ஓட்டு போடுவோம்னு சொல்லவேயில்லை.. சாரணர் போட்டியில் வாங்கிய அடி, விரைவில் தமிழ் சாதியினரிடமும் வாங்குவீர்..

 • balakrishnan - coimbatore,இந்தியா

  மூன்றரை வருடமாக எதுவும் சொல்லாமல், திடீரென்று இப்போது ஏன் சொல்லவேண்டும், கருப்பு பணத்தை மீட்க துப்பில்லை, பேச்சுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை

 • Appu - Madurai,இந்தியா

  சரி தமிழிசை மேடம் சொல்லுவது போல போடறேனு சொல்லவே இல்லேனு வச்சிக்கலாம்... ஒவ்வொருவர் அக்கவுண்டில் பதினைந்து லட்சங்கள் போடும் அளவு வெளிநாட்டில் கருப்பு பணம் உள்ளது என்று சொனாருன்னே வச்சிக்கலாம்... அப்போ எவ்ளோ கருப்பு பணம் வெளிநாட்டுல இருந்து கொண்டாந்துருக்கீங்க? இதுவரை எங்க கிட்ட இருந்து டிசைன் டிஸைனா புடுங்கிட்டு தான் இருக்கீங்க.. அஞ்சி பைசா எங்களுக்கு கொடுக்கல..நாங்க தான் வண்ணவண்ணமா ஒன்னு ஒன்னுக்கு கட்டி அழுதுட்டு இருக்கோம்..அப்பால என்ன கருப்பு பணத்தை எவ்வளவு நாட்டுக்கு கொண்டுவந்து நாட்டு மக்களுக்காக அதுலயிருந்து கிழிச்சீங்கன்னு ப்ரூபோட விளக்கினா நல்ல இருக்கும்,உங்க பேச்சு தெளிவுன்னு நம்பலாம் ..அதே போல ஐனூறும் ஆயிரமும் செல்லாதுன்னு சொல்லி இதுவரை மக்களுக்கு நாட்டுக்கும் நட்டமோ நட்டம் ..வெறுமனே நட்டம் மட்டும் தான் பாக்கி...எனவே அம்மா தமிழிசை அவர்கள் கருப்பு பணம் வெளிநாடுகளில் இருந்து வந்து மக்களும் நாடும் எந்த அளவு எப்படி முன்னேறிடுச்சினு சொல்ல முடியுமா ?வெளிநாட்டுல யிருந்து எவ்ளோ வந்திச்சு?யாரு கணக்கில் இருந்து வந்திச்சு இதையும் சொல்ல இயலுமா?அதே போல ஆளும் அரசு வெளிநாட்டில் இருந்து மீட்ட கருப்பு பணத்தை என்ன மாதிரி உபயோகிச்சிச்சுனு சொல்ல இயலுமா?அப்பால நீங்க சொல்லுற பதினஞ்சு லட்ச கதையை நம்பலாம்...செம்புகளா வரிசையா வாங்க..குறிப்ப நெளிஞ்சா செம்பு அக்கினி சிவா வாடா நீ வாடா..இப்ப தான் ஆக்ஷன் எடுத்திருக்கார் இன்னும் அஞ்சி முதல் பத்து வருஷம் ஆகும்னு சொல்லி சப்பைக்கட்டு கட்ட வாடா நீ வாடா...இன்னொரு கூட்டம் ஊசிமணி கூட்டம் எல்லாமே காங்கிரஸ் தான் செஞ்சிச்சி அதுக்கு மோடி என்னபண்ணுவார்னு கூவ வாடா நீ வாடா.... இன்னொரு சைடு கூட்டம் இருக்கு இவனுக பேசுற மரியாதை இல்லாத நக்கல் பேச்செல்லாம் கேக்க மாட்டாரு சொம்பணுக்களுக்கு பதிலடி குடுக்குற பேச்சிலே ரொம்ப மரியாதை எதிர்பாக்கிற கூட்டம்..வா வா உங்க கூட்டத்துக்கும் வெத்தல பாக்கு வச்சி அசோகா பாக்கும் வச்சி வரவேற்கிறேன் வாங்கடா நீங்களும் வாங்கடா....

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  தமிழர்களை ஓட்டுக்கு இலவசம் என்று ஆரம்பித்ததன் மூலம் பிச்சைக்காரர்கள் ஆக்கிய பெருமை கட்டுமரத்தையே சாரும். ஊழலற்ற நேர்மையான பாதுகாப்பான இந்தியாவாக மோடி மாற்றியது, பல கோடி ரூபாய் நமக்கு கொடுத்ததற்கு சமம். ஆனா ஒன்னு சுடலை நினச்சா 2G ல ஆட்டைய போட்ட பணத்தவச்சி எல்லாருக்கும் 15 லட்சரூபாய் கொடுக்கமுடியம்.

 • Radj, Delhi - New Delhi,இந்தியா

  போங்கம்மா மொத்தத்துல நாங்க ஏமாந்தோட்டம்.

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  100 நாட்களில் கருப்பு பணத்தை மீட்போம் என்று பொய் கூறி ஆட்சியில் அமர்ந்த மோடி அரசு... பதுக்கிய பணத்தை கொண்டுவர துப்பில்லாத மத்திய அரசு ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை....

 • Shiva - Bangalore,இந்தியா

  இவர் சொல்வது உண்மை தான்.. வேலையே செய்யாமல் சும்மா 15 லட்சம் போடுவாங்கனு நினைக்கும் அறிவு பதர்களை என்னவென்று சொல்வது ...

 • truth tofday - india,இந்தியா

  நாளை அவர் ஊழலை ஒழிப்பேன் என்றும் சொல்லவில்லை ஊழலுக்கு உடந்தையாக இருக்க மாட்டேன் என்று மட்டும் சொன்னார்

 • Sundar - Kuala Lumpur,மலேஷியா

  அப்படினா ஒவ்வொரு குடிமகனோட 15 லட்சம் ரூபாயும் மத்திய அரசு கணக்குல இருக்குது ஆனால் மக்களுக்கு இன்னும் கொடுக்கல னு சொல்ல வர்றிங்க அப்படித்தானா. இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க வேண்டாம்.

 • Mal - Madurai,இந்தியா

  Yes... That is if they are able to get back the money stored in foreign countries... But DMK and other ministers have safely transferred it to Malaysia, Singapore , Phillipines, England n America then how to retrieve? If Stalin can disclose where he has invested the 176 million crores then it will be easy to retrieve

 • Anandan - chennai,இந்தியா

  பொய் மட்டும் தான் பேசுவார்களோ?

 • Mahesh JK - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்

  அக்கா அக்கா .. நீங்க பேசுறது கேட்டா ரொம்ப சிரிப்பு வருது அக்கா .. நீங்க சொல்லுறத எல்லாம் நாங்க கேட்டுக்கிட்டு சும்மா இருக்க நாங்க என்ன முட்டாள்களா அக்கா ... நீங்க கூட மக்கள் விரும்பாவிடில் நெடுவாசல் திட்டங்களை கைவிடுவோம் என்று சொன்னிங்க ... மக்கள் விரும்பலை ... விட்டு விட்டீர்களா ??

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  நாங்க நாலாயிரத்திற்க்கே ஓட்டை விற்கிற தமிழர்கள். பதினைந்து லச்சம் தந்தால் மட்டுமே தமிழகத்தில் உங்களுக்கு இடமுண்டு.. மோடி அப்படியே சொல்லி இருந்தாலும் நாங்கள் நம்ப மாட்டோம்.. இந்த கையின் துட்டு, அந்த கையில் ஓட்டு.. இதுதான் எங்க பாலிசி

 • murugan - muscat,ஓமன்

  மோடி எப்போதும் புளுகு மூட்டை

 • Ram - Panavai,இந்தியா

  எல்லோருக்கும் நாமம் தான் போடுவார்

 • saagasamcennai -

  இது வேற வாய்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement